சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, October 31, 2009

தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்தி

அக்டோபர் 31, 2009

இதுகுறித்து சுதாமதி கொடுத்த வாக்குமூலம்..

சம்பவத்தன்று எனது கணவர் செல்வத்தை விடியற்காலையில் உடலுறவுக்கு அழைத்தேன். அப்போது அவர் வர மறுத்தார். இதனால் கோபமடைந்த நான், நீ வேறு எந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளாய் என்று கேட்டு அவரிடம் தகராறு செய்தேன்.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம், நீ கல்லூரிக்கு செல்கிறாயே, நீ வேறு யாருடன் தொடர்பு வைத்துள்ளாய் என்று கூறி கன்னத்தில் அறைந்தார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

இதையடுத்து எனது கணவர் செல்வம் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் நான் சுதாரித்து கொண்டு எனது கணவரின் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டினேன். இதில் பலத்த வெட்டுப்பட்டு எனது கணவர் சம்பவ இடத்திலேயே செத்தார்.

இந்த தகராறில் எனது குழந்தைக்கு அருகில் இருந்த கட்டிலில் மோதி காயம் ஏற்பட்டது. உடனே அரிவாளால் என்னையே நான் வெட்டிக்கொண்டு காயம் ஏற்படுத்திக் கொண்டேன். பின்னர் எனது சகோதரன் வசந்தகுமாரிடம் கூறி, இதை வெளியில் சொன்னால் குழந்தைகளை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினேன். இதனால் அவனும் என்னை அப்போது காட்டிக் கொடுக்கவில்லை என்றார்.

இதையடுத்து சுதாமதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

முழுச்செய்தியை இங்கே காண்க: தட்ஸ்தமிழ் செய்தி

====================

இதெல்லாம் நம்ம ஊரில் தான் நடக்கிறது. ஆண்கள் மட்டும் தான் ஏதோ தவறு செய்பவர்கள் என்ற தவறான எண்ணமிருந்தால் உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள். செய்தியில் சொ(கொ)ல்லப்பட்டுள்ள கணவர் மனைவியின் அழைப்புக்கு ஒத்துழைக்காததால் மனைவியால் கொல்லப்பட்டார்.

அப்படி கொல்லப்படவில்லையென்றால் மனைவி அவரை 498A கேசு மூலம் கொன்றிருப்பார். எப்படியென்றால் 498A சட்டப்படி மனைவி "கற்பனையாக" மனதளவில் கஷ்டப்பட்டால் கூட கணவன் குற்றவாளியாகக் கருதப்படுவார். எனவே மனைவியின் அழைப்புக்கு வராத கணவர் மனைவியை மளதளவில் கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு தண்டிக்கப்படுவார்.


அப்படியே இந்த நிகழ்ச்சியை இப்படி யோசித்துப்பாருங்கள் - கணவர் மனைவியை அழைத்து அதற்கு அந்த மனைவி மறுத்து கணவர் கட்டாயப்படுத்தியிருந்தால் அப்போதும் கணவர் குற்றவாளியாகத் தான் கருதப்படுவார். ஏனென்றால் அதற்குப் பெயர் "Marital Rape" என்று குற்றம்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருப்பார்.

எனவே எப்படிப்பார்த்தாலும் "கணவர்" என்ற நிலையிலிருப்பவர்கள் அனைவரின் தலைக்கு மேலாக தவறான சட்டங்கள் என்ற கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது.

எப்படியிருந்தாலும் அப்பாவி கணவர்களின் உயிரும், மானமும் ஏதாவது ஒருவகையில் என்றாவது ஒரு நாள் பறிக்கப்பட்டுவிடும். அதுவும் சட்டப்படி தான்....உங்கள் அறிவுத்திறமைக்கு ஓர் சவால்

நீங்கள் எந்த சூழ்நிலையையும் சமாளித்து வாழும் திறமையுடையவரா என்பதை அறிந்து கொள்ள கீழே கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியுமா என்று சோதித்துப் பாருங்கள்.

இந்த பூமியுள்ள எல்லா நாடுகளிலும் திருமணமான கணவன் மனையிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் நீதிமன்றத்தில் முறைப்படி விவாகரத்துப் பெற்று தங்களது புதிய திருமண வாழ்க்கையை தொடர்வார்கள். ஆனால் எங்குமே இல்லாத வழக்கமாக ஒரே ஒரு நாட்டில் மட்டும் கணவரையும் அவரது குடும்பத்தில் உள்ள தத்தி நடக்கும் குழந்தை முதல் தள்ளாடி நடக்கும் முதியோர் வரை அனைவர் மீதும் பொய் கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கும் பழக்கம் அரசாங்க உதவியுடன் நடந்து கொண்டிருக்கிறது. அந்த கைது நடவடிக்கைக்கு எந்த வித ஆதாரமும், விசாரணையும் நடத்தப்படுவதில்லை. இது போன்ற கொடிய செயல் எங்கு நடைபெறுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?


இந்த கேள்விக்கு யோசிக்காமல் உடனடியாக உங்களுக்கு பதில் தெரிந்தால் நீங்கள் இந்த அண்டத்தில் எந்த கிரகத்திற்கு சென்றாலும் தைரியமாக எல்லாவித தாக்குதல்களிலிருந்தும் சமாளித்து வாழும் தகுதியைப் பெற்றிருக்கிறீர்கள் என்று அர்த்தம். பதில் தெரியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக ஒரு சிறு குறியீடு தருகிறேன். கூகுள் தளத்திற்குச் சென்று
"498A" என்று டைப் செய்யுங்கள். நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தைப்பற்றிய ஏராளமான செய்திகள் கிடைக்கும். படித்தவுடன் உங்களுடனேயே அந்த விஷயத்தை வைத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்தக் கேள்வியை அனுப்பி அவரது குடும்பத்தையும் காப்பாற்ற உதவி செய்யுங்கள்.


