இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, May 31, 2010

மச்சக்கார “ஏட்டுக்கள்” - சூப்பர் நியூஸ்!

தினமலர் 31 மே 2010

பட்டுக்கோட்டை : போலீஸ் ஏட்டு கணவர் மீது, மூன்றாவது மனைவியான போலீஸ் பெண் ஏட்டு நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு வழங்கியதுடன், பட்டுக்கோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கிரேடு ஒன் ஏட்டாக பணி புரிபவர் இளங்கோவன் (39). இவர் மன்னார்குடி அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர். இவர் ஏற்கனவே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் மஞ்சுளா (39) என்ற நர்சை திருமணம் செய்து அவருக்கு வஸ்திகரோலின் (6) என்ற பெண் குழந்தை உள்ளது. வக்கீல் முன்னிலையில் எழுதி வாங்கிக் கொண்டு அவரை விவாகரத்து செய்து விட்டார். பின், திருவாருர் மாவட்டம் வேல்குடியைச் சேர்ந்த சுதா (25) என்ற பெண்ணை இளங்கோவன் திருமணம் செய்தார். அவருக்கும் கார்த்திகா (4) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது அவரிடம் விவாகரத்து கேட்டு தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், சுதாவை திருமணம் செய்ததை மறைத்து தன்னோடு போலீஸ் பயிற்சியின் போது பழகிய தொழுதூர் புதுத்தெருவைச் சேர்ந்த தெட்சணாமூர்த்தி மகள் வனிதாவை (32) (திருச்சியில் ஏட்டாக பணிபுரிபவர்), மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். வனிதாவுக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாளாய் இருந்ததால் அவரும் விசாரிக்காமல் இளங்கோவனை திருமணம் செய்துள்ளார்.

ஏட்டு வனிதா கூறியதாவது: கடந்த 2007 ஜன., 29ம் தேதி எங்கள் திருமணம் நடந்தது. அதன் பின் சண்முகப்பிரியா (3) இளமதி (10 மாதம்) ஆகிய இரண்டு குழந்தைகள் பிறந்தனர். நாளடைவில் எங்களை சந்திக்க இளங்கோவன் வராததால் அவர் மீது சந்தேகப்பட்டு விசாரித்த போது, சுதாவுடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டுள்ளது தெரிந்தது. என்னுடன் வாழ மறுத்து, தன் முதல் குழந்தை மட்டும் அவருக்கு பிறந்ததாகவும், இரண்டாவது குழந்தை என் உயர் அதிகாரிக்கு பிறந்ததாகவும் கூறுகிறார். அதனால், டி.என்.ஏ., சோதனை செய்து உண்மை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, சோதனை செய்யவும், இளங்கோவன் மற்றும் தன்னை மிரட்டும் இளங்கோவனின் இரண்டாவது மனைவி சுதா மீது நடவடிக்கை எடுக்கவும் புகார் அளித்துள்ளேன்.

திருவாரூர் மாவட்டத்தில் இளங்கோவன் வேலை செய்கிறார். திருச்சியில் வனிதா வேலை செய்கிறார். இளங்கோவனின் இரண்டாவது மனைவி சுதா, பட்டுக்கோட்டையில் வசிப்பதால், அவர் அங்கிருந்து வனிதாவுக்கு மொபைல்போனில் எஸ்.எம்.எஸ்., அனுப்பி மிரட்டி வந்துள்ளார். இதுபற்றி தஞ்சாவூர் எஸ்.பி., செந்தில்வேலனிடம் வனிதா புகார் தெரிவித்துள்ளார். இதில், தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாரை விசாரிக்க சொல்லியுள்ளதாக, எஸ்.பி., கூறியுள்ளார். இதனால், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புராணியிடம் இளங்கோவன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி சுதா மீது வனிதா புகார் செய்தார். ஆனால், புகார் குறித்து விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் அன்புராணி, வனிதாவிடம் சாதாரணமாக எழுதி வாங்கிக் கொண்டு வழக்கு ஏதும் பதிவு செய்ய மறுத்துவிட்டார். ஆத்திரம் அடைந்த வனிதா மற்றும் அவரது உறவினர்கள் நேற்று பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வந்தனர். உரிய நடவடிக்கை எடுக்காததால், போலீஸ் ஸ்டேஷனை வனிதா மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., நாராயணசாமி, வனிதா மற்றும் இளங்கோவனை நேரில் அழைத்து விசாரணை செய்தார். இளங்கோவன் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக அவர் உறுதி கூறினார். நேற்று காலை முதல் இவ்வழக்கை விசாரிக்க மறுத்த இன்ஸ்பெக்டர் அன்புராணி, "இது தங்கள் துறையில் பணி புரிபவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால், பத்திரிகையாளர்கள் இது பற்றி எழுதக் கூடாது,'' என, எச்சரித்தது மட்டுமின்றி, போலீஸ் ஏட்டு இளங்கோவனை போட்டோ எடுக்கவிடாமல் பல மணி நேரம் போலீஸ் ஸ்டேஷனுக்குள் மறைத்து வைத்து, மக்கள் நடமாட்டம் குறைந்த பின் அவரை வெளியே அனுப்பி வைத்தார்.

===================

பொய் வழக்குகளில் கண்மூடித்தனமாக பல அப்பாவிகளை அச்சுறுத்தியும், அவமானப் படுத்தியும் ஆட்டம்போட்டுக் கொண்டிருக்கும் இந்த குடிகெடுக்கும் கூட்டத்தில் அப்பாவிகளின் சாபத்தீ பரவி அழிப்பது உறுதி.

அரசன் அன்றே கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். இவை இரண்டிலிருந்து தப்பினாலும் அப்பாவிகளின் சாபத்தீ தப்பாமல் தண்டிக்கும்.



Sunday, May 30, 2010

இந்தியாவில் கற்பழிப்பு விலை ரூ.32/= லட்சம் மட்டுமே!

இந்தியாவில் இப்போதெல்லாம் எல்லாவித குற்றங்களுக்கும் மீன்கடை சந்தை போல விலை விபரப் பட்டியல் போடும் காலம் வந்துவிட்டது போலிருக்கிறது!

சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமுதாயத்தில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி இந்தியப் பொருளாதார சந்தைக்கு மேலும் பல வாடிக்கையாளர்களை உருவாக்கிவிடும் என்பதில் மிகவும் மகிழ்ச்சி.


