சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, August 29, 2011

ஊழலுக்கு எதிரான போராட்டம் தோற்றுவிட்டது!

பல ஆயிரக்கணக்கான தியாகிகள் இன்னுயிர் ஈந்து வாங்கிக்கொடுத்த சுதந்திரத்தையே ஊழல்வாதிகள் சிதைத்துவிட்டார்கள் . இப்போது ஊழலுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தையா வெற்றிபெறச் செய்துவிடுவார்கள்?

இப்போதுதான் சுடச்சுட ஊழலுக்கு எதிராக நாடு முழுதும் உண்ணாவிரதப் போராட்டமும் அமைதி வழிப்போராட்டமும் நடந்துகொண்டிருக்கிறது.

ஆனால், ஊழல்வாதிகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்களது வேலையை தவறாமல் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் விதமாக இரண்டு செய்திகள் வந்திருக்கின்றன.

ரூ.5,000 லஞ்சம்: பெண் எஸ்.ஐ., கைது
ஆகஸ்ட் 30,2011 தினமலர்


கிருஷ்ணகிரி : வரதட்சணை கொடுமை குறித்து மனைவி அளித்த புகாரில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தை கைது செய்யாமல் இருக்க, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, பர்கூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கொண்டம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சரவணன், 35; இவரது மனைவி வசந்தி, 28. மூன்றாண்டுக்கு முன் திருமணமான இவர்களுக்கு, குழந்தை இல்லை. தம்பதியர் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. குடும்பத் தகராறில் சரவணன், வசந்தியை அடித்துள்ளார். ஆத்திரமடைந்த வசந்தி, சரவணன் மற்றும் அவரது குடும்பத்தார், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, கடந்த 10ம் தேதி, பர்கூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.

இரு தரப்பினரையும் அழைத்து எஸ்.ஐ., சித்ரா, 32, விசாரித்தார். "வரதட்சணை கொடுமை வழக்கில், குடும்பத்தில் உள்ள அனைவரையும் கைது செய்தால், ஜாமின் எடுக்க ஒரு லட்ச ரூபாய் செலவாகும். எனக்கு, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தால், வழக்கு போடாமல் இருக்கிறேன்' என, சரவணன் குடும்பத்தாரிடம், எஸ்.ஐ., சித்ரா கூறினார். கடந்த 22ம் தேதி, விசாரணைக்கு பர்கூருக்கு வந்த சரவணன், 3,000 ரூபாயை சித்ராவிடம் கொடுத்து, "50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வசதியில்லை' எனக் கூறினார்.

அடுத்த நாள் கொண்டம்பட்டிக்கு நேரடியாகச் சென்ற எஸ்.ஐ., சித்ரா, "நான் ஊத்தங்கரை அடுத்த வெள்ளைகுட்டை கிராமத்தைச் சேர்ந்தவள்; பக்கத்து ஊர்காரர் என்பதால், 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தால் போதும்' என, கூறியுள்ளார். இதுகுறித்து சரவணன், நேற்று காலை, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அவர்கள் அறிவுரைப்படி, ரசாயன பவுடர் தடவிய 5,000 ரூபாயை, நேற்று மதியம், பர்கூர் ஸ்டேஷனில் இருந்த எஸ்.ஐ., சித்ராவிடம் லஞ்சமாக சரவணன் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடியாக ஸ்டேஷனுக்குள் நுழைந்து, லஞ்சம் வாங்கிய சித்ராவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மும்பை: தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சாதகமாக வரி விதிப்பு நிர்ணயம் செய்வதற்காக ரூ. 2 லட்சம் லஞ்சம் வாங்கிய வருவானவரித்துறை கமிஷனரை சி.பி.ஐ. போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். மும்பை [...]


====

ஊழலை ஒழிக்க ஏற்கனவே பல சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை இதுவரை ஒழுங்காகச் செயல்படுத்தாததால்தான் நாடு இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறது. இந்த உண்மையைப் புரிந்துகொண்டு மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்.

புதுப்புது சட்டங்கள் வேண்டும் என்று கேட்டால் மட்டும் என்ன நடக்கப் போகிறது. சட்டப் புத்தகத்தில் புதிதாக ஒரு காகிதம் சேர்க்கப்படுமே தவிர இந்த சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுமா என்பது சந்தேகமே. ஏனென்றால் எத்தனை சட்டங்கள் வந்தாலும் அவற்றை செயல்படுத்தும் அதிகாரிகள் நேர்மையற்றவர்களாக இருந்தால் கடவுளால்கூட இந்தியாவில் ஊழலை ஒழிக்க முடியாது. அதுவரை இந்திய ஊழல் ஒழிப்புச் சட்டங்கள் என்பவை “பாலுக்கு பூனையைக் காவல் வைத்த” கதையைப்போல்தான் இருக்கும்.

