இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, June 30, 2010

வரதட்சணைக் கொடுத்த பெண்ணை பாராட்டிய இந்திய ஜனாதிபதி!

இந்தியாவில் 1961ல் வரதட்சணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் இன்றுவரை பெண்கள் வரதட்சணைக் கொடுமை அடைவதாக பெண்கள் நல வாரியம், பெண்கள் நல அமைச்சகம் மற்றும் பல மகளிர் குழுக்கள் போர்க்கொடி தூக்கிக்கொண்டு ஓலமிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தக்கூட்டம் ஒரு உண்மையை மட்டும் மறைத்து தங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் பிரச்சனையை திசைதிருப்பிக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சட்டம் பல ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டிருந்தாலும் இன்றுவரை அதை ஒழுங்காக செயல்படுத்தாமல் தடைசெய்து வருவது இந்திய அரசாங்கம்தான். இயற்றிய சட்டத்தை சுயநல நோக்கில் ஒழுங்காக செயல்படுத்தாமல் அப்பாவிக் கணவர்கள் மீது பழி சுமத்தி சிறையில் தள்ளி சமுதாயத்தை சீரழித்து வருகிறது இந்த ஒட்டுமொத்தக் கூட்டம்.

வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 3 ன் படி வரதட்சணை கொடுப்பவரும் தண்டிக்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

THE DOWRY PROHIBITION ACT, 1961

(Act No. 28 of 1961)


3. Penalty for giving or taking dowry.-(1) If any person, after the commencement of this Act, gives or takes or abets the giving or taking of dowry, he shall be punishable with imprisonment for a term which shall not be less than five years, and with the fine which shall not be less than fifteen thousand rupees or the amount of the value of such dowry, whichever is more


சட்டம் இப்படி இருக்கிறது. ஆனால் இன்றுவரை ஒருவர் கூட வரதட்சணைக் கொடுத்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டதில்லை. கொடுப்பவர் இல்லையென்றால் வாங்குபவர்கள் இருப்பார்களா? ஆனால் இதைப் பற்றி யாரும் கவலைப்படவே இல்லை. காரணம் பல மகளிர் அமைப்புகளுக்கு வரதட்சணை வழக்குகளின் புள்ளி விபரம்தான் பணம் காய்க்கும் மரமாக, வாழ்வாதாரமாக இருக்கிறது. அதனால் அவர்களுக்கு இந்த வரதட்சணை முறையை ஒழிக்க மனம் வராது.

கீழுள்ள செய்தியில் பாருங்கள் இந்திய ஜனாதிபதி கூட இதே வேலையைத்தான் செய்திருக்கிறார்.

புதுடில்லி: வரதட்சணை பிரச்னையால் திருமணத்தை உதறித் தள்ளிய துணிச்சல் பெண்ணை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கவுரவப்படுத்த உள்ளார்.

மேற்குவங்க மாநிலம் துர்காபூரை சேர்ந்த இளம்பெண் புல்தி பாகி. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த புல்தி பாகிக்கு சஞ்சய் பாகி என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவரது பெற்றோர் புல்தி பாகி திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த சேமிப்புப் பணத்தில் திருமண ஏற்பாடுகள் செய்தனர். மேலும் உள்ளுர் பைனான்ஸ் அதிபரிடம் கடன் வாங்கி மாப்பிள்ளை வீட்டார் கேட்ட சீர்வரிசைகளை வழங்கினர். கடந்த மாதம் திருமண மண்டபத்தில் திருமணம் சிறப்பாக நடந்தது. திருமணத்தின் போது ஒரு லட்ச ரூபாய் ரொக்கமாக வரதட்சணை கொடுக்க புல்தியின் வீட்டார் ஒப்புக்கொண்டிருந்தனர். ஆனால் 90 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்தனர். மீதம் பத்தாயிரம் ரூபாயை சிறிது நாட்களில் தருவதாக கூறினர். இதனை மாப்பிள்ளை வீட்டார் ஏற்கவில்லை.மேலும் கூடுதல் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்றும் நிர்பந்தம் விதித்தனர். மேலும் மாப்பிள்ளை சஞ்சய் குடிபோதையில் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து மீதி பத்தாயிரம் ரூபாயை உடனே தரவேண்டும்;கூடுதலாக வரதட்சணை கொடுத்தால் தான் புல்தியை வீட்டிற்கு அழைத்துச் செல்வேன் எனக் கூறினார்.

மாப்பிள்ளை வீட்டாரின் செயல்களை பார்த்துக் கொண்டிருந்த புல்திபாகி அதிர்ச்சியடைந்தார். மணமேடையில் இருந்து திடீரென எழுந்து கழுத்தில் இருந்த மாலை, நகைகளை கழற்றி வீசினார். நான் சஞ்சய் பாகியுடன் செல்ல மாட்டேன்;எனக்கு இந்தத் திருமணமே வேண்டாம் என கூறிவிட்டு விருட்டென்று எழுந்து வீட்டிற்கு சென்று விட்டார். திருமணத்திற்கு வந்த உறவினர்கள் புல்தி பாகியின் செயலைக் கண்டு திகைத்தனர்.இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பெற்றோர்,உறவினர் சமாதானங்களை புல்திபாகி ஏற்கவில்லை.இதையடுத்து பிரச்னையில் ஊர் பெரியவர்கள் தலையிட்டு இந்தத் திருமணம் செல்லாது என அறிவித்தனர்.

இந்நிலையில் வரதட்சணை பிரச்னையால் திருமணத்தை உதறித்தள்ளி,பெண் சமுதாயத்துக்கு முன்னுதாரணமாகத் திகழும் புல்தி பாகியின் துணிச்சலை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் புல்தி பாகியை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து விரைவில் அவர் கவுரவப்படுத்த உள்ளார். கிராமப்புறங்களில் பெண்கள் திருமணத்தை உதறித் தள்ளுவதால் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதையும் மீறி திருமணத்தை உதறித்தள்ளிய புல்தியை ஜனாதிபதி நேரில் அழைத்து ஊக்கப்படுத்த விரும்புகிறார்.அவர் கல்வி கற்கவும் அல்லது வேலைக்கு செல்லவும் ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார். புல்திக்கு நிதி உதவி செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார். இதேபோன்று சமுதாயப் புரட்சி செய்த சரிதா மட்டோ,பிரவீனா கதுன் மற்றும் ரேகா ஆகியோரையும் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கவுரவப்படுத்த உள்ளார்.

=============

மேலுள்ள செய்தியில் முதலில் வரதட்சணைக்கொடுக்க பெண்வீட்டார் ஏன் ஒப்புக் கொண்டார்கள் என்ற கேள்வியே கேட்கப்படவில்லை. வரதட்சணை கொடுக்க முற்பட்டது சட்டப்படி ஒரு குற்றச் செயலாகும். முதலிலேயே மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்கும்போதே திருமணத்தை உதறியிருந்தால் இந்தப் பெண் புரட்சிப்பெண் என்று சொல்லலாம். ஆனால் இரண்டு கூட்டமும் சேர்ந்து ஒரு குற்றத்தை இழைத்திருக்கிறார்கள். பிறகு “டீல்” ஒத்து வரவில்லையென்றால் அடுத்த ஆள் மீது பழியைப் போட்டுவிடுகிறார்கள். இதுதான் இந்தியாவில் நடந்துவரும் வரதட்சணை சட்ட நடைமுறை. இதில் வரதட்சணைக்கொடுத்துத் திருமணம் செய்ய முயன்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ஏன் பரிந்துரைக்கவில்லை? வரதட்சணை தடுப்புச் சட்டத்தை முழுமையாக யார்தான் கடைபிடிப்பார்களோ?

நாட்டின் சட்டத்தை கடைபிடிக்கவேண்டிய முதல் பெண்மணியே வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்ய முயன்றவர்களை பாராட்டி கௌரவம் செய்தால் நாட்டில் இதுபோன்ற சமுதாயக் குற்றங்களை களைவது யார்? பெண்களுக்கு உண்மையாகவே நன்மை செய்யப்போவது யார்?

சமீபத்தில் தில்லி நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி வரதட்சணை சட்டங்கள் ஒழுங்காக செயல்படுத்தப்படாமல் இருப்பதை கண்டித்திருக்கிறார். வரதட்சணை கொடுத்தவர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்களே என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறார். ஆனால் ஜனாதிபதியோ வரதட்சணை கொடுத்தவர்களை பாராட்டி மகிழ்கிறார். என்ன ஒரு சட்ட நடைமுறையோ! கடைசியில் பெண்களை வைத்து நன்றாக சட்ட, அரசியல் வியாபாரம் செய்துவிடுகிறார்கள் இந்த நாட்டில்.


Express News Service Mon Jun 28 2010

Observing that the anti-dowry law has been reduced to a ''paper tiger'' due to the bride's family giving away dowry in many cases, a court here said they also need to be prosecuted like the groom's family to eliminate the social evil.

New Delhi : While laws prohibiting dowry not only forbid receipt but also giving it, a city court, in a significant observation, held that the brides’ families are to be blamed for rendering the social welfare legislation largely ineffective.

“It is unfortunate that the legislation (Dowry Prohibition Act) has been reduced to a mere paper tiger. What is more unfortunate is that the family of the woman (involved in the marriage) is responsible for the non-accomplishment of this legislation,” Additional Sessions Judge (ASJ) Kamini Lau noted.