கற்பழிப்பு விலை ரூ. 32 லட்சம்

தினமலர், 30 மே 2010

புதுடில்லி : கற்பழிப்பு புகாரில் சிக்கிய டாக்டர், பாதிக்கப்பட்ட நர்சுக்கு 32 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முன்வந்ததால், அவர் மீதான கற்பழிப்பு வழக்கை தள்ளுபடி செய்ய சுப்ரீம் கோர்ட் முடிவு செய்தது.


காசியாபாத்தைச் சேர்ந்த பிரபல டாக்டர் பிரதீப் குப்தா. இவர் தன் மருத்துவமனையில் பணிபுரிந்த நர்சை கற்பழித்தார். இதுதொடர்பாக, காசியாபாத் போலீசில் 2007ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை முதலில் அவர் மறுத்தார். கற்பழிப்பு புகார் கூறிய பெண், நர்ஸ் இல்லை என்றும், வாடகைத் தாயாக வந்தவர் என்றும் கூறினார். அதேநேரத்தில், கருவுற்றிருந்த நர்சுக்கு, தனது டாக்டர் மனைவியின் உதவியுடன் கருக்கலைப்பு செய்யவும் பிரதீப் குப்தா முயன்றார். அவரின் முயற்சி தோல்வியடைந்தது. நர்சுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், டாக்டர் மீதான கற்பழிப்பு வழக்கு காசியாபாத் கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது, டாக்டர் பிரதீப் குப்தாவுக்கு டி.என்.ஏ., சோதனை நடத்த கோர்ட் உத்தரவிட்டது.
இதற்கு தடை விதிக்கக் கோரி, ஐகோர்ட்டில் பிரதீப் குப்தா மனு தாக்கல் செய்தார். அதை, ஐகோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. இதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், டி.என்.ஏ., சோதனைக்கு தடை விதித்தது. இதற்கிடையில், டாக்டர் மற்றும் நர்சு தரப்பில் அவர்களின் வக்கீல்கள் மூலமாக சமாதான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அதில், குழந்தை மற்றும் நர்சின் எதிர்காலத்திற்காக ரூ.32 லட்சம் தருவதாக டாக்டர் தரப்பில் கூறப்பட்டது. இந்த விவரம் சுப்ரீம் கோர்ட்டிலும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டாக்டர் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிபதிகள் அல்தாமஸ் கபீர் மற்றும் எச்.எல்.கோகலே தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முடிவு செய்தது. ஒப்புக்கொண்டபடி ரூ. 32 லட்சத்தில், முதல் தவணையாக ரூ.14 லட்சத்தை ஜூன் 30ம் தேதிக்குள் வழங்க வேண்டும். இரண்டாம் தவணையாக, ரூ.10 லட்சத்தை ஜூலை 31ம் தேதிக்குள்ளும், மூன்றாம் தவணையாக ரூ.8 லட்சத்தை ஆகஸ்ட் 27ம் தேதிக்குள்ளும் வழங்க வேண்டும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் மேலும் கூறுகையில், "கற்பழிப்பு குற்றமானது, தண்டனையை குறைக்கக் கூடிய குற்றம் அல்ல. இருந்தாலும், பாதிக்கப் பட்ட நர்சு பெண்ணுக்கு பிறந்த குழந்தையின் நலனை கருத்தில் கொண்டும், அரசியல் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ், சுப்ரீம் கோர்ட்டிற்கு வழங்கப்பட்டுள்ள விசேஷ அதிகாரங்களின் அடிப்படையிலும், டாக்டர் மீதான வழக்கை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்,'' என்றனர். மேலும், ஒப்புக் கொண்டபடி டாக்டர் பணத்தை செலுத்திய பின்னரே, அவருக்கு எதிரான கற்பழிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்பதால், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 31ம் தேதி நடைபெறும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

====================

இன்னும் கொஞ்ச நாளில் கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம், வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை போன்ற புகார்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்று ஒரு பட்டியல் போட்டு ஒவ்வொரு நீதிமன்ற, காவல் நிலைய வாசல்களில் அறிவிப்புப் பலகை வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. தங்களது பணத் தேவைக்கேற்ப பெண்கள் பொய் வழக்குகள் போட்டும் நஷ்ட ஈடு பெற்றுக்கொள்ளலாம். கலியுக மகளிர் சுய உதவிக்குழுக்கள் இப்படித்தான் உருவாகும் போலிருக்கிறது!

மேலே சொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி கற்பழிப்பிற்கு 32 லட்சம் என்று விலையை நிர்ணயம் செய்திருக்கிறது. சபாஷ்!!!

இந்த சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கித் தவிக்கும் பல அப்பாவிகளைக் காப்பாற்ற ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை? அதற்கு மட்டும் தங்களால் ஏதும் செய்யமுடியாது என்று கூறி அரசாங்கத்தை கைகாட்டிவிட்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது வினோதமாக இருக்கிறது. இதில் லட்சங்கள் கைமாறும் சந்தர்ப்பம் இல்லாததால் தயங்குகிறார்கள் போலிருக்கிறது. நீதி தேவதைக்கு மட்டும்தான் அந்த உண்மை தெரியும்!




Wednesday, May 19, 2010

பெண்கள் பலவிதம்!!! ஒவ்வொன்றும் ஒருவிதம்!!!

இந்தியப் பெண்கள் எப்படி பலவிதங்களில் இருக்கிறார்களோ அதுபோல இந்திய சட்டங்களும் பல விதங்களில் தன் இஷ்டப்படி இருக்கிறது. பிறகு பெண்களுக்கு கொடுமை செய்கிறார்கள் என்று ஐயோ ஐயோ என்று கத்திக்கொண்டிருக்கிறார்கள் .

தினமலரில் (20 மே 2010) வந்துள்ள இரண்டு செய்திகளைப் பாருங்கள்:




நாகர்கோவில் : குடித்து விட்டு மணமேடை ஏறிய மணமகனை உதறி தள்ளிவிட்டு மணமகள் வெளியேறி போலீசில் புகார் செய்தார்.