இந்தியாவில் மக்கள் பணியில் ஈடுபடும் அரசாங்க அலுவலர், மற்றும் அரசியல்வாதி இவர்கள் ஊழலில் ஈடுபட்டால் தூக்குதண்டனை என்று சட்டம் வராத வரை இந்தியாவில் ஊழலை ஒழிக்க முடியாது. நேர்மையான தலைவர்களால் மட்டுமே இதுபோன்ற ஒரு சட்டத்தை இயற்ற முடியும். அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களா?Saturday, August 27, 2011

அரசியல் பெயரால் மக்களை ஏமாற்றும் கோமாளிகள்

அரசியலில் இருந்து மக்களுக்குச் சேவை செய்யப்போகிறோம் என்று பல கட்சிகள் இந்தியாவில் காளான்கள்போல முளைத்து அராஜகம் செய்துகொண்டிருக்கின்றன.

மக்கள் பணியில் ஈடுபட அரசியல் தேவையில்லை என்று நிரூபித்துக்காட்டிய அன்னை தெரஸாவிடமிருந்து உண்மையைக் கற்றறிந்து இந்தியர்கள் போலியான அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் அடையாளம் காணவேண்டும்.

அன்னை தெரசாவின் 101வது பிறந்தநாளன்று, மத்திய பிரதேசம் போபாலில் உள்ள பள்ளிக் குழந்தைகள் அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். (தினமலர் செய்திப்படம் 28 ஆகஸ்ட் 2011)


Thursday, August 25, 2011

எங்கு பாவமன்னிப்பு கிடைக்கும்?

மக்களின் வாழ்க்கைத்தரத்தை இந்த இளவிற்கு இழிநிலையில் வைத்திருக்கும் கூட்டத்திற்கு எங்கு பாவமன்னிப்பு கிடைக்கும்?

உங்கள் வீட்டுப் பெண்களும் தினமும் இதுபோன்ற வேதனைகளை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பெண்ணுரிமை பேசும் போலிக்கூட்டங்கள் என்ன செய்திருக்கிறது இதுவரை?

நகரத்தில் பலகாசு பார்த்துவிட்டு போதையில் தடுமாறும் பெண்களுக்கு “குடியுரிமை” வாங்கித்தர பெண்ணுரிமை என்ற பெயரில் கூப்பாடு போடும் கூட்டம் அப்பாவிப் பெண்களின் குடிநீருக்கு என்ன செய்தார்கள்?

தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள்
தினமலர் 26 ஆகஸ்ட் 2011


நரிக்குடி: நரிக்குடி பகுதியில் குளங்களில் தேங்கியுள்ள, சுத்திகரிக்கப்படாத மழைநீரை மக்கள் குடிக்க பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. நரிக்குடி ஒன்றியம் ஆண்டியேந்தல் ஊராட்சியை சேர்ந்த சாத்திசேரி, எஸ்.வல்லக்குளம், கிழாக்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வி.புதூரிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்தத் தண்ணீர் உவர்ப்பு தன்மையாக இருந்தாலும் மக்கள் வேறு வழியின்றி அதையே குடித்து வருகின்றனர்.

இந்நிலையில், மோட்டார் பழுதடைந்ததால் அந்த உப்பு நீரையும் ஒரு வாரமாக வழங்கவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் கூறியும், நடவடிக்கை இல்லை. மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எஸ்.வல்லக்குளம் கிராம மக்கள் 2 கி.மீ., தூரம் நடந்து கிளவிகுளம் விலக்கிற்கு வந்து, மோட்டார் அறை அருகே சிந்துகின்ற தண்ணீரை குடிக்க எடுத்து செல்கின்றனர். சாத்திசேரி மக்கள் 2 கி.மீ., தூரம் காட்டுக்குள் நடந்து, அருகே உள்ள உப்பள ஓடை தண்ணீர் எடுத்து வருகின்றனர். தற்சமயம் மழை பெய்ததால், ரோட்டின் அருகே தேங்கியிருந்த மழைநீரையும் எடுக்கின்றனர்.

கடுமையான குடிநீர் பற்றாக்குறையால் இப்பகுதி மக்கள், மழை பெய்யும்போது வீட்டின் ஓடுகளில் இருந்து வழிகின்ற தண்ணீரை குடங்களில் சேமித்து குடிக்கின்றனர். ""எங்களுக்கு கண்மாய் தண்ணீர் கூட கிடைக்கவில்லை,'' என ஆண்டியேந்தல் மக்கள் புலம்புகின்றனர். இவ்வூர் மக்களுக்கு உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Tuesday, August 23, 2011

இந்திய கிராமப்புற பெண்களின் தலையெழுத்து

இந்தியாவில் பிறந்த நடுத்தர குடும்பப் பெண்களுக்கு இந்த குடிநீர் தண்டனை. நடுத்தர வர்க்க ஆண்களுக்கு பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி வாழ்வே அழிந்து கொண்டிருக்கிறது.