To meet the objectives of the law, not only the grooms’ families but also the brides’ must be booked for giving dowry in the name of social obligation, the court said.

“Dowry is a two-way traffic and unless there is a giver there can be no taker... In order to eliminate this evil both the giver and taker have been made liable under the Act. It is not possible to leave one and book the other,” ASJ Lau said.

“It is time this social welfare legislation is ruthlessly implemented and none is permitted to take the shield of social compulsion. This has become all the more necessary in order to check the misuse and abuse of special laws,” she added.

The court also said expensive gifts given by relatives to a couple before and after marriage must be brought to the notice of the authorities for levying of taxes.

The court made the observations while dismissing the plea of a woman seeking to quash criminal proceedings initiated against her family for giving of dowry following a complaint by her husband who faced dowry harassment charges. The woman had challenged the order by a Metropolitan Magistrate in October last year, who had directed the registration of an FIR against her family members for giving dowry for her marriage in April 2008.



கலியுக கண்ணகி: (கள்ளக்)கணவனுக்காக தீக்குளிக்க முயற்சி!

மென்யான மனம் படைத்தவர்கள் இந்த செய்தியை தயவு செய்து படிக்கவேண்டாம். படித்தால் உங்களுக்கு தலைசுற்றல் ஏற்படும்!


கலியுக கண்ணகி:
பெண் தீக்குளிக்க முயற்சி: திருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு
ஜூலை 01,2010 தினமலர்

திருப்பூர்: திருப்பூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று விசாரணைக்கு வந்த பெண், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்; இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் வீரபாண்டி, ஜே.ஜே., நகரைச் சேர்ந்தவர் ஜீவா; பனியன் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மகனும், மகளும் உள்ளனர்; இதே பகுதியில் பக்கத்து வீட்டில் வசிப்பவர் கண்ணையன்; பனியன் தொழிலாளி. இவரது மனைவி கலா (30). திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பக்கத்து வீடுகளில் வசித்த ஜீவாவுக்கும், கலாவுக்கும் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் கள்ள உறவாக மாறியது. ஜீவா மனைவி சித்ராவுக்கு, தன் கணவர் மீதும், கலா மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்த சித்ரா சத்தம் போட்டுள்ளார்; கலாவுக்கும் சித்ராவுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 3ம் தேதி ஜீவாவும், கலாவும் காணாமல் போய்விட்டனர். சித்ராவின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர்களை கண்டறிய முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு, மேட்டுப்பாளையத்தில் இருந்த இருவரையும், சித்ராவின் உறவினர்கள் திருப்பூருக்கு அழைத்து வந்துள்ளனர். தன் கணவர் ஜீவாவை மீட்டுத்தருமாறு, அவரது மனைவி சித்ரா திருப்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, கலா மற்றும் ஜீவா இருவரையும் அழைத்து வந்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று விசாரித்தனர். அப்போது, தனது நான்கு பிள்ளைகளுக்காக, கலாவை தன்னுடன் வந்து சேர்ந்து வாழுமாறு கண்ணையன் அழைத்தார். இதற்கு மறுத்த கலா, சித்ராவின் கணவர் ஜீவாவுடன் வாழ விரும்புவதாகவும், தனது நான்கு குழந்தைகளையும் அவர் காப்பாற்ற சம்மதித்து உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

மேலும், மீண்டும் கண்ணையனுடன் சேர்ந்து வாழ்ந்தால், ஊர் கேவலமாக பேசும். சித்ராவும் அவரது உறவினர்களும் என்னை தகாத வார்த்தைகள் பேசி தாக்கவும் செய்வர் என்று கலா கூறியுள்ளார். இப்புகாரை விசாரித்த மகளிர் போலீசார், கலாவை அவரது கணவர் கண்ணையனுடன் சேர்ந்து வாழவும், ஜீவாவை, சித்ராவுடனும் சேர்ந்து வாழவும் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கலா, ஸ்டேஷனுக்குள் இருந்து வெளியே ஓடி வந்தார். ஸ்டேஷன் முன்பகுதியில் நின்று கொண்டு, வீட்டில் இருந்து பாட்டிலில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மகளிர் போலீசார், கலாவை தடுத்து, மண்ணெண்ணெய் பாட்டிலை கைபற்றினர். மீண்டும் ஸ்டேஷனுக்குள் அழைத்துச் சென்று பேச்சு நடத்தினர். டி.எஸ்.பி., ராஜா ஸ்டேஷனுக்கு வந்து விசாரணை நடத்தினார். தற்கொலைக்கு முயன்ற கலா மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு வந்த பெண், மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற சம்பவம், திருப்பூரில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

===================

நல்ல வேளை. இந்திய வரதட்சணைப் பெண் தெய்வங்கள் (IPC498A, Domestic Violence Act, Dowry Prohibition Act) உள்ளே புகுந்து குழந்தைகளின் நலனுக்காக ஓடிப்போன மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பிய அந்த அப்பாவிக் கணவனை பொய்வழக்கு மூலம் தண்டிக்கவில்லை. அதுவரை சந்தோஷம்தான்.




மனைவி உடையான் துப்பாக்கிக்கு அஞ்சான்!

கீழுள்ள செய்தியைப் படிப்பதற்கு முன்பு இந்த சட்டத்தைப் படித்துக்கொள்ளுங்கள். பிறகு செய்தியில் சொல்லப்பட்டுள்ள பெண் இந்திய சட்டப்படி எந்தத்தவறும் செய்யவில்லை என்று உங்களுக்கே புலப்படும்.

IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man (எந்த கேனைப் பயலாவது தனது மனைவி அடுத்தவனுடன் சல்லாபம் செய்ய அனுமதி தருவானா? என்ன ஒரு விந்தையான சட்டம் !), such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

மனைவியுடன் கள்ளக் காதலில் ஈடுபட்டவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற விவசாயி கைது
ஜூன் 30,2010 தினமலர்

ஓசூர்: அஞ்செட்டி அருகே கள்ளக்காதல் தகராறில், கள்ளக் காதலனை, காதலியின் கணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை அடுத்த மாதன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சிக்கய்யா (37). அவரது மனைவி ராதா (32). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டுக்கு அருகே வசிப்பவர் விவசாயி அண்ணாதுரை (34). அவருக்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

அண்ணாதுரைக்கும், ராதாவுக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவன் இல்லாத நேரங்களில் ராதா, அண்ணாதுரையுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை உறவினர்கள் மூலம் கேட்டறிந்த சிக்கய்யா, மனைவியை கண்டித்ததோடு, அண்ணாதுரையை வீட்டுக்கு வரக்கூடாது என, எச்சரித்தார். ஆனால், அண்ணாதுரை, சிக்கய்யா வீட்டில் இல்லாதபோது, அவரது வீட்டுக்கு சென்று ராதாவுடன் உல்லாசமாக இருந்தார்.

நேற்று முன்தினம் சிக்கய்யா வெளியூர் செல்வதாகக் கூறி விட்டு, வீட்டை விட்டு சென்றார். இரவு 9 மணிக்கு திடீரென வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டில் அண்ணாதுரையும், ராதாவும் ஒன்றாக இருந்தனர். சிக்கய்யாவை பார்த்ததும், அண்ணாதுரை அங்கிருந்து தப்பியோடி விட்டார். ஆத்திரமடைந்த சிக்கய்யா, மனைவியை அடித்ததோடு, வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அண்ணாதுரை வீட்டுக்கு சென்றார். அங்கு இருந்த அவரை, சிக்கய்யா நாட்டுத் துப்பாக்கியால் 17 முறை கோபம் தணியும் வரை சுட்டார். அதில், அண்ணாதுரை சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். சிக்கய்யா அங்கு இருந்து தப்பியோடி தலைமறைவானார்.

தகவல் அறிந்த அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் அண்ணாதுரையை சிக்கய்யா துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது உறுதி செய்யப்பட்டது. நேற்று காலை அஞ்செட்டியில் இருந்து வெளியூர் தப்பிச் செல்ல முயன்ற சிக்கய்யாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கணவர் இந்திய சட்டத்தை செயல்படுத்தியிருக்கிறார் போலிருக்கிறது. கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்ணை தண்டிக்கக்கூடாது என்று இந்திய சட்டமே சொல்லியிருக்கிறது. அதனால்தான் சட்டத்தை மதித்து கள்ளக்காதலில் ஈடுபட்ட ஆணை மட்டும் இந்த அப்பாவி கொன்றிருக்கிறார் போலிருக்கிறது.



Monday, June 28, 2010

வரதட்சணை கொடுப்பது தவறு என்று சொன்ன ஒரு உண்மையான பெண் நீதிபதி!