(தினமணி கார்ட்டூன்)

நாகர்கோவில் அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் ஜெயபாலன் (29). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் தடிக்காரன்கோணத்தை சேர்ந்த சுஜி (24) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஐந்து பவுன் நகையும் ஒரு லட்சம் ரூபாயும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. நேற்று தடிக்காரன்கோணம் பனிமாதா ஆலயத்தில் காலை பத்து மணிக்கு திருமணம் நடப்பதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் மணமகன் வீட்டார் தாமதமாக 12.30 மணிக்குதான் ஆலயத்துக்கு வந்தனர். மணமேடைக்கு வந்த மணமகனிடம் மது வாடை வீசியதை சுஜி உணர்ந்தார். இதை உறுதி செய்ய ஜெயபாலனிடம் பேச்சு கொடுத்தார். அவர் குடித்திருப்பது உறுதியானதும், சுஜி தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி மணமேடையை விட்டு வெளியேறினார். பின்னர் தடிக்காரன்கோணம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் சமரசம் செய்து ஐந்து பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாயை திரும்ப பெற்று கொடுத்து அனுப்பி வைத்தனர்.


இந்த செய்தியில் மணமகன் குடித்தது பெரிய குற்றமாக மணமகளுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த இந்தியப் பெண்களின் வாழ்வை கெடுக்கும் வகையில் வரதட்சணைக் கொடுமையை ஊக்குவிக்கும் விதமாக அவர் வரதட்சணைக் கொடுத்து திருமணம் செய்ய முடிவுசெய்திருப்பது குற்றமாகத் தெரியவில்லை. ஆனால் மணமகனோ அரசாங்கத்தின் வளர்ச்சிக்கு உதவிசெய்யும் வகையில் அரசு நடத்தும் சாராயத் தொழிலுக்கு விற்பனையை அதிகப்படுத்தி நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் விசுவாசமாக நடந்திருக்கிறார். ஆனால் மணமகளோ வரதட்சணைக் கொடுத்து சட்டத்திற்கு எதிராகவும் ஒட்டுமொத்த இந்தியப் பெண் சமுதாயத்திற்கு எதிராகவும் குற்றம் புரிந்திருக்கிறார்.

இவர்களில் யார் குற்றவாளி? காவல்துறையும் இதை கண்டுகொள்ளாமல் இந்த வரதட்சணைக் குற்றத்தை ஊக்குவித்திருக்கிறது.

மணமகன் குடித்தால் தன் வாழ்க்கைக்கு நல்லதல்ல என்று நினைத்த பெண் தான் வரதட்சணைக் கொடுத்து திருமணம் செய்தால் இந்த கொடிய வழக்கம் மேலும் தொடர்ந்து பல அப்பாவிப் பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுமே என்று எண்ணவில்லையே. என்ன ஒரு சுயநலம் பிடித்த இந்தியப் பெண்கள்! இவர்களைக் காக்க எத்தனை சட்டங்கள் போட்டாலும் இந்தியப் பெண்களுக்கு எதிரி இந்தியப் பெண்கள் தான். இதில் பலியாவது அப்பாவி ஆண்கள்.

==================================




போடி: திருமணம் நடக்க இருந்தநிலையில், காதலனுடன் மணப்பெண் ஓடியதால் திருமணம் தடைபட்டது. இருவரும் மைனர் என்பதால் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போடி அருகே குலாளர்பாளையம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (18). போடி போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசிக்கும் கரிகாலன் மகள் ஜெயலட்சுமி (17). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த இவர்கள், இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ஜெயலட்சுமிக்கு பெற்றோர், வெறொருவருடன் திருமணம் நிச்சயித்தனர். திருமணம் நேற்று காலை பெரியகுளத்தில் நடப்பதாக இருந்தது. ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்துவந்தனர். நேற்று முன்தினம் இரவு நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. அன்று மாலையில், போடியிலுள்ள வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் ஜெயலட்சுமி வெளியேறினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாப்பிள்ளை வீட்டாருக்கு தகவல் தெரிவித்தனர். இரு வீட்டாரும் பெண்ணை தேடத்துவங்கினர். இதில், ஜெயலட்சுமி தன்னுடன் வேலைபார்த்த ராஜேசுடன் ஓடியது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு வரை கண்டுபிடிக்க முடியாததால், திருமணத்தை ரத்து செய்தனர்.

போடி டவுன் போலீசாரிடம், கரிகாலன் தனது மகளை அவருடன் வேலை செய்த ராஜேஷ் கடத்தி சென்றாக புகார் செய்தார். போலீசார் விசாரணையில் இருவரும் மூணாறில் உள்ள லாட்ஜ் ல் தங்கியிருந்தது தெரிந்தது. இருவரையும் பிடித்து விசாரித்தனர். 'தனக்கு மாப்பிள்ளை பிடிக்காததால் காதலுடன் சென்றேன்' என ஜெயலட்சுமி போலீசாரிடம் தெரிவித்தார். இருவரும் மைனர் என்பதால் ஜெயலட்சுமி, ராஜேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

======================

இந்த செய்தியில் ஓடிப்போன மணப் பெண் மைனர் என்று போலிசார் கைது செய்திருக்கிறார்கள். என்ன கொடுமை! மைனர் பெண்ணுக்கு கட்டாயத் திருமணம் செய்ய முயற்சி செய்திருக்கும் பெற்றோருக்கு எந்த தண்டணையும் இல்லை.

நாட்டில் சட்டங்களை இப்படி ஏனோ தானோ என்று கடைபிடித்தால் பெண்களுக்கு எப்படி கொடுமைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். மேற்கண்ட இரண்டு செய்திகளிலும் காவல்துறையும் அரசாங்கமும்தான் கொடிய குற்றவாளிகள். இப்படித்தான் நாட்டில் பெண்கள் தொடர்பான சட்டங்கள் சரியாகப் பயன்படுத்தவேண்டிய இடத்தில் பயன்படுத்தப்படாமல் பொய் வழக்குப்போட்டு அப்பாவிகளை துன்புறுத்துவதற்கு மட்டும்தான் பயன்படுத்தப்படுகிறது.




Monday, May 17, 2010

மாமியாரை கொலை செய்யலாம் வாங்க!

இந்தக் காலத்து மருமகள்கள் சகலமும் செய்வார்கள்.
  • கள்ளக்காதலுக்காக கணவனை கொலை செய்வார்கள்.
  • அறிவுரை சொன்னால் மாமியாரை கொலை செய்வார்கள்.
  • மனதுக்கு வெறுப்பாக இருந்தால் வேடிக்கையாக தான் பெற்ற குழந்தையை கொலை செய்வார்கள்.
  • பொழுதுபோக வேண்டுமென்றால் கணவனின் ஒட்டுமொத்தக்குடும்பத்தின் மீதும் பொய் வரதட்சணை வழக்குகள் போட்டு வேடிக்கைப் பார்ப்பார்கள்.
எல்லாமே செய்கிறார்களே! இளம் மருமகள்களுக்கு எல்லாமே கிடைத்துவிட்டதா இந்த நாட்டில்!


