பட்டுக்கோட்டை : போலீஸ் ஏட்டு கணவர் மீது, மூன்றாவது மனைவியான போலீஸ் பெண் ஏட்டு நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு வழங்கியதுடன், பட்டுக்கோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், சுதாவை திருமணம் செய்ததை மறைத்து தன்னோடு போலீஸ் பயிற்சியின் போது பழகிய தொழுதூர் புதுத்தெருவைச் சேர்ந்த தெட்சணாமூர்த்தி மகள் வனிதாவை (32) (திருச்சியில் ஏட்டாக பணிபுரிபவர்), மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். வனிதாவுக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாளாய் இருந்ததால் அவரும் விசாரிக்காமல் இளங்கோவனை திருமணம் செய்துள்ளார்.
ஏட்டு வனிதா கூறியதாவது: கடந்த 2007 ஜன., 29ம் தேதி எங்கள் திருமணம் நடந்தது. அதன் பின் சண்முகப்பிரியா (3) இளமதி (10 மாதம்) ஆகிய இரண்டு குழந்தைகள் பிறந்தனர். நாளடைவில் எங்களை சந்திக்க இளங்கோவன் வராததால் அவர் மீது சந்தேகப்பட்டு விசாரித்த போது, சுதாவுடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டுள்ளது தெரிந்தது. என்னுடன் வாழ மறுத்து, தன் முதல் குழந்தை மட்டும் அவருக்கு பிறந்ததாகவும், இரண்டாவது குழந்தை என் உயர் அதிகாரிக்கு பிறந்ததாகவும் கூறுகிறார். அதனால், டி.என்.ஏ., சோதனை செய்து உண்மை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, சோதனை செய்யவும், இளங்கோவன் மற்றும் தன்னை மிரட்டும் இளங்கோவனின் இரண்டாவது மனைவி சுதா மீது நடவடிக்கை எடுக்கவும் புகார் அளித்துள்ளேன்.திருவாரூர் மாவட்டத்தில் இளங்கோவன் வேலை செய்கிறார். திருச்சியில் வனிதா வேலை செய்கிறார். இளங்கோவனின் இரண்டாவது மனைவி சுதா, பட்டுக்கோட்டையில் வசிப்பதால், அவர் அங்கிருந்து வனிதாவுக்கு மொபைல்போனில் எஸ்.எம்.எஸ்., அனுப்பி மிரட்டி வந்துள்ளார். இதுபற்றி தஞ்சாவூர் எஸ்.பி., செந்தில்வேலனிடம் வனிதா புகார் தெரிவித்துள்ளார். இதில், தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாரை விசாரிக்க சொல்லியுள்ளதாக, எஸ்.பி., கூறியுள்ளார். இதனால், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புராணியிடம் இளங்கோவன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி சுதா மீது வனிதா புகார் செய்தார். ஆனால், புகார் குறித்து விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் அன்புராணி, வனிதாவிடம் சாதாரணமாக எழுதி வாங்கிக் கொண்டு வழக்கு ஏதும் பதிவு செய்ய மறுத்துவிட்டார். ஆத்திரம் அடைந்த வனிதா மற்றும் அவரது உறவினர்கள் நேற்று பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வந்தனர். உரிய நடவடிக்கை எடுக்காததால், போலீஸ் ஸ்டேஷனை வனிதா மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., நாராயணசாமி, வனிதா மற்றும் இளங்கோவனை நேரில் அழைத்து விசாரணை செய்தார். இளங்கோவன் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக அவர் உறுதி கூறினார். நேற்று காலை முதல் இவ்வழக்கை விசாரிக்க மறுத்த இன்ஸ்பெக்டர் அன்புராணி, "இது தங்கள் துறையில் பணி புரிபவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால், பத்திரிகையாளர்கள் இது பற்றி எழுதக் கூடாது,'' என, எச்சரித்தது மட்டுமின்றி, போலீஸ் ஏட்டு இளங்கோவனை போட்டோ எடுக்கவிடாமல் பல மணி நேரம் போலீஸ் ஸ்டேஷனுக்குள் மறைத்து வைத்து, மக்கள் நடமாட்டம் குறைந்த பின் அவரை வெளியே அனுப்பி வைத்தார்.அரசன் அன்றே கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். இவை இரண்டிலிருந்து தப்பினாலும் அப்பாவிகளின் சாபத்தீ தப்பாமல் தண்டிக்கும்.
1 comment:
//மச்சக்கார “ஏட்டுக்கள்” - சூப்பர் நியூஸ்//
நாறிப்போய் நாத்தமெடுக்குது உறவுமுறைகள்... முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்பதற்கு இது ஒர் உதாரணம்
Post a Comment