இந்த இரண்டிற்கும் காரணம் இதுவரை மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதியை செய்து தராமலும், அதேசமயம் குடும்பங்களை அழிக்கும் வகையில் தவறான சட்டங்களை உருவாக்கிய தரமற்ற ஆளும் வர்க்கம்.


தண்ணீர்.. தண்ணீர்.. மரக்காணம் அடுத்த செட்டிகுளம் மக்கள் தண்ணீர் எடுப்பதற்காக வயல்வெளிகளை கடந்து செல்கின்றனர். (தினமலர் செய்திப்படம் 24.8.2011)


ஜனநாயக மாதர் சங்கம்

இது சிறு “சாம்பிள்” (Sample) மட்டுமே! ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு!!


திருப்பூர் யூனியன் மில்ரோட்டில் ஜனநாயக மாதர் சங்க பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதற்காக மதியம் முதல் ரோட்டை மறித்து சேர்களை இப்படி வைத்து அவ்வழியாக வாகனங்கள் செல்லமுடியாதபடி செய்திருந்தனர். (தினமலர் செய்திப் படம் 23 ஆகஸ்ட் 2011)


Sunday, August 21, 2011

சொன்னால் கேட்பதில்லை

மனைவியின் கள்ளக்காதலை கண்டித்து அவள் போடும் பொய்வரதட்சணை வழக்கில் குடும்பத்தோடு சிக்கி ஆயுள் முழுதும் அல்லல்படுவதைவிட இது நல்ல வழி என்று முடிவெடுத்துவிட்டாரோ?

கள்ளக்காதலருடன் வந்த மனைவி கொலை : கணவர் போலீசில் சரண் ஆகஸ்ட் 22,2011 தினமலர்

கீழக்கரை : ஏர்வாடி அருகே கள்ளக்காதலனுடன் வீட்டிற்கு வந்த மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மீனவ தொழிலாளி முனியாண்டி, 25. மனைவி நம்புச் செல்வி, 25. மூன்று குழந்தைகள் உள்ளனர். இதே கிராமத்தை சேர்ந்த முனியசாமி, 25 என்பவருடன் கள்ளத் தொடர்பு வைத்தார். கணவர் பலமுறை கண்டித்தும் கண்டு கொள்ளாமல் இருந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்ற நம்புச்செல்வி நேற்று மாலை கள்ளக்காதலருடன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த முனியாண்டி அரிவாளால் வெட்டியதில் பலியானார். அரிவாளுடன் ஏர்வாடி போலீசில் முனியாண்டி சரண் அடைந்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரித்து வருகிறார்.

==========

அரசாங்கம் அப்பாவி ஆண்களையும் அவர்களது குடும்பத்தாரையும் காப்பாற்றத் தவறிவிட்டதால் பொய் வரதட்சணை வழக்குகளை சமாளிக்க முடியாமல் பல கணவர்கள் தங்களுக்குத் தெரிந்த வழிமுறைகளை பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.
Friday, August 19, 2011

மனித நேயம் மிக்க நல்லவர்கள்!

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி நலம் பெற, காங்கிரஸார் மண் சோறு சாப்பிட்டனர்.
(தினமலர் செய்திப் படங்கள் 21.08.2011)

இந்த முதுமையின் கொடுமைக்கு இவ்வுலகில் உதவும் கரங்கள் இல்லையா? இடம்:அம்பராம்பாளையம், சுங்கம்.

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அவலம்: கழிவறையில் வசிக்கும் நோயாளிகள்
புதன்கிழமை, ஆகஸ்ட் 03, 2011 மாலைமலர்

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அவலம்: கழிவறையில் வசிக்கும் நோயாளிகள்
Tuesday, August 16, 2011

பெண் கொடுமை - நீதிமன்றத்தில் முறையிடலாமா?

இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆனபிறகும் அடிப்படைத் தேவையான குடிநீருக்குக்கூட போராட்டம் செய்யும் இழிநிலையில் மக்கள் குறிப்பாக பெண்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த 65 ஆண்டு காலத்தில் எத்தனை அரசாங்கம் மாறியிருக்கிது. ஒருவர்கூட மக்களின் இந்த அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்யவில்லையே? இதுவரை இருந்த கட்சிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் எதிராக மக்கள் எந்த நீதிமன்றத்தில் முறையிடுவது?

தேவை குடிநீர்...! இளையான்குடி அருகே நகரகுடி கிராம மக்கள் குடி நீர் தட்டுபாட்டை போக்க கோரி காலி குடங்களுடன் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர். (தினமலர் செய்திப்படம் 17.8.2011)

திருவள்ளூர் மாவட்டம் பங்காரம்பேட்டை கிராமத்தில் வாரத்திற்கொரு முறை சப்ளை செய்யப்படும் குடிநீர் குழாய் பள்ளத்தில் இருப்பதால் அதில் இறங்கி நீர் பிடிக்க சிரமப்படும் பெண்கள். (தினமலர் 13/8/2011)

தண்ணீர் கொடு....ஓசூர் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை பெண்கள் கண்டித்து காலி குடங்களுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. (தினமலல் செய்திப் படம் 5-8-11)

பிரச்னை தீரல...அரூர் அடுத்த பாபிசெசட்டிப்பட்டியில் சீரான குடிநீர் வழங்க கோரி, காலி குடத்துடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. (தினமலர் செய்திப்படம் 10.8.2011)


(தினமலரின் கருத்து) எத்தனையோ இலவச திட்டங்களை அறிவித்து மக்களை மயக்கி, ஓட்டுகள் வாங்கும் அரசியல்வாதிகளே இதை பாருங்கள்... நல்ல தண்ணீர் குழாய் அருகே கழிவு நீர் சாக்கடை ஓடுகிறது, இதனால் அப்பகுதிமக்கள் கழிவு நீர் கலந்த குடிநீரை பலகாலமாக பருகி பல்வேறு நோய்களுக்கு ஆளாகியது தான் மிச்சம். இந்நிலை மாற இலவசங்கள் வேண்டாம் சுத்தமான தண்ணீர் சுகாதாரமான வாழ்வை மக்களுக்கு தருவீர்களா? இடம் : மடிப்பாக்கம் கங்கையம்மன் தெரு.

Pesum Padam

கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு அருகேயுள்ள சித்தோடு கிராம மக்கள், குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.அதனால் நான்குவழிச்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.மறியலில் ஈடுபட்டவர்கள் மதிய உணவை சாலையில் அமர்ந்தபடியே சாப்பிட்டனர். (தினமலர்)


இந்திய அரசியலிலும் ஆட்சியிலும் உள்ள ஊழலை ஒழிக்கவேண்டுமா?
கோர்ட்டில் முறையிட்டுக் கொள்ளுங்கள்: மத்திய அரசு அறிவுரை

ஆகஸ்ட் 17,2011 தினமலர்
புதுடில்லி:"போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்குமே உரிமை உள்ளது.ஆனால், எந்த இடத்தில், எந்தச் சூழ்நிலையில்,எந்த நேரத்தில் என்பதெல்லாம், மிக முக்கியமாகக் கவனிக்கப்பட ...உலகெங்கிலும் நடத்தப்படும் எந்த ஒரு போராட்டமுமே, சில வரைமுறைகளுக்கு உட்பட்டுத்தான் அனுமதியளிக்கப்படுகிறது. எனவே, சட்டத்திற்கு உட்பட்டு நடத்தப்படும் எந்தப் போராட்டத்தையுமே அரசாங்கம் வரவேற்கிறது' என்று, உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.


Monday, August 15, 2011

65 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய சுதந்திரத்தின் நிலை!

வெள்ளையன் ஆண்ட காலத்தில் எப்படி இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் 65 ஆண்டுகளுக்குப் பின்னால் இப்போது இந்திய சுதந்திரம் மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறது ! முழுவதுமாக மக்களுக்கு எப்போது கிடைக்கும்?

சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள லால்சௌக் நகரில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. எனினும் பாதுகாப்புப்படையினர் நகரை ரோந்து சுற்றி வந்தனர். (தினமலர் 16.8.2011)


Saturday, August 13, 2011

பிச்சைக்காரர்களுடன் சேர்ந்துவிட்ட IPS அதிகாரி

பின்வரும் செய்தியில் பாருங்கள் மனைவியால் ஏற்பட்ட பிரச்சனையால் ஒரு அதிகாரி பிச்சைக்காரர் போல் மாறிவிட்டார். ஆனால் இந்த மோசமான நிலையில்கூட அவரைத் தேடி அலைவது அவரது தாயார் மட்டுமே.

நல்ல நிலையில் இருப்பவனை மனைவியால் மட்டுமே அழிக்க முடியும். அதேசமயம் எந்த நிலையில் இருந்தாலும் அன்பு செலுத்த அன்னையால் மட்டுமே முடியும்.

இதுதான் மனைவிக்கும் தாய்க்கும் உள்ள வேறுபாடு. ஆனால் இந்திய சட்டங்கள் மருமகள்களுக்கு மட்டுமே பாதுகாப்பு தருகின்றன. புனிதமான தாயுள்ளம் படைத்த பெண்களை சட்டங்கள் எப்போதும் இழிவுபடுத்தி பொய்வழக்குகள் மூலம் துன்புறுத்தி வருகின்றன.

தினமலர் 13 ஆகஸ்ட் 2011


புதுச்சேரி:பிளாட்பாரத்தில் தங்கியிருக்கும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி பீச் ரோட்டிலுள்ள தீயைணப்புத்துறை அலுவலகத்திற்கு எதிரில், பிச்சைக்காரர்கள் படுத்திருக்கும் பிளாட்பாரத்தில், டீசன்ட்டாக, ஆங்கிலத்தில் பேசும் ஒருவர், கடந்த 4 நாட்களாக தங்கியிருந்தார். இவரை பற்றி விசாரித்தபோது, பிளாட்பாரத்தில் படுத்திருப்பவர், பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி என்பது தெரிய வந்தது.

பிளாட்பாரத்தில் படுத்திருந்தவர், கல்கத்தாவைச் சேர்ந்த சக்கரவர்த்தி. ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வான பின், ஐதராபாத்திலுள்ள போலீஸ் அகடமியில் பயிற்சி முடித்தவர். பயிற்சிக்குப் பின், கடந்த 1983ம் ஆண்டு புதுச்சேரி போலீசில் பணியாற்றினார். பின், அருணாச்சல பிரதேசத்திற்கு மாற்றலாகி சென்று விட்டார்.

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கடந்த 1989ம் ஆண்டு பணியை ராஜினாமா செய்தார். போதை பழக்கத்திற்கு அடிமையான அவர், 5 நாட்களுக்கு முன் புதுச்சேரிக்கு வந்துள்ளார். சக்கரவர்த்தி ஏற்கனவே புதுச்சேரி போலீசில் பணியாற்றியிருந்ததால், அவரை அடையாளம் கண்டு கொண்ட போலீசார் சிலர், போலீஸ் தலைமையகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக அவர் படுத்திருக்கும் இடத்திலேயே, போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டு கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், சக்கரவர்த்தியின் தாயார் அர்ச்சனா, அவரை பல இடங்களில் தேடிவிட்டு, கடந்த 2 நாட்களுக்கு முன், புதுச்சேரி கோரிமேட்டிலுள்ள லாட்ஜில் தங்கி, தனது மகனை தேடும் பணியில் ஈடுபட்டார். பிளாட்பாரத்தில் சக்கரவர்த்தி படுத்திருக்கும் தகவல் தெரிந்தது. நேற்று காலை, அர்ச்சனா, மகன் இருந்த பிளாட்பாரத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு அவரை காணவில்லை. அவருடன் படுத்திருந்த மற்ற பிச்சைக்காரர்களிடம் போலீஸ் துணையுடன் விசாரித்த போது, அவர் எங்கேயாவது சுற்றிவிட்டு இரவு நேரத்தில் வந்து படுத்துவிடுவார் என்று தெரிவித்தனர்.

இதுபற்றி, வடக்கு எஸ்.பி.,சிவதாசனிடம் கேட்டபோது "பணியிலிருந்து ஓய்வு பெற்ற சக்கரவர்த்தியிடம் போலீஸ் தரப்பில் பேசி பார்த்த போது, அவர் தனது சொந்த ஊருக்குச் செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். தொடர்ந்து அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி, அவரது தாயாருடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்' என்று தெரிவித்தார்.

====

இந்தியாவில் மனைவியர் போடும் பொய் வழக்குகளால் இதுபோல நல்ல உயர் தகுதியில் இருக்கும் பல அப்பாவிக் கணவர்கள் வாழ்வை இழந்திருக்கிறார்கள். அவர்களில் இந்த IPS-ம் ஒன்று. அவ்வளவுதான். இது செய்தியாக வந்திருக்கிறது. பலர் முகவரிகூட இல்லாமல் சீரழிந்துகொண்டிருக்கிறார்கள். இதுதான் ஒழுங்குமுறையற்ற இந்திய திருமண சட்டங்கள் சமுதாயத்திற்கு கொடுத்திருக்கும் பரிசு!இந்தியப் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?

இந்தியப் பெண்கள் தங்கள் கணவன் மீதும் மாமியார் குடும்பத்தின் மீதும் பொய் குற்ற வழக்குகளை பதிவு செய்து தங்கள் வாழ்வை அழித்துக்கொள்ள பல தவறான சட்டங்களை அரசாங்கம் கொடுத்திருக்கிறது. அதற்கு பெண்கள் பாதுகாப்பு என்று பெயர்.

ஆனால், வாழ்வதற்கு அடிப்படை தேவையான குடிநீர் இன்றி தினந்தோறும் பெண்கள் சந்திக்கும் கஷ்டங்களிலிருந்து விடுபட்டு குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ எந்தவகையான பாதுகாப்பு இருக்கிறது?

எது பெண்களுக்கு உண்மையான பாதுகாப்பு அளித்து அவர்களின் வாழ்வை மேம்படச் செய்யப்போகிறது? பொய் வழக்குப்போட்டு வாழ்வை சீரழித்துக்கொள்ள உதவும் சட்டங்களா? அல்லது வாழ்வின் அடிப்படை ஆதாரமான குடிநீர் தேவையை பூர்த்திசெய்யவேண்டிய சமூகப் பாதுகாப்பா?

திருவள்ளூர் மாவட்டம் பங்காரம்பேட்டை கிராமத்தில் வாரத்திற்கொரு முறை சப்ளை செய்யப்படும் குடிநீர் குழாய் பள்ளத்தில் இருப்பதால் அதில் இறங்கி நீர் பிடிக்க சிரமப்படும் பெண்கள். (தினமலர் 13/8/2011)


Tuesday, August 09, 2011

இதுதான் இந்தியாவா?

