சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, July 30, 2009

சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானே?

சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானே?

இது போன்ற தம்பதிகளுக்கும் வரதட்சணை தடுப்புச்சட்டம், IPC498A, மற்றும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் போன்றவை பொருந்துமா?


Dinamalar News: July 31, 2009
திருமணத்தை பதிவு செய்யக்கோரி விண்ணப்பித்துள்ள லெஸ்பியன்கள்

லக்னோ:வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்ட இளம் பெண்கள், தங்கள் திருமணத்தை பதிவு செய்யக்கோரி கோர்ட்டில் விண்ணப்பித் துள்ளனர்.உத்தரபிரதேச மாநிலம், முசாபர் நகரில் உள்ள ஷாம்லி நகரை சேர்ந்த இரண்டு பெண்கள் தையல் வகுப் பில் பயிற்சி பெறும் போது நண் பர்களானார்கள்.

இதில், ஒரு பெண் ஏற்கனவே அரியானாவை சேர்ந்த நபரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டவர். ஆனால், அவரிடம் வாழ பிடிக்காமல் பெண் நண்பருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு கணவரை பிரிந்து வந்து விட்டார்.இந்த பெண்களின் உறவை பற்றி அறிந்த குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். "பெற்றோருடன் வசித் தால் நாம் ஒன்று சேர்ந்து வாழ முடியாது' என நினைத்த இந்த பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி ஹரித்துவார் சென்று அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

ஷாம்லி நகருக்கு திரும்பிய போது ரயில் நிலையத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணை அவரது உறவினர்கள் வலுக் கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து சென்றனர். தனது ஜோடி யை பிரிந்த மற்றொரு பெண், இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை டில்லி ஐகோர்ட் ஆதரித்துள்ளதை சுட்டிக்காட்டி பேசிய இந்த பெண்கள், தங்கள் திருமணத்தை பதிவு செய்ய வேண் டும், எனக் கோரி, மாவட்ட கோர்ட்டில் விண்ணப்பித்துள்ளனர். போலீசார் தலையிட்டு, இந்த ஜோடி சேர்ந்து வாழ, நடவடிக்கை எடுத்துள்ளனர்.Wednesday, July 29, 2009

வறுமையின் பெயரால் கொலை கூட செய்யலாம்!

வறுமையின் பெயரால் கொலை கூட செய்யலாம்!

இக்கால நல்லதங்காளுக்கு ஜாமீன்:ஐகோர்ட் கிளை உத்தரவு

Dinamalar News: July 29, 2009

மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வறுமையினால் இரு குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு மதுரை ஐகோர்ட் கிளை ஜாமீன் வழங்கியது.பரமக்குடியை சேர்ந்த சரவணன் மனைவி மல்லிகா(25). இவர்களுக்கு சசிகலா(5), வினோதினி(3) ஆகிய குழந்தைகள் இருந்தனர். சரவணன் லோடுமேன் வேலை செய்து வருகிறார். குடும்ப செலவுக்கு கூட போதிய வருமானம் இல்லை. மேலும் மல்லிகா அடிக்கடி உடல் நலக்குறைவால் அவதியுற்றார். குழந்தைகளை வளர்க்க வாங்கிய கடனும் அதிகரித்தது.

இதனால் மனமுடைந்த மல்லிகா, இரு குழந்தைகளுடன் திருப்புவனம் மடப்பும் கோயிலுக்கு வந்தார். அங்கு கோயிலுக்கு பின்புறத்திலுள்ள கிணற்றில் குழந்தைகளை தள்ளி விட்டு தானும் விழுந்தார். இதில் இரு குழந்தைகளும் இறந்தனர். மல்லிகாவை அருகில் இருந்தவர்கள் மீட்டனர். மல்லிகா மீது கொலை, தற்கொலை முயற்சி பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மல்லிகா ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் சிவ.ஐயப்பன் வாதிடுகையில், "வறுமையினால் இச்சம்பவம் நடந்துள்ளது. மேலும் விசாரணை ஒரளவு முடிந்து விட்டது,'' என்றார். முடிவில் மல்லிகாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
-------------------------------------------------------------------------------------------------
இது போன்ற வறுமையில் வாடும் அப்பாவிப் பெண்களையும், ஒரு பாவமும் அறியாத குழந்தைகளையும் காப்பாற்றுவது யார்? பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அமைச்சகமா? இல்லை அவர்களுக்கு அதை விட மேலான பல காரியங்கள் இருக்கின்றது. அது என்னவென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் .Sunday, July 26, 2009

