இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, November 01, 2010

நல்லதை கற்க மறுக்கும் இந்தியர்கள்

தினமலர் 2 நவம்பர் 2010
தேனி கலெக்டர் அலுவலகத்தில் மூன்று சக்கர சைக்கிள் பெற வந்த மாற்றுத்திறனாளிகள், சாய்வு தள நடைபாதை இல்லாததால் சிரமத்திற்குள்ளாகினர்.


வெளிநாடுகளில் எல்லா பொது இடங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு கட்டிடங்கள், பேருந்து, இரயில், திரையரங்கம் உட்பட எல்லா இடங்களிலும் ஊனமுற்றவர்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் சமதள சாய்வு நடைபாதை அவர்களுக்காகவே தனியாக அமைக்கப்பட்டிருக்கும். அங்கு மனிதர்களுக்கு தக்க மரியாதை கொடுக்கிறார்கள்.

வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் என்று பலமுறை மக்களின் பணத்தில் கும்மாளம் போடும் தலைவர்கள் தங்களது பயணத்தின்போது வெளிநாடுகளில் இருக்கும் இதுபோன்ற நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள மறுப்பது ஏன்? இதுபோன்ற நல்லவிஷயங்களை வெளிநாடுகளிலிருந்து “காப்பியடித்து” இந்தியாவில் செயல்படுத்தலாமே. இது மிகவும் எளியதொரு நல்ல விஷயம்.

ஆனால் வெளிநாடுகளிலிருந்து நாம் “காப்பியடித்து” நாட்டை சிதைக்க சுறுசுறுப்பாக செயல்படுத்திவரும் விஷயங்கள் என்ன தெரியுமா? “Women Empowerment” என்ற பெயரில் வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று பல சட்டங்களை இயற்றி குடும்பங்களை அழித்துக்கொண்டிருக்கும் வேலையைத்தான் பக்குவமாக செய்து வருகிறோம்.

அதற்கு உதாரணம்தான் பின்வரும் விஷயங்கள்.

1961லேயே வரதட்சணை தடுப்புச்சட்டம் என்று ஒன்று இருக்கிறது. அதை அரசாங்கம் இன்றுவரை ஒழுங்காக செயல்படுத்தவில்லை. ஆனால் இந்த சட்டத்திற்குத் துணையாக அடுக்கடுக்காக பல சட்டங்களை இயற்றியிருக்கிறார்கள்.

1961ல் இயற்றப்பட்ட சட்டத்தை ஒழுங்காக செயல்படுத்தாமல் தங்களது குறையை மறைத்து அரசாங்கம் 1984ல் IPC498A என்று மற்றொரு சட்டத்தை இயற்றியிருக்கிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் மருமகள்கள் இதை எப்படிவேண்டுமானாலும் தவறாகப் பயன்படுத்தலாம். இதற்குப் பெயர்தான் மேல்நாட்டில் இருப்பதுபோன்ற “பெண்ணுரிமை”. இந்த சட்டத்தின் மூலம் பல குடும்பங்கள் அழிந்ததுதான் மிச்சம். இன்னும் இந்த அழிவுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்த அவலத்தைப் பற்றி இந்திய உச்ச நீதிமன்றம் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறது. சமீபத்தில் கூட அதைப்பற்றி கூறியிருக்கிறது.

Supreme Court of India: Direction to Indian Government to Curb IPC498a Misuse

August 13, 2010

31. The learned members of the Bar have enormous social responsibility and obligation to ensure that the social fiber of family life is not ruined or demolished. They must ensure that exaggerated versions of small incidents should not be reflected in the criminal complaints. Majority of the complaints are filed either on their advice or with their concurrence. The learned members of the Bar who belong to a noble profession must maintain its noble traditions and should treat every complaint under section 498-A as a basic human problem and must make serious endeavour to help the parties in arriving at an amicable resolution of that human problem. They must discharge their duties to the best of their abilities to ensure that social fiber, peace and tranquility of the society remains intact. The members of the Bar should also ensure that one complaint should not lead to multiple cases.

34. Before parting with this case, we would like to observe that a serious relook of the entire provision is warranted by the legislation. It is also a matter of common knowledge that exaggerated versions of the incident are reflected in a large number of complaints. The tendency of over implication is also reflected in a very large number of cases.


35. The criminal trials lead to immense sufferings for all concerned. Even ultimate acquittal in the trial may also not be able to wipe out the deep scars of suffering of ignominy. Unfortunately a large number of these complaints have not only flooded the courts but also have led to enormous social unrest affecting peace, harmony and happiness of the society. It is high time that the legislature must take into consideration the pragmatic realities and make suitable changes in the existing law. It is imperative for the legislature to take into consideration the informed public opinion and the pragmatic realities in consideration and make necessary changes in the relevant provisions of law. We direct the Registry to send a copy of this judgment to the Law Commission and to the Union Law Secretary, Government of India who may place it before the Hon’ble Minister for Law & Justice to take appropriate steps in the larger interest of the society.


நாட்டில் இன்றும் நடந்துகொண்டிருக்கும் இந்த சமூகச் சீரழிவைப்பற்றித் தெரிந்துகொள்ள இங்கே சென்று பாருங்கள் www. 498A.org. Save Indian Family Foundation


IPC498A விற்கு அடுத்து 2005ல் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டப்படி ஆண்கள் மட்டுமே குடும்ப வன்முறை செய்யும் கொடியவர்கள். பெண்கள் வெறும் அப்பாவிகள். வன்முறையே செய்யத் தெரியாதவர்கள். இது மேல்நாடுகளில் இருக்கும் குடும்பவன்முறை தடுப்புச் சட்டத்தை அரைவேக்காட்டுத்தனமாக காப்பியடித்து ஒருதலைபட்சமாக இயற்றப்பட்டுள்ளது. மேல்நாடுகளில் குடும்பவன்முறை தடுப்புச் சட்டத்தின்படி ஆண், பெண் இருவரும் சமமாகக் கருதப்படுவர். ஆனால் இந்திய சட்டத்தில் பெண் எந்தவித குற்றம் இழைத்தாலும் தவறே கிடையாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்ற இந்திய வாழ்க்கை நெறிமுறையை மக்களுக்கு கற்பிக்க மறுத்து மக்களுக்கு நன்னெறி சொல்லவதற்காக ஒரு சட்டத்தை மேலைநாட்டிலிருந்து அரைவேக்காட்டுத்தனமாக “Domestic Violence Act” என்று ஒரு சட்டத்தை காப்பியடித்து இயற்றியிருப்பது எவ்வளவு கேவலமான செயல்.

நாட்டிற்கு தேவையான பல நல்ல விஷயங்களை எந்த நாட்டிலிருந்தும் காப்பியடித்து இந்தியாவில் செயல்படுத்தலாம். ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தவறான விஷயங்களை மட்டுமே இந்தியாவில் செயல்படுத்திவருகிறார்கள் என்பதற்கு உதாரணம்தான் மேலுள்ள செய்தியில் வந்துள்ள படமும் இன்றைய பெண்கள் பாதுகாப்பு சட்டங்களும்.






No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.