சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, August 29, 2012

இவர் நேர்மையான பெண்ணா?

குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக காதலிக்கும் இளம் பெண்கள் பொதுவாக திருமணம் வரை வாயை பொத்திக்கொண்டு இருந்து விட்டு பிறகு திருமணம் ஆனவுடன் கணவனிடமிருந்து சற்று தள்ளியே இருப்பார்கள். தக்க சமயம் பார்த்து கணவன் மற்றும் அவனது குடும்பத்தார் மீது பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்து விட்டு பழைய காதலை புதுப்பிக்க ஆரம்பித்து விடுவார்கள். இது நகரத்தில் படித்த பெண்கள் கையாளும் தந்திரம்.

இதற்கு அடுத்த நிலையில் இருக்கும் பெண்கள் காதலனுடன் சேர்ந்துகொண்டு கூலிப்படை அமைத்து கணவனை கொலை செய்து விட்டு அப்பாவி போல பழைய காதலை சந்தோஷமாக வளர்க்க ஆரம்பித்துவிடுவார்கள். உதாரணத்திற்கு இன்று வந்துள்ள செய்தி இது: தங்கச்சி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து புருஷன் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி! (One India Tamil 30/08/2012)

இதுதான் இந்தியாவின் தேசிய நடைமுறை. இதற்கு பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள், வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் பல ஆண்டுகளாக உதவி வருகின்றன என்று இப்போது எல்லா இளம் பெண்களுக்கும் தெரிந்திருக்கிறது.

இன்றைய செய்தியில் காதலனை கைப்பிடிக்க நினைத்த மணப்பெண் திருமணத்தன்று மாலையை வீசியெறிந்து காவல் நிலையத்தில் பஞ்சாயத்திற்கு சென்றிருக்கிறார். கணவன் வீட்டாருக்கு திருமண செலவை திருப்பித் தருவதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். இவரை நேர்மையானவர் என்று சொல்லலாமா?

திருமணத்தன்று காவல் நிலையத்திற்கு சென்ற பெண் திருமணத்திற்கு முன்பே சென்று தனது காதலை வளர்த்திருந்தால் அனாவசியமாக ஒரு அப்பாவி ஆண் மணமேடையில் அவமானப்பட்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் இந்திய சட்டங்களின்படி இளம் பெண்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். இதே சம்பவத்தை ஒரு மணமகன் செய்திருந்தால் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தியதாக அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும். இதுதான் இந்திய திருமண நடைமுறை.

தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் ஓட்டம்: காதலரை கை பிடிப்பதில் உறுதி
ஆகஸ்ட் 30,2012 தினமலர்பெரியகுளம்: தேனி பெரியகுளத்தில், காதலித்தவரை திருமணம் செய்ய முடியாததால், மணமேடை வரை வந்த பட்டதாரி பெண், மாலையை வீசி விட்டு ஓட்டம் பிடித்தார்.

பெரியகுளம் அழகர்சாமிபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகன், 39; பி.காம்., பட்டதாரி. இவருக்கும், மதுரை கே.புதூர், பாரதியார் நகரைச் சேர்ந்த பாண்டிமீனாவுக்கும், 28, திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. (பாண்டிமீனாவின் தந்தை கார்த்திகேயன், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்). பெரியகுளத்தில் நேற்று காலை 6 மணிக்கு திருமணம் நடப்பதாக இருந்தது.

மணமக்கள் மணமேடையில் அமர்ந்திருந்த நிலையில் தாலி கொண்டுவரப்பட்டது. ஆவேசமாக எழுந்த பாண்டிமீனா, மாலையை கழற்றி வீசி, "எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை' என்றார். உறவினர்கள், பாண்டிமீனாவுடன், பேசியும் பலன் இல்லை. பின், தாய் கவுசல்யாராணியுடன், மண்டபத்தில் இருந்து, தென்கரை போலீஸ் ஸ்டேஷன் சென்று, இன்ஸ்பெக்டர் இளங்கோவிடம், "தனக்கு திருமணம் பிடிக்கவில்லை,' என்றார்.

மணமகனின் தந்தை நாகராஜன், "பாண்டிமீனா ஏமாற்றிவிட்டார்' என, போலீசில் புகார் அளித்தார். போலீசார், மணமகளிடம் பேச்சு நடத்தினர்.

