பின்வரும் இரண்டு படங்களையும் பாருங்கள் மனித இனத்தில் எப்படிப்பட்ட கொடூரமான முரண்பாடுகள் இருக்கின்றன என்று புரியும். முதல் படத்தில் பெற்ற சிசுவை பெற்றோர் வாய்க்காலில் வீசியிருக்கிறார்கள். இரண்டாவது செய்தியில் பிள்ளையில்லாதக் கூட்டம் பெண்ணின் கருமுட்டைக்கு விலை நிர்ணயம் செய்து வியாபாரச் சந்தையில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு வெளிநாட்டு செய்தித்தாளில் வந்துள்ள விளம்பரம்

இந்த இரண்டு செய்தி சம்பவங்களும் நடைபெறுவதற்கு அடிப்படையாக தேவைப்படுவது பெண்கள். பெண்ணின் ஒத்துழைப்பு இல்லாமல் குழந்தை பிறக்கவும் முடியாது. கரு முட்டையை விற்கவும் முடியாது.
அப்படியிருக்கும்போது பிறந்த குழந்தைகள் இதுபோன்று குப்பைத்தொட்டியிலும், சாக்கடையிலும் வீசியெறியப்படும் அவலங்களுக்கு யார் காரணமாக இருக்கமுடியும்? பெண்ணின் துணை இல்லாமல் ஒரு ஆண் மட்டுமே இதுபோன்ற குற்றங்களை இழைக்க முடியுமா?
கடைசியில் இதற்கெல்லாம் காரணம் யார் என்று நீங்கள் கூறுவீர்கள்?
இந்திய சட்டங்கள் மட்டும் என்ன சொல்கிறதென்றால் ஆண்கள் மட்டுமே எப்போதும் குற்றவாளிகள் என்றும் பெண்கள் எப்போதும் அப்பாவிகள் என்றும் நினைத்துக்கொண்டு ஒருதலைபட்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
1 comment:
Please give respect to all living things, doesn't matter big or small.
kadir
Post a Comment