Wednesday, October 28, 2009

தாய்மை - 498A

கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்

Dinamalar அக்டோபர் 29,2009

திண்டுக்கல் : கள்ளக்காதலனுடன் பத்து மாதங்களுக்கு முன்பு ஓடிப்போன தாயை கோர்ட்டில் பார்த்ததும், அவரது இரண்டு ஆண் குழந்தைகளும் கதறி அழுது தங்களுடன் வருமாறு அழைத்தனர். திண்டுக்கல் அருகேயுள்ள கள்ளிமந்தையம் செரியன்நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் (35). இவருக்கும் உஷா (27) என்பவருக்கும், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சாம்பிரசன்னா (5), சுதன் (3) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நர்ஸ் வேலை பார்த்த உஷா தான் படிக்கும் போதே காதலித்த பிரகாஷ் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் ஓடிப்போனார். இது குறித்து சாமுவேல் கள்ளிமந்தையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

சாமுவேல் தனது நண்பர்கள், உறவினர்களுடன் சென்று திருவாரூரில் காதலனுடன் தங்கியிருந்த உஷாவை அழைத்து வந்து கள்ளிமந்தையம் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். போலீசார் நேற்று உஷாவை திண்டுக்கல் ஜே.எம்.,1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில், கணவனுடன் செல்ல மறுத்த உஷா, தன் தாய் வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தார். கோர்ட் முடிந்து வாசலுக்கு வந்த தாயைப் பார்த்ததும், இரு குழந்தைகளும் கதறி அழுதன. "அம்மா நம்ம வீட்டுக்கு வாம்மா, அப்பாவுடன் சேர்ந்து நாலு பேரும் ஒன்றாக இருக்கலாம்'' என அழைத்தனர். இதனை கேட்டு கோர்ட் ஊழியர்களும், அங்கிருந்தவர்களும் கண் கலங்கினர். ஆனாலும் உஷா தன் கணவனுடன் செல்ல மறுத்து விட்டார். உஷா காதலனுடன் செல்வதற்காகவே என்னுடன் வர மறுக்கிறார். அவரை அழைத்து வந்த காதலன் பிரகாஷ் கோர்ட்டிற்கு வந்திருப்பதாக சாமுவேல் தெரிவித்தார்.

உஷாவிடம் கேட்ட போது, ""என் கணவர் என்னிடம் பணம் கேட்டு அடித்து தகராறு செய்ததால் நான் வெறுத்துப்போய் தாய் வீட்டிற்கு செல்கிறேன். எனக்கு படிக்கும் காலத்தில் இருந்தே காதலன் இருப்பது என் குடும்பத்தாருக்கும்,கணவன் குடும்பத்தாருக்கும் தெரியும்.தற்போது காதலன் வேறு பெண்ணை மணந்து அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால், அவருடன் செல்ல வாய்ப்பு இல்லை. நான் என் தாய் வீட்டில் தங்கப்போகிறேன்,'' என்றார்.

=======================

வரும் காலங்களில் தாய்மை என்பதற்கு அர்த்தமே அகராதியில் கூட இல்லாமல் போகப்போகிறது. அதற்கான அறிகுறிகள் நாடு முழுவதும் இப்போது தென்படுகிறது. அதற்கான வளர்ச்சியை துரிதப்படுத்த பல துறைகள் IPC498A, DV, Dowry Prohibition Act போன்ற உரங்களைப்போட்டு வளர்த்துக்கொண்டிருக்கின்றன.Tuesday, October 27, 2009

முரண்பாடுகள்

திருமணம் செய்யாமல் பெண்ணை ஏமாற்றிய சாப்ட்வேர் நிறுவன மேலாளர் கைது
அக்டோபர் 28,2009

சென்னை: காதலித்து, திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாக, பெண் கொடுத்த புகாரில், சாப்ட்வேர் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அசோக்நகரை சேர்ந்த சீனிவாசனின் மகள் ஸ்ரீவித்யா(30). தனியார் சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிகிறார்.

இவர் இதற்கு முன், அபிராமபுரத்தை சேர்ந்த கார்த்தீஷ்(32) என்பவர் நடத்தும் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஒரு ஆண்டுக்கு முன் முடிவு செய்யப்பட்டது. இதற்கு சில நாட்களுக்கு பின், கார்த்தீஷ் ஸ்ரீவித்யாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவை மாற்றிக் கொண்டு அவரை தவிர்த்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவித்யாவை சென்னை தி.நகரில் உள்ள ஓட்டலில் வந்து சந்திக்குமாறு அழைத்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடியில் முடிந்துள்ளது. அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கார்த்தீஷை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். கார்த்தீஷை பிடித்து சென்ற அபிராமபுரம் போலீசார் அவரிடம் விசாரித்துள்ளனர். முதலில், ஸ்ரீவித்யாவை தெரியாது என கூறிய கார்த்தீஷ், பின் அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார். நடந்த சம்பவம் குறித்து ஸ்ரீவித்யா போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், கார்த்தீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

============================
மேலுள்ள செய்தியைப் படித்து விட்டு கீழுள்ள வீடியோவைப் பார்த்தால் சட்டத்தில் எவ்வளவு முரண்பாடுகள் இருக்கின்றன என்பது புரியும். இது திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகள் அல்ல. நாட்டில் இருக்கும் உண்மை நிலவரத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி. ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டம். இரு பாலினருக்கும் பொதுவான நேர்மையான சட்டங்கள் கிடையாது. இது தான் உண்மை.

பொம்பளை செத்தா உயிர், ஆம்பிளை செத்தா......?

"தேவதையைக் கண்டேன்"


Men's Welfare Association Launched (October 11, 2009)Sunday, October 18, 2009

குடும்ப வன்முறையில் சிக்கித் தவிக்கும் அப்பாவி ஆண்கள்

குடும்ப வன்முறையில் சிக்கித் தவிக்கும் அப்பாவி ஆண்கள்
கணவனை மனைவி தாக்கினால் அந்த பாதிப்புக்குள்ளான கணவர் காவல் நிலையத்தில் மனைவிக்கெதிராக புகார் கொடுத்தால் மனைவி மீது நடவடிக்கை எடுக்க எந்தவித சட்டங்களும் கிடையாது. மனைவியின் வன்முறையால் தாக்கப்பட்டும், காவல்நிலையத்தில் அவமானப்பட்டும் தான் கணவன் திரும்பவேண்டும். சமீபத்தில் வந்துள்ள "உன்னைப்போல் ஒருவன்" திரைப்படத்தில் இதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்கள்.
ஆனால் இதுவே மனைவி காவல் நிலையத்திற்குச் சென்று கண்ணைக் காட்டினால் போதும் (இப்போது ரொம்ப அட்வான்சாக ஈமெயில் கொடுத்தால் கூட போதும்) கணவர் அவரது குடும்பத்தார் அனைவரையும் எந்தவித ஆதாரமும் இன்றி கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள். அதற்கேற்றவாறு பெண்களுக்கு குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், மற்றும் IPC498A போன்ற பல விதமான வன்முறை ஆயுதங்களை சட்டம் என்ற பெயரில் அரசாங்கம் கொடுத்து உதவி வருகிறது. அதனை ஆதரித்து பணம் சம்பாதிக்கவும் பல நிறுவனங்கள் உள்ளன.