மாமியார் கொலை : மருமகளுக்கு ஆயுள்
தினமலர் 18 மே 2010

சென்னை : மாமியார் கொலை வழக்கில், மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தா (70). இவருக்கு நான்கு மகன்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவரது ஒரு மருமகள் லட்சுமி. இவருக்கு இரண்டு குழந்தைகள். இவர்களை சரிவர கவனிப்பதில்லை என, மருமகள் லட்சுமியை சாந்தா கண்டிப்பார். இதனால், மாமியார் சாந்தா மீது லட்சுமிக்கு கோபம் ஏற்பட்டது. பூஜை அறையில் சாமி கும்பிடும் போது, சாந்தாவை கத்தியால் லட்சுமி குத்தினார். படுகாயமடைந்த சாந்தா, அங்கேயே இறந்தார். 2007ம் ஆண்டு மே மாதம் இச்சம்பவம் நடந்தது. லட்சுமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கை, சென்னை மகளிர் கோர்ட் நீதிபதி முகமது ஜபருல்லாகான் விசாரித்தார். லட்சுமி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது எனக் கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி முகமது ஜபருல்லாகான் தீர்ப்பளித்தார்.

Sunday, May 16, 2010

பெற்றால் மட்டும் தாயல்ல!

தான் வாழவில்லையென்றால் யாருமே வாழக்கூடாது என்று நினைப்பவள்தான் இந்தக் காலத்து இந்தியத் தாயோ? காலம் மாறிவிட்டது. தாய்மையும் மாறிவிட்டது. இதற்குப் பெயர்தான் ஒருவேளை புதுமைப் புரட்சியோ!

ஆற்றில் குழந்தையை வீசி தற்கொலைக்கு முயன்ற பெண் கைது
தினமலர் 17 மே 2010


நியூயார்க்:குடும்பப் பிரச்னையில் மனம் வெறுத்துப் போன தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் 19 மாத கைக்குழந்தையை ஆற்றில் வீசி, தானும் விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அமெரிக்காவில் நடந்துள்ளது. இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்; பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தைச் சேர்ந்தவர் தேவி சில்வியா. இவர் கணவர் டொமினிக் ஜேம்ஸ் பிருத்விராஜ். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வர தேவி விரும்பினார். ஆனால், கணவர் தன் வேலை காரணமாக சிகாகோ, கலிபோர்னியா, நியூயார்க் என எப்போதும் பறந்து கொண்டே இருந்ததால், வீட்டைப் பற்றி அதிகம் அக்கறை காட்டவில்லை.


இம்மாதிரி தனிமை வாழ்க்கையில் நொந்த அவருக்கு, வழி ஏதும் கிடைக்கவில்லை. தனியே குழந்தைகளுடன் வாழும் போது மனமொடிந்து போன தேவி சில்வியா, அங்குள்ள ஹட்சன் ஆற்றில் தனது 19 மாத கைக்குழந்தையை வீசி, தானும் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்தார். குளிர் நிரம்பி சில்லிட்ட ஆற்றில் விழுந்ததும், குழந்தை நடுங்கி நீல நிறமானது.ஆனால், உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குழந்தை அதிக குளிரான நீரில் விழுந்ததால் அதன் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. 'இப்படி நடந்தாலாவது என் குழந்தையை என் கணவரிடம் சேர்க்கமாட்டார்களா என்று தான் செய்தேன்' என்று தேவி கூறியுள்ளார். மன பாதிப்பு சிகிச்சைக்காக தனி மருத்துவமனையில் தேவி இருப்பதால், அங்கிருந்தே வழக்கு விசாரணை நடந்தது.

தற்கொலை செய்ய முயற்சித்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டனை பாதியாகக் குறைக்கப்படும். ஆனால், தேவி தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. விசாரணையில், தேவி மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும். குழந்தையை தாய் பார்க்கக்கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார். தேவியின் கணவர் இன்னமும் வந்ததாக தெரியவில்லை.

===============

நல்ல வேளை. மனதுக்குள் வெறுப்பு ஏற்பட்டுவிட்டது என்பதற்காக கணவனையும் அவனது குடும்பத்தையும் பொய் 498A வழக்குகளில் சிக்கவைத்து சின்னாபின்னப்படுத்தி வேடிக்கை பார்க்கவேண்டும் என்று நினைக்கும் சாதாரண மருமகளைப் போல இல்லாமல் இவர் தன்னையும் தன் குழந்தையையும் மட்டுமே அழித்துக்கொள்ள நினைத்திருக்கிறார். அதைப் பொறுத்தமட்டில் இவர் ஒரு கலியுக தேவதை!

இந்த சம்பவம் இந்தியாவில் நடந்திருந்தால் கணவனின் ஒட்டுமொத்தக்குடும்பத்தின் மீதும் பழிபோட்டு இந்நேரம் சிறையில் தள்ளியிருப்பார்கள் நம் நாட்டு (அ)நீதிக் காவலர்கள்.






Friday, May 14, 2010

இந்தியக் குடும்பங்களை அழிப்பது எப்படி?

இந்தியக் குடும்பங்களை அழிப்பது எப்படி என்று சட்டம் போட்டு யோசித்துக் கொண்டிருப்பவர்கள் கீழுள்ள படத்தை கிளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கவும்.


Wednesday, May 12, 2010

சேலை அணிவித்து மருமகளை கொடுமை செய்யும் மாமியார்கள்!

பாவம் இந்திய மருமகள்கள்.இந்திய மாமியார்களின் கொடுமைக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது.செய்தியைப் பாருங்கள். சேலை அணிந்து கொள்ளுமாறு ஒரு மருமகளை கணவனும் அவனது குடும்பத்தாரும் கொடுமை செய்திருக்கிறார்கள். இதையெல்லாம் தட்டிக்கேட்பதற்கு ஒரு புரட்சிப் பெண் வரவேண்டும். இல்லையென்றால் இன்னும் சில காலங்களில் ஆடையே வேண்டாம் என்று முழு சுதந்திரத்துடன் இருக்க விரும்பும் மருமகளை ஆடை அணிந்துகொள்ளுமாறு வற்புறுத்தி கணவனும் மாமியாரும்கொடுமை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் போலிருக்கிறதே.


