இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, November 12, 2010

கிராமங்களில் பணிபுரியும் பெண் அதிகாரியின் அவல நிலை!

பாடுபட்டு நாட்டை மிகவும் நன்றாகவே முன்னேற்றுகிறார்கள் பெண் அதிகாரிகள்.

பள்ளிப்பட்டு கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது : ரூ. 500 லஞ்சம் வாங்கிய போது சிக்கினார்

தினமலர் நவம்பர் 12,2010

பள்ளிப்பட்டு : விவசாயியிடம், 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம பெண் நிர்வாக அலுவலர், கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த கேசவராஜ குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியப்பரெட்டி மகன் ஏகாம்பரம். இவர், அதே பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தில், பம்ப் செட்டு வைத்து அதில் விவசாயம் செய்து வருகிறார். விவசாயிகள் பழைய மோட்டார்களை கொடுத்து, இலவசமாக, புதிய மோட்டார்களை பெற்று கொள்ளலாம் என, அரசு அறிவித்தது. இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ள, தாலுகா அலுவலகத்தில் மனு செய்ய வேண்டும். இந்த மனுவுடன் அந்த நிலத்தின் சிட்டா அடங்கலை இணைத்து தர வேண்டும் இந்த சிட்டா அடங்கலை பெறுவதற்காக, அதே கிராமத்தை சேர்ந்த கிராம பெண் நிர்வாக அலுவலர் நாகமணியை, விவசாயி ஏகாம்பரம் சந்தித்தார். அதற்கு அவர், 500 ரூபாய் லஞ்சம் தந்தால்தான், சிட்டா அடங்கல் தர முடியும் என்று கண்டிப்பாக கூறிவிட்டார். ஒரு வாரமாக அலைந்த பின்னரும் பலனில்லாததால், ஏகாம்பரம் ஏமாற்றமடைந்தார். இதுகுறித்து, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் அவர் புகார் செய்தார். அவர்கள் அறிவுரைப்படி, ரசாயனப் பவுடர் தடவிய ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை நாகமணியிடம் கொடுத்தார். அதை அவர் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், நாகமணியை கைது செய்தனர். அவரிடம் இருந்த லஞ்ச பணத்தை கைப்பற்றினர். இதுபோல் அவர் பெற்ற லஞ்சம் குறித்து, அவரிடம் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.