ஐயோ பாவம். ஒரு பெண்ணை போலிஸில் சிக்கவைத்துவிட்டார்களே! ஒரு பெண் லஞ்சம் கேட்டால் இதையெல்லாம் பெரிதாக்கலாமா? ஆண்கள் மட்டும்தானே எப்போதும் குற்றம் செய்வார்கள்.
லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது
தினமலர் நவம்பர் 02,2010
மஞ்சூர் : இறப்பு உதவி தொகைக்காக லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் உட்பட இருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மஞ்சூர் அருகே தங்காடு பகுதியை சேர்ந்த ஆலுகுட்டி கடந்த செப்டம்பர் 4ம் தேதி மரணமடைந்தார். உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இறப்பு உதவித் தொகைக்காக இவரது மனைவி ராஜாமணி குந்தா தாலுகாவுக்கு விண்ணப்பம் அளித்தார். விண்ணப்பத்தை பரிசீலனை செய்து இறப்பு உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ராஜாமணி இவரது மகன் நாராயணன் குந்தா தாலுகா அலுவலக தாசில்தார் கனகத்திடம் பல முறை கேட்டும் காசோலை வழங்கவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாராயணன் குந்தா தாசில்தாரிடம் வந்து கேட்டுள்ளார். அதற்கு தாசில்தார் 1000 ரூபாய் லஞ்சம் தருமாறு வற்புறுத்தியுள்ளார்.
இது குறித்து நாராயணன் ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகரன் தலைமையில் போலீஸ் குழுவினர் தாலுகா அலுவலகத்தில் மறைந்திருந்தனர். ரசாயனம் தடவிய 1500 ரூபாயை போலீசார் நாராயணனிடம் கொடுத்தனர். இந்த தொகையை எடுத்து சென்ற நாராயணன் தாசில்தார் கனகத்திடம்(53), 1000 ரூபாயும், தற்காலிக இளநிலை ஊழியர் சாஸ்திரியிடம்(44) 500 ரூபாயும் கொடுத்துள்ளார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர்.
No comments:
Post a Comment