சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, May 09, 2010

பெண்கள் அமைச்சகம் இந்தியப் பெண்களுக்கு என்ன செய்கிறது?

இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் வளர்ச்சிக்கென்று ஒரு தனி அமைச்சகமே இருக்கிறது. இருந்தாலும் இந்தியப்பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை எப்படி இருக்கிறது? அன்னையர் தினமான இன்று செய்தித்தாளில் வந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கத்தக்கதாக இருக்கிறது. இந்தியாவைவிட பின்தங்கிய நாடுகளில் கூட அன்னையரின் நிலை நன்றாக இருக்கிறது. ஆனால் இந்திய அன்னையரின் நிலை ஏன் இப்படி தரம் தாழ்ந்து போனது?


புது தில்லி, மே 9: அன்னையர் தினத்தைக் கொண்டாடும் வேளையில் அன்னையர் நலத்தில் இந்தியா பின்தங்கியுள்ளது.

அன்னையர் நலத்துக்கு முக்கியத்துவம் தரும் 77 நாடுகள் கொண்ட பட்டியலை "சேவ் தி சில்ட்ரன்' என்ற குழந்தைகள் நல உரிமை அமைப்பு அன்னையர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியா 73-வது இடத்தைப் பிடித்து பின்தங்கியுள்ளது. கென்யா, காங்கோ போன்ற சிறிய நாடுகளில் கூட அன்னையர் நலத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால் இந்தியாவிலோ அன்னையர் நலத்துக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்கத்து நாடுகளான சீனா 18-வது இடத்தையும், இலங்கை 40-வது இடத்தையும் பிடித்துள்ளன. பாகிஸ்தான் இந்தியாவை விட பின்தங்கி 75-வது இடத்தைப் பிடித்துள்ளது.

குறைந்த வளர்ச்சி பெற்ற நாடுகள் பட்டியலில் அன்னையர் நலத்துக்கு முக்கியத்துவம் தரும் நாடுகளின் வரிசையில் வங்கதேசம் 14-வது இடத்தைப் பிடித்துள்ளது.அன்னையர் நலத்துக்கு முக்கியத்துவம் தரும் மொத்தம் 166 நாடுகள் கொண்ட பட்டியலில் ஸ்வீடன் முதலிடத்தையும், ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.

நாட்டில் ஆண்டுதோறும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் 19.5 லட்சம் பேர் இறக்கின்றனர். உலகிலேயே இங்குதான் இந்த இறப்பு விகிதம் அதிகம்.அதைப் போல குழந்தைப் பிறப்பு மற்றும் கர்ப்ப காலத்தின்போது ஆண்டுதோறும் இந்தியாவில் 67 ஆயிரம் பெண்கள் இறக்கின்றனர்.

திறமையான சுகாதார ஊழியர்கள் இல்லாததே இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.சரியான மருத்துவ சிகிச்சை பெற்றால் இறக்கும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளில் 63 சதவீதம் பேரைக் காப்பாற்றிவிடலாம்.அதைப் போலவே ஒவ்வொரு கர்ப்பிணித் தாயும், உடல் நலம் குன்றிய குழந்தையும் டாக்டர்களைப் பார்த்து சிகிச்சை பெற்றால் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துவிடும். ஆனால் கிராமப்புற பகுதிகளில் இது சாத்தியம் இல்லை என்றார் அவர்.

அன்னையர் மற்றும் குழந்தைகள் நலத்தில்தான் பெண்கள் அமைச்சகம் அக்கறையில்லாமல் இருக்கிறார்களென்றால் பெண்களுக்கு இழைக்கப்படும் வரதட்சணை தொடர்பான கொடுமைகளைப்பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி பெண்களைக் காப்பாற்ற இந்த பெண்கள் அமைச்சகம் என்ன செய்கிறது என்று பார்த்தால் அதற்கும் ஒன்றும் செய்யவில்லை.

சமீபத்தில் இந்தியத் தலைமை நீதிபதி பெண்கள் வரதட்சணை தடுப்புச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தி அப்பாவிகளை துன்புறுத்துகிறார்கள் என்று சொன்னபோது பெண்கள் வாரியத்தலைவி உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்து பெண்கள் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தவில்லை, அவர்கள் சட்டங்களைப்பற்றிய போதிய விழிப்புணர்ச்சி இல்லாமல்தான் அப்படி அறியாமையில் செய்கிறார்கள் என்று வாய்கிழிய பேசியிருக்கிறார்.


Elaborating on false cases being filed in recent times, the CJI said that relatives not involved with a matrimonial dispute were unfairly implicated. "In some cases, 498A is grossly misused,'' he said. Balakrishnan was speaking at a seminar, `Marriage laws -- issues and challenges', organised by the National Commission for Women.

Faced with adverse comments from the CJI,
National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it was lack of awareness that led to false cases under 498A. "I would not like to use the term misuse. There is lack of awareness amongst people that is exploited by lawyers and police. We feel there is no need to review the law,'' Vyas said.


சரி. இப்படி தங்களுக்கு இருக்கும் பாதுகாப்பு சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சி இல்லாத பெண்களுக்கு எப்படி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று பார்த்தால் பெண்கள் அமைச்சகம் இதற்காக செய்துள்ள செலவு “0” .

இது போன்ற விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விளம்பரங்களை செய்ய இந்த அமைச்சகம் வருடந்தோறும் பட்ஜெட் போட்டு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி செய்தித்தாள், டிவி, ரேடியோ போன்றவற்றில் விளம்பரம் செய்வதாக நிதி மட்டும் ஒதுக்கிக்கொள்கிறார்கள். கீழுள்ள பட்ஜெட் நிதியைப் பாருங்கள். 2009-2010 நிதியாண்டில் 50 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள்.


Activity / Budget of WCD UNITS

Functions of Media Unit

  • The Media Unit is engaged in publicity on social issues concerning women and children to generate awareness in order to change the mind set of the people against the traditional issues and social evils.
  • The objective is achieved through media campaign by press advertisements, release of spots through various TV channels and other means of outdoor publicity.
  • Various wings of Ministry of I&B, viz. DAVP, Doordarshan, AIR, Directorate of Field Publicity and Song and Drama Division are associated with the campaign of this Ministry.

Budget for undertaking media activities

· The Media Budget of the Ministry is showing a rising trend during the last few years.

· The details of budget estimates viz-a-viz expenditure incurred during last few years is shown below:

Year

BE (in Rs. Crores)

RE (in Rs. Crores)

Actual expenditure (in Rs. Crores)

2006-07

15.00

15.00

11.74

2007-08

15.00

15.00

14.99

2008-09

48.00

59.75

51.57

2009-10

50.00

-

00.59(till 18.5.2009)


ஆனால் வரதட்சணை தொடர்பான சட்டங்களைப் பற்றி பெண்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த அவர்கள் செய்த செலவு “0” என்று அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். அந்த அறிக்கையைப் பாருங்கள்.

(படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள்)


பெண்களுக்கு உள்ள சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்ச்சி ஏற்படுத்த எந்த செலவும் செய்யாமல் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் அவர்கள் என்ன விளம்பரம் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால் இறந்து போன ராஜிவ் காந்தியின் பிறந்த தினம், இறந்த தினம், இந்திரா காந்தியின் பிறந்த தினம், இறந்த தினம் போன்றவற்றிற்கு எல்லா செய்தித்தாள்களிலும் விளம்பரம் செய்து எல்லா இந்தியப்பெண்களும் இறந்துபோன காங்கிரஸ் கட்சிக் காரர்களுக்காக கண்ணீர் வடிக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள்! இது இந்தியப் பெண்கள் வளர்ச்சி அமைச்சகமா அல்லது காங்கிரஸ் கட்சி குடும்ப வளர்ச்சி அமைச்சகமாக என்று எண்ணத்தோன்றுகிறது.

Print Media

Following advertisements were issued in prominent newspapers in Hindi, English and regional languages across the country during the year 2008-09.

1. Advertisement inviting Comments and Suggestions from all concerned on the Draft Guidelines on Adoption of Indian Children without Parental Care.

2. Advertisement on declining sex ratio, on the occasion of Mothers Day.

3. Advertisement in the memory of the legend Late Shri Rajiv Gandhi on his death anniversary month.

4. Advertisement on the occasion of Independence Day Eve.

5. Advertisement on Birth Anniversary of Late Shri Rajiv Gandhi

6. Advertisement on ‘Save the Girl Child / Gender Issue.

7. Advertisement on the occasion of the Birth Anniversary of Mahatma Gandhi.

8. Advertisement on the occasion of Deepawali

9. Advertisement on Death Anniversary of Late Smt. Indira Gandhi.

10. Advertisement on the occasion of Children’s Day.

11. Advertisement on Birth Anniversary of Late Smt. Indira Gandhi

12. Advertisement on the occasion of new year (1-1-2009).

13. Advertisement on National Girl Child Day in NER

14. Advertisement on 26-01-2009 on Domestic Violence in NER

15. Advertisement on International Women’s Day 2009இந்த விளம்பரங்களுக்கும் இந்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள். ஆனால் அதே சமயம் வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961ல் இயற்றப்பட்டு இன்றுவரை இந்தியப்பெண்கள் அந்த சட்டத்தைப் பற்றி விழிப்புணர்ச்சி இல்லாமல் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் இதே பெண்கள் நலத்துறை சொல்கிறது. என்ன ஒரு முரண்பாடு! இந்தியப் பெண்களை காப்பாற்றுகிறேன் என்று சொல்லி ஒரு அமைச்சகமும் பல வாரியங்களும் வைத்து இந்திய மக்களின் வரிப்பணம் எப்படி செலவு செய்யப்படுகிறது என்று பாருங்கள். பிறகு எப்படி இந்தியப் பெண்களின் நிலை முன்னேறும்?பாவம் அப்பாவி இந்தியப் பெண்கள். பெண்கள் அமைச்சகம் தங்களுக்கு ஏதோ நன்மை செய்வதாக நினைத்து ஏமாந்து கொண்டிருக்கிறார்களா? என்றுதான் இந்தப் பெண்களுக்கு விடிவுகாலம் வருமோ?

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.