நாகரீகத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய பல நாடுகளை விட இந்தியாவில் தான் பெண்களுக்குச் சாதகமான பல சட்டங்கள் இருப்பதாக தேசிய பெண்கள் நல வாரியம் பெருமையுடன் கூறியிருக்கிறது.
Do not be forced into participating in legal action in country of husband’s residence. You can file a case in India and cannot be forced to defend a case filed against you by husband abroad-especially divorce. India has more women-friendly laws than many other countries - National Commission for Woman
சட்டம் என்பது நடுநிலையாக இருக்க வேண்டுமா? அல்லது ஒரு பாலினத்திற்கு சாதகமாக இருக்க வேண்டுமா? எது சிறந்த சட்டம்?

பெண்கள் தங்கள் அப்பாவி கணவருக்கெதிராக பயன்படுத்துவதற்கென அரசாங்கம் கொடுத்துள்ள வன்முறை ஆயுதங்களில் ஒன்று தான் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம். இந்த சட்டத்தில் கொடுத்துள்ள விளக்கங்களில் சிலவற்றை கீழே காணுங்கள். இந்த சட்டப்படி மனைவி எப்போதும் அப்பாவியாகவும் ("aggrieved person" means any woman) கணவன் எப்போதும் குற்றவாளியாகவும் ("respondent" means any adult male person) கருதப்படுவார்.

The Protection Of Women From Domestic Violence Act, 2005

Definitions.-In this Act, unless the context otherwise requires,-

(a) "aggrieved person" means any woman (Note: Woman is always a victim and Male is Never considered as a victim of domestic violence) who is, or has been, in a domestic relationship with the respondent and who alleges to have been subjected to any act of domestic violence by the respondent;

(e) "domestic incident report" means a report made in the prescribed form on receipt of a complaint of domestic violence from an aggrieved person;

(q) "respondent"
means any adult male person (Note: Male is always accused respondent) who is, or has been, in a domestic relationship with the aggrieved person and against whom the aggrieved person has sought any relief under this Act:Provided that an aggrieved wife or female living in a relationship in the nature of a marriage may also file a complaint against a relative of the husband or the male partner;


Friday, October 16, 2009

அரசியல் குடும்பத்தில் ஒரு வரதட்சணை கூத்து

முன்னாள் பெண் எம்.எல்.ஏ., கணவருக்கு விடுதலை

அக்டோபர் 16,2009

சென்னை: அ.தி.மு.க., முன்னாள் பெண் எம்.எல்.ஏ.,வை கொலை செய்ய முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவரது கணவரை விடுதலை செய்து சென்னை மகளிர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில், கடந்த 2001ம் ஆண்டு, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கருப்பாயி.

இவர் அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர். அவரது கணவர் கருப்பையா. இவர் கருப்பாயியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கணவருக்கு எதிராக ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் கருப்பாயி புகார் கொடுத்தார். அதையடுத்து கருப்பையா கைது செய்யப்பட்டார். பின் ஜாமீனில் வெளியே வந்தார். அதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ., விடுதியில் உள்ள அறையில் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக, கணவர் கருப்பையாவுக்கு எதிராக புகார் கொடுத்தார்.

கடந்த அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் இச்சம்பவம் நடந்தது. இந்த வழக்கை சென்னை மகளிர் கோர்ட் நீதிபதி ஜபருல்லாகான் விசாரித்தார். கருப்பையா சார்பில் வக்கீல் செல்வம் சவுந்தர் ஆஜரானார். கருப்பையா மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிருபிக்கப்படவில்லை எனக் கூறி, அவரை விடுதலை செய்து நீதிபதி ஜபருல்லாகான் உத்தரவிட்டார்.Monday, October 12, 2009

Helpline for victims of Dowry Act misuse

Helpline for victims of Dowry Act misuse
Kanchan Vasdev
Tribune News Service

Ludhiana, October 11
A group of activists, claiming to be victims of the misuse of the Dowry Act have started a helpline to assist other victims against what they call ‘‘legal terrorism”.

There has been a debate and arguments against the misuse or overuse of the Dowry Act in the recent past, but now this group has come out on the streets and launched a campaign seeking amendments in the Act that was being ‘‘misused to terrorise innocent husbands, their mothers, sisters and even children.’’

The activists of the Swatantra Aawaaz Welfare organisation under their campaign-Adhoora Sach Jaano (know the true side also) have got together and launched a massive programme to help the victims of misuse of Dowry.

Available on 24-hour helpline-96463-89140 and 93169-29321, the activists have already started helping the victims of the Dowry Act, who never demanded dowry but were implicated, as their marriages could not be a success. ‘‘As many as 1.25 lakh women of all ages (from elderly to teenagers) were put behind bars after couples could not strike chords. What was their fault? We are aiming to help all similar victims come out of this crisis. They suffer without any of their fault as they are also booked by the women who want to teach a lesson to their in-laws family, ’’ said Gaurav Saini, a Mohali-based activist.

Stating that already 1 lakh youths from all over India, including activists of 50 NGOs and 40 chapters of the Save Indian Family Foundation have got together, Gaurav said they were campaigning massively and demanding that the Section 489-A should be made bailable and a non-cognisable offense. Besides, they also demanded that the Domestic Violence Act too should be made gender-neutral.

He said they were counselling many victims, who were suffering from mental ailments after their sisters, mothers and other female relatives were made to remain in jail amidst criminals.Sunday, October 11, 2009

உங்களுக்குப் புரியுமா?

இந்த வார வாரமலரில் வந்துள்ள கேள்வி பதில்.

அடுத்தடுத்து பிரசுரமாகியுள்ள இந்த கேள்வி பதில்களைப் பாருங்கள். எவ்வளவு முரண்பாடுகள். இல்லாத விஷயத்திற்கு சந்தேகப்படும் மனைவியிடம் கணவன் அடங்கி நடக்க வேண்டுமாம். ஆனால் அதே சமயம் விவாகரத்துக்கள் அதிகமாவதற்குக் காரணம் பெண்கள் பொறுமையின் எல்லையையும் தாண்டி கொடுமை அனுபவிக்கின்றனராம்!
======================
ஆர்.ஜெயராம், பழனி: எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் மனைவியை அனுசரித்துப் போவது எப்படி?