பாண்டிமீனா போலீசாரிடம் எழுதிக்கொடுத்த விளக்கம்: மதுரையைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வருகிறேன். இது குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தேன். எனது பேச்சை கேட்காமல், திருமணம் பேசி முடித்தனர். மணமகன் வீட்டார், வரதட்சணை பெறவில்லை. "மண்டபச்செலவு உட்பட ஒரு லட்சம் ரூபாய் வேண்டும்,' என, மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர். எனது பெரியம்மா வத்சலகுமாரி, 2013 ஜூனில் பணி ஓய்வு பெறுகிறார். அதில் இருந்து 30 நாட்களில், மணமகன் வீட்டாருக்கு பணம் கொடுத்துவிடுகிறோம், என தெரிவித்து உள்ளார்.

Saturday, August 25, 2012

“டேட்டிங்” செய்யும் விடலைப் பையன்களுக்கு புழல் சிறை காத்திருக்கிறது!

வயது வந்த பெண் தன் விருப்பப்படி யாருடன் வேண்டுமானாலும் திருமணம் செய்யாமல் உறவு கொள்ளலாம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பில் உறவு கொண்ட பிறகு காதல் உறவை பையன் உடைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று சரியாகக் கூறாததால் “டேட்டிங்” செய்யும் விடலைப் பையன்கள் ஏதோ காரணத்தால் உறவை முறித்துக் கொண்டால் புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று பின்வரும் செய்தியில் தெரிகிறது.
IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]

S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents

21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes".

பெண்ணை ஏமாற்றிய பொறியாளர் கைது
ஆகஸ்ட் 26,2012 தினமலர்

அண்ணாநகர்: திருமண ஆசை காட்டி பெண் மென்பொருள் பொறியாளரை, ஏமாற்றிய மென்பொருள் பொறியாளர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீலகிரியைச் சேர்ந்தவர் சுகன்யா, 25 (பெயர் மாற்றப்பட்டுள்ளது); மென் பொருள் பொறியாளர். இவர் நீலகிரி பகுதியில் உள்ள, பள்ளி ஒன்றில் படித்த போது, அதே பள்ளியில் படித்தவர் நீலகிரி, அரவங்காடு பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் மகன் கார்த்திக், 28; மென் பொருள் பொறியாளர்.

நட்பு: சுகன்யா, கார்த்திக்கிற்கும் இடையே இருந்த நட்பு, கடந்த 2007ம் ஆண்டு இறுதியிலிருந்து காதலாக மாறியது. இந்நிலையில், 2008ம் ஆண்டு சுகன்யாவிற்கு பெங்களூரிலுள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி கிடைத்தது. பணி கிடைக்காமல் இருந்த கார்த்திக், நீலகிரியிலிருந்து அடிக்கடி பெங்களூரு சென்று, சுகன்யாவுடனான தன் காதலை வளர்த்து வந்தார். இச்சூழலில், கடந்த ஆண்டு மே மாதம் சென்னை, காரம்பாக்கத்திலுள்ள தனியார் மென்பொருள்நிறுவனத்தில் கார்த்திக்கிற்கு பணி கிடைத்ததையடுத்து, வாரம்தோறும் சுகன்யா, சென்னை, முகப்பேர் ஏரித்திட்டம் பகுதியிலுள்ள தன் உறவினர் வீட்டிற்கு வந்து தங்கி, கார்த்திக்கை சந்தித்து வந்தார்.

ஜாதகம்: சுகன்யாவை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி, அவருடன் கார்த்திக் 2008ம் ஆண்டிலிருந்து மூன்றரை ஆண்டுகள் உடலுறவு கொண்டு வந்தார். இந்நிலையில் கார்த்திக், "உனக்கும், எனக்கும் ஜாதகப் பொருத்தம் இல்லை' என்று சுகன்யாவிடம் கூறி, கடந்த ஓராண்டாக திருமணம் செய்ய மறுத்து வந்துள்ளார். இதுகுறித்து விசாரித்த திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், திருமண ஆசைக் காட்டி சுகன்யாவை மோசம் செய்த கார்த்திக்கை கைது செய்து, நேற்று எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில்அடைத்தனர்.

====

பையன்கள் படிக்கவேண்டிய மற்றொரு பதிவு

திருமணத்திற்கு முன்பே “அதுவா”? - ஆபத்து காத்திருக்கிறது!
Saturday, August 18, 2012

வெளிநாடுவாழ் கணவர்களே உங்களது பணமும், மனைவியும் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

இன்றைய சூழலில் உறவுகளை பிரிந்து உழைப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் கணவர்களின் வாழ்க்கைதான் இந்திய சட்டங்கள் மூலம் மிகுந்த கேள்விகுறியாகியிருக்கிறது.

கள்ளக்காதலை தட்டிக் கேட்கும் கணவனை பொய் வரதட்சணை வழக்கில் குடும்பத்தோடு சிறையில் அடைப்பது அல்லது கள்ளக்காதலர்களுடன் சேர்ந்துகொண்டு கணவனை கொலைசெய்வது. இந்த இரண்டும் இப்போது சர்வ சாதாரணமாக இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது.

