இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, November 10, 2010

இளம்பெண்கள் அடிக்கும் லூட்டி!



திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே சகோதரிகள் காதலித்தவர்களுடன் சென்றதால் மனமுடைந்த சகோதரர், உடலில் கரிமருந்தை பூசி, தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி அருகே சாம்பவர் வடகரையைச் சேர்ந்த பால்வண்ணன் மகன் காளிமுத்து(21). இவருக்கு அக்கா, தங்கை உள்ளனர். அக்கா சில ஆண்டுகளுக்கு முன் காதலனுடன் சென்றுவிட்டார். அவரது தங்கைக்குதிருமண ஏற்பாடுகளை காளிமுத்து செய்துவந்தார். தீபாவளியன்று அவரும் தான் காதலித்தவருடன் சென்று விட்டார். இதனால், காளிமுத்து மனமுடைந்தார். தீபாவளிக்காக வாங்கி வைத்திருந்த பட்டாசுகளில் இருந்த கரிமருந்துகளை பிரித்தெடுத்து தனது உடம்பில் பூசி, தீவைத்துக் கொண்டார். நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இறந்தார்.

======

மகள் வீட்டை விட்டு ஓடியதால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தில் தந்தையைக் கொன்ற மகன்
தினமலர் நவம்பர் 11,2010

சாம்பவர் வடகரையைச் சேர்ந்தவர் கோவிந்தமணி(62). காங்கிரஸ் பிரமுகர். இவரது மகள் மகாலட்சுமி, காதலருடன் சென்றுவிட்டார். மகள் ஓடிப்போனதற்கு காரணம் வீட்டில் உள்ளவர்கள்தான் என, கோவிந்தமணி திட்டிவந்தார். கோபமுற்ற கோவிந்தமணியின் மகன் தங்கராஜ், தந்தையின் தலையில் உருட்டுக் கட்டையால் தாக்கினார். இதில்அவர் இறந்தார். போலீசார் தங்கராஜை கைது செய்தனர்.

================

நல்லவேளை திருமணத்தன்று ஓடிப்போய் மணமகனை அவமானப்படுத்தவில்லை. அதேபோன்று காதலிப்பதற்கு ஒருவன், கல்யாணம் செய்துகொள்ள ஒருவன் என்று திருமணம் செய்துகொண்டு பிறகு காதலனுடன் செல்வதற்காக அப்பாவிக் கணவன் மீது பொய் வரதட்சணை வழக்குப் போட்டு அவனது குடும்பத்தை சின்னாபின்னம் செய்யாமல் சொந்த குடும்பத்திற்கே உலை வைத்துவிட்ட இந்தப் பெண்களைப் போல பலர் இதுபோன்று (கள்ளக்) “காதல்” என்ற பெயரில் தன் குடும்பத்தையும், கணவன் குடும்பத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எத்தனை நாட்கள்தான் “திருமணம்” என்ற பெயரில் கணவன் வீட்டில் புகுந்து பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் கணவனின் குடும்பத்தை சீரழிப்பது என்று பெண்களுக்கும் சலிப்பு ஏற்படுமல்லவா! ஒரு மாறுதலுக்காக “காதல்” என்ற பெயரில் அந்த வேலையை இனி தங்கள் குடும்பத்தில் இருக்கும் ஆண்களுக்கு செய்யலாம் என்று முடிவு செய்திருப்பது ஒரு நல்ல செய்திதான்.
பெண்களின் செயல்கள் எப்போதுமே சரியானதாகத்தான் இருக்கும்!

நெருப்பு தன் வீட்டுக் கூரையில் எரிந்தால்தான் அனுபவப்பூர்வமாக அந்த வேதனையை உணரமுடியும். அதுவரை அடுத்தவர் வீட்டுக் கூரையில் எரியும் தீ ஒரு வானவேடிக்கைப் போலத்தான் வேடிக்கையாக இருக்கும்.




2 comments:

Ravi kumar Karunanithi said...

ungal karuthu miga miga niyaayamanadhu... ottu podugiren. nandri. nice

பெண்கள் நாட்டின் கண்கள் said...

மிக்க நன்றி!

நீங்கள் போடும் ஓட்டு எனக்காக அல்ல. வருங்காலத்தில் உங்கள் குடும்பம் நன்றாக இருப்பதற்காகத்தான். இதுதான் அரசியல் ஓட்டிற்கும் இந்த ஓட்டிற்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம்.

அரசியலில் ஓட்டை பெறுபவர்க்கு மட்டுமே லாபம். இங்கே விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக நீங்கள் போடும் ஓட்டு உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகமே கிடையாது நண்பரே.

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.