இந்தியக் குடும்ப அமைப்பின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறி

இந்தியக் குடும்ப அமைப்பின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறி

போலிசுக்கும், வக்கீலுக்கும் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க எந்த வகையான பயிற்சியும் கொடுக்கப்படுவதில்லை. அப்படியிருக்க, குடும்பப் பிரச்சனைகளை அவர்கள் எப்படி தீர்க்க முடியும் ? ஊரில் நடக்கும் திருமணங்களை போலிசும், வக்கீலுமா நடத்தி வைக்கிறhர்கள்?

ஒவ்வொரு குடிமகனும் அல்லது குடிமகளும் கட்டாயமாகத் திருமணம் செய்ய வேண்டும் என்று எந்த வித சட்டமும் இல்லை. ஆனால், திருமணங்களை எளிதில் சிதைக்க நாட்டில் பல விதமான சட்டங்களும் அவற்றை எந்த முறையிலாவது செயல்படுத்தித் தங்களது வருமானத்தை பெருக்கிக் கொள்ள பல்துறை அதிகாரிகள் பலரும் உள்ளனர்.

தம்பதியரின் படுக்கை அறையில் புகுந்து தங்களது வயிற்றை நிரப்பும் கயவர்கள் பலர் நாட்டில் இருக்கின்ற வரை இந்தியக் குடும்ப கலாசார அழிவை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.
-------------------------------------------------------------------------------------------------

தீவிரமாகும் விவாகரத்து நோய்
Thanks: Dinamalar. July 27, 2009

பாரம்பரிய பெருமையும், கலாசார பின்னணியும் கொண்ட தமிழகத்தில் ஆண்டுதோறும், 4,000த்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் தாக்கலாகின்றன. இதில், ஆண்டுக்கு 20 சதவீத, "வளர்ச்சி' இருப்பது, கூடுதல் வேதனை.