இந்த இரண்டுவகை செயலுக்கும் “பெண்கள் பாதுகாப்பு” என்ற பெயரில் இந்திய சட்டங்கள் தூண்டுகோலாகவும், சட்டங்களை செயல்படுத்துபவர்கள் பக்க பலமாகவும் இருக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. இவற்றால் சீரழிந்த ஒரு இந்தியக் குடும்பத்தின் கதை இன்றைய செய்தியில் வந்திருக்கிறது.

மதகுபட்டி பெண் கொலையில் கள்ளக்காதலனுக்கு தொடர்பு?
ஆகஸ்ட் 18,2012 தினமலர்

சிவகங்கை : சிவகங்கை மதகுபட்டி அருகே, கும்பலால் பெண் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில், கள்ளக்காதலனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையில், தனிப்படையினர் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை ஏரியூரை சேர்ந்தவர் கலைச்செல்வன்; மனைவி ஜெகதீஸ்வரி, 40. கலைச்செல்வன், 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணி செய்தார்; மனைவிக்கு அனுப்பிய பணத்திற்கு சரியான கணக்கு இல்லாததால், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு, பிரிந்தனர்.

மதுரையில் தங்கி, மதகுபட்டியில் "சீட்டு' நடத்திய ஜெகதீஸ்வரி, ஆக.,14 ல், உதவியாளர் சித்ராவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்; அலவாக்கோட்டை அருகில் மறித்த கும்பல், கத்தியால் குத்தியதில், ஜெகதீஸ்வரி இறந்தார். சித்ரா சிகிச்சையில் உள்ளார். இரண்டு தனிப்படையினர், மதுரையில் விசாரிக்கின்றனர்.

ஜெகதீஸ்வரிக்கு 3 பேருடன் கள்ளத் தொடர்பு இருந்ததும், குடிப் பழக்கத்திற்கு அடிமையானதும், விசாரணையில் தெரிந்தது. கள்ளத்தொடர்பு போட்டியில், ஜெகதீஸ்வரியை கொலை செய்திருக்கலாம் என, போலீசார் விசாரிக்கின்றனர். கணவர் தூண்டுதலில் கொலை செய்தார்களா எனவும் சந்தேகிக்கின்றனர். அவரது ஒரே மகள் விசாரணைக்கு ஒத்துழைத்தால் தான், உண்மை தெரியவரும்.

Thursday, August 16, 2012

இந்தியாவில் உண்மை பேசும் பெண்ணை தண்டிப்பார்களா?

கடந்த இரு நாட்களாக பரப்பான செய்தியாக இருப்பது நீதித்துறையை விமர்சித்து உண்மையை பேசிய வீரமான மேற்கு வங்க முதல்வரைப் பற்றிய செய்தியாக இருக்கிறது.

“இன்று ஒரு சில தீர்ப்புகள், விலை கொடுத்து வாங்கப்படுகின்றன; பணம் வாங்கிக் கொண்டு, பணம் கொடுத்தவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்படுகிறது”. நீதித்துறையை விமர்சிக்கும் வகையிலான, மம்தாவின் இந்தப் பேச்சுக்கு, பல தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மம்தாவின் இந்த உண்மையான வெளிப்படையான வார்த்தைகள் எந்த அளவிற்கு உண்மை என்று பொதுமக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் உண்மையை ஏற்றுக்கொள்ள மனப்பக்குவம் இல்லாத சிலர் குரல் கொடுத்திருக்கிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் கடந்த 2010ம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியே இந்திய நீதித்துறையைப் பற்றி மிகவும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். மக்கள் நீதித்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் என்று கூறியிருக்கிறார். அதனால் மம்தா கூறியிருப்பது உச்ச நீதிமன்ற நீதிபதியால் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். இதை கல்கத்தா உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்காக்க முயற்சி செய்வது மம்மதாவின் கூற்று முற்றிலும் உண்மை என்பதை மற்றொரு முறை நிரூபிக்கிறது!
=====

நீதித்துறையை விமர்சித்த மம்தா பானர்ஜி மீது அவதூறு வழக்கு
ஆகஸ்ட் 16,2012 தினமலர்

கோல்கட்டா: "நீதித்துறையை விமர்சித்த, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது, கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக்கோரி, கோல்கட்டா ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், "மம்தாவின் பேச்சு தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகள் உண்மையானவையா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்' என, இரண்டு "டிவி' சேனல்களுக்கும், பத்திரிகைகளுக்கும் உத்தரவிட்டனர்.