மக்கள் பணியே தங்களது உயிர் மூச்சு என்று ஆட்சியை பிடித்து இந்தியாவையே ஆட்டிப்படைக்க போட்டி போட்டுக்கொண்டிருக்கும் அரசியல்கட்சிகள் ஒரு பக்கம்.
(தினமலர் செய்திப்படம் 10.8.2011)

சாக்கடையில் புழுத்திருக்கும் புழுவைப்போல எங்கெங்கு காணிணும் பல அரசியல் கட்சிகள் மக்கள் பணி செய்யக் காத்திருந்தாலும் மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரை வழங்குவதற்கு யாருக்கும் மனமில்லை. அரசியலில் இருந்து நாட்டிற்கு சேவை செய்யத்தானே இந்தியக் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன? மக்கள் பணி செய்ய அரசியலில்தான் இருக்கவேண்டும் என்று ஏதாவது எழுதப்படாத சட்டம் இருக்கிறதா? இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் வினோதங்கள் யாரால் புரிந்துகொள்ள முடியும்?

பிரச்னை தீரல...அரூர் அடுத்த பாபிசெசட்டிப்பட்டியில் சீரான குடிநீர் வழங்க கோரி, காலி குடத்துடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. (தினமலர் செய்திப்படம் 10.8.2011)மன்னன் மக்களுக்கு செய்யும் அநீதி - இந்தியக் கதை - 2

மதுசாலை வைத்து மக்களை சீரழிப்பதே தவறு அதிலும் பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நடமாடும் இடங்கள் போன்ற இடங்களில் மதுசாலைகளை அரசாங்கமே நடத்தினால் மக்கள் எங்கு சென்று முறையிடுவார்கள்?

கள்ளுண்ணாமையை உலகத்திற்கு அறிவுறுத்திய திருவள்ளுவரின் பூமியில் இப்படி ஒரு அநீதி!


கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு வெள்ளகேட் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். (தினமலர் செய்திப்படம் 10/88/2011)


நீங்கள் இதுவரை தெரிந்துகொள்ள விரும்பாத உண்மைSunday, August 07, 2011

பெண்ணே பெண்ணை நம்பாதே!


விழுப்புரம்: யு.கே.ஜி., மாணவியிடம் லெஸ்பியன் உறவில் ஈடுபட்டு சித்திரவதை செய்ததாக தனியார் பள்ளி ஆசிரியைகள் நால்வர் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையைச் சேர்ந்த 4 வயது சிறுமி, அங்குள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறார். அதே பள்ளியின் ஆசிரியை ஜிலோபோர்ஜியா, முதல்வர் லேஸிபோஸ்கோ உள்ளிட்ட 4 ஆசிரியைகள் சேர்ந்து, சிறுமியை ஒரு தனி அறைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை லெஸ்பியன் உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, வெளியில் யாரிடமாவது கூறினால், பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்து விடுவோம் என சிறுமியை ஆசிரியர்கள் மிரட்டியுள்ளனர். ஆனால் நடந்த சம்பவங்களை சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமி கூறியவற்றை வைத்து, ஆசிரியைகள் மீது ஆத்திரமடைந்த பெற்றோர், உறவினர்கள் என 10 பேர் எம்.ஆர்.என்.நகரில் வசிக்கும் ஆசிரியை ஜிலோபோர்ஜியா வீட்டிற்கு சென்று அவரைத் அடித்து உதைத்தனர். இதுகுறித்து, இருத்தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Saturday, August 06, 2011

நாம் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்துகொள்ள ஆசையா?

இந்திய மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்கு ஒரு நல்ல அருமையான சந்தர்ப்பம். நல்ல வசதிபடைத்தவர்கள், நம்மை ஆள்பவர்கள் தங்களுக்குத் தேவை என்றால் வெளிநாடுகளில் நல்ல மருத்துவத்தை நாடுகிறாகள். ஆனால், ஆளப்படும் வர்க்கம் தங்களுக்கு நல்ல மருத்துவம் கிடைக்குமா என்றுகூட யோசிக்க முடியாமல் மருத்துவத்திற்குச் செல்லும் இடத்தில் தங்க வசதியில்லாமல் கழிவறையில் தங்கியிருக்கிறார்கள்.

எல்லா வளங்களும் உள்ள இந்திய நாட்டில் ஏன் நமது இந்திய சகோதர சகோதரிகள் இப்படி துன்பப்படுகிறார்கள் என்று கூட யோசிக்க மறுக்கும் மக்கள் கூட்டம் தங்களை ஆள்பவர்களின் நலனுக்காக உயிரையும் தியாகம் செய்யத்தயாராக இருக்கிறார்கள். நாம் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்துகொண்டீர்களா? பின்வரும் மூன்று செய்திகளையும் பாருங்கள்.