சிறந்த நடிகனாகிவிட வேண்டும் என்கிறார் லென்ஸ் மாமா... இல்லாதது குறித்தெல்லாம் சந்தேகம் கொள்ளும் மனைவியிடம், "சரண்டர்' நாடகம் தான் போட வேண்டும் என்று மேலும் கூறுகிறார் அவர்... அன்றேல், குடும்ப நிம்மதி கெட்டு விடுமாம்!
* * *
எம்.பத்மநாபன், சென்னை: அயல்நாடுகளுக்கு நிகராக நம் நாட்டிலும் பெருகி வரும் விவாகரத்துக்கள், நம் பெண்களின் சுதந்திரத் தன்மையைக் காட்டுகிறதா, அடக்கமின்மையை வெளிப்படுத்துகிறதா?

இரண்டுமே இல்லை! சகிப்புத் தன்மையின் சிகரங்கள் நம் இந்தியப் பெண்கள்... அவர்களே விவாகரத்துக்கு துணிந்து விடுகின்றனர் என்றால், பொறுமையின் எல்லையை தொட்டு விட்டனர் என்றே கொள்ள வேண்டும்!
* * *
==============================

இந்த செய்திகளில் உள்ள அப்பட்டமான உண்மை எத்தனை பேருக்குப் புரியும்? கேட்பவர்கள்_ இருக்கும் வரை இது போன்ற செய்திகளும் வந்து கொண்டே தான் இருக்கும். பல அப்பாவி கணவர்களும் அவர்களது குடும்பங்களும் சிறையில் தள்ளப்பட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்.

இப்படித்தான் நாட்டில் பல பெண்ணடிமைவாதிகள் (= பெண்களுக்கு அடிமையான போலியான பெண்ணுரிமைவாதிகள்) பெண்ணுரிமை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.


Thursday, October 08, 2009

புதிய திட்டம்

அக்டோபர் 09,2009

ராமநாதபுரம்: கணவன், மனைவியிடையே ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் புதிய திட்டம் அரசு சார்பில், தமிழகத்தில் முதன் முறையாக ராமநாதபுரத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

குடும்ப பிரச்னைகளால் ஏற்படும் வன்முறை, தற்கொலை, மனவேதனை, பிரிவு போன்றவற்றை தடுக்கும் ஆலோசனை மையம் பெங்களூரில் உள்ளது. இங்கு பல்வேறு குடும்ப பிரச்னைகள் தீர்க்கப்பட்டு தம்பதியரிடையே சமரசம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் குடும்ப வன்முறை செயல்களை தவிர்க்கும் விதமாக இது போன்ற மையம் துவக்க அரசு முடிவு செய்து, ராமநாதபுரத்தில் மாவட்ட மனநலத்திட்டம் சார்பில், தமிழகத்தில் முதல் முறையாக இத்திட்டம் செயல்படுத்தபட உள்ளது. "

மனநலம்' என்ற பெயர் வருவதால், பலரும் இதில் பங்கேற்க தயங்கலாம் என்பதால், இத்திட்டத்துக்கு "குடும்ப நல ஆலோசனை மையம்' என பெயரிடப்பட்டுள்ளது. கணவன்-மனைவி இடையேயான அனைத்து பிரச்னைக்கும் இங்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும். ஆலோசனையின் போது குடும்ப நபர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். பிரச்னை என்ன, அதனால் வரும் பாதிப்பு, பாதிப்பானது யாரை சார்ந்திருக்கும், இதற்காக யாருடைய தன்மையை மாற்ற வேண்டும் என்ற கோணத்தில், இதில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
விரும்பும் பட்சத்தில் கணவன், மனைவி மட்டுமின்றி அப்பா - மகன், அண்ணன் - தங்கை என மற்ற உறவுகள் இடையேயான பிரச்னைகளுக்கும், இங்கு கவுன்சிலிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை மனநல டாக்டர் பெரியார் லெனின் கூறுகையில், ""இன்று குடும்பத்தில் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளால் தான் வன்முறை அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு இந்த ஆலோசனை மையம் அக்.,10 முதல் ஆரம்பமாகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இதற்காக பிரத்யேக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. பெங்களூரை தொடர்ந்து தமிழகத்தில் முதன்முறையாக இங்கு தான் தொடங்கப்படுகிறது,'' என்றார். மனநல ஆலோசகர் அசரப்அலி உடன் இருந்தார்.

============================

போலிசும், கோர்ட்டும், தவறான சட்டங்களும் தலையிடாதவரை எல்லா குடும்பமும் நன்றாகவே இருக்கும்.சூப்பர் நியூஸ்!

அரசு ஊழியர்கள் வரதட்சணை உறுதி படிவம் அளிக்க உத்தரவு

Dinamalar: October 9,2009

சென்னை: அரசு ஊழியர்கள் தங்களது திருமணம் மட்டுமின்றி, தங்களது குழந்தைகளின் திருமணங்களின் போது வரதட்சணை வாங்கவில்லை என்பதற்கான உறுதிமொழி படிவத்தை, துறைத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின் போது, எந்த அரசு ஊழியரும் வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ கூடாது.

நேரடியாகவோ, மறைமுகமாகவோ மணமக்களின் பெற்றோர் அல்லது காப்பாளரிடம் எவ்வித வரதட்சணையும் கோரக் கூடாது.இந்த விதிகளில், 2006ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு, அரசு ஊழியர்கள் தங்களது திருமணத்துக்கு பின் அல்லது தங்களது குழந்தைகளின் திருமணத்தை கொண்டாடும் போது, துறைத் தலைவரிடம் தான் எவ்வித வரதட்சணையும் பெறவில்லை என்பதற்கான உறுதிமொழியை கொடுக்க வேண்டுமென உத்தரவிடப் பட்டது. இந்த உறுதிமொழி படிவத்தில், தங்களது குழந்தையை திருமணம் செய்பவரிடமும், அவரது பெற்றோரிடமும் கையெழுத்து பெற வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

இந்த விதியில், தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அட்டவணை 4ன் கீழ் அரசு வகுத்துள்ள படிவத்தின்படியே உறுதிமொழியை அளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர் தங்களது குழந்தையின் திருமணத்தின் போது, இந்த படிவத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பூர்த்தி செய்து, உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திடுவதோடு, திருமணம் செய்பவரது பெற்றோர் மற்றும் சாட்சிகளிடமும் கையெழுத்து பெற வேண்டுமென தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

========================
இதுவரை யார் பின்பற்றினார்கள்? இனி யார் பின்பற்றுவார்களோ? IPS, IAS- களுக்கும், நீதிபதிகளுக்கும் பிரச்சனை வரும்போது தான் இது போன்ற விதிமுறைகளை தூசி தட்டி தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆப்பு அடியில் வந்தால் தான் எழுந்து தேட ஆரம்பிக்கிறார்கள்.
அப்பாவிப் பெண்கள்

குழந்தைகள் கொலை: தாய், பாட்டி கைது

Dinamalar: October 9,2009
நேற்று காலை 7.30 மணியளவில் தாய்ப்பால் தருவதற்காக அக்குழந்தைகள் மருத்துவமனையில் இருந்த தாய் ரேவதியிடம் தரப்பட்டன. அதில் ரேவதி, ஒரு பெண் குழந்தையின் கழுத்தை திருகி கொலை செய்தார்.