1961ல் இயற்றப்பட்ட வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி வரதட்சணை கொடுப்பதும் தவறு என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை அப்படி இந்த சட்டத்தின் மூலம் ஒருவர் கூட தண்டிக்கப்பட்டதில்லை. ஆனால் பெண்கள் அமைப்புகள் வரதட்சணைக் கொடுமை இன்னும் நாட்டில் இருக்கிறது என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். சட்டத்தை மதிப்பதும் கிடையாது, ஒழுங்காக செயல்படுத்துவதும் கிடையாது. இதுதான் இந்திய நாட்டு சட்டங்களின் நடைமுறை. இதனால்தான் நாட்டில் பல அவலநிலை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

ஏதோ ஒரு சிலர் மட்டுமே நேர்மையாக நடந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் நாட்டில் இன்றும் எப்போதாவது மழை பொழிகிறது.
தில்லியில் உள்ள ஒரு பெண்நீதிபதி வரதட்சணைகொடுப்பவரும் தண்டிக்கப்படவேண்டும் என்று சட்டத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லி நீதிபதி என்ற பதவிக்கு உரிய மரியாதையை கொடுத்திருக்கிறார். இதுபோல அனைத்து காவல் மற்றும் நீதித்துறையை சேர்ந்தவர்கள் சட்டத்தை மதித்து ஒழுங்காக செயல்படுத்தினால்தான் நாட்டில் பெண்களின் நிலை உயரும்.

பெண்களை எப்போதும் இழிநிலையில் இருக்கவேண்டும் என்று நினைக்கின்ற கூட்டம் சட்டங்களை ஒருதலை பட்சமாக செயல்படுத்தி ஆண்களை குற்றவாளிகளாகக் காட்டி பெண்களை தவறு செய்ய தூண்டி அவர்களை எப்போதும் கீழ்நிலையில் வைத்திருக்கத்தான் விரும்புகிறார்கள். ஏனென்றால் பெண்களின் நிலை தரம்தாழ்ந்திருந்தால்தான் வெளிநாடுகளில் இவர்களைக் காட்டி பணம் கேட்கமுடியும். அவர்களும் ஐயோ பாவம் இந்தியாவில் பெண்களின் நிலை மோசமாக இருக்கிறதென்று அந்த பெண்ணுரிமை பேசும் அமைப்புகளுக்கு பணம் தருவார்கள். அதனால்தான் இன்றுவரை அந்த வரதட்சணை தடுப்புச் சட்டம் ஒருதலை பட்சமாக செயல்படுத்தப்படுகிறது.


Giving dowry an equal crime, says court

Express News Service Mon Jun 28 2010

Observing that the anti-dowry law has been reduced to a ''paper tiger'' due to the bride's family giving away dowry in many cases, a court here said they also need to be prosecuted like the groom's family to eliminate the social evil.

New Delhi : While laws prohibiting dowry not only forbid receipt but also giving it, a city court, in a significant observation, held that the brides’ families are to be blamed for rendering the social welfare legislation largely ineffective.

“It is unfortunate that the legislation (Dowry Prohibition Act) has been reduced to a mere paper tiger. What is more unfortunate is that the family of the woman (involved in the marriage) is responsible for the non-accomplishment of this legislation,” Additional Sessions Judge (ASJ) Kamini Lau noted.

To meet the objectives of the law, not only the grooms’ families but also the brides’ must be booked for giving dowry in the name of social obligation, the court said.

“Dowry is a two-way traffic and unless there is a giver there can be no taker... In order to eliminate this evil both the giver and taker have been made liable under the Act. It is not possible to leave one and book the other,” ASJ Lau said.

“It is time this social welfare legislation is ruthlessly implemented and none is permitted to take the shield of social compulsion. This has become all the more necessary in order to check the misuse and abuse of special laws,” she added.

The court also said expensive gifts given by relatives to a couple before and after marriage must be brought to the notice of the authorities for levying of taxes.

The court made the observations while dismissing the plea of a woman seeking to quash criminal proceedings initiated against her family for giving of dowry following a complaint by her husband who faced dowry harassment charges. The woman had challenged the order by a Metropolitan Magistrate in October last year, who had directed the registration of an FIR against her family members for giving dowry for her marriage in April 2008.




Tuesday, June 15, 2010

(கள்ளக்)காதலை எதிர்க்காதீர்கள்

தாயைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்! என்று வீர முழுக்கமிட்ட நாட்டில் இப்போது வயதான தாய்மார்கள் அஞ்சி வாழவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

ஆண்கள் தான் எப்போதும் குற்றம் செய்பவர்கள் என்று ISI முத்திரை குத்தப்பட்டுள்ள நாட்டில் பெண்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்று காட்டிவிட்டார் இந்த மருமகள்.


கள்ளக்காதலை எதிர்த்த தாயை கொன்ற மகன், மருமகள் கைது
தினமலர் ஜூன் 16,2010

திருநெல்வேலி: நெல்லை அருகே கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த தாயை அடித்துக்கொன்ற மகன், மருமகள் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் டக்கரம்மாள்புரத்தை அடுத்துள்ள ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ்(48). இவர் வள்ளியூர் பி.எஸ்.என்.எல்.,அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி மல்லிகா(42). அங்குள்ள பள்ளி ஒன்றில் சத்துணவு பணியாளராக உள்ளார்.

இருவரும் பணிக்கு சென்ற நிலையில் ஜூன் 3ம் தேதி, கனகராஜின் தாயார் ஈனமுத்தம்மாள்(72), பகலில் ரத்தக்காயத்துடன் கிடந்தார். மருமகள் மல்லிகா, அவரை நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். பின்னர் ஈனமுத்தம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஈனமுத்தம்மாள் அடித்துக்கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. யாரோ மர்மநபர்கள் வீட்டில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வந்து ஈனமுத்தம்மாளை தாக்கியிருக்கலாம் என மல்லிகா புகார் கொடுத்தார். ஆனால் வீட்டில் பொருட்கள் எதுவும் கொள்ளைபோகவில்லை. இருப்பினும் மல்லிகாவின் புகாரில் சந்தேகம் இருப்பதை உணர்ந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது துப்புதுலங்கியது. கனகராஜின் தம்பி சங்கரபாண்டி, நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக உள்ளார். அவருக்கும் மல்லிகாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கனகராஜ் வேலைக்கு சென்ற நேரத்தை பயன்படுத்தி அண்ணன் வீட்டுக்குவந்துசென்றுள்ளார். சம்பவத்தன்றும் சங்கரபாண்டியும், மல்லிகாவும் ஒன்றாக இருப்பதை பார்த்த ஈனமுத்தம்மாள் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற சங்கரபாண்டி, பெற்ற தாய் என்று கூட பாராமல் கம்பியால் அடித்து கொன்றது தெரியவந்துள்ளது. இதற்கு மல்லிகாவும் துணையாக இருந்துள்ளார். நேற்று இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Monday, June 14, 2010

குடும்பங்களைக் கலைத்தால் என்ன நடக்கும்?

எல்லா பொய் வரதட்சணை வழக்குகளிலும் எந்த ஒரு விசாரணையும் செய்யாமல் புகாரை பதிவு செய்து அப்பாவிகளை கைது செய்வது. பிறகு விசாரணை எதுவுமே செய்யாமல் கடனே என்று விசாரணை அறிக்கை என்ற பெயரில் முதல் தகவல் அறிக்கையில் இருக்கும் விஷயத்தை அப்படியே காப்பி செய்து நீதிமன்றத்திற்கு அனுப்பி அப்பாவிகளை அலைக்கழிப்பது போன்ற செயல்களை செய்தால் என்ன நடக்கும்? அடுத்தவர் குடும்பத்திலும் அப்பாவிக் கணவன், குழந்தை, வயதான பெற்றோர் என்று எல்லோரும் இருக்கிறார்கள் என்று அவ்வப்போது நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.


குடும்பச் சண்டை காரணமாக சென்னையில் பெண் போலீஸ்காரர் தீக்குளித்துத் தற்கொலை

Thats Tamil ஜூன் 14, 2010

சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீசில் முதல் நிலை காவலராக வேலை பார்த்தவர் சங்கீதா. இவரது கணவர் முத்து கிருஷ்ணன் எழும்பூர் போலீசில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.

இருவருக்கும் திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிறது. ராஜா அண்ணாமலைபுரம் வல்லீஸ்வரர் கார்டன் பகுதியில் வசித்து வந்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஒரு வாரமாக இருவருக்கும் சண்டை நடந்து வந்தது.

நேற்று முன்தினம் காலையும், கணவன் மனைவிக்கு இடையே சண்டை மூண்டது. மனைவியை திட்டி விட்டு முத்துக்கிருஷ்ணன் வெளியே போனார்.

கணவருடன் ஏற்பட்ட சண்டையால் மனம் உடைந்த சங்கீதா வீ்ட்டில் தீக்குளித்து விட்டார். உடல் கருகிய நிலையில் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குசிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் சங்கீதா.

சங்கீதாவின் வீட்டிலிருந்து ஒரு கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில், எனது கணவர் என்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார் சங்கீதா.

இதுகுறித்து அபிராமபுரம் போலீஸாரும், ஆர்.டி.ஓ.வும் விசாரித்து வருகின்றனர்.

Saturday, June 12, 2010

பொய் சொல்லலாம் வாங்க (இளம் மனைவியருக்கு மட்டும்)

இந்தியாவில் எல்லாமே பெண்களுக்கு ஆதரவாக இருப்பதால் எதுவேண்டுமானாலும் செய்யலாம், எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை இப்போது நவநாகரீக பெண்களிடையே வளர்ந்து வருகிறது. கீழுள்ள செய்தியில் பாருங்கள் விவாகரத்து வேண்டும் என்பதற்காக ஒரு பெண் பச்சையாக பொய் பேசியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தன் குழந்தையின் மனதிலும் தந்தைக்கு எதிராக நஞ்சை விதைத்திருக்கிறார்.