மேற்கு வங்க சட்டசபையின் ஆண்டு விழாவையொட்டி, கோல்கட்டாவில், நடந்த விழாவில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, "இன்று ஒரு சில தீர்ப்புகள், விலை கொடுத்து வாங்கப்படுகின்றன; பணம் வாங்கிக் கொண்டு, பணம் கொடுத்தவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்படுகிறது' என்று தெரிவித்தார். நீதித்துறையை விமர்சிக்கும் வகையிலான, மம்தாவின் இந்தப் பேச்சுக்கு, பல தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

"சிடி' ஒப்படைப்பு: இதையடுத்து, மம்தா மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி, மூத்த வழக்கறிஞரான பிகாஷ் பட்டாச்சார்யா என்பவரும் மற்றும் பலரும், கோல்கட்டா ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுவை, நீதிபதிகள் சென்குப்தா மற்றும் மண்டல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நேற்று விசாரித்தது. அப்போது, பிகாஷ் பட்டாச்சார்யா, ""மம்தாவிற்கு எதிராக, கோர்ட் தானாகவே முன்வந்து, அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், மம்தா பேசியுள்ளார்,'' என்றார். அத்துடன், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட மம்தாவின் பேச்சுக்கள் அடங்கிய இரண்டு"சிடி'க்கள் மற்றும் அவரின் பேச்சுக்கள் வெளியான இரண்டு பத்திரிகைகளின் பிரதிகளையும் நீதிபதிகளிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, மம்தாவின் பேச்சை ஒளிபரப்பிய இரண்டு "டிவி' சேனல்களும் மற்றும் அவரின் பேச்சை செய்தியாக வெளியிட்ட இரண்டு ஆங்கில பத்திரிகைகளும், "அந்தப் பேச்சுக்கள் உண்மையானவையா என்பதற்கு, மூன்று வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையில், நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் பேசிய, மம்தா பானர்ஜி மீது, கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டிலும் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

புகழுக்கு களங்கம்: ஜம்மு - காஷ்மீர் சிறுத்தைகள் கட்சி நிறுவனரும், மூத்த வழக்கறிஞருமான பீம்சிங், இந்த மனுவை தாக்கல் செய்தார். மனுவில், "மம்தாவின் பேச்சு, நீதித்துறை மீது, மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சீர்குலைப்பதாக உள்ளது. நீதி முறையின் நேர்மை மற்றும் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது' என தெரிவித்துஇருந்தார்.

"மீடியாக்கள் திரித்து வெளியிட்டு விட்டன': மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகத்தில், நேற்று நிருபர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது: "நீதித்துறை நியாயமுறையில் செயல்பட வேண்டும்' என்ற அர்த்தத்தில், நான் சில கருத்துகளை தெரிவித்தேன். அதை சில மீடியாக்கள் திரித்து வெளியிட்டு விட்டன. நாட்டில் நல்லவர்களும் உள்ளனர்; கெட்டவர்களும் உள்ளனர். அரசியல்வாதிகள் எல்லாரும் ஊழல்வாதிகள் என்பது உண்மையல்ல. அதுபோலத்தான், அனைத்து நீதிபதிகளும் ஊழல்வாதிகள் என, நான் ஒரு போதும் சொல்லவில்லை. நீதித்துறையிலும், அரசியலிலும், நிர்வாகத்திலும், சுதந்திரத்திற்குப் பின், சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப் படவில்லை. அந்த நிலை மாற வேண்டும். இவற்றில் சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப்பட வேண்டும். தேர்தலில் போட்டியிடுவோருக்கு அரசே நிதி அளிக்க வேண்டும். நான் சொல்லும் இவை எல்லாம் தவறு எனில், ஆயிரம் முறை மீண்டும், மீண்டும் சொல்வேன். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.


சென்னை: சென்னை ஜுடிசியல் அகடமியில் ‘சமரசம் மற்றும் மத்தியஸ்தம் ஆகியவற்றின் அடுத்த கட்டம்’ என்ற கருத்தரங்கம் நேற்று நடந்தது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் தலைமை வகித்தார். இதில், உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் பேசியதாவது:

சமரசம் மற்றும் மத்தியஸ்தம் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பந்தங்களில் பேசி விட்டோம். இந்த நடைமுறைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் தற்போதைய தேவையாக உள்ளது. இதற்காக நீதிபதிகள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். உரிமை யியல் நடைமுறைச் சட்டம் (சிவில் சட்டம்) மக்களுக்கு எவ்வளவு தூரம் பயன் தருகிறது என்பதை பார்க்க வேண்டும்.