குடும்பத்தில், கணவன் - மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்னைகளை, உறவினர்களால் தீர்க்க முடியாதபட்சத்தில், போலீஸ் துறையை அணுகுகின்றனர். அங்கு சமரச முயற்சியில் ஈடுபடும் போலீசாரின் முயற்சிகளும் தோல்வியடைந்தால், பிரச்னை கோர்ட்டுக்குச் செல்கிறது.இப்படி குடும்பம், நண்பர்கள், சமூகம் என எல்லாராலும் தீர்க்க முடியாமல், குடும்ப நல கோர்ட்டில் வழக்கு பதிவு செய்ய வரும் தம்பதியர்களுக்கு, கோர்ட்டில் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. அந்த முயற்சியும் தோல்வியடையும்போது, வழக்கைச் சந்திக்கின்றனர். சில வழக்குகளில், வக்கீல்கள் சொன்னபடி தம்பதியர்கள் சொல்வதாலும், அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளாலும், தங்களது குடும்ப விவகாரங்கள் அனைத்தையும் வெளியே சொல்ல வேண்டிய நிலைக்கு தம்பதிகள் ஆளாகின்றனர்; கூடவே வழக்கையும் சந்திக்கின்றனர்.சென்னை குடும்ப நல கோர்ட்டில், 2006ம் ஆண்டில் மட்டும் 3,374 வழக்குகள், 2007ம் ஆண்டின் முடிவில் 3,874 வழக்குகள், 2008ம் ஆண்டில் 4,125 வழக்குகள் என விவாகரத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகரித்து கொண்டே போகின்றன. ஆண்டிற்கு 20 சதவீதம் அதிகரிக்கிறது.சென்னையில் மட்டும் திருமண முறிவு 5 சதவீதமாக இருந்த நிலை மாறி, சில ஆண்டுகளில் 12 முதல் 15 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்த வழக்குகளில் நடிகர் பிரசாந்த் முதல் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர் மற்றும் நடிகைகளும் அடங்குவர். இப்படி ஏழை, பணக்காரன், கூட்டுக் குடும்பம், தனிக்குடித்தனம் என்று எல்லாரையும் எளிதில் தாக்கும் நோயாகி விட்டது, விவாகரத்து.இது குறித்து, சீனியர் வக்கீல் ஒருவர் கூறியதாவது: முன்பெல்லாம் பெண்கள் அறியாமையால், கண்ணைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தனர். அப்போது கூட தம்பதியருக்கிடையே விவாகரத்து பெரிதாக காணவில்லை. தற்போது பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ள இந்த காலகட்டத்தில் தான், விவாகரத்துகளும் பெருகியுள்ளன. பொருளாதார பாதிப்பும் சில விவாகரத்துகளுக்கு காரணமாய் அமைந்துவிடுகிறது.கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடித்தனம் அதிகமாகி இருப்பதும் ஒரு காரணம் என்று சொல்கிற போதே, சில பெற்றோர்களாலும் விவாகரத்துகள் வருகின்றன என்பதையும், ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே, "தான்' என்கிற எண்ணத்தைக் (ஈகோ) குறைத்தாலே பல விவாகரத்து வழக்குகளை தவிர்த்துவிடலாம். இதேபோல, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் தன்மை, குழந்தைகளின் எதிர்காலம், திருமணம் என்ற பந்தத்திற்கு மரியாதை கொடுத்தல் போன்றவற்றை இருபாலரும் கடைபிடித்தால், விவாகரத்து பிரச்னையை குறைக்கலாம். முக்கியமாக கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

மொபைல் போன் பேச்சு: விவாகரத்து முடிச்சு!: சமரச முயற்சிகள் தோல்வியடைவது பற்றியும், இந்திய திருமணச் சட்டங்கள் கூறுவது குறித்தும் ஸ்ரீரக்ஷா ஆலோசனை மற்றும் மத்தியஸ்த மையத்தின் கவுரவத் தலைவரும் வக்கீலுமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி கூறியதாவது:குடும்பத்தில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதை சரிசெய்ய முயற்சிப்பதே எங்கள் நிறுவனத்தின் பணி. குறிப்பாக, விவாகரத்து சம்பந்தப் பட்ட வழக்குகளில் கணவன் - மனைவி இடையே சமரச முயற்சியாக கவுன்சிலிங் கொடுக்கிறோம். அதன் பிறகும் எங்களுக்கு விவாகரத்து தான் வேண்டும் என்கிறபோது, அவர்கள் வழக்கைச் சந்திக்கின்றனர்.இந்திய திருமணச் சட்டங்களில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே சட்டங்கள் இயற்றியுள்ளனர். கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.

பிரிந்து வாழும் இருவரில், ஒருவர் சேர்ந்து வாழ விருப்பப்பட்டாலும், திருமண முறிவு என்றில்லாமல், சமுதாயத்தில் பிரிந்து மட்டும் வாழ விரும்புகிறோம் என்று விருப்பம் தெரிவித்தாலும், விவாகரத்து தேவை என்பவர்களுக்கும் சட்டங்களில் தனியே பிரிவுகள் உள்ளன.இன்றைய பரபரப்பான காலசூழ்நிலையில், குடும்பங்களில் கணவனோ, மனைவியோ தொடர்ந்து, "டிவி' பார்த்துக்கொண்டும், பல மணி நேரம் மொபைல் போனில் பேசிக்கொண்டும் இருந்துவிட்டு, குடும்பத்தைக் கவனிக்க மறந்துவிடுகின்றனர். இங்கே ஆரம்பிக்கும் மனதளவிலான பிரச்னை, பின் விஸ்வரூபம் எடுத்து விவாகரத்தில் முடிகிறது. இவ்வாறு ஆதிலட்சுமி கூறினார்.

