சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, November 30, 2010

இந்தியாவில் மனைவி அமைவது பாவமா?

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த பெண்
தினகரன் 1 டிசம்பர் 2010


நவி மும்பை : கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த பெண்ணை தேடி போலீசார் உ.பி. விரைந்தனர்.

நவி மும்பை, கலம்பொலியைச் சேர்ந்தவர் ராம் சுந்தர் சவ்கான் (35). இவரது மனைவி சுமன் சவ்கான் (26). 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சுமனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராம்சிங் சிவ்குமார் சவ்கான் (25) என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ராம்சிங் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார்.

இந்த விசயம் கணவருக்கு தெரிய வந்ததை அடுத்து அவர் மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் கள்ளத் தொடர்பை தொடர்ந்தார். கள்ளக் காதலுக்கு கணவர் தடையாக இருந்து வருகிறாரே என நினைத்த சுமன் கூலிப்படையைச் வைத்து ராம் சுந்தரை கொலை செய்ய நினைத்தார். அதன் படி மகேந்திர கவுரி (23), ஜெகதீஷ் கெய்க்வாட் (21) மற்றும் பல்யா ஜாதவ் (21) ஆகிய 3 பேருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து சுமன் தனது கணவனை கொலை செய்ய சொன்னார். கூலிப்படையினருடன் சேர்ந்து ராம் சிங், ராம் சுந்தரை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம் சுந்தரை கொலை செய்தவர்களை வலை வீசித் தேடி வந்தனர்.

இந்நிலையில் கூலிப்படையைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். சுமன் தனது குழந்தைகள் மற்றும் கள்ளக்காதலன் ராம்சிங்குடன் உ.பி. மாநிலம், பதேபூர் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு தப்பிச் சென்றிருக்க கூடுமென சந்தேகிக்கும் போலீசார் அவரை தேடி அங்கு விரைந்துள்ளனர். சுமன் புகைப்படம் நவி மும்பையில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளில் ஒட்டப்பட்டுள்ளது. அவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் கலம்பொலி காவல் நிலையத்திற்கு தெரிவிக்கும் படி போலீசார் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.