மற்றொரு பெண் குழந்தையின் கழுத்தை ரேவதியின் தாயார் தேனிலா(42) கத்தி, பிளேடால் அறுத்துக் கொலை செய்தார். தாய்ப்பால் குடித்தவுடன் அக்குழந்தைகள் திடீரென மயங்கிவிட்டதாக, ரேவதி டாக்டர்களிடம் நாடகமாடினார். அக்குழந்தைகளை பரிசோதனை செய்த டாக்டர் லூர்டஸ் அல்பிலோ, அவை கொல்லப்பட்டதை உறுதி செய்தார். பிறந்த 14வது நாளில் ஈவு இரக்கமின்றி குழந்தைகளை கொலை செய்த தாய் ரேவதி, பாட்டி தேனிலாவை தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகளை இங்கே காண்க குழந்தைகள் கொலை: தாய், பாட்டி கைது

இன்னும் என்ன வேண்டும்?

பெண் சுதந்திரம்
தினமலரில் வந்த படம்

விதிகளை மீறுவதிலும் அளவுக்கு அதிகமாகவே உரிமை கிடைத்துவிட்டது. இன்னும் என்ன வேண்டும்?Tuesday, October 06, 2009

மோசடி வழக்கறிஞர்

சட்டப் படிப்பு முடிக்காமல் வழக்கு நடத்தி மோசடி

Dinamalar: அக்டோபர் 07,2009

Important incidents and happenings in and around the world மதுரை: சட்டப் படிப்பு முடிக்காமல் நான்காண்டுகளாக மதுரை கோர்ட்டில் வழக்கு நடத்திய சட்டக் கல்லூரி மாணவர் கிருஷ்ணமூர்த்தி(41) போலீசில் ஒப்படைக்கப்பட்டார். மதுரை வளர்நகரைச் சேர்ந்த இவர், பி.இ., எம்.ஏ., பி.எல்., படித்ததாகக் கூறி ஐகோர்ட் கிளை, மாவட்ட கோர்ட்டில் நான்கு ஆண்டாக வக்கீலாக இருந்தார்.

யாரிடமும் ஜூனியராக இல்லாமல் அவரே வழக்குகளை நடத்தினார். சந்தேகமடைந்த வக்கீல் சங்க நிர்வாகிகள், மதுரை சட்ட கல்லூரியில் விசாரித்தனர். கடந்த 23ம் தேதி தான் சட்டக் கல்வியை முடித்ததும், வரும் 21ம் தேதி நடக்கவுள்ள, "பார் கவுன்சில்' உறுப்பினர் பதிவுக்கு விண்ணப்பித்ததும் தெரிந்தது. "பெங்களூரில் எல்.எல்.பி., முடித்து வக்கீலாக உள்ளதாகவும், கூடுதல் தகுதியாக பி.எல்., படிப்பதாகவும்' சக மாணவர்களிடம் கூறியுள்ளார். இவர் மீது ஐகோர்ட் பதிவாளர் அமீர்ஜானிடம் வக்கீல்கள் முத்துகுமார், அருண்குமார் ஆகியோர் ஜூலை 30ம் தேதி புகார் செய்தனர்.

மனு சி.பி.சி.ஐ.டி.,க்கு அனுப்பப்பட்டு விசாரணை நடக்கிறது. இதுதெரிந்த கிருஷ்ணமூர்த்தி தலைமறைவாக இருந்தார். வக்கீல் சங்கத்தினர் கண்காணித்த நிலையில், நேற்று இவர் கோர்ட்டில் ஸ்டாம்ப் வாங்கிய போது பிடித்தனர். விளக்க கடிதம் பெற்றுக் கொண்டு, சங்க பொதுக்குழுவில் விவாதித்தனர். மூத்த வக்கீல்கள் பேசுகையில், ""பார் கவுன்சிலில் இவர் பதிவு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். இதுபோன்று பலர் உள்ளனர். அவர்களையும் களை எடுக்க வேண்டும்,'' என்றனர். செயலர் ஏ.கே.ராமசாமி கூறுகையில்,"வக்கீல்கள் போராட்டத்தின் போது போலீசாரை தாக்கும் செயல்களில் இவர் ஈடுபட்டதால், சந்தேகத்தின்படி விசாரித்தோம். ஐகோர்ட் கிளை வக்கீல் சங்க துணை செயலர் எனக் கூறியும், போலி பதிவு எண் கொடுத்தும் மோசடி செய்துள்ளார். இவர் மீது பார் கவுன்சில் தலைவர், போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்ய உள்ளோம். இவரது பி.இ., எம்.ஏ., சான்றுகளையும் பரிசீலிக்க வேண்டும்,'' என்றார். சங்க தலைவர் தர்மராஜ், செயலர் முன்னிலையில் அண்ணாநகர் போலீசில் கிருஷ்ணமூர்த்தி ஒப்படைக்கப்பட்டார்.
==========================================
ஆயிரக்கணக்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு ரசீது, வருமான வரி போன்ற எந்த கணக்கும் இல்லாமல் செய்யக்கூடிய ஒரே தொழில் இது தான். சட்டம் படிக்காமலே அல்லது படித்த சட்டங்கள் மறந்து போனாலும் வீட்டிலிருந்தபடியே பொய் 498A-டெம்ப்ளேட் (Template) கேசுகளை எழுதித்தந்து ஒரு டெம்ப்ளேட் புகார் எழுத இவ்வளவு என்று பிஃக்சுடு ரேட் (Fixed Rate) நிர்ணயித்து குடிசைத்தொழில் போல செய்யக் கூடிய தொழிலும் இது தான். மேலும் 498A போன்ற கேசுகளில் அப்பாவிகள் சிக்கும் போது பெயில் (Bail) வாங்குவதற்கு இவ்வளவு என்று பணயக்கைதியிடம் பிணைத்தொகை போல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பட்டப்பகலில் எந்த வித பயமும் இன்றி பணம் சம்பாதிக்கக்கூடிய தொழிலும் இது தான். அப்படியிருக்க இந்த தொழில் செய்ய போலிகள் ஆசைப்படுவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. நான்கு ஆண்டுகள் ஒரு போலியான ஆசாமி நீதிமன்றத்தில் வழக்குகளில் ஆஜரானது கூட தெரியாத நீதிமன்றத்தின் நிலை எப்படியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.
தீபாவளி ஸ்பெஷல்!