Monday, July 20, 2009

சட்ட தீவிரவாதத்திற்கு மீண்டும் ஒரு சவுக்கடி

வரதட்சணை வழக்கில் போலீஸ் தலையிடக்கூடாது: சமூகநல அதிகாரியே விசாரிக்க வேண்டும் - ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

எத்தனை முறை நீதிமன்றங்கள் இந்த அராஜகத்திற்கு எதிராக தீர்ப்புகள் வழங்கினாலும் அதை பின்பற்றுவது யார்? இதுவரை சட்ட நடைமுறைகள் நாட்டில் பின்பற்றப்பட்டதாக ஒரு செய்தியும் இல்லை. குறிப்பாக பொய் வரதட்சணை வழக்குகளில் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டு தலை விரித்தாடுகிறது.

இதற்குப் பிறகாவது விடிவுகாலம் வருமா?

******************************************************************************

சமூகநல அதிகாரியே விசாரிக்க வேண்டும்: வரதட்சணை வழக்கில் போலீஸ் தலையிடக்கூடாது; ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

மாலை மலர் செய்தி
சென்னை, ஜூலை.20, 2009

சென்னை சூளைமேட்டை சேர்ந்த வக்கீல் மாலினி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

பெண்கள் பலர் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்கத்தில் அவர்கள் மீது வரதட்சணை புகார் கொடுக்கிறார்கள்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரையும், குடும்பத்தாரையும் மிரட்டுதல், துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே இந்த வழக்கில் போலீஸ் முதலிலேயே நேரடியாக தலையிடுவதை தடுக்க வேண்டும். அதிகாரிகளை கொண்டு விசாரணை நடத்தி அதன் பிறகு உண்மை இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வரதட்சணை தொடர்பான புகாரை முதலில் மாவட்ட சமூகநல அதிகாரி விசாரிக்க வேண்டும். அதில் குற்றம் இருப்பது தெரிந்தால் வழக்கு தொடர சிபாரிசு செய்யலாம். இதற்காக மாவட்டந்தோறும் சமூகநல அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றனர்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி முருகேசன் தலைமையிலான பெஞ்ச் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை செயலாளர் சார்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் வரதட்சணை புகார்களை விசாரிக்க மாவட்டந்தோறும் சமூக நல அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து நீதிபதிகள் தீர்ப்பு கூறியதாவது:-

வரதட்சணை புகாரை விசாரிக்க மாவட்டந்தோறும் சமூகநல அதிகாரிகளை நியமித்து இருப்பதாக அரசு தெரிவித்து உள்ளது.

புகார்கள் வந்ததும் இனி அவர்கள்தான் விசாரிப்பார்கள். அவர்கள் அதிரடி சோதனை போன்றவற்றையும் நடத்தலாம். விசாரணையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றம் இருப்பது தெரிந்தால் போலீசார் வழக்குப்பதிவு செய்ய சிபாரிசு செய்யலாம். அதன்பிறகே போலீசார் இதில் தலையிடலாம். சமூகநல அதிகாரிகள் விசாரித்து முடிவு சொல்லும் வரை இதில் போலீசார் தலையிடக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Saturday, July 11, 2009

அதிகாரிகள் மீது பாலியல் புகார் கூறிய பெண் ராணுவ அதிகாரி 'டிஸ்மிஸ்'

அதிகாரிகள் மீது பாலியல் புகார் கூறிய பெண் ராணுவ அதிகாரி 'டிஸ்மிஸ்'

சண்டிகார்: உயரதிகாரிகள் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக பொய் புகார் கூறிய பெண் ராணுவ அதிகாரியை, பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யும்படி ராணுவ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரியானா, கல்கா என்ற இடத்தில் உள்ள ராணுவ தளவாடப் பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் கேப்டன் பூனம்.