தினமலர் செய்தி 7/8/11

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, கர்ப்பப் பை வாய் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர், நியூயார்க்கில் புற்றுநோய் ...


மருத்துவமனையில் உள்ள காங்., தலைவர் சோனியா விரைந்து குணமடைய வேண்டி, நாடு முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்கள்,பிரார்த்தனையில் இறங்கியுள்ளனர். கர்நாடகமாநிலம் மங்களூரில் உள்ள கோகர்னேஸ்வரர் கோவிலில் நேற்று, தொண்டர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர். (தினமலர் செய்திப்படம்)

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அவலம்: கழிவறையில் வசிக்கும் நோயாளிகள்

புதன்கிழமை, ஆகஸ்ட் 03, 2011 மாலைமலர்

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அவலம்: கழிவறையில் வசிக்கும் நோயாளிகள்


புதுடெல்லி, ஆக.3-
நாட்டிலேயே மிகப்பெரிய ஆஸ்பத்திரியான எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இடவசதி இல்லாததால் நோயாளிகளும், நோயாளிகளின் உதவியாளர்களும் கழிப்பறையில் தங்கும் அவலநிலை உள்ளது.

ஆஸ்பத்திரியில் வசதிகள் இல்லாததால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் புலம்புகின்றனர்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராம்ரதி (வயது 45) என்ற பெண் இதய வாழ்வு மாற்று ஆபரேசனுக்காக காத்திருக்கிறார். இவரும், குடும்பத்தினரும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அருகே உள்ள ஆண்களுக்கான கழிவறையில் வசிக்கின்றனர்.

அதேபோல ரத்த புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ள ஹெம் குமாரி (25) மற்றும் அவரது
குடும்பத்தினரும் கழிவறையில்தான் வசித்து வருகின்றனர்.

இதுபற்றி குமாரி கூறுகையில், மரத்துக்கு அடியில் வசிப்பதை விட இங்கு இருப்பது வசதியாக உள்ளது. எங்களை சுற்றி நான்கு சுவர்களாவது மறைத்து இருக்கிறது அல்லவா? என்று ஆதங்கப்பட்டார்.Thursday, August 04, 2011

இந்தியாவில் நடக்கும் நிரந்தரமான பெண்கொடுமை

பெண்களை பாதுகாக்கிறோம் என்று கேள்வி முறையில்லாமல் எல்லாவற்றிற்கும் சட்டம் போட்டு கையில் கிடைக்கும் அப்பாவிகளை தண்டித்துக்கொண்டிருக்கும் கூட்டத்திற்கு தினந்தோறும் நடக்கும் பெண்கொடுமை பற்றி தெரியுமா?

வாழ்வின் அடிப்படை வசதியான குடிநீரைக் கூட கொடுக்காததால் இப்படி தினந்தோறும் எல்லா இந்தியப் பெண்களும் துன்பத்திற்கு ஆளாகிறார்களே. இந்தத் துன்பத்திற்கு யார் காரணம்? இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இத்தனை ஆண்டுகளாகியும் இந்த துன்பத்திலிருந்து பெண்களுக்கு விமோசனம் கிடைக்க வழி செய்யாத குற்றவாளிகளை தண்டிக்க என்ன சட்டம் இருக்கிறது இந்த நாட்டில்?

வீட்டிற்குள்ளே பெண்ணை பூட்டி வைக்காதீர்கள் என்று பாரதி அன்று பாடியது இதற்குத்தான் போலிருக்கிறது. எதிர்காலத்தில் இப்படி குடிநீருக்காக சாலையில் அமர்ந்து போராடவேண்டிய இழிநிலையில் பெண்களை தள்ளிவிடுவார்கள். அப்போது வீதிக்கு வந்து போராடவேண்டும் என்பதற்காகத்தான் பாரதி அப்படி முன்கூட்டியே பாடியிருப்பார் போலிருக்கிறது! எப்படியோ, பாரதி கண்ட கனவை கடைசியில் நனவாக்கி விட்டார்கள் இந்தியத் தலைவர்கள்.

தண்ணீர் கொடு....ஓசூர் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை பெண்கள் கண்டித்து காலி குடங்களுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. (தினமலல் செய்திப் படம் 5-8-11)


Wednesday, August 03, 2011

இந்தியாவில் 2011-ல் இதுவும் நடக்கிறது

வெள்ளையர்களிடம் போராடி வாங்கிய சுதந்திரத்தின் இன்றைய நிலை. நாடு எந்த நிலைக்கு வந்திருக்கிறது பாருங்கள். ஒரு பக்கம் பல கோடி ஊழல் செய்து உல்லாசமாக வாழும் தலைவர்களின் கூட்டம். மறுபக்கம் அடிப்படை தேவையான மருத்துவத்திற்கு வந்தால்கூட தங்குவதற்கு இடமில்லாமல் கழிப்பறையில் வாழும் இந்திய குடிமக்கள். இதற்கிடையே வல்லரசாக வேண்டும் என்ற முழக்கம்வேறு. ஊழலில் வல்லரசு என்று பெயர் வாங்காமல் இருக்கவேண்டுமே.