இதுபோல நடப்பதற்கு முழுக் காரணம் இந்திய அரசாங்கத்தின் தவறான சட்டங்கள் ஆகும். பெண்கள் எது சொன்னாலும் அதை தலையில் தாங்கிக்கொண்டு உடனடியாக கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் சிறையில் அடைக்கும் விதமாக இயற்றப்பட்டுள்ள வரதட்சணை தடுப்புச் சட்டங்களும். பிறகு அந்தப் பெண் பொய் கூறி கணவனின் குடும்பத்தை சிறையில் அடைப்பதற்காகவே சட்டத்தைப் பயன்படுத்தினார் என்று தெரிந்தாலும் அந்தப் பெண்ணை தண்டிக்காமல் தட்டிக்கொடுத்துக் கொண்டிருப்பதும்தான் இதுபோன்ற பொய் சொல்லும் பெண்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

இந்திய நாட்டு சட்டங்கள் தந்தையை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இந்திய நாட்டு சட்டங்களைப் பொறுத்தவரை தந்தை என்பவன் ஒரு "Sperm Donor" மட்டுமே. குழந்தைகளின் நலனில் அவனுக்கு எந்தவித உரிமையையும் இந்திய சட்டங்கள் கொடுப்பதில்லை. காவல், நீதிமன்றங்களில் கூட ஒரு பெண் குழந்தையைக் காட்டி கண்ணீர் விட்டால் ஐயோ பாவம் குழந்தையை எடுத்துக்கொள் என்று கூறி தந்தை என்பவன் அவனது குழந்தையைப் பொறுத்தவரை “ஒரு விருந்தாளி” (Visitation only) என்று தீர்ப்பளித்துவிடுகிறார்கள்.

கடைசியில் பொய் சொல்லி தான் பெற்ற குழந்தைகளின் வாழ்வை அழிக்கும் சதிகாரர்களாகத்தான் பெண்களை இந்திய பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

பச்சைப் பொய் சொல்லும் மனைவி

தினமலர் 12 ஜூலை 2010

மும்பை : குழந்தைகள் "டிவி' பார்ப்பதற்கு தந்தை தடை விதித்ததில் தவறு இல்லை என்று மும்பை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.புனேயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மனைவி விவாகரத்து கேட்டு, மும்பை குடும்ப நல கோர்ட்டில் 2003 ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். மேலும், தனக்கு ஜீவனாம்ச தொகையாக 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்றும், தனது குழந்தைகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்றும் கோரினார்.

இதுதொடர்பாக தொழிலதிபரின் மனைவி, தனது மனுவில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு மும்பையில் கடந்த 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி திருமணம் நடந்தது. ஆணும், பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, என் கணவர் வேறுபட்ட குணங்களைக் கொண்டவர் என்று தெரிய வந்தது.அவருக்கு சந்தேக குணமும் இருந்தது. என்னை உறவினர்களுடன் பேசக் கூட அனுமதிக்கமாட்டார். பிறந்த வீட்டுக்கும் அனுப்ப மாட்டார். எதிலும் லேசில் திருப்தி அடையமாட்டார்.

வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும், அதிலும் ஏதாவது குறை கண்டுபிடிப்பார். குழந்தைகளிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்வார். அவர்களை "டிவி' பார்க்கவே அனுமதிக்க மாட்டார். அப்படியே அனுமதித்தாலும் இந்தி நிகழ்ச்சிகளை மட்டும் சிறிது நேரம் பார்க்க விடுவார். பின்னர், முன்னதாகவே அவர்களை படுக்கைக்கு அனுப்பி விடுவார்.பொம்மைகளை வைத்து, மற்ற குழந்தைகளுடன் விளையாடவும் அனுமதிக்க மாட்டார். பொம்மைகளை எடுத்து மறைத்து வைத்து விடுவார். குழந்தைகளுக்கும், எனக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும் அள வுக்கு அவரது நடவடிக்கை இருக்கும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

தனது குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்காக, அவர் தனது 12 வயது மகளை கோர்ட்டில் ஆஜர் படுத்தினார். அந்த சிறுமியும், தாய்க்கு ஆதரவாக சாட்சியமளித்தாள். ஆனால், குறுக்கு விசாரணையின்போது அந்த சிறுமியின் பதிலில் அந்தத் தந்தை, அந்த குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக இருப்பது தெரிய வந்தது.எனினும், அந்த சிறுமி மைனர் என்பதால் அவளது சாட்சியத்தை கோர்ட் ஏற்கவில்லை. அந்த பெண்ணின் விவாகரத்து மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக கோர்ட் தனது தீர்ப்பில் கூறியதாவது:அந்த தந்தை குழந்தைகளுக்கு நல்ல தாயாகவும் தந்தையாகவும் இருந்துள்ளார். தனது குழந்தைகளை ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் வளர்க்க முனைந்துள்ளார்."டிவி' பார்ப்பதற்கும், எலக்ட்ரானிக் பொம்மைகளை பயன்படுத்துவற்கும் தடை விதித்ததில் எந்தவிதமான தவறும் இல்லை. குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டே, அவரது நடவடிக்கைள் இருந்துள்ளன. இதில் மன உளைச்சல் ஏற்படுவதற்கான முகாந்திரம் ஏதுமில்லை. மேலும் இந்தப் பெண் குற்றச் சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் கொடுக்கத் தவறிவிட்டார். துரதிஷ்டவசமாக, அந்த பெண் தனக்கு விவாகரத்து வேண்டும் என்பதற்காக தனது 12 வயது மகளை, தனக்கு ஆதரவாக கட்டாயப்படுத்தி பேச வைத்துள்ளார். அவரின் இந்த செயல் கண்டிக்கத் தக்கது.இவ்வாறு மும்பை ஐகோர்ட் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.


விவாகரத்திற்காக சொல்லிய பொய்யை இந்தப் பெண் அப்படியே ஒரு புகாராக எழுதி காவல் நிலையத்தில் கொடுத்திருந்தால் இந்நேரம் IPC498A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்தக் கணவர் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்திருப்பார். அந்தப் புகார் உண்மையில்லை பொய் என்று சொல்வதற்கு நீதிமன்றத்திற்கு 5-6 ஆண்டுகள் ஆகியிருக்கும். அதற்குள் கணவன் ஒரு வழி ஆகியிருப்பான். ஆனால் கடைசியில் இதே தீர்ப்பைத்தான் சொல்லுவார்கள். பொய் சொன்ன பெண்ணை கண்டிக்கிறோம் என்று சொல்லிவிட்டு பத்திரமாக அந்தப் பெண்ணை வழியனுப்பி வைப்பார்கள். இதுதான் இந்திய நாட்டு பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள். பொம்பள பொய் சொன்னால் தப்பு இல்லை என்று உறுதியாக நம்பும் ஒரே நாடு இந்தியா!

இப்படித்தான் இந்தியாவில் வரதட்சணை வழக்குகள் IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற பிரிவுகளில் பதிவுசெய்யப்படுகின்றன.



காதல் தடையை தகர்த்தெறிந்த புதுமைப் பெண்!

தடைக்கல்லை படிக்கல்லாக மாற்றுவது, தடையைத் தாண்டிச் செல்வது போன்ற செயல்கள் எல்லாம் இப்போது பழைய ஸ்டைல். தடைக்கல்லை தகர்த்தெறிந்துவிட்டு செல்வதுதான் இப்போதைய புதிய ஸ்டைலாக கள்ளக்காதலில் நடைபெற்றுவரும் புரட்சி.


பெரம்பலூர் : கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தையடுத்த அத்தியூர் குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ (40). இவரது மனைவி பெரியம்மாள் (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உண்டு. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ராஜூ வெளிநாட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், பெரியம்மாளுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்குமிடையே கள்ளக்காதல் உருவானது. சமீபத்தில் ஊர் திரும்பிய ராஜூ, இதையறிந்து பெரியம்மாளை கண்டித்துள்ளார். இதனால் ஆத்தரமடைந்த பெரியம்மாள், ஏற்கனவே திட்டமிட்டபடி, கணவரை அருகிலிருந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த சுரேஷ் மற்றும் பெரியம்மாள் இணைந்து இரும்பு கம்பியால் ராஜூவை அடித்து கொன்று, அருகிலிருந்த குப்பை மேட்டில் வீசிவிட்டு சென்றுள்ளனர். ராஜூ காணாமல் போனதையறிந்த உறவினர்கள் அவரை தேட, பிணமாக ராஜூ மீட்கப்பட்டார். மங்கலமேடு போலீசார் நடத்திய விசாரணையில், பெரியம்மாள் சுரேஷூடன் இணைந்து ராஜூவை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து பெரியம்மாளை போலீசார் கைது செய்தனர்.

கணவன் என்பவன மனைவியைப் பேணிக்காக்கவேண்டும் என்று இந்திய சட்டமும், தர்ம சாத்திரங்களும் சொல்கின்றன. மனைவி என்பவள் கணவனின் அன்பிற்கு அடிமையாக இருக்கவேண்டும் என்று சாத்திரங்கள் சொல்கிறது. ஆனால் மனைவி எப்படி இருக்கவேண்டும் என்று இந்திய சட்டங்கள் எந்த இடத்திலும் சொல்லவில்லை. அதனால்தான் என்னவோ இந்த மனைவி இந்திய சட்டங்களை மதித்து சட்டத்தில் மனைவி எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை என்பதால் கள்ளக்காதலில் உல்லாசம் அனுபவித்திருக்கிறார்.