Bombay HC: Sorry, sari is no grounds for divorce

Tuesday, May 11, 2010

Many women complain about the change in their lifestyle after marriage. Some adapt to the new environment, but some don’t.

Like this 33-year-old homoeopathic doctor who moved the Bombay high court seeking divorce, as her “cruel” in-laws wanted her to wear a sari. The court refused to grant her divorce.

A division bench of justice AP Deshpande and justice RP Sondurbaldota refused to grant her divorce, saying that being conservative in dressing sense did not amount to cruelty.

The woman, who runs a clinic in Central suburbs, had sought divorce from her husband, an engineer, alleging physical and mental harassment. She also alleged that she was denied her freedom because she was not allowed to wear salwar kameez, and was forced to wear sari.

She moved the high court in 2007 after a family court rejected her divorce plea in 2004. According to the woman’s appeal, she married on June 24, 2003. Less than a month later, on July 18, her father-in-law passed away after having a massive heart attack.

She then went to her parents’ house on August 1, 2003, only to return to her husband’s home in Navi Mumbai a month later.

A few months down the line, the woman filed a criminal case against her husband, mother-in-law and two sisters-in-law under section 498A of the IPC (matrimonial cruelty). She alleged that her hubby’s family was demanding dowry and even assaulted her physically.

The high court, while rejecting the divorce appeal, noted that one of the sisters-in-law was physically handicapped. Also, the family was acquitted from the case.

The woman alleged that her husband had not told her about his siblings. She also alleged that he had multiple extramarital affairs and she was mentally tortured by her conservative in-laws, as they did not allow her to wear salwar kameez.

The judges, however, refused to buy the defence. Taking a note of the financial status of the husband, the judges noted that it was doubtful that he demand dowry.

The high court also observed that since one of her sisters-in-law was physically handicapped, she did not seem capable of assaulting anyone.

“Considering the short duration of co-habitation of the parties and the fact that during the very prior, the husband’s family was under grief on account of loss of his father, there was hardly any scope for the family subjecting the wife to any mental cruelty,” the judges observed.

“Besides, none of the allegations are of such nature as to cause a reasonable apprehension that it would be harmful or injurious to live with the husband. Hence, they cannot constitute ‘cruelty’ as contemplated by section 13(1)(ia) of the Hindu Marriage Act.”




Monday, May 10, 2010

பருவமங்கையின் காதல் நெறி!


திருநெல்வேலி : பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதால், தலைமறைவாக இருந்த பெண், காதலனுடன் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த ராமகிருஷ்ணாபுரத்தில் வசித்தவர் ஜெயச்சந்திரன்(50). தங்கநகை தொழில் செய்து வந்த இவர், வீட்டின் அருகில் ஒரு கோவில் கட்டி, அங்கு ஜோதிட தொழிலும் செய்து வந்தார்.

இவரது மகள் நித்யாதேவி(19). பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த நித்யாதேவி, ஏப்., 4ல் காதலனுடன் ஓடி விட்டார். இரண்டு நாட்களாகியும் மகள் வராததால், ஏப்., 7ல் ஜெயச்சந்திரன், அவரது மனைவி இந்திரா(45), மகன் ஜெயப்பிரகாஷ்(15), ஆகியோர் கோவில் முன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

இச்சம்பவத்திற்கு பிறகு, நித்யாதேவியை கண்டுபிடிக்கும்படி, எஸ்.பி., ஆஸ்ரா கார்க் உத்தரவிட்டார். போலீசார், நித்யாதேவியின் தோழிகளிடம் விசாரித்ததில், அவர் சேலம் மாவட்டம் கருங்கல்காடு அருகே குருசம்பட்டியில், காதலன் மூர்த்தியுடன் இருப்பது தெரிந்தது.

போலீசார் அங்கு சென்று, இருவரையும் நெல்லைக்கு அழைத்துவந்து, வள்ளியூர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். இருவரும் விரும்பி திருமணம் செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். பின், அவர்கள் சேலத்திற்கு சென்றனர்.

=========================

இந்தப் பெண் செய்தது சட்டப்படி சரி. இவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. ஏனென்றால் 18 வயதிற்கு மேற்பட்ட ஆணும் பெண்ணும் தாங்கள் விரும்பியவருடன் திருமணம் செய்துகொள்ளலாம் அல்லது திருமணம் செய்யாமலும் கூடி வாழலாம். இது தவறு என்று எந்த சட்டமும் சொல்லவில்லை என்று சமீபத்தில்தான் உச்சநீதிமன்றம் பரப்பான ஒரு வழக்கில் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. அதனால் இந்தப் பெண் செய்தது 100% சட்டப்படி சரியே. இன்னும் சொல்லப்போனால் இவர் நீதிமன்ற கருத்திற்கு மதிப்புக் கொடுத்து நடந்துள்ளார். இவருக்குப் பெயர்தான் புதுமைப்பெண், புரட்சிப் பெண். குடும்பத்தைப் பற்றியோ, பெற்றவர்களைப் பற்றியோ பெண்கள் நினைப்பது என்பது பெண்ணடிமைத்தனத்தின் அடையாளம் என்றுகூட இன்றைய புரட்சியாளர்கள் முழக்கமிடுவார்கள்!

பெற்றோரைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் தன் குடும்பத்தை இப்படி அவமானப்படச்செய்து இந்தப் பெண் செய்தது சரியா என்று சிலர் யோசிக்கலாம். அதற்கான பதிலும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. சமுதாய ஒழுக்கமும் சட்டமும் இரண்டு வேறான கூறுகள். சமுதாய ஒழுக்கநெறிப்படி தவறு என்று கருதப்படும் செயல்கள் சட்டப்படி தவறானதாகக் கருதமுடியாது. அதனால் இந்தப் பெண் செய்த செயல் சட்டப்படி தவறில்லை. மாறாக இந்தப் பெண்ணின் பெற்றோர் தற்கொலை செய்துகொண்டதுதான் இந்திய சட்டப்படி குற்றமாகும். தற்கொலை என்பது இந்திய சட்டப்படி குற்றச்செயலாகும். ஆனால் பெண்ணோ அல்லது ஆணோ தன் இஷ்டப்படி திருமணம் செய்யாமல் கூடி வாழ்ந்தால் அது சட்டப்படி குற்றம் கிடையாது.