பொதுமக்களுக்கு நீதித்துறை மீது பல தவறான எண்ணங்கள் ஏற்பட்டுள்ளன. வழக்கு விசாரணையில் தாமதம், வளைந்து கொடுக்க முடியாத நிலை, எதிர்பாராத தீர்வு, அதிகமான வழக்குச் செலவு, உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம், அசாதாரணமான சூழ்நிலை இவைகள் தான் நீதித்துறை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை குறைத்து வருகிறது.
குற்ற வழக்குகளில் மேல்முறையீடு விசாரணை முடிவதற்கு அதிக காலதாமதமாகிறது. ஒரு மேல்முறையீட்டு வழக்கு முடிவதற்கு அலகாபாத்தில் 20 முதல் 22 ஆண்டுகளும், பஞ்சாப்பில் 18 ஆண்டுகளும் ஆகின்றன. ஒரு வழக்கு வெற்றி பெற்றால்கூட அதற்கு தடைபெறும் நிலை உள் ளது.

இதுபோன்ற நிலை இருந்தால், மக்களுக்கு நீதிமன்றங்களின் மேல் எப்படி நம்பிக்கை ஏற்படும். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் பல பிரச்னைகள். வழக்கு தொடர்ந்தவர் வக்கீல்களிடமும், அவர்களின் குமாஸ்தாக்களிடமும் சிக்கி தவிக்கிறார். நட்பு ரீதியான அணுகுமுறை நீதிபதிகளிடமும் இல்லை; வக்கீல்களிடமும் இல்லை.

குற்றவியல் வக்கீலிடம் சிவில் வழக்கு சென்றால். அந்த வழக்கு எப்படியாவது குற்ற வழக்காக மாற்றப்படும் நிலை உள்ளது. தேர்தல் வழக்கு கள், மோசடி, நிர்வாக சீரழிவு மற்றும் கொடிய குற்றங்கள் தொடர்பான வழக்குகளை மட்டுமே நீதிமன்றத்தில் விசாரிக்கலாம். இதர வழக்குகளுக்கு மாற்று முறை தீர்வையே நாட வேண்டும்.

மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்), சமரசம் மற்றும் மத்தியஸ்த மையங்களை அணுகலாம். குடும்பநல வழக்குகள், செக் மோசடி வழக்குகள், கடன் உறுதி பத்திரம் வழக்குகள் ஆகிய வழக்குகளை நீதிபதிகள் விசாரிக்கக் கூடாது. நீதிபதிகள் அறுவைச் சிகிச்சை தெரிந்தவர்களை போன்றவர் கள். அவர்கள் அறுவைச் சிகிச்சைதான் செய்ய வேண்டுமே தவிர, மருந்து சீட்டு எழுதித் தரும் வேலையை செய்யக் கூடாது.

தற்போது, உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் 95 சதவீத வழக்குகள், முன்சீப் நீதிமன்றங்களில் கூட விசாரிக்க லாயக்கற்றவை. அதேபோல், உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் பெரும்பாலான வழக்குகள், உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கக்கூட லாயக்கில்லாத வழக்குகளாக உள்ளன. எதை நாம் செய்ய வேண்டுமோ, அதை செய்ய வேண்டும். மக்கள் தொகை பெருகி வருகிறது. அதற்கு ஏற்றாற்போல் பிரச்னைகளும் அதிகரி த்து வருகின்றன. அடித்தட்டில் உள்ள மக்களெல் லாம் தற்போது அதிகாரம் பெற்று வருகிறார்கள். உரிமைகளுக்காக போராடுகிறார்கள். இதனால், நீதிமன்றங்களுக்கு மேலும் சுமை ஏற்படுகிறது. அதனால், தேவையற்ற வழக்குகளை விசாரிப்பதை தவிர்த்துவிட்டு, தரமான வழக்கு களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இவ்வாறு நீதிபதி ரவீந்திரன் பேசினார். இந்த கருத்தரங்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, நீதிபதி நாகப்பன் வரவேற்றார். முடிவில், நீதிபதி தனபாலன் நன்றி கூறினார்.

======

மம்மதா பானர்ஜியின் கூற்று எவ்வளவு உண்மை என்று தெரிந்துகொள்ள இந்த இணைப்பிலுள்ள செய்தியை படித்துப்பாருங்கள் : நீதித்துறையின் பிடியில் சிக்கித்தவிக்கும் அப்பாவி குடிமக்கள்Friday, August 10, 2012

தவறான வாழ்க்கை முறையில் செல்லும் தமிழக மருமகள்கள்!