சட்டத்தையும் சாத்திரங்களையும் மதித்து மனைவியையும் குடும்பத்தையும் காப்பாற்றக் கணவன் வெளிநாட்டில் சம்பாதிக்கச் சென்றுள்ளார். மனைவி இந்திய சட்டத்தில் கள்ளக்காதலுக்கு தடைசொல்லவில்லை என்பதால் தனது வேலையை ஆரம்பித்திருக்கிறார். கணவனும் மனைவியும் இந்திய சட்டங்களை பின்பற்றி நடந்திருக்கிறார்கள். ஆனால், கடைசியில் கொல்லப்பட்டது அப்பாவிக்கணவன். இது தான் இந்தியா.

இந்தியாவில் கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்ணுக்கு எந்த தண்டனையும் கிடையாது. இந்த அப்பாவிக் கணவனின் மரணத்திற்குக் காரணம் பெண்களை தவறு செய்யத்தூண்டும் விதமாக இருக்கும் இந்திய அரசின் தவறான சட்டங்கள்.


IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man (எந்த கேனைப் பயலாவது தனது மனைவி அடுத்தவனுடன் சல்லாபம் செய்ய அனுமதி தருவானா? என்ன ஒரு விந்தையான சட்டம் ராமன் வாழ்ந்த நாட்டில்!), such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


Thursday, June 10, 2010

இந்திய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துவரும் மருமகள்கள்

மாமியாரையும் அவரது குடும்பத்தையும் சீரழிக்க பலகாலமாக பயன்பட்டுவந்த வரதட்சணை தடுப்புச் சட்டங்கள்மீது சமீப காலமாக இந்திய மருமகள்கள் நம்பிக்கை இழக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்குக் காரணம் பொய் வரதட்சணை வழக்குகளுக்கெதிராக நாட்டில் விரைவாகப் பரவிவரும் விழிப்புணர்ச்சியும், இந்திய நீதிமன்றங்களின் செயலற்றத்தன்மையும்தான் காரணம். வழக்குகளை விரைவாக நடத்தாமல் இழுத்தடிப்பதால் மருமகள்கள் கணவனின் குடும்பத்திற்கெதிரான தங்களின் சதித்திட்டத்தை விரைவாக செயல்படுத்தமுடியாமல் பல ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருக்கிறது. அதனால் மனம் நொந்துகொண்டிருக்கும் மருமகள்கள் புதிய வழியைப் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு உதாரணம்தான் கீழுள்ள செய்திகள்.

========================

1) மாமியாரை குடும்பத்தோடு தீர்த்துக் கட்டிய பலே மருமகள்
Net India123.com Warangal | Tuesday, Jun 8 2010

A sixty-year-old woman and a seven-year-old boy died and two others fell sick after they consumed food served by the woman's daughter-in-law, who allegedly mixed poison in the food.

According to police, the victims' family members alleged that the daughter-in-law Komala had mixed poison in Sambar and served to her mother-in-law and other family members, who fell sick.

All the four were admitted to a local hospital where two of them died. The other two were being provided treatment, the sources said.


சென்னை : மாமியார் கொலை வழக்கில், மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தா (70). இவருக்கு நான்கு மகன்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவரது ஒரு மருமகள் லட்சுமி. இவருக்கு இரண்டு குழந்தைகள். இவர்களை சரிவர கவனிப்பதில்லை என, மருமகள் லட்சுமியை சாந்தா கண்டிப்பார். இதனால், மாமியார் சாந்தா மீது லட்சுமிக்கு கோபம் ஏற்பட்டது. பூஜை அறையில் சாமி கும்பிடும் போது, சாந்தாவை கத்தியால் லட்சுமி குத்தினார். படுகாயமடைந்த சாந்தா, அங்கேயே இறந்தார். 2007ம் ஆண்டு மே மாதம் இச்சம்பவம் நடந்தது. லட்சுமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கை, சென்னை மகளிர் கோர்ட் நீதிபதி முகமது ஜபருல்லாகான் விசாரித்தார். லட்சுமி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது எனக் கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி முகமது ஜபருல்லாகான் தீர்ப்பளித்தார்.

================



இளமைத்துள்ளளோடு திரிந்துகொண்டிருக்கும் மருமகள்களுக்கும் ஒன்றும் செய்யமுடியவில்லை. வயதான நிலையில் பொய்வழக்குகளில் சிக்கித்தவிக்கும் அப்பாவி மாமியார்களை காப்பாற்றுவதற்கும் ஒன்றும் செய்யவில்லை. பிறகு இந்திய அரசாங்கம் என்னதான் செய்துகொண்டிருக்கிறது?

1961-ல் வரதட்சணை தடுப்புச் சட்டம், 1981-ல் IPC498A சட்டம், 2005-ல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்று அடுக்கடுக்காக ஒரே வித நோக்கத்திற்காக மருமகள்களுக்காக சிறப்புச் சட்டம் இயற்றிய அரசாங்கம் இப்போது என்ன தூங்கிக்கொண்டிருக்கிறதா?

2005-ல் மருமகள்களுக்கு சட்டம் இயற்றியதோடு இப்போது 5 ஆண்டுகள் ஆகிவிட்டதே. எல்லாம் பழைய சட்டங்களாகிவிட்டதே! புதிது புதிதாக சட்டங்கள் இயற்றிக்கொண்டிருந்தால்தானே மருமகள்களுக்கு இந்திய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வரும். இந்த 2010லாவது இந்திய அரசாங்கம் மருமகள்களுக்காக புதிய சட்டத்தை இயற்றினால்தான் மருமகள்கள் சட்டத்தின் துணையோடு மாமியாரை கொலைசெய்வார்கள். இல்லையென்றால் இதுபோலத்தான் கையில் கிடைப்பதையெல்லாம் பயன்படுத்தி மாமியாரை தீர்த்துக்கட்டி கறை படிந்த கையோடு அலைந்துகொண்டிருப்பார்கள். பிறகு மருமகள்களை பாதுகாக்காத அரசாங்கம் என்று பார்ப்பவர்கள் அரசாங்கத்தையல்லவா தவறாக நினைப்பார்கள்!




Saturday, June 05, 2010

நெறியற்ற சட்டங்களால் சிதறும் குடும்பங்கள்

சமீபத்தில் செய்தித்தாளில் வந்த பரபரப்பான செய்தி, 2 வயதுக் குழந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன். செய்தித்தாளில் இந்த செய்திக்கு பல விதமான கருத்துக்கள் எழுதப்பட்டிருந்தது. செய்திச் சுருக்கத்தை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்:


விருதுநகர்: விருதுநகர் அருகே தாயாருடன் கள்ள தொடர்பு வைத்திருந்தவரின் இரண்டு வயது குழந்தையை கொலை செய்து, சாக்கில் கட்டி கழிப்பறை குழியில் புதைத்த, சிறுவன் சந்திவீரனை போலீசார் கைது செய்தனர்.

வாக்குமூலம்: போலீசாரிடம் ஒப்புதல் வாக்கு மூலத்தில் சந்தவீரன் கூறியிருப்பதாவது: என் தாயார் ராமலட்சுமிக்கும், கணேசனுக்கும் தொடர்பு இருந்ததை கண்ணால் பார்த்து விட்டேன். கணேசனின் மனைவி அழகம்மாளிடம் கூறி கணவரை கண்டிக்குமாறு கூறியும், அவர் கண்டு கொள்ளவில்லை. அதனால் கணேசனை கொலை செய்யத் திட்டமிட்டேன். மே 25ம் தேதி அரளி விதை சாறு, தயார் செய்து ஒரு பாட்டிலில் எடுத்துக் கொண்டு கணேசன் வீட்டிற்கு சென்றேன். அங்கு கணேசனுக்கு சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு அழகம்மாள் வெளியே சென்றார். நான் சைக்கிளில் காற்று அடிக்க பம்பு எடுக்கும் சாக்கில், கணேசனின் வீட்டிற்குள் சென்று அவருக்காக வைத்திருந்த சாப்பாட்டில் அரளி விதை சாறை ஊற்றிவிட்டு ஓடி வந்து விட்டேன். பின்னர் கணேசனுக்கும், அழகம்மாளுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டதில் கணேசன் கோபத்தில் சாப்பிடாமல் வெளியே சென்றுவிட்டதால் எனது திட்டம் நிறைவேறவில்லை. இதில் இருந்தே கணேசனை பழி வாங்குவதற்காக அவரது மகனை கொலை செய்யத் திட்டம் தீட்டினேன். அப்போது தான் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு அழகம்மாள் கூறியதையடுத்து கொலையை அன்றே செய்ய முடிவு செய்தேன். எனது வீட்டு "செப்டிக் டேங்க்' இருந்த இடத்தில் குழியை ஆழப்படுத்தினேன். ஒரு கடையில் வெள்ளைத்தாள் வாங்கி, முதலில் மிரட்டல் கடிதம் எழுதினேன். இது திருப்தி அளிக்காததால் மீண்டும், எழுதிய கடிதத்திலேயே குழந்தை வேண்டுமென்றால், 30 லட்ச ரூபாயை திருமங்கலத்தில் வந்து கொடுத்து விட்டு குழந்தையை கன்னியாகுமரியில் பெற்றுக்கொள்ளவும் எனக் குறிப்பிட்டு அவரது வீட்டுப் படியில் கடிதத்தை போட்டேன். பின்னர் விளையாடிக் கொண்டிருந்த ஜோதி சங்கரனின் கழுத்தை இறுக்கி கொலை செய்து, பிணத்தை உரச்சாக்கில் போட்டேன். சாக்குடன் குழந்தையை, எனது வீட்டு "செப்டிக் டேங்க்' குழியில் போட்டு மூடினேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதற்குக் காரணம் வன்முறையைத் தூண்டும் திரைப்படங்கள் என்று சிலரும், அந்த சிறுவன் அரக்க குணம் கொண்டவனா என்று சிலரும், அந்த சிறுவனின் தாய் தான் காரணம் என்று பலரும் பலவாறு தங்களது மனதுக்குத் தோன்றியதை எல்லாம் Key Board மூலம் அடித்துத் தள்ளியிருந்தார்கள்.