இப்படித்தான் பல பெண்கள் மனிதாபிமானமின்றி சட்டத்தின் வழிநடந்து நாட்டிற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். பொய் வரதட்சணை வழக்குப்போடும் பெண்களும் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான். இதெல்லாம் ஒருவகையில் பெண்சுதந்திரத்தின் அடையாளம்தானே!


IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]

S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents

21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes".





Sunday, May 09, 2010

பெண்கள் அமைச்சகம் இந்தியப் பெண்களுக்கு என்ன செய்கிறது?

இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் வளர்ச்சிக்கென்று ஒரு தனி அமைச்சகமே இருக்கிறது. இருந்தாலும் இந்தியப்பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை எப்படி இருக்கிறது? அன்னையர் தினமான இன்று செய்தித்தாளில் வந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கத்தக்கதாக இருக்கிறது. இந்தியாவைவிட பின்தங்கிய நாடுகளில் கூட அன்னையரின் நிலை நன்றாக இருக்கிறது. ஆனால் இந்திய அன்னையரின் நிலை ஏன் இப்படி தரம் தாழ்ந்து போனது?


புது தில்லி, மே 9: அன்னையர் தினத்தைக் கொண்டாடும் வேளையில் அன்னையர் நலத்தில் இந்தியா பின்தங்கியுள்ளது.

அன்னையர் நலத்துக்கு முக்கியத்துவம் தரும் 77 நாடுகள் கொண்ட பட்டியலை "சேவ் தி சில்ட்ரன்' என்ற குழந்தைகள் நல உரிமை அமைப்பு அன்னையர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியா 73-வது இடத்தைப் பிடித்து பின்தங்கியுள்ளது. கென்யா, காங்கோ போன்ற சிறிய நாடுகளில் கூட அன்னையர் நலத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால் இந்தியாவிலோ அன்னையர் நலத்துக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்கத்து நாடுகளான சீனா 18-வது இடத்தையும், இலங்கை 40-வது இடத்தையும் பிடித்துள்ளன. பாகிஸ்தான் இந்தியாவை விட பின்தங்கி 75-வது இடத்தைப் பிடித்துள்ளது.

குறைந்த வளர்ச்சி பெற்ற நாடுகள் பட்டியலில் அன்னையர் நலத்துக்கு முக்கியத்துவம் தரும் நாடுகளின் வரிசையில் வங்கதேசம் 14-வது இடத்தைப் பிடித்துள்ளது.அன்னையர் நலத்துக்கு முக்கியத்துவம் தரும் மொத்தம் 166 நாடுகள் கொண்ட பட்டியலில் ஸ்வீடன் முதலிடத்தையும், ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.

நாட்டில் ஆண்டுதோறும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் 19.5 லட்சம் பேர் இறக்கின்றனர். உலகிலேயே இங்குதான் இந்த இறப்பு விகிதம் அதிகம்.அதைப் போல குழந்தைப் பிறப்பு மற்றும் கர்ப்ப காலத்தின்போது ஆண்டுதோறும் இந்தியாவில் 67 ஆயிரம் பெண்கள் இறக்கின்றனர்.

திறமையான சுகாதார ஊழியர்கள் இல்லாததே இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.சரியான மருத்துவ சிகிச்சை பெற்றால் இறக்கும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளில் 63 சதவீதம் பேரைக் காப்பாற்றிவிடலாம்.அதைப் போலவே ஒவ்வொரு கர்ப்பிணித் தாயும், உடல் நலம் குன்றிய குழந்தையும் டாக்டர்களைப் பார்த்து சிகிச்சை பெற்றால் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துவிடும். ஆனால் கிராமப்புற பகுதிகளில் இது சாத்தியம் இல்லை என்றார் அவர்.

அன்னையர் மற்றும் குழந்தைகள் நலத்தில்தான் பெண்கள் அமைச்சகம் அக்கறையில்லாமல் இருக்கிறார்களென்றால் பெண்களுக்கு இழைக்கப்படும் வரதட்சணை தொடர்பான கொடுமைகளைப்பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி பெண்களைக் காப்பாற்ற இந்த பெண்கள் அமைச்சகம் என்ன செய்கிறது என்று பார்த்தால் அதற்கும் ஒன்றும் செய்யவில்லை.

சமீபத்தில் இந்தியத் தலைமை நீதிபதி பெண்கள் வரதட்சணை தடுப்புச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தி அப்பாவிகளை துன்புறுத்துகிறார்கள் என்று சொன்னபோது பெண்கள் வாரியத்தலைவி உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்து பெண்கள் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தவில்லை, அவர்கள் சட்டங்களைப்பற்றிய போதிய விழிப்புணர்ச்சி இல்லாமல்தான் அப்படி அறியாமையில் செய்கிறார்கள் என்று வாய்கிழிய பேசியிருக்கிறார்.


Elaborating on false cases being filed in recent times, the CJI said that relatives not involved with a matrimonial dispute were unfairly implicated. "In some cases, 498A is grossly misused,'' he said. Balakrishnan was speaking at a seminar, `Marriage laws -- issues and challenges', organised by the National Commission for Women.

Faced with adverse comments from the CJI,
National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it was lack of awareness that led to false cases under 498A. "I would not like to use the term misuse. There is lack of awareness amongst people that is exploited by lawyers and police. We feel there is no need to review the law,'' Vyas said.


சரி. இப்படி தங்களுக்கு இருக்கும் பாதுகாப்பு சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சி இல்லாத பெண்களுக்கு எப்படி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று பார்த்தால் பெண்கள் அமைச்சகம் இதற்காக செய்துள்ள செலவு “0” .

இது போன்ற விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விளம்பரங்களை செய்ய இந்த அமைச்சகம் வருடந்தோறும் பட்ஜெட் போட்டு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி செய்தித்தாள், டிவி, ரேடியோ போன்றவற்றில் விளம்பரம் செய்வதாக நிதி மட்டும் ஒதுக்கிக்கொள்கிறார்கள். கீழுள்ள பட்ஜெட் நிதியைப் பாருங்கள். 2009-2010 நிதியாண்டில் 50 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள்.