வரதட்சணை கேட்டு கொடுமை: மாஜிஸ்திரேட் மீது வழக்கு

லூதியானா: பஞ்சாபில், வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய மாஜிஸ்திரேட் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம், அகாலி தளம் கட்சியைச் சேர்ந்தவர் பால் சிங் கிரேவல்.

இவர், தனது மகள் கரண்தீப் கவுரை, அமிர்தசரஸ் கோர்ட்டில் பணிபுரியும் மாஜிஸ்திரேட் பல்ஜிந்தர் சிங்கிற்கு, கடந்தாண்டு திருமணம் செய்து கொடுத்தார். இந்நிலையில், வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப் படுத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும், பல்ஜிந்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக, கரண்தீப் கவுர் போலிசில் புகார் செய்தார். இதையடுத்து, மாஜிஸ்திரேட் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலை முயற்சி மற்றும் வரதட்சணை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், மாஜிஸ்திரேட்டின் தாயார், மாமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

Dinamalar: அக்டோபர் 07,2009
==========================================

மாஜிஸ்திரேட் வரதட்சணை கேசில் மாட்டிக் கொண்டு தலைமறைவான செய்தியைப் படித்தவுடன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் ஒரு அரசியல் கட்சி குடும்பமும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. தீபாவளியை சந்தோஷமாக கொண்டாட இதை விட வேறு என்ன செய்தி வேண்டும்?


Sunday, October 04, 2009

மாமியாரை காப்பாத்துங்க....

Thanks: அவள் விகடன்

'பெண்ணின வரலாற்றில் முதல் முறையாக' என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்... சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள 'அனைத்திந்திய மாமியார்கள் பாதுகாப்பு சங்கம் (ஆல் இண்டியா மதர்-இன்-லா புரொடக்ஷன் ஃபோரம்)' பற்றி!

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு உதயமாகியிருக்கிறது இந்தப் புதிய அமைப்பு! நான்கு பேருடன் துவங்கப் பட்ட இந்தச் சங்கத்தில் ஒரே வாரத்தில் ஐம்பது உறுப்பினர்கள் சரசரவென வந்து சேர, நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது அதன் வளர்ச்சி! தமிழ்நாடு, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் கிளைகளைத் துவங்கி யிருக்கும் இந்தச் சங்கத்தை டெல்லி, மும்பை, நாக்பூர் ஆகிய இடங்களிலும் விரிவுபடுத்தும் பணிகளும் ஜரூர்!

சங்கத்தின் நோக்கம் என்ன?

'பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வழிசெய்யும் நாற்பத்து நான்கு வகை இந்திய சட்டங்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் கணவர், மாமியார், மாமனார், நாத்தனார், கொழுந்தனார் ஆகியோர் மீதெல்லாம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகிறது. கணவன், மனைவி சண்டையில், 'உன் குடும்பத்தையே கோர்ட்டுக்கு இழுக்கறேன் பார்!' என்று ஒரு பாவமும் அறியாதவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த, இந்தச் சட்டத்தை பல மருமகள்களும் துருப்புச் சீட்டாக்கிக் கொள்கின்றனர். இதிலிருந்தெல்லாம் சட்டரீதியாகவோ, மனிதாபிமான அடிப்படையிலோ மாமியார்களும் அவரைச் சார்ந்தவர்களும் தங்களை காத்துக் கொள்ள உதவுவதற்காகவே இந்தச் சங்கம்'' என்கிறார்கள் இதன் உறுப்பினர்கள். இவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை பதினோரு மணிக்கு பெங்களூரு, கப்பன் பார்க்கில் சங்கக் கூட்டத்தை நடத்துகின்றனர்.

சங்கத்தின் நிறுவனர்களுள் ஒருவரான மமதா நாயக், ஒரிஸ்ஸாவைச் சேர்ந்தவர். இப்போது பெங்களூருவில் பணியாற்றும் அவரை, சொந்த சோகங்களே சங்கத்தில் சேர வைத்திருக்கிறது!

''தனிக்குடித்தனம் போகணும்கிறது என் மருமகளோட எண்ணம். அதுக்கு எங்க மகன் உடன்படல. அதனால வரதட்சணை வழக்கு, குடும்ப வன்முறை சட்டம்னு ஏதேதோ எங்க குடும்பத்து மேல பாய்ஞ்சிருச்சு. குற்றமில்லாதவங்க மேல பழி சுமத்தறப்போ, அதோட வலி அனுபவிக்கறவங்களுக்குத் தான் தெரியும். இப்போ நியாயத்தின் துணையோட நாங்க இந்த வழக்கை சந்திச்சுட்டு இருந்தாலும், இதனால நாங்க பட்ட அவமானமும், வேதனையும் சொல்லி மாளாது. அந்த வலிகளெல்லாம்தான் இப்படி ஒரு அமைப்பை உருவாக்கற எண்ணத்தை எங்களுக்குள்ள உண்டாக்குச்சு!'' என்கிறார் கண்கள் துடைத்து!

சங்க நிறுவனர்களில் மற்றொருவரான நீனா தூலியா, கோபமும் கொந்தளிப்புமாக அவர்களின் வாதங்களையும் நியாயங்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

''மாமியார் கொடுமைங்கறது, காலம் காலமா மக்களோட மனசுல பதிஞ்சு போய் கிடக்கற ஒரு 'மித்'... அவ்வளவுதான்! அந்தக் காலத்துல இருந்திருக்கலாம். இப்போ இந்தச் சமூகம் ரொம்பவே மாறியிருக்கு. நாங்க மட்டும் மாறாம இருப்போமா என்ன? ஆனா, மாமியார் ஜாதியை ஏதோ வில்லி மாதிரி பார்க்கற மக்களோட மனோபாவம் மட்டும் இன்னும் மாறாம இருக்கறது, வேதனைக்குரிய விஷயம். டி.வி. சீரியல்கள்லகூட மாமியார்களை கொடுமைக்காரங்களாவேதான் காட்டுறாங்க.

