ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்ட பெண் அலுவலர் கைது
சென்னை : வீட்டை வேறு பெயருக்கு மாற்றித் தர, 3,000 ரூபாய் லஞ்சம் கேட்ட குடிசை மாற்று வாரிய பெண் பில் கலெக்டர் மற்றும் வளாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
சென்னை, செனாய் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி(20). இவரது பாட்டிக்கு சொந்தமான வீடு, டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ளது. இந்த வீட்டை தனது தாயார் மற்றும் சித்தி பெயருக்கு மாற்றுவதற்காக டி.பி.சத்திரம் குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த பில் கலெக்டர் வரலட்சுமி, பெயர் மாற்றம் செய்ய ஈஸ்வரியிடம் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஈஸ்வரி லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி., சுப்புலட்சுமியிடம் புகார் அளித்தார்.லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின் பேரில், ஈஸ்வரி நேற்று காலை வரலட்சுமியிடம் அவரது அலுவலகத்தில் முதற்கட்டமாக 1,500 ரூபாய் கொடுத்தார். பணத்தை வாங்க மறுத்த வரலட்சுமி, இளநிலை வளாக அலுவலரான கணேசனிடம் கொடுக்குமாறு கூறினார். கணேசனிடம் ஈஸ்வரி பணத்தை கொடுக்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் வரலட்சுமியையும், கணேசனையும் பிடித்தனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment