இந்த செய்திக்கும் கீழுள்ள செய்தியில் தலைமை நீதிபதியின் கருத்துக்கும் உள்ள ஒற்றுமையை பாருங்கள்.
==================================
தினச் சண்டைக்கெல்லாம் விவாகரத்தா?:நீதிபதிகள் கேள்வி
செப்டம்பர் 01,2009
மும்பை: "தினம் தினம் மனைவி சண்டை போடுவதை, "டார்ச்சராக' கருத முடியாது. அதற் காக விவாகரத்து கொடுக்க முடியாது' என மும்பை ஐகோர்ட் கூறியுள்ளது.
பரேலைச் சேர்ந்த விட்டல்(47) தனது மனைவி ராஷ்மி மீது புகார் கூறி, விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். தினமும் தன்னிடம் சண்டை போட்டு கொடுமைப் படுத்துவதால், தனக்கு விவாகரத்து வழங்குமாறு கோரியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த மஜும் தார், மோரே ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், "மனைவி சண்டை போடுகிறார் என்பதற்காக விவாகரத்து வழங்க முடியாது' என, மனுவைத் தள்ளுபடி செய்தது. விட்டல் - ராஷ்மிக்கு 1992ல் திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளான். விட்டல் தாய், நோயால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், தன்னை தேனிலவுக்கு அழைத்துச் செல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக ராஷ்மி மிரட்டியதாக, விட்டல் தன் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
"பால்கனியில் நின்று ஆடைகளைக் களைந்து எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்; தினமும் எனக்கு உணவு சமைப்பதில்லை; குளிப்பதற்கு சுடு தண்ணீர் வைப்பதில்லை' என்றும் கூட, தன் மனைவி மீது குற்றம் சாட்டியுள் ளார் விட்டல். நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:சமையல் செய்து, குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் வேலைக்காரியாக மனைவியை கருதக் கூடாது. கணவனும், அவரது உறவினர் களும் சொல்வதைக் கேட்டு அப்படியே நடந்து கொள்ள, மனைவி ஒன்றும் அடிமையில்லை.
பெண் எவரிடமும் தனது குறையைக் கூறாமல் அமைதியாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. கணவனின் தவறுகள் குறித்து, ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது என சொல்ல முடியாது. திருமணம் என்பது புனிதமானது; அது சிறு குழந்தைகளின் விளையாட்டல்ல. விவாகரத்து மனுக்கள் குவிவதைப் பார்த்தால், திருமணம் எனும் பந்தத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
=======================================
மேலுள்ள செய்தியில் அன்பில்லாத மனைவியிடமிருந்து விடுதலை வேண்டும் என்று கணவர் நீதிமன்றத்தை அனுகியதற்கு அவருக்குக் கிடைத்த நீதியையும் கீழுள்ள செய்தியில் கணவர் தனக்குத் தானே நீதியை தேடிக்கொண்டதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
நீதிமன்றத்தில் நடுவு நிலையான நீதி கிடைக்காது என்று முடிவு செய்து இது போன்ற செய்திகள் இனி தினம் தினம் செய்தித்தாள்களில் வெளிவரும் போலிருக்கிறது !
மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் போலீசில் சரண்
செப்டம்பர் 01, 2009
திருத்துறைப்பூண்டி:திருத்துறைப்பூண்டி அருகே, குடும்பத்தினர் அன்பு செலுத்தாமல் விரட்டியடித்ததால் மனமுடைந்த கணவன், தனது மனைவியை, ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த, வடபாதி மெயின் ரோடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர்; விவசாயி கணேசன் (55). இவரது மனைவி நாகலட்சுமி (48). இவர்களுக்கு துரைராஜ் (31), வேலவன் (30) என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
கணேசனிடம் மனைவி நாகலட்சுமி மற்றும் மகன்கள், அன்பு செலுத்தாமல், வெறுத்து புறக்கணித்தனர்.இதனால், மனமுடைந்து காணப்பட்ட கணேசன், நேற்று அதிகாலை மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்தார். தனது மனைவியிடம் இதுபற்றி கேட்ட போது தகராறு முற்றியது. ஆவேசம் அடைந்த கணேசன், நாகலட்சுமியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றார்.இதை சற்றும் எதிர்பார்க்காததால் அங்கிருந்து தப்பித்து தெரு வழியாக நாகலட்சுமி ஓடத் துவங்கினார். பின்தொடர்ந்து சென்ற கணேசன் மனைவியை, ஓட ஓடவிரட்டி, வெட்டினார். வெட்டுப்பட்ட நாகலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.அங்கிருந்து தப்பித்த கணேசன், நேராக திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். மனைவியை வெட்டிக் கொன்றது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
நன்றி: தினமலர்