இன்னொரு பக்கம், இதையே சாதகமா எடுத்துக்கற சில சாமர்த்திய மருமகள்கள், வீட்டுப் பிரச்னையை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுபோகும்போது, கேஸ் அவங்க பக்கம் ஸ்ட்ராங்கா இருக்கணும்கறதுக்காக மாமியார், மாமனார் உட்பட புகுந்த வீட்டுல இருக்கு எல்லார் மேலயும், இருக்கிற எல்லா பிரிவுலயும் புகார் கொடுத்துடறாங்க. போலீஸும், விசாரணை கூட இல்லாம உடனே கைது செய்யறாங்க. 'நாங்க அப்பாவிங்க'னு அவங்ககிட்ட நிலைமையை எடுத்துச் சொன்னாகூட, 'சட்டம் என்ன சொல்லுதோ, அதைத்தான் செய்யு முடியும்'னு ஒரு வரியில பதில் கொடுக்கறாங்க.

இப்படி ஒரு தரப்புக்கு மட்டும் சாதகமா இருக்கற சட்டங்கள், காலத்துக்கு ஏற்றபடி மாற்றி அமைக்கப்படணும். ஓய்வெடுக்க வேண்டிய வயசுல இருக்கற எத்தனையோ மாமனார், மாமியார்களை இந்த சட்டங்கள்தான் இப்போ கோர்ட், கேஸுனு சீரழிய விட்டிட்டிருக்கு.

மாமனார்-மாமியார் சொந்த உழைப்புல கட்டின வீட்டிலிருந்து அவங்களை விரட்ட, இந்தச் சட்டம் மருமகள்களுக்கு துணையா இருக்கு! இதுக்கெல்லாம் தீர்வு ஏற்படுத்த, சங்கம் முழுமூச்சா செயல்படும். பாதிக்கப்படற மாமியார்கள், 'விதி விட்ட வழி'னு இருக்க வேண்டியதில்ல. எங்க அமைப்புல இணைந்தோ அல்லது வழிகாட்டுதலைப் பெற்றோ கொடுமைக்கார மருமகளை சட்ட ரீதியா எதிர்கொள்ளலாம்!'' என்று அழைப்பு விடுத்தார்.

அமைப்பின் சென்னை பொறுப்பாளரான மனோஜ் குறிப்பிட்ட அந்த வழக்கு விஷயம், நமக்குள்ளும் கேள்வியை எழுப்பியது! ''இன்ஷுரன்ஸ் செஞ்சிருக்கற ஒரு மாமனார், ஏதாவது விபத்துல இறந்துட்டா கிடைக்கற தொகையில முக்கால் பங்கு மருமகளுக்கும், கால் பங்கு மனைவிக்கும் கொடுக்கப்படணும்னு உச்ச நீதிமன்றம் ஒரு வழக்குல தீர்ப்பு சொல்லியிருக்கு! இதுல இருக்கற நியாயம் என்னனு எனக்குத் தெரியல. தன் கணவனுக்காக காலம் முழுக்க வாழற மனைவி, அவரோட இன்ஷுரன்ஸ் பணத்தை வாங்கக்கூட தகுதியில்லாதவளா போயிட்டாளா? வீட்டுலதான் மாமியார் வர்க்கத்துக்கு மரியாதை இல்லாமப் போச்சுனா, நாட்டுலயும் எங்களை அவமதிக்கறதை என்னனு சொல்றது?!'' என்று வேதனைக் கேள்வி எழுப்பியவர், தொடர்ந்தார்...

''மாமியாரை தாய் மாதிரி பார்த்துக்கற மருமகள்கள் இருக்காங்கங்கறதையும் நாங்க ஏத்துக்கறோம், அவங்களைப் பார்த்து நாங்க ஏங்கறோம்! அதேசமயம், கொடுமைக்கார மாமியார்கள் சிலருக்காக வெட்கப்படறோம்!

பெண்களை காக்கும் சட்டங்களை நாங்கள் குற்றம் சொல்லலை. அது தவறா பயன்படுத்தப்படக் கூடாதுங்கறதுதான் எங்க அமைப்போட வேண்டுகோள்.

எங்க அமைப்பு சார்பா சென்னை, செனாய் நகர் திரு.வி.க. பூங்காவுல ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை அஞ்சுல இருந்து எட்டு மணிவரைக்கும் மீட்டிங் நடத்தறோம். பாதிக்கப்பட்டவங்க யார் வேணும்னாலும் எங்களை அணுகி வழிகாட்டுதலை பெறலாம்!'' என்கிறார்.

இந்தச் சங்கத்துக்கு இதுவரை எந்த ஆட்சேபனைகளும் எழவில்லை என்பது, டெய்ல் பீஸ்!

தொடர்புக்கு:
செல்போன்: 98862 50907, 98403 24551.
இணைய தளம்:
http://www.aimpf.org/

=========================

மேலுள்ள செய்திக்குப் பொருத்தமாக வாரமலரில் வந்துள்ள கவிதை!


வலி!

* மாமியார்
கொடுமை என்கிறாய்
மாமனார்
கடுமை என்கிறாய்...

* நாத்தனார்க்கு
அடிமை என்கிறாய்
தனி வீடே இனிமை
என்கிறாய்...

* மூன்று மாதத்தில்
மூன்று முறை
பிறந்த வீடு போய் வந்தும்
சுதந்திரமில்லை என்கிறாய்...

* வேலைக்கு ஆள் இருந்தும்
வேலை செய்யவா
அழைத்து வந்தீர்கள்
என்கிறாய்...

* பாசமெல்லாம்
வேஷம் என்கிறாய்
பணத்திற்குத்தான்
கூட்டுக் குடும்பம் என்கிறாய்...

* மகளுக்கு அறிவுரை
கூறத் தெரியாத
பெற்றோரைப் பெற்றிருக்கும்
மருமகளே...

* உன் சொல் அம்புகள்
ஒவ்வொன்றும்
உள்ளத்தைப் பிளந்து
ரணமாக்கினாலும்...

* எல்லா வலிகளும்
பறந்து விடுகின்றன
சிரிக்கும் பேரன்
என் நெஞ்சில்
உதைக்கும்போது...

- ஏ.வி.கிரி, தாம்பரம்.


Saturday, October 03, 2009

ஏமாற்றி திருமணம் செய்வதை தொழிலாக செய்த பெண்கள்

பணத்திற்காக சாப்ட்வேர் இன்ஜினியர்களை ஏமாற்றி திருமணம் செய்த கில்லாடி இளம்பெண் சிக்கினார்: உடந்தையாக இருந்த தாயும் கைது

Dinamalar நவம்பர் 27,2008

நகரி: பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் இருவரை திருமணம் செய்து தலைமறைவாகி விட்டு, மூன்றாவதாக இன்னொருவரை மணக்க நிச்சயதார்த்தம் முடித்துள்ள இளம்பெண்ணை திருப்பதி போலீசார் கைது செய்தனர். ஆண்கள் மட்டுமே பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளதை அறிந்துள்ளோம். இதற்கு நேர்மாறாக, ஆந்திர மாநிலம் குண்டூர் நகரை அடுத்த, பிராடிபேட்டையைச் சேர்ந்த வெங்கடேஸ்வரராவ் பூர்ணவல்லி தம்பதியரின் மகளான தீப்தி(24)யும் செயல்பட்டுள்ளார்.