உயரதிகாரிகள் மூன்று பேர் தன்னை பாலியல் ரீதியாகவும், மன அளவிலும் தொந்தரவு செய்ததாக ஒரு ஆண்டுக்கு முன்னர் புகார் கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இருந்தாலும், ராணுவ தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு, ராணுவ கோர்ட்டில் நடந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் ராணுவ கோர்ட் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கேப்டன் பூனம் வக்கீல் அகர்வால் கூறியதாவது: உயரதிகாரிகள் மீது பொய் குற்றச்சாட்டு கூறியது, ராணுவப் பணி தொடர்பான விஷயங்களை மீடியாக்களுக்கு தெரிவித்தது உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் கேப்டன் பூனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொய்யான குற்றச்சாட்டை கூறியதற்காக பூனத்தை பணியிருந்து டிஸ்மிஸ் செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்றார்.

வரதட்சணை தடுப்புச் சட்டத்தால் கொடுமைப்படுத்தப்பட்ட அப்பாவிகள்

வரதட்சணை தடுப்புச் சட்டத்தால் கொடுமைப்படுத்தப்பட்ட அப்பாவிகள்
அப்பாவிகளின் கண்ணீருக்கு நாடு ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.


***************************************************************************************

***************************************************************************************

*************************************************************************************

**************************************************************************************

*************************************************************************************

**********************************************************************************
Sincere Thanks to mynameisbila (Youtube)

Tuesday, July 07, 2009

Are You Ready for Marriage???

சமீபத்தில் வெளியான "பசங்க" திரைப்படத்தில் சிறிய குடும்பப் பிரச்சினைக்கு மனைவி தனது கணவரை வரதட்சணை தடுப்புச் சட்டத்தைக் கூறி மிரட்டும் காட்சி இடம் பெற்றுள்ளது. இது திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட காட்சி அல்ல. நாட்டில் நடக்கும் அவலத்தைக் காட்டும் கண்ணாடி. இது போல பல பெண்கள் வரதட்சணை சட்டத்தை தவறhகப் பயன்படுத்த தவறhக வழிகாட்டப்பட்டு தங்களது வாழ்க்கையையும் இழந்து பல அப்பாவிகளின் வாழ்க்கையையும் கெடுத்திருக்கிறhர்கள், கெடுத்துக்கொண்டிருக்கிறhர்கள். இந்த அப்பாவிகளை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.


Monday, July 06, 2009

Innocent Men Abused by Women Protection Laws

ஒரு பொண்ணு வந்து போலிஸ் ஸ்டேஷன்ல ஒரு ஆம்பிளை மேல கேசு குடுத்தா என்ன ஏதுன்னு கேட்காம கண்ணை மூடிக்கிட்டு அவனை உள்ள தள்ளி அடிக்கிறhங்க, ஆனா அதுக்கப்புறம் அது பொய் கேசுன்னு தெரி்ஞ்சா அந்த பொண்ணுக்கு என்ன தண்டனை குடுக்கறhங்க?

மானம் பொம்பளைக்கு மட்டும் தான் இருக்கா? ஆம்பிளைங்களுக்கு கிடையவே கிடையாதா?

இந்த உண்மையை "சிவகாசி" திரைப்படத்தில் சுடச்சுட காட்டியிருக்கிறhர்கள். இதுவரை யாருமே அதை(மானத்தை)ப்பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.கீழுள்ள வீடியோவைப் பாருங்கள் புரியும்.Friday, July 03, 2009

கற்பழிப்பு புகாரை ஏற்க மறுத்த பெண் எஸ்.ஐ.,க்கள்

கற்பழிப்பு புகாரை ஏற்க மறுத்த பெண் எஸ்.ஐ.,க்கள் சஸ்பெண்ட்


வரதட்சணை புகாராக இருந்திருந்தால் உடனே
FIR பதிவு செய்யப்பட்டிருக்கும். ஏனென்றhல் அதில் விசாரணையே செய்யாமல் அப்பாவிகளை மிரட்டலாம். இரண்டு பக்கத்திலும் வருமானம் கிடைக்கும்.