இதையெல்லாம் இப்ப வருஷா வருஷம் விழா கொண்டாடி சொல்ல வேண்டியிருக்கிறது. பொறுப்பற்ற விஷயமாவிட்டது தாய்மை! இளம் மருமகள்கள் பொய் வரதட்சணை வழக்குப் போடுவதில் காட்டும் ஆர்வத்தை தங்களது குழந்தையை வளர்ப்பதில் காட்டுவதில்லை போலிருக்கிறது!

குழந்தைகளுக்கு முழுமையான தாய்ப்பால் ஊட்டுவதில் பின்தங்கிய நிலையில் தமிழகம்

ஆகஸ்ட் 11,2012 தினமலர்
சென்னை: குழந்தைகள் பிறந்து முதல் ஆறு மாதத்திற்கு, முழுமையாக தாய்ப்பால் ஊட்டுவதில், இந்தியளவில் தமிழகம், 20வது இடத்தில் உள்ளது என, ஒரு புள்ளி விவரம் அதிர்ச்சி தெரிவிக்கிறது.

குழந்தைகள் பிறந்து, முதல் ஆறு மாதத்திற்கு, அவர்களுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும் என, மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். இதனால், கர்ப்பமடைவதற்கு முன் இருந்த மாதிரியே, வயிறு சுருங்குவது, மார்பகப் புற்றுநோய், கர்ப்பப் பை வாய் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவது, அடுத்த கர்ப்பத்திற்கான கால இடைவெளி நீட்டிக்கப்படுவது என, தாய்க்கு பல நன்மைகள் உள்ளன. இதுபோல், நோய் தொற்றுகளை தடுத்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, தாயுடனான பிணைப்பைக் கூட்டுவது, மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சியை அதிகரிப்பது என, குழந்தைக்கு பல நன்மைகள் உள்ளன.ஆனால், குழந்தைகள் பிறந்து முதல் ஆறு மாதத்திற்கு, அவர்களுக்கு, முழுமையாக தாய்ப்பால் ஊட்டுவதில், இந்தியளவில் தமிழகம், 20வது இடத்தில் உள்ளது என, ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து, எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை இயக்குனர் ஜெயா கூறியதாவது:இந்தியளவில், முதல் ஆறு மாதம், முழுமையாக தாய்ப்பால் ஊட்டும் விகிதம், தமிழகத்தில், 33.3 சதவீதமாக தான் உள்ளது. இது, தமிழகத்தில், பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம், ஒரு மாதத்தில், 1,000க்கு 18; இளம் குழந்தைகள் இறப்பு விகிதம், ஒரு ஆண்டிற்கு, 24 ஆகவும் இருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.இந்தியாவில் இந்த இறப்பு விகிதங்கள், முறையே, 39 மற்றும், 57ஆக உள்ளன.

பல மாதங்கள் தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்தால், தங்கள் அழகு கெட்டு விடும் என்ற, பெண்களின் பொதுவான மனநிலையே, அவர்கள் குழந்தைகளுக்கு சரிவர தாய்ப்பால் கொடுக்காததற்கு முக்கிய காரணம். இதுகுறித்து, இளம் தாய்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, எங்கள் மருத்துவமனையில் ஒரு வாரம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
=======
முதல் கணவன் மூலம் பிறந்த தனது குழந்தைக்கு இரண்டாவது கணவனை தந்தை என தந்தையின் பெயரை மாற்றக்கோரிய மனைவியின் வழக்கு தள்ளுபடி
ஆகஸ்ட் 11,2012 தினமலர்

மதுரை:தாய் இரண்டாவதாக வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால், குழந்தைக்கு தந்தையின் பெயரை (இன்ஷியல்) மாற்றக்கோரி தாக்கலான வழக்கை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவருக்கும் உறவினர் வெங்கடேஷனுக்கும் 2003 ல், திருமணம் நடந்தது. ரேவதிக்கு 2005 ல் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு பிரதீப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என பெயரிட்டனர். வெங்கடேஷன், ரேவதி 2009 ல் விவகாரத்து பெற்றனர்.

புதுச்சேரியை சேர்ந்த பாலாஜியை, ரேவதி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். பிரதீப் பெயருக்கு முன்னெழுத்தாக (இன்ஷியல்) தனது பெயரை அவரது பிறப்பு சான்றிதழில் சேர்க்க வேண்டும் என, புதுச்சேரி பிறப்பு, இறப்பு பதிவு அதிகாரியிடம் பாலாஜி விண்ணப்பித்தார்.
அவர், "இதில் தான் முடிவெடுக்க முடியாது. கோர்ட் மூலம் பரிகாரம் தேடிக்கொள்ளலாம்' என, 2012 மார்ச் 1 ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் பாலாஜி மனுதாக்கல் செய்தார். மனு நீதிபதி ஆர்.சுதாகர் முன் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி: குழந்தை பிறந்த 6 ஆண்டுகளுக்கு பின், அதை தனது குழந்தை என மனுதாரர் உரிமை கொண்டாடுகிறார். மனுதாரர் தான் குழந்தைக்கு தந்தை என, குழந்தையின் தாயும் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதைக்கொண்டு, குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் மனுதாரரின் பெயரை தந்தையாக குறிப்பிட உத்தரவிட வேண்டும் என்பதை ஏற்க முடியாது. இதனால், பிறப்புச் சான்றிதழின் புனிதம் கெட்டுவிடும்.