Activity / Budget of WCD UNITS

Functions of Media Unit

  • The Media Unit is engaged in publicity on social issues concerning women and children to generate awareness in order to change the mind set of the people against the traditional issues and social evils.
  • The objective is achieved through media campaign by press advertisements, release of spots through various TV channels and other means of outdoor publicity.
  • Various wings of Ministry of I&B, viz. DAVP, Doordarshan, AIR, Directorate of Field Publicity and Song and Drama Division are associated with the campaign of this Ministry.

Budget for undertaking media activities

· The Media Budget of the Ministry is showing a rising trend during the last few years.

· The details of budget estimates viz-a-viz expenditure incurred during last few years is shown below:

Year

BE (in Rs. Crores)

RE (in Rs. Crores)

Actual expenditure (in Rs. Crores)

2006-07

15.00

15.00

11.74

2007-08

15.00

15.00

14.99

2008-09

48.00

59.75

51.57

2009-10

50.00

-

00.59(till 18.5.2009)


ஆனால் வரதட்சணை தொடர்பான சட்டங்களைப் பற்றி பெண்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த அவர்கள் செய்த செலவு “0” என்று அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். அந்த அறிக்கையைப் பாருங்கள்.

(படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள்)


பெண்களுக்கு உள்ள சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்ச்சி ஏற்படுத்த எந்த செலவும் செய்யாமல் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் அவர்கள் என்ன விளம்பரம் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால் இறந்து போன ராஜிவ் காந்தியின் பிறந்த தினம், இறந்த தினம், இந்திரா காந்தியின் பிறந்த தினம், இறந்த தினம் போன்றவற்றிற்கு எல்லா செய்தித்தாள்களிலும் விளம்பரம் செய்து எல்லா இந்தியப்பெண்களும் இறந்துபோன காங்கிரஸ் கட்சிக் காரர்களுக்காக கண்ணீர் வடிக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள்! இது இந்தியப் பெண்கள் வளர்ச்சி அமைச்சகமா அல்லது காங்கிரஸ் கட்சி குடும்ப வளர்ச்சி அமைச்சகமாக என்று எண்ணத்தோன்றுகிறது.

Print Media

Following advertisements were issued in prominent newspapers in Hindi, English and regional languages across the country during the year 2008-09.

1. Advertisement inviting Comments and Suggestions from all concerned on the Draft Guidelines on Adoption of Indian Children without Parental Care.

2. Advertisement on declining sex ratio, on the occasion of Mothers Day.

3. Advertisement in the memory of the legend Late Shri Rajiv Gandhi on his death anniversary month.

4. Advertisement on the occasion of Independence Day Eve.

5. Advertisement on Birth Anniversary of Late Shri Rajiv Gandhi

6. Advertisement on ‘Save the Girl Child / Gender Issue.

7. Advertisement on the occasion of the Birth Anniversary of Mahatma Gandhi.

8. Advertisement on the occasion of Deepawali

9. Advertisement on Death Anniversary of Late Smt. Indira Gandhi.

10. Advertisement on the occasion of Children’s Day.

11. Advertisement on Birth Anniversary of Late Smt. Indira Gandhi

12. Advertisement on the occasion of new year (1-1-2009).

13. Advertisement on National Girl Child Day in NER

14. Advertisement on 26-01-2009 on Domestic Violence in NER

15. Advertisement on International Women’s Day 2009



இந்த விளம்பரங்களுக்கும் இந்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள். ஆனால் அதே சமயம் வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961ல் இயற்றப்பட்டு இன்றுவரை இந்தியப்பெண்கள் அந்த சட்டத்தைப் பற்றி விழிப்புணர்ச்சி இல்லாமல் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் இதே பெண்கள் நலத்துறை சொல்கிறது. என்ன ஒரு முரண்பாடு! இந்தியப் பெண்களை காப்பாற்றுகிறேன் என்று சொல்லி ஒரு அமைச்சகமும் பல வாரியங்களும் வைத்து இந்திய மக்களின் வரிப்பணம் எப்படி செலவு செய்யப்படுகிறது என்று பாருங்கள். பிறகு எப்படி இந்தியப் பெண்களின் நிலை முன்னேறும்?



பாவம் அப்பாவி இந்தியப் பெண்கள். பெண்கள் அமைச்சகம் தங்களுக்கு ஏதோ நன்மை செய்வதாக நினைத்து ஏமாந்து கொண்டிருக்கிறார்களா? என்றுதான் இந்தப் பெண்களுக்கு விடிவுகாலம் வருமோ?

Thursday, May 06, 2010

காவலும் நீதியும் 498A-ல் சிக்கினால் என்னவாகும்?

சுவாரஸ்யமான செய்தி! அப்பாவிகளை பொய் 498A வழக்குகளில் சிக்கவைத்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் நீதியும் காவலும் தாங்கள் விரித்திருக்கும் அதே வலையில் தாங்களே சிக்கிக்கொண்டால் என்னவாகும் என்பதை இந்த செய்தி சொல்கிறது. அப்பாவிகளின் சாபம் சும்மா விடுமா?

அரசு கூடுதல் வக்கீலுக்கு முன்ஜாமீன்
தினமலர் மே 07,2010

மதுரை: மதுரையில் வரதட்சணை கொடுமையால் பேராசிரியை தற்கொலை செய்த வழக்கில் அரசு கூடுதல் வக்கீல் சாமுவேல் ராஜ், அவரது மனைவி உஷா வாசுகிக்கு ஐகோர்ட் கிளை முன்ஜாமீன் வழங்கியது. மதுரை ஐகோர்ட் கிளை அரசு கூடுதல் வக்கீல் எஸ்.பி.சாமுவேல்ராஜ். இவரது மகன் வக்கீல் கால்வின் கிறிஸ்டோபருக்கும், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ஸ்டாலின் மைக்கேல் மகள் பேராசிரியை நிஷானா ஜெபமலருக்கும் 2009 ஜூலை 2 ல் திருமணம் நடந்தது. ஏப்ரல் 19 ல் நிஷானா ஜெபமலர் தந்தை வீட்டில் தற் கொலை செய்து கொண் டார். ஊமச்சிகுளம் போலீசார் விசாரித்தனர். வரதட்சணை கொடுமையால், நிஷானா தற்கொலை செய்தது தெரிந் தது. கால்வின் கிறிஸ்டோபர், சாமுவேல்ராஜ், தாயார் உஷா வாசுகி மீது வரதட்சணை கொடுமை பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சாமுவேல்ராஜ், உஷா வாசுகி முன்ஜாமீன் மனு நேற்றைக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. கால்வின் கிறிஸ்டோபரும் தனியாக முன்ஜாமீன் கோரி மனு செய்திருந்தார்.