ஜூலை 04,2009

அரியலூர்: கற்பழிக்கப்பட்ட பெண்ணின் புகாரை ஏற்க மறுத்த இரண்டு பெண் எஸ்.ஐ., உள்ளிட்ட ஐந்து போலீசாரை சஸ்பெண்ட் செய்து, அரியலூர் எஸ்.பி., நஜ்முல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே, குருவாடி காலனி தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரகாசன் மகள் ராஜேஸ்வரி(22). பெற்றோர் வயல்வேலைக்குச் சென்றிருந்த நிலையில், கால் ஊனமுற்ற ராஜேஸ்வரி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். ராஜேஸ்வரி தனிமையில் இருப்பதை அறிந்த, அதே தெருவைச் சேர்ந்த வாலிபர் தேவேந்திரன்(23), வீட்டுக்குள் நுழைந்து ராஜேஸ்வரியை மானபங்கபடுத்தி, பலவந்தமாக கற்பழித்து விட்டு தலைமறைவாகி விட்டார். கடந்த ஜூன் 30ம் தேதி பகல் ஒரு மணிக்கு நடந்த இச்சம்பவத்தை அடுத்து, ராஜேஸ்வரி தன் பெற்றோருடன் தூத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்கச் சென்றார். அவரது புகாரை வாங்க மறுத்த எஸ்.ஐ., கலைவாணி, அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தார். ராஜேஸ்வரி புகார் அங்கும் ஏற்கப்படாமல், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பப்பட்டார்.

அங்கும் புகார் மனு ஏற்கப்படாத நிலையில், உடல்வலி தாங்க முடியாமல் இளம்பெண் ராஜேஸ்வரி அவதிப்பட்டதால், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பிறகு, மருத்துவமனையிலிருந்து கொடுக்கப்பட்ட தகவலையடுத்து, ஜூலை 1ம் தேதி மாலை, தூத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கற்பழிக்கப்பட்ட கால் ஊனமுற்ற ராஜேஸ்வரி கொடுத்த புகாரை ஏற்க மறுத்தது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். தூத்தூர் போலீஸ் எஸ்.ஐ., கலைவாணி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் எஸ்.ஐ., மலர்கொடி, போலீஸ் கான்ஸ்டபிள்கள் தூத்தூர் பாண்டியன், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சித்ரா, அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமுதா உள்ளிட்ட ஐந்து பேரை சஸ்பெண்ட் செய்து, அரியலூர் எஸ்.பி., நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.

கணவரை எரித்து கொல்ல முயன்ற மனைவி

கணவரை எரித்து கொல்ல முயன்ற மனைவிக்கு ஐகோர்ட் ஜாமீன்
Dinamalar: ஜூலை 04,2009

மதுரை: "தஞ்சை கபிஸ்தலம் அருகே கணவரை எரித்து கொல்ல முயன்ற மனைவிக்கு,' மதுரை ஐகோர்ட் கிளை ஜாமீன் வழங்கியது. தஞ்சை கபிஸ்தலத்தை சேர்ந்தவர் ரங்கசாமி.

இவர் அங்குள்ள சர்க்கரை ஆலையில் இன்ஜினியராக உள்ளார். இவரது மனைவி அருள்மொழி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. சம்பவத்தன்று ரங்கசாமி, வீட்டில் "டிவி' பார்த்து கொண்டிருந்தபோது, அருள்மொழி அவர் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பலத்த காயமற்ற ரங்கசாமி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அருள்மொழியை போலீசார் கைது செய்தனர். அவரது ஜாமீன் மனு, நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி முன் விசாரணைக்கு வந்தது. அருள்மொழியை ஜாமீனில் விட அரசு வக்கீல் சிவ.ஐயப்பன் ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும் அருள்மொழியை ஜாமீனில் விட நீதிபதி உத்தரவிட்டார்.“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.