ஐ.நா.,வின் குழந்தைகள் உரிமை சாசனத்தை இந்தியா ஏற்றுள்ளது. குழந்தையின் அடையாளம், பெயரை பாதுகாப்பதில் யாரும் சட்டவிரோதமாக தலையிடக்கூடாது என, கூறப்பட்டுள்ளது. தாய், எவ்வித சட்டப்பூர்வ ஆவணங்கள் ஏதுமின்றி, மனுதாரர் தான் தன் மகனுக்கு தந்தை, என கூறுவதை ஏற்க முடியாது. இது மகனின் பிறப்பையே சந்தேகப்படுத்தும். குழந்தையின் வாழ்நாள் முழுவதும் மாறாத வடுவை ஏற்படுத்தும். தாயின் நடத்தை, வாழ்ந்த சூழ்நிலையை வெளிப்படுத்தும். பிறப்பு, இறப்புச் சட்டப்படி, குழந்தையின் பிறப்பை மோசடியாக பதிவு செய்திருந்தால், திருத்தம் கொண்டு வரலாம். இது அப்படியல்ல. பிறப்பு, இறப்பு பதிவு அதிகாரியின் உத்தரவு சரியானதே. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என உத்தரவிட்டார்.


Friday, August 03, 2012

விதவைப் பெண்களை மனிதாபிமானம் இல்லாமல் துண்டு துண்டாக வெட்டும் நாடு உருப்படுமா?

மிகவும் அதிர்ச்சியான இன்றைய செய்தியை படித்ததும் நாம் இந்தியாவில்தான் வாழ்கிறோமா அல்லது சைத்தான்களின் தேசத்தில் இருக்கிறோமா என்ற சந்தேகம் வந்துவிட்டது.

பெண்களின் நலனை பாதுகாக்க தனியாக ஒரு மத்திய அமைச்சகமும், அதுவும் போதாது என்று தேசிய பெண்கள் நல வாரியமும், மாநில மகளிர் நல வாரியங்களும் வைத்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் இந்திய நாட்டில் வயதான ஏழை விதவைத் தாய்மார்கள் இறந்ததும் உடலை பல துண்டுகளாக வெட்டி சாக்குப் பையில் கட்டி வீசி எறியும் கொடுங்கோன்மை நடந்துகொண்டிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
August 03, 2012 NDTV
New Delhi: The Supreme Court today expressed shock over the manner in which the bodies of deceased Vrindavan widows were disposed by chopping into pieces and packing in gunny bags.

The Court said "It is shocking" and directed the Chief Medical Officer of Civil hospital of Mathura to ensure last rites of any deceased women in the shelter homes be performed per their religion.

It also pulled up the National Commission for Women and its Uttar Pradesh counterpart for their apathy to the pitiable condition of Virandavan widows and asked the state government to provide adequate food and hygienic living environment for them.


A bench of justices DK Jain and Madan B Lokur directed the two commissions to file their affidavits within two weeks explaining as to what they have done or propose to do for the widows, living in "pathetic" condition in the holy city. The bench also directed the state government to provide medical facilities for the widows.

It directed the Vrindavan Chief Medical Officer to ensure that a team of doctors visits the widows' shelter at least twice a week.

Recording the statement of state government's counsel, the bench said a committee of State Probationary Officer and Social Welfare Officer would ensure that proper food and drinking water are supplied to the widows' home.

The court passed the order on pleas seeking its direction to the Centre and the state government to provide shelter and other necessary facilities to the widows in the city who have been abandoned by their family members.

The court had earlier issued notices on the petitions highlighting the plight of widows who have been living in Vrindavan and begging at temples and then huddling together in hovels, which they call their homes.

The court had on May 9 appointed a seven-member panel to collect data on their socio-economic conditions. The committee headed by chairman of Mathura District Legal Services Authority had earlier submitted its report saying the widows are "highly vulnerable" groups and are living in "pathetic" conditions.

The petitioner NGOs pointed out to the court that the widows, who congregate for around seven to eight hours for Bhajans, get only Rs. 18 a day.