பிளஸ் 2 வரை படித்துள்ள இவருக்கு, சத்யதீப்தி, சாய்தீப்தி என்ற பெயர்களும் உண்டு. இவரது தந்தை ஆறு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், தாய், மகள் இருவருமாக தனியாக வசித்து வந்தனர். மகளுக்கு நல்லமுறையில் திருமணம் செய்து வைக்க, பூர்ணவல்லிக்கு வசதி இல்லாததால், பெரிய அளவில் பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டினர். இதற்கு பொறியியல் படித்த சாப்ட்வேர் இன்ஜினியர்களை திருமணம் செய்ய முடிவெடுத்து, திருமண போர்வையில் அவர்களை பிளாக்மெயில் செய்ய திட்டமிட்டனர். இதன்படி, திருப்பதி மாதவநகரைச் சேர்ந்த கோதண்டராம நாயுடுவின் மகன் பாலசுப்பிரமணியம்(30) என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை தேர்ந்தெடுத்து, 2004ம் ஆண்டு இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் திருப்பதியில் தனியார் ஓட்டல் ஒன்றில் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணமான மூன்று தினங்களுக்கு பின் பிறந்த வீடான குண்டூருக்கு சென்று வருவதாக, கணவரிடம் கூறிச்சென்ற தீப்தி, மீண்டும் கணவரின் திருப்பதி வீட்டிற்கு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியம் மனைவியை தேடிச் சென்று குண்டூரில் விசாரித்ததில், அவர் எங்கு உள்ளார் என்ற விவரம் கிடைக்காமல் திருப்பதிக்கு திரும்பி விட்டார். சில மாதங்கள் கழிந்தபின், பாலசுப்பிரமணியத்திற்கு போன் செய்து பேசிய தீப்தி, "என்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறி போலீசில் புகார் செய்து கோர்ட்டுக்கு போவேன்' என, போன் மூலம் மிரட்டினார். அதன்பின், பாலசுப்பிரமணியத்திடம் ஒரு தொகையை பெற்றுக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.

பின்னர், தீப்தி என்ற பெயரில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான தனசேகர ரெட்டியை, இன்டர்நெட்டில் சாட்டிங் செய்து காதலில் விழ வைத்து, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் கணவரான பாலசுப்பிரமணியத்தை மிரட்டி பணம் பறித்தது போலவே, தனசேகரிடமும் பணம் பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, திருமணம் நடந்த 2006ம் ஆண்டு குண்டூர் போலீசில் தனசேகர் புகார் செய்ததின் பேரில் தாய், மகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

அதன்பின்னும் மோசடியை தொடர முடிவு செய்த இந்த இளம்பெண், மீண்டும் தன் பெயரை சாய்தீப்தியாக மாற்றிக்கொண்டு மற்றொரு இளைஞரை தேடிப்பிடித்து அவரை திருமணம் செய்துகொள்ள நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார். இந்த தகவலை அறிந்து கொண்ட திருப்பதியைச் சேர்ந்த முதல் கணவரான பாலசுப்பிரமணியம், கடந்த மாதம் திருப்பதி பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட தாய், மகள் இருவரின் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், சொந்த வேலை காரணமாக திருப்பதிக்கு வந்து கொண்டிருந்த பூர்ணவல்லி, அவரது மகள் தீப்தி இருவரையும் திருப்பதி போலீசார் கைது செய்தனர். பின்னர் மாஜிஸ்திரேட் முன், ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
========================

இன்னும் கொஞ்ச நாளில் விபச்சாரம், பொய் 498A, பொய் வரதட்சணை கேசு, ஏமாற்று திருமணம் போன்றவை "அப்பாவி பெண்கள்" நடத்தும் தேசிய தொழிலாக மாறிவிடும் போலிருக்கிறது! ஏற்கனவே நாட்டு நிலைமை பொய் 498A, பொய் வரதட்சணை கேசு போன்றவற்றில் அப்படித்தான் இருக்கிறது.

CNN News -Indian mothers-in-law campaign for protection

Indian mothers-in-law campaign for protection

September 9, 2009

NEW DELHI, India (CNN) -- Some 50 mothers-in-law have come together in a campaign seeking legal protection from what they allege is abuse of laws favoring daughters-in-law in the country.

"There are a number of laws to protect daughters-in-law in India, but there is none to protect us," said Neena Dhulia, coordinator of the newly-launched All India Mother-in-Law Protection Forum.

The group was formed last Sunday in the southern Indian city of Bangalore, she told CNN.

In India, thousands of brides are alleged to be killed each year over dowries.

Such killings, suspected of being committed by their in-laws, are mostly described as kitchen accidents.

A tiny percentage of these murderers are brought to justice, according to UNICEF. But Dhulia insisted daughters-in-law often use India's tough anti-dowry law to settle scores.

"Our primary aim is to raise awareness in society about the state of mothers-in-law," she said.

Dhulia regretted that Indian films and soap operas too portrayed mothers-in-law mostly as vamps.

"The stereotyping of mothers-in-law as evil and blood thirsty by media and popular culture. This violates the civil liberties and the constitutional provisions of right to liberty and right to life," the group said in its launch statement.

For a start, the forum, consisting of women older than 50, is holding park meetings in Bangalore every week.

"We are receiving encouraging responses from all over," she claimed.Thursday, October 01, 2009

ஆண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைக்கு எதிரான போராட்டம்

Harassed men, kin to hit streets

CHANDIGARH: Fed-up of being victims of domestic violence, harassed men and their family members across the country will take to the streets in prominent cities to protest against Domestic Violence Act. Representatives of Save India Family Foundation while talking to TOI informed that following an increase in the number of such complaints, they had decided to mark October 25 - day the Act was implemented - as "Domestic Violence against Men Day" and have chalked a list of activities, including protest marches by thousands of men in Delhi, Mumbai, Chandigarh and Hyderabad.

"We will be organizing a protest march in various prominent places of different cities across country on October 25," said Nitin Gupta, representative, SIFF, Chandigarh unit, adding, "In Chandigarh, we have sought permission to stage a dharna in Sector 17, whereas our Delhi unit is planning one near Jantar