இந்தியாவில் பல கட்சிகளும், தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் அளவிற்கு அதிகமாகவே இருக்கின்றன. இந்திய மக்களின் வரிப்பணத்தின் மீது மட்டுமே உரிமை கொண்டாடும் தலைவராக இல்லாமல் இந்தியக் குடிமக்களின் நலனில் உண்மையாகவே அக்கறையுள்ள தலைவர் யாராவது இருக்கிறார்களா?

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அவலம்: கழிவறையில் வசிக்கும் நோயாளிகள்
புதன்கிழமை, ஆகஸ்ட் 03, 2011 மாலைமலர்

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அவலம்: கழிவறையில் வசிக்கும் நோயாளிகள்

புதுடெல்லி, ஆக.3-

நாட்டிலேயே மிகப்பெரிய ஆஸ்பத்திரியான எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இடவசதி இல்லாததால் நோயாளிகளும், நோயாளிகளின் உதவியாளர்களும் கழிப்பறையில் தங்கும் அவலநிலை உள்ளது.

இந்தியாவிலேயே மிகப் பெரிய ஆஸ்பத்திரி டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (எய்ம்ஸ்) ஆகும். இங்கு தினமும் சிகிச்சைக்காக சராசரியாக 10 ஆயிரம் பேர் வருகின்றனர். தினமும் 323 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நோயாளிகளுடன் சேர்ந்து உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்களையும் சேர்த்து தினமும் 50 ஆயிரம் பேர் வரை வருகின்றனர்.
டெல்லியில் இருந்து மட்டுமல்லாமல், பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வருகின்றனர். ஆஸ்பத்திரியில் தங்களது பெயரை பதிவு செய்து விட்டு அழைப்புக்காக பலமணி நேரங்கள் அல்லது ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

அதேபோல் சாதாரண அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகள், தங்களது நோயை குணப்படுத்திக் கொள்ள இரண்டு மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. சாதாரண அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகள் ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவதில்லை. இவர்களில் பெரும் பாலானோர் பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் என்பதால் இங்கே எங்கேயாவது தங்க வேண்டிய நிலை உள்ளது.

வசதி உள்ளவர்கள் தங்கும் விடுதிகளில் பணம் கொடுத்து தங்கிக் கொள்கிறார்கள். வசதி இல்லாத ஏழை நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் மரத்தடியிலும், சுரங்க பாதைகளிலும், நடைபாதைகளிலும் வசிக்கின்றனர். இன்னும் சிலர் கழிவறைகளையும் வசிப்பிடமாக மாற்றியுள்ளனர்.

ஆஸ்பத்திரியில் வசதிகள் இல்லாததால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் புலம்புகின்றனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராம்ரதி (வயது 45) என்ற பெண் இதய வாழ்வு மாற்று ஆபரேசனுக்காக காத்திருக்கிறார். இவரும், குடும்பத்தினரும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அருகே உள்ள ஆண்களுக்கான கழிவறையில் வசிக்கின்றனர்.

அதேபோல ரத்த புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ள ஹெம் குமாரி (25) மற்றும் அவரது குடும்பத்தினரும் கழிவறையில்தான் வசித்து வருகின்றனர்.

இதுபற்றி குமாரி கூறுகையில், மரத்துக்கு அடியில் வசிப்பதை விட இங்கு இருப்பது வசதியாக உள்ளது. எங்களை சுற்றி நான்கு சுவர்களாவது மறைத்து இருக்கிறது அல்லவா? என்று ஆதங்கப்பட்டார்.


Tuesday, August 02, 2011

மக்களுக்கு மன்னன் செய்யும் அநீதி

மதுவின் தீங்கினை மக்களுக்குக் கூறி நல்வழிப்படுத்த கள்ளுண்ணாமை என்று திருக்குறளில் ஒரு அதிகாரத்தையே தமிழ் மக்களுக்குக் கொடுத்த திருவள்ளுவர் வாழ்ந்த தமிழ்நாட்டில் தமிழின் பெயரைக் கூறி ஆட்சிசெய்பவர்கள் நடத்துவது மதுக்கடைகள்! அதுவும் குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் குடியிருக்கும் பகுதியில். வாழ்க தமிழ்நாடு!!

சேலம் பொன்னம்மாபேட்டை தெற்கு ரயில்வே லைன் மிலிட்டரி ரோட்டில் குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். (தினமலர் செய்திப்படம் 3/8/2011)


Monday, August 01, 2011

வாழ்க இந்திய சுதந்திரம்!

காஞ்சிபுரத்தில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்டு கைதான தி.மு.க.,தொண்டர்கள், அன்னை அஞ்கம் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி தாக்கிக் கொண்டனர். (தினமலர் செய்திப்படம் 2/8/11)


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.