இவர்களுக்குப் பெயர்தான் சராசரி அப்பாவி இந்தியர்கள். இந்த அப்பாவி இந்தியர்கள்தான் அரசாங்கத்தின் வியாபாரத்திற்கு சரியான இலக்கு. இவர்களைக் கருத்தில்கொண்டுதான் IPC498A, Domestic Violence, Dowry Prohibition Act போன்ற பல தவறான சட்டங்கள் நாட்டில் வியாபாரப்புழக்கத்தில் இருந்துகொண்டிருக்கிறது.

மேற்கண்ட செய்தியில் ஒரு சராசரி சிறுவனுக்கு தாயிடமிருந்து கிடைக்கவேண்டிய நற்குணங்களும் வழிகாட்டுதலும் கிடைக்கவில்லை.

அந்தப் பெண்ணின் உடற்பசிக்கு முறைப்படி திருமணம் செய்து மகனுக்கு அந்த உறவைப் பற்றி நேர்மையான வழியில் புரியவைத்திருக்கலாம். அப்படிச் செய்யவில்லை. ஆனால் அந்தப் பெண்ணிற்கு இருந்ததோ ஏற்கனவே திருமணமான ஆணுடன் கள்ளத்தொடர்பு. ஏனென்றால் இந்திய சட்டங்கள் பெண்களைத் தவறு செய்யத் தூண்டும் விதமாக இயற்றப்பட்டிருக்கிறது.

இந்திய சட்டங்கள் என்ன சொல்கிறது என்றால் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் பெண் எந்தவிதத்திலும் குற்றவாளி இல்லை. ஆனால் கள்ளத் தொடர்பில் இருக்கும் ஆண் மட்டுமே குற்றவாளியாகக் கருதப்படுவான்.

சமுதாயத்திற்குப் புறம்பான இந்த உறவைப்பற்றி புகார் கொடுக்கவேண்டுமானால் இரண்டு வழிகள் மட்டும்தான் இந்திய சட்டத்தில் உள்ளன.

1. கள்ள உறவில் ஈடுபடும் பெண்ணின் கணவன் புகார் கொடுக்கலாம். அப்படியே புகார் கொடுத்தாலும் தன் மனைவியுடன் கள்ள உறவில் ஈடுபடும் ஆணின் மீது மட்டும்தான் புகார் கொடுக்க முடியும். மனைவி தானாக விரும்பி தவறு செய்தாலும் அந்தப் பெண்ணை இந்திய சட்டங்கள் தட்டிக்கொடுத்து ஆதரிக்கும்.

அந்த சிறப்புச் சட்டம்தான் 1860ல் எழுதப்பட்ட தேய்ந்துபோன IPC497. இந்த பழம் பஞ்சாங்கத்தைத்தான் இன்றும் நம்ம நாட்டு புத்திசாலிகள் பின்பற்றிவருகிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இதையே நாம் ஏன் பின்பற்றவேண்டும் என்று யாராவது ஒரு அரசியல்வாதியாவது இன்றுவரை யோசித்தார்களா என்று தெரியவில்லை. யோசிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை இதுதான் “பெண் சுதந்திரம்” என்று இப்போது கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள் பல பெண்ணியவாதிகள்!



497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man (எந்த கேனைப் பயலாவது தனது மனைவி அடுத்தவனுடன் சல்லாபம் செய்ய அனுமதி தருவானா? என்ன ஒரு விந்தையான சட்டம் ராமன் வாழ்ந்த நாட்டில்!), such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

சில படிக்காத கிராமத்துப்புற பெண்கள் இந்த கள்ள உறவோடு இருந்துவிடுகிறார்கள். ஆனால் சில நகரத்துப் படித்தப் பெண்கள் வேலை முடிந்ததும் கற்பழிப்பு வழக்குப் போட்டுவிட்டு போகிற போக்கில் கொஞ்சம் பணத்தையும் சம்பாதித்துக்கொண்டு செல்கிறார்கள். இதற்குப் பெயர்தான் “கலியுக பெண்ணுரிமை!”.

2. இரண்டாவது வழி கள்ள உறவில் ஈடுபடும் ஆணின் மனைவி தனது கணவனுக்கு எதிராக எல்லாவித சட்டங்களையும் பயன்படுத்தலாம். பலதார மணம், வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை, பெண் கொடுமை என பல சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் மீண்டும் இவையனைத்தும் அந்த ஆணை மட்டும்தான் தண்டிக்கும். கள்ள உறவில் ஈடுபடும் பெண்ணிற்கு இந்திய சட்டங்கள் எல்லாவித தண்டனைகளிலிருந்தும் விலக்கு அளித்திருக்கிறது. ஏனென்றால் கள்ளக்காதல் என்பது இந்தியாவில் ஒரு புனிதமான உறவு!

மேலுள்ள இரண்டு வழிமுறைகளையும் பார்த்தால் இந்த சிறுவன் எடுத்த முடிவு சரியானதா என்று யோசிக்க வழி கிடைக்கும்.

நாட்டில் நடக்கும் இதுபோன்ற காமக் களியாட்டங்களில் தனது குழந்தைகளின் நலனைக் கூட கருதாமல் இருக்கும் பெண்களை தண்டிக்காமல் இதுபோன்ற பல தவறான பெண்களை ஊக்குவிக்கும் விதமாக 1860லிருந்து இன்றுவரை இருக்கும் இந்திய சட்டங்களும் அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசியல்வாதிகளும் குற்றவாளிகளா? அல்லது

பெண் எப்போதும் நல்லவள் என்று கூறி ஆண்கள் மட்டுமே எப்போதும் குற்றவாளிகள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி அதற்கு உதவியாகப் பல ஒருதலை பட்சமான சட்டங்களை உருவாக்கி அப்பாவிகளின் அறியாமையில் குளிர்காய்ந்துகொண்டிருக்கும் சுயநலம் பிடித்த நாடாளுபவர்கள் குற்றவாளிகளா?

தனக்கு நடக்கும் அநீதியைக் கண்டு மனம் வெதும்பிய சிறுவனால் மேற்கண்ட இரண்டு சட்ட வழிமுறைகளையும் பயன்படுத்தி தனது தாயைத் திருத்த முடியுமா? அதனால் அவனுக்குத் தெரிந்த அளவில் தனக்குத்தானே ஒரு வழியைத் தேடி நீதியைத் தேடிக்கொண்டது குற்றமா? அல்லது

திரைப்படங்களில் வரும் வன்முறைதான் காரணமா?

கடைசியில் அந்த சிறுவன் மட்டும்தான் கைதுசெய்யப்பட்டிருக்கிறான். கள்ள உறவில் ஈடுபட்ட யாரும் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதாக செய்தி இல்லை.

இனிவரும் காலங்களில் “தாய்மை” என்ற பண்பில்லாத வெறும் சக்கைகளாகத்தான் பெண்கள் நடமாடுவார்கள். இதுபோன்ற பெண்களை உருவாக்குவதற்கு தலைவர்களும், சட்ட வல்லுனர்களும், பெண்கள் நல அமைப்புகளும் “Women Empowerment Industry” என்ற தொழிற்சாலையை உருவாக்கி பல தவறான சட்டங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதன் விளைவாகப் பல குடும்பங்களும், அப்பாவிக் குழந்தைகளும் நாசகமாகப்போவது உறுதி.

சிந்தியுங்கள்.



Friday, June 04, 2010

இந்தியப் பெண் என்றால் சாதாரண விஷயமா!

பெண் என்றால் எப்போதும் மென்மையானவர்கள், பலகீனமானவர்கள் என்று நினைப்பதெல்லாம் கடைந்தெடுத்த முட்டாள்தனம். நாட்டில் பெண்களுக்கு துன்பம் ஏற்படுகிறது என்றால் அதற்கு முழுக்காரணமும் பெண்கள்தான். ஆனால் இதில் அப்பாவி ஆண்கள் மீது வீண் பழி சுமத்தி பல துன்பங்களை செய்துவருகிறது சமுதாயம்.