மனுக்கள் நேற்று, நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன் விசாரணைக்கு வந்தன. சாமுவேல்ராஜ் சார்பில் வக்கீல் சுபாஷ் பாபு, கால்வின் சார்பில் வக்கீல் சுவாமிநாதன் ஆஜராயினர். அரசு தரப்பில் வக்கீல் முருகன் ஆஜரானார். நிஷானாவின் தாயார் சத்தியவாணி பொன்ராணி சார்பில் வக்கீல் குமார் முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும் ''சாமுவேல்ராஜ், அவரது மனைவிக்கு மட்டும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி,'' நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் இரு வாரங்களுக்கு ஊமச்சிகுளம் ஸ்டேஷனில் தினமும் காலையில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டது. கால்வின் மனு ஜூனுக்கு தள்ளிவைக்கப்பட்டது.


Wednesday, May 05, 2010

இந்திய சிறப்புச்சட்டங்கள் பாதுகாக்கும் பெண்கள் உண்மையாகவே இரக்ககுணம் உள்ளவர்களா?

பலகாலமாக பல முட்டாள்கள் ஒன்றுகூடி பெண்கள் என்றால் பலவீனமானவர்கள் என்று முடிவு செய்து முட்டாள்தனமாக பல சட்டங்களை இயற்றியிருக்கிறார்கள். இந்த சமுதாயத்தில் பல முட்டாள்களும் அப்படித்தான் நம்பிக்கொண்டு பெண்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் சொல்லும் எல்லாவற்றிற்கும் தலையாட்டிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ஒரு இளம் பெண் பொய் வரதட்சணைப் புகார் கொடுத்தால் போதும். இந்த முட்டாள் கூட்டம் ஆகா பெண்ணுக்கு கொடுமை நடந்துவிட்டதே என்று ஓநாய் போல பரிதாபப்படுவார்கள்.

உண்மையில் தாய்மை குணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் சட்டத்தில் சிறப்புச்சலுகைகள் கொடுக்கப்படவேண்டும். தாய்மை குணம் என்பது குறிப்பிட்ட பாலினத்திற்கு மட்டும் உரியதல்ல. தாய்மை குணம் ஆண், பெண் என்ற இருபாலினத்திலும் இருக்கிறது. அதே சமயம் வன்முறைக் குணம் என்பதும் இருபாலினத்திலும் இருக்கிறது. அப்படியிருக்கும்போது பெண்களுக்கு மட்டும் எதற்கு சிறப்புச்சலுகை? பாலினத்தை மட்டும் அடிப்படையாக வைத்து சட்டங்களை இயற்றுவது எவ்வளவு பெரிய துரோகம்?

இந்தக் கேள்விக்கு பதிலை யோசிப்பதற்கு முன் கீழுள்ள செய்தியையும் வீடியோவையும் பாருங்கள்.

கள்ளக்காதலை கண்டித்தவர் கொலை
தினமலர் மே 06,2010

திருப்புவனம் : திருப்புவனம் அருகே கீழடியில் உள்ள செங்கல் சேம்பரில் திருநெல்வேலி, பரைப்பாடியை சேர்ந்த லிங்கம் (42), இவரது அண்ணன் மாடசாமி, இவரது மனைவி ராணி ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். இதில் மாடசாமி மனைவி ராணிக்கும், கீழடி மூக்கன் மகன் செல்லமணிக்கும் தொடர்பு ஏற்பட்டது. நேற்று மாலை 6.30 மணியளவில் லிங்கம் ராணியை கண்டித்து உள்ளார். ஆத்திரமடைந்த ராணி, செல்லமணி இருவரும் அரிவாளால் லிங்கத்தை வெட்டியதில் அவர் இறந்தார். மானாமதுரை டி.எஸ்.பி., சுப்பிரமணி யன், இன்ஸ் பெக்டர் சங்கர் விசாரித்து வருகின் றனர். ராணி, செல்லமணி யை தேடி வருகின்றனர்.

இளகிய மனம் படைத்தோர் இந்த செய்தியோடு நிறுத்திக்கொள்ளுங்கள். பின்வரும் வீடியோக் காட்சிகளை கண்டிப்பாக பார்க்க வேண்டாம்.


பெண்கள் ஒன்றுகூடி பெண்ணுக்கு செய்யும் வன்முறைக் காட்சிகள்






தவறு செய்தவர்களை தண்டிக்க தனிமனிதர்களுக்கு உரிமையில்லை. சட்டம் மட்டும்தான் அந்த வேலையை செய்யவேண்டும். ஆனால் பெண்கள் என்று வரும்போது அவர்கள் எதுவேண்டுமானாலும் செய்யலாம். ஏனென்றால் பெண்கள் என்றால் அப்பாவிகள், வன்முறையே செய்யத்தெரியாதவர்கள் என்ற கண்ணோட்டத்துடன் பல குருடர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

மேலுள்ள செய்தியையும் வீடியோவையும் பார்த்துவிட்டீர்களா? இப்போது இந்திய அரசாங்கத்தின் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்ன சொல்கிறது என்று பாருங்கள். பெண்கள் என்றால் எப்போதும் ஆண்களின் வன்முறைக்குள்ளாபவர்கள் என்றும் ஆண் என்றால் எப்போதும் பெண்ணை அடித்துக் கொடுமை செய்பவன் என்றும் வரையறை செய்துவைத்திருக்கிறார்கள் இந்த நாட்டு சட்டமேதைகள்! இது எந்தவகையில் நேர்மையான சட்டம் என்று யோசித்துக்கொண்டே இருங்கள்.


Definitions.-In this Act, unless the context otherwise requires,-

(a) "aggrieved person" means any woman (Note: Woman is always a victim and Male is Never considered as a victim of domestic violence) who is, or has been, in a domestic relationship with the respondent and who alleges to have been subjected to any act of domestic violence by the respondent;

(e) "domestic incident report" means a report made in the prescribed form on receipt of a complaint of domestic violence from an aggrieved person;

(q) "respondent"
means any adult male person (Note: Male is always accused respondent) who is, or has been, in a domestic relationship with the aggrieved person and against whom the aggrieved person has sought any relief under this Act:Provided that an aggrieved wife or female living in a relationship in the nature of a marriage may also file a complaint against a relative of the husband or the male partner;




“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.