The NGO had also told the court that a majority of the 1,000-odd widows interviewed in Vrindavan by the NCW have children who do not care for them.

In a report to the Supreme Court, the NCW recommended fixing of liability on the children under the Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007.

It had said an estimated 2000 widows were living like beggars in ashrams dotting the two holy cities of Mathura and Vrindavan and were being sexually exploited.

NCW's second report to the court said 81 per cent of these women were illiterate.
இந்துக்கள் புனிதமான நகரம் என்று கூறிக்கொள்ளும் மதுராவில் உள்ள பிருந்தாவனம் என்ற முதியோர் இல்லத்தில் இருக்கும் வயதான ஏழை விதவைத் தாய்மார்களின் நிலைதான் இப்படி இருக்கிறது என்று அறியும்போது உடல் பதை பதைக்கிறது.

பல காலமாக பண்பிலும், கலாச்சாரத்திலும், பெண்களை போற்றுவதிலும் பெருமை மிக்கவர்கள் என்று உலகெங்கும் (போலியாக) பெருமையடித்துக்கொள்ளும் இந்தியநாட்டில் விதவைப் பெண்களை இப்படி நடத்துகிறார்கள் என்றால் இந்தியர்கள் வாழும் வாழ்க்கை போலியானதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அரசியல்வாதிகள் நாட்டில் என்ன நடக்கிறது என்று கவனிப்பதைவிட ஊழல் செய்து பண மூட்டையை எந்த நாட்டில் பதுக்குவது என்று திட்டம் வகுப்பதற்குத்தான் நேரத்தை செலவழிக்கிறார்கள் என்று தினந்தோரும் வரும் செய்திகள் காட்டுகின்றன. இதுபோன்ற சூழலில் ஆதரவற்ற இந்த ஏழை விதவைத் தாய்மார்களின் துயரமான நிலையை யார்தான் கண்டுகொள்வார்கள்?

விதவைப் பெண்கள், வயதான தாய்மார்கள் இவர்களின் நலனைப் பற்றி ஆண்கள் கவலைப்படமாட்டார்களோ என்று நினைத்துதான் இந்தியாவில் பெண் அமைச்சர் தலைமையில் மத்திய பெண்கள் அமைச்சகம் இருக்கிறது. முழுக்க முழுக்க பெண்கள் நிர்வகிக்கும் தேசிய பெண்கள் வாரியம் இருக்கிறது. இந்த அமைப்புகள் இதுபோன்ற துயராமான சூழலில் இருக்கும் பெண்களின் நலனை பாதுகாக்கும் வேலைகளை செய்யாமல் பெண்களைத் தவறாக வழிநடத்தும் மற்ற எல்லாவித தவறான செயல்களுக்கும் தங்களின் பணத்தையும், நிர்வாகத்தையும் செலவழிக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.

உதாரணத்திற்கு சமீபத்தில் ஒரு பணக்கார இளம் பெண் மது விடுதியில் பிறந்தநாள் கொண்டாடி மகிழச் சென்று குடிகார நண்பர்களுக்குள் ஏற்பட் தகராரை தேசிய அளவில் பெரிதுபடுத்தி தேசிய பெண்கள் நல வாரியம் நேரடி நடவடிக்கையில் இறங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் கூட வீரமாகக் குரல் கொடுத்தார். ஆனால் ஏழை விதவைத்தாய்மார்களின் நலனை பாதுகாக்க இவர்கள் ஏன் எந்தவித நடவடிக்கையையும் இதுவரை செய்திருக்கவில்லை என்பது ஆச்சரியமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. இதன் பின்னணியில் இருக்கும் உண்மையைத் தெரிந்து கொள்ள இந்த பதிவினைப் படித்துப் பாருங்கள்: பெண்கள் அமைச்சகம் இந்தியப் பெண்களுக்கு என்ன செய்கிறது?
இறந்தது தீவிரவாதியானாலும் அவரது மத முறைப்படி இறுதி அடக்கம் செய்வதுதான் மனிதாபிமான நடைமுறை வழக்கம். ஆனால் அப்பாவி ஏழை விதவைத் தாய்மார்களின் இறுதிச் சடங்கை இப்படி மனிதாபிமானம் இல்லாமல் நடத்தும் நாடு நன்றாக இருக்குமா?
எல்லாவற்றிற்கும் மேலாக இதுபோன்ற கொடுமையை செய்பவர்களுக்கு எந்தவித தண்டனையும் கொடுக்காமல் வெற்றுப்பேச்சுக்களை பேசும் நீதிமன்றம் உண்மையாகவே நீதிதேவதை வாழும் இடமாக இருக்குமா?


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.