சமூக நலத்துறை என்று ஒன்று நாட்டில் இருக்கிறது. அதன் பல பணிகளில் ஒன்று என்னவென்றால் திருமணங்களில் வரதட்சணை பரிவர்த்தனை நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும். அதுபோல வரதட்சணைப் புகார்கள் மனைவியரால் கொடுக்கப்படும்போது அதனை நன்கு விசாரணை செய்து காவல்துறைக்கு பரிந்துரை செய்வதா அல்லது வேண்டாமா என்று முடிவுசெய்யவேண்டும்.


1960களில் வரதட்சணைத் தடுப்புச்சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் இன்றுவரை அந்தக் கொடுமை இருப்பதாகப் பல புள்ளிவிபரங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்றது. ஆனால் சமூக நலத்துறை இன்றுவரை இந்த விஷயத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறது என்று புரியாத புதிராகவே இருக்கிறது.


அதுபோல பெண்குழந்தைகளுக்கு அரசாங்கம் சலுகைகள் அறிவித்தாலும் அதனை செயல்படுத்துவதும் சமூக நலத்துறைதான். ஆனால் அதிலும் லஞ்சம் ஊழல் என்று அநீதி தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது.


கீழுள்ள செய்தியைப் பாருங்கள் சிறு பெண் குழந்தைகளுக்கு நிதியுதவி கேட்ட தந்தையிடம் லஞ்சம் கேட்டிருப்பது ஒரு பெண் அதிகாரி! இப்படி பெண்களுக்கு எதிரியாக பெண்களே இருக்கும்போது வெறும் கண்துடைப்பிற்காக அரசாங்கம் பல தவறான பெண்கள் பாதுகாப்பு சட்டங்களை இயற்றி அப்பாவி ஆண்களை பலியிட்டு வெளியுலகிற்கு பெண்களுக்கு நன்மை செய்வது போல வேஷம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறது.


பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக அநீதியை இழைக்கும் கூட்டணியில் பங்கு வகிக்கும் அமைப்புகள் எவை தெரியுமா?


  • மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம்
  • தேசிய மகளிர் நல வாரியம்
  • சமூக நலத்துறை
  • காவல் நிலையங்கள் - குறிப்பாக மகளிர் காவல் நிலையங்கள்
  • ஒருதலை பட்சமாக செயல்படும் நீதிமன்றங்கள்
  • இவை எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் உள்துறை அமைச்சம், நீதித்துறை அமைச்சகம்.
இவை அனைத்தும் கூட்டணி அமைத்து அப்பாவிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அநீதி இழைத்துவிட்டு அப்பாவி ஆண்கள் மீது பழி சுமத்தி அவர்களை சட்ட தீவிரவாதத்திற்கு பலியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சற்று கூர்ந்து கவனித்தால் இந்தக் கூட்டணி முழுவதும் ஒரு நெட்வொர்க் போல “பெண்கள் மேம்பாட்டு நிதி” என்ற நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டிருப்பது தெரியும். அந்த “நிதியைக்” கருத்தில் கொண்டு இந்த நெட்வொர்க் அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பல ஒருதலைபட்சமான சட்டங்களை உருவாக்கி செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இதை உறுதி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டவைதான் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் என்ற பெயரில் உருவான பல சட்டங்கள்.

  1. வரதட்சணை தடுப்புச் சட்டம் (1961) - இதில் இதுவரை வரதட்சணை கொடுத்த எந்தப் பெண்ணும் தண்டிக்கப்பட்டதில்லை.
  2. IPC498A (1984) - இந்த சட்டப்படி மனைவி சொல்வது மட்டும்தான் உண்மை. மனைவி பொய்யாகப் புகார் கொடுத்தால் தண்டிக்க எந்தவித பிரிவுகளும் கிடையாது.
  3. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் (2005) - இந்த சட்டப்படி பெண் என்பவள் எந்த வன்முறையும் செய்யத் தெரியாதவள். ஆண்தான் எப்போதும் குற்றவாளியாகக் கருதப்படுவான்.
  4. கள்ளக் காதல் உறவு (IPC497) - இந்த சட்டப்படி பெண்ணின் கள்ள உறவு என்பது புனிதமானது. இந்த தவறான உறவில் ஈடுபடும் பெண் தானே விரும்பி தவறு செய்தாலும் எந்த தண்டணையும் கிடையாது. ஆனால், ஆணுக்கு தண்டனை உண்டு.
இன்னும் பல இருக்கின்றன. இந்த அனைத்து சட்டங்களிலும் ஆண் என்ற பாலினமே குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பெண் என்பவள் எப்போதும் அப்பாவியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நடைமுறையில் பெண்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று உங்களுக்கே தெரியும். இது மேலே சொல்லப்பட்டுள்ள கூட்டணிக்கும் தெரியும். ஆனால் இவர்கள் செய்யும் தவறை யார் தலையிலாவது கட்டவேண்டும் அல்லவா? அதற்குத்தான் இந்தியாவில் ஆண்கள் இருக்கிறார்கள்.

பெண்கள் எந்தவிதமான, எல்லாவிதமான குற்றங்களும் செய்வார்கள். அதே சமயம் “பெண்” என்ற பெயரைப் பயன்படுத்தி பல கூட்டங்களும் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இந்தியாவில் “பெண்” என்பது ஒரு சாதாரணமான விஷயம் கிடையாது. அது ஒரு வியாபாரப் பொருள். பல குற்றங்களையும் கூசாமல் செய்வதற்கு அரசு அங்கீகாரம் கொடுத்துள்ள ஒரு இனம். அரசியல் வியாபாரிகளுக்கு ஒரு பகடைக்காய்.


இந்திய அரசியல் சந்தையில் "Woman is a Multipurpose Commodity". இடஒதுக்கீடு வியாபாரத்திற்கு பயன்படுத்தலாம், சிறப்புச் சட்டங்கள் என்ற பெயரில் சட்டங்கள் இயற்றி நிதி ஒதுக்கிக் கொள்ளலாம், “பெண்ணுரிமை” (Women Empowerment) வளர்ச்சி நிதி என்ற பெயரில் வெளிநாடுகளிலும், ஐ.நா. விடமும் பல கோடி நிதியுதவி பெறலாம், பெண்கள் வளர்ச்சி சிறப்புத்திட்டங்கள் என்ற பெயரில் பல “தொண்டு நிறுவனங்களுக்கு” நிதி ஒதுக்கலாம், வெளிநாட்டு வாழ் இந்தியப் பெண்கள்நல நிதி என்று தனி நிதி ஒதுக்கிக் கொள்ளலாம். இன்னும் பல சிறப்பான வியாபாரங்கள் இருக்கின்றன. இந்த எல்லாவிதமான வியாபாரத்திற்கும் கொடுக்கப்படும் விலை தவறான சட்டங்கள் மூலம் சிதைக்கப்படும் அப்பாவிக் கணவர்களின் வாழ்க்கையும், பல அப்பாவி குழந்தைகளின் எதிர்காலமும்.

500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நல விரிவாக்க அலுவலர் கைது
தினமலர் 3 ஜூன் 2010

வெம்பக்கோட்டை : சிவகாசி அருகே, அரசு நிதி உதவியை வழங்க, 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நல விரிவாக்க அலுவலர் கமலாதேவியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, எதிர்கோட்டையைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருக்கு இரு பெண் குழந்தைகள் இருப்பதால், அரசு வழங்கும் நிதி உதவியை பெறுவதற்காக, வெம்பக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் மே 5ம் தேதி விண்ணப்பித்தார்.

விண்ணப்பத்தை ஆய்வு செய்த சமூக நல விரிவாக்க அலுவலர் கமலாதேவி(55), "500 ரூபாய் கொடுத்தால் தான் மனுவை பரிந்துரைப்பேன்' எனக் கூறினார். லஞ்சம் வழங்காததால் மனுவை கிடப்பில் போட்டார். மீண்டும் ஜூன் 1ம் தேதி ஒன்றிய அலுவலகத்திலிருந்த கமலாதேவியை சந்தித்த சந்திரசேகரன், "எனக்கு பின்னால் கொடுத்த மனுக்களை பரிந்துரைத்து விட்டீர்கள். லஞ்சமாக 500 ரூபாய் கொடுக்க என்னிடம் வசதியில்லை. என் மனுவை பரிந்துரைத்து உதவ வேண்டும்' என கெஞ்சினார். ஆனால், "பணமில்லாமல் காரியமாகாது' என கமலாதேவி, கறாராக கூறிவிட்டார்.

இதையடுத்து சந்திரசேகரன், விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். ரசாயன பவுடர் தடவி போலீசார் கொடுத்த ஐந்து 100 ரூபாய் நோட்டுகளை, அலுவலகத்தில் இருந்த கமலாதேவியிடம், நேற்று மதியம் 2.30 மணிக்கு வழங்கினார். பணத்தை வாங்கிய கமலாதேவியை டி.எஸ்.பி., சியமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், கணேஷ்தாஸ் ஆகியோர் சுற்றி வளைத்து, லஞ்ச பணத்தை பறிமுதல் செய்ய முயன்றனர். அதற்குள் கமலாதேவி, ரூபாய் நோட்டுகளை கிழித்து வாயில் போட்டு விழுங்க முயற்சித்தார். சுதாரித்துக் கொண்ட போலீசார், அவரது கைகளை தட்டி விட்டு கிழிந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர். பின்னர் கமலாதேவியை கைது செய்தனர்.

கமலாதேவியை கோர்ட்டில் ஆஜர்படுத்த சென்ற போது, தனக்கு நெஞ்சுவலிப்பதாக அவர் தெரிவித்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் வந்த ஆம்புலன்சில் அவரை ஏற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் கமலாதேவியை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்க, போலீசார் காரில் அழைத்து சென்றனர்.


இந்த செய்தியில் இந்தப் பெண் ஆணை விட எந்தவிதத்தில் குறைவாக தவறு செய்திருக்கிறார்? ஆனால் சட்டங்கள் மட்டும் ஒருதலைபட்சமாக இருப்பது ஏன்?



Tuesday, June 01, 2010

சூப்பர் கற்பழிப்பு !!!

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை! என்ற அன்றைய காலத்துப் பழமொழிக்கு இப்போது இந்தியாவில் புது அர்த்தம் என்னவென்றால் "Living Together Relationship". திருமணம் செய்யாமல் கூடி வாழ்ந்தால் நாட்டில் பலருக்கும் நன்மைதான்.

சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பை இந்தியாவின் எதிர்காலத் தூண்கள் தப்பாக அர்த்தம் புரிந்துகொண்டார்களா? அல்லது கூடிவாழ்ந்தால் தவறு இல்லை என்று நீதிமன்றம் சொல்லிய கருத்திற்கு மதிப்புக் கொடுக்கவேண்டும் என்பதற்காக நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிட்டார்களா என்று தெரியவில்லை.
IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]

S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents

21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes".

இந்த புதிய அர்த்தப்படி திருமணம் செய்யாமல் கூடி வாழ்ந்தால் இந்திய அரசாங்கத்திற்கும், காவல் துறைக்கும், நீதித்துறைக்கும் நன்மை. இந்த புதிய முறைப்படி பல கற்பழிப்பு வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வரும், காவல் துறைக்கும், நீதித்துறைக்கும் வருமானம் நன்கு கிடைக்கும். வழக்கில் சிக்குபவர் ஜாமின் தொகையாக கட்டும் பணம் இந்திய அரசின் கஜானாவை நிரப்பும், மந்திரிகள் அந்தப் பணத்தை “நாட்டிற்காக” செலவு செய்து நாடு செழிப்பாக இருக்கும்.

இந்தியாவில் இருவர் விரும்பி உறவு கொண்டால் அது குற்றமல்ல. ஆனால் பிறகு அந்த உறவில் ஈடுபடும் பெண் தேவைப்பட்டால் இந்திய மேதைகளால் இயற்றப்பட்டிருக்கும் சட்டங்களைப் பயன்படுத்தி அந்த ஆண் மீது கற்பழிப்பு வழக்குப் போடலாம். இதன்மூலம் இந்திய அரசாங்கத்திற்கும், நீதித்துறைக்கும் நல்ல வருமானம் கிடைக்குமல்லாவா?

இதுதான் இந்த “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற பழமொழிக்கு அர்த்தம்! அதனையொட்டி வந்துள்ள செய்தியைப் பாருங்கள்.


மும்பை: திருமணம் செய்து கொள்ளவதாக உறுதியளித்து விமானப் பணிப்பெண்ணை பலமுறை கற்பழித்த, ஜெட் ஏர்வேஸ் நிறுவன துணை விமானி மும்பை விமான நிலையத்தில் வைதது கைது செய்யப்பட்டார்.

வருண் அகர்வால் (27) என்ற அந்த துணை விமானியும், 22 வயதான ஜெட் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே 2009ம் ஆண்டு மே மாதம் முதல் மும்பையில் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தனர்.

அவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தொடர்ந்து உடலுறவு வைத்துள்ளார் வருண்.

உடலுறவுக்கு அந்தப் பெண் உடன்பட மறுத்தபோது அவரை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று மோதிரத்தையும் அணிவித்துள்ளார் அகர்வால். ஆனால், திருமணம் செய்ய மட்டும் தொடர்ந்து மறுத்து வந்த அகர்வால், சமீபத்தில் அவரை கைவிட்டுவிட்டார்.

மேலும் திருமணத்துக்கு வற்புறுத்திய அந்தப் பெண்ணை தாக்கி, வீட்டை விட்டும் விரட்டியுள்ளார்.

இதையடுத்து விலே பார்லே காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் செய்ததையடுத்து, நேற்று அகர்வாலை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

2006ம் ஆண்டு முதல் ஜெட் ஏர்வேசில் பணிபுரியும் அகர்வால், 2008ம் ஆண்டு பணியில் சேர்ந்த அந்தப் பணிப்பெண்ணை காதலிப்பதாகக் கூறி பின்னாலேயே சுற்றியுள்ளார்.

முதலில் அந்தக் காதலை பெண் ஏற்க மறுத்துள்ளார். ஆனால், இருவருமே உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, தொடர்ந்து வற்புறுத்தியதால் அவரது காதலை ஏற்றுள்ளார் அந்தப் பெண்.

பின்னர் மும்பை மரோல் மிலிட்டரி சாலையில் உள்ள அசோக் டவர் அபார்ட்மெண்ட்ல், உள்ள தனது வீட்டிலேயே அந்தப் பெண்ணை தங்க வைத்த அகர்வால் திருமணம் செய்வதாகக் கூறி தொடர்ந்து உடலுறவு வைத்துவிட்டு சமீபத்தில் கைகழுவியுள்ளார்.

அகர்வால் மீது கற்பழிப்பு, மோசடி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகர்வால் மற்றும் அந்தப் பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

=============

மேலுள்ள செய்தியில் சொல்லப்பட்டது போலவே ஒரு ஆணுக்கு நிகழ்ந்தால் அந்த ஆணின் நிலை எப்படி இருக்கிறது என்று இந்த வீடியோக்களில் பாருங்கள்.








===================

இந்தியாவில் பெண்கள் எப்படியெல்லாம் அப்பாவித்தனமாக இருக்கிறார்கள்! திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் கூடி வாழ்ந்து குடித்தனம் நடத்தலாம் என்று அழைத்தால் கூட அதற்கு அர்த்தம் புரியாமலேயே கூடி வாழ சம்மதித்துவிடுகின்றனர். “நாம ரெண்டு பேரும் ஒரே ஊர்க்காரர்கள்” என்று சொன்னால் உடனே உறவிற்கு சம்மதிக்கும் அளவிற்கு அப்பாவியாக இருக்கிறார்கள்!! என்று இந்திய சட்டங்கள் கருதுகிறது.

இதுபோன்ற அப்பாவிப் பெண்களை ஏமாற்றும் ஆண்களை தண்டிக்க மேலும் பல கொடுமையான சட்டங்களை உருவாக்கவேண்டும். இந்த வேலையை மகளிர் வாரியமும், பெண்கள் நல அமைச்சகமும் மிகவும் விரும்பி செய்வார்கள்.

மேலே சொல்லப்பட்ட செய்தியில் உள்ள பெண் மிகவும் அப்பாவியானவராக இருக்கலாம். அல்லது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் இப்படி வாழ்வது தவறில்லை என்று முடிவு செய்திருக்கலாம்.

எது எப்படியோ தேவையானது முடிந்த பிறகு கடைசியில் கற்பழிப்பு வழக்குப் போடவேண்டும் என்ற அளவிற்காவது பொது அறிவும், சட்ட அறிவும் இருப்பது பாராட்டத்தக்க விஷயம்தான்! கொஞ்சம் முன்னேற்றம் இருக்கிறது என்று சந்தோஷப்படலாம்.

இதுபோலவே மற்றொரு செய்தியைப் பாருங்கள். விவாகரத்து செய்த பிறகும் கணவனுடன் உல்லாசமாக இருந்து விட்டுப் பிறகு முன்னாள் கணவன் கற்பழித்துவிட்டான் என்றும் வழக்குத் தொடர்ந்திருக்கிறார் ஒரு அப்பாவிப்பெண்.

======================

கணவனைக் கற்பழித்த மனைவி

Wife wants husband’s bail revoked
The Times of India, 24 Feb 2010

MUMBAI: A 38-year-old woman from Vikhroli has moved the Bombay high court seeking cancellation of her husband’s bail alleging that he was threatening her and her two minor children. The city sessions court, on February 16, granted bail to her husband, Thomas Lobo, who was arrested on charges of marital rape and theft. The high court on Tuesday ordered that a notice be issued to Lobo, to be present in court at the next hearing.

The petitioner, her 15-year-old son and 12-year-old daughter stay at her Vikhroli flat. She was a widow with two children when she married Lobo, an NRI, in June 2007. But soon, she alleged that she was subjected to cruelty. In 2007, she filed a complaint under Section 498A. Lobo also filed complaints against her accusing her of misappropriation and cheating. The couple seperated and filed a divorce petition in the family court. However, in November 2009, the petitioner alleged, “Lobo expressed his desire to reside together, to which I agreed.” However, she alleged that in November 2009, he “subjected her to forcible intercourse”.

She further alleged that the next day, Lobo disappeared. She also found that her gold rings and ear studs were missing. A police complaint was filed and Lobo was arrested from Karnataka on January 6, 2010, but was granted bail by the sessions court. On Tuesday, the petitioner sought its cancellation on the ground that “Lobo had threatened to shoot down me, my two children and also my advocate by hiring an underworld don... He works as a general manager for a company in Kuwait and Dubai and has links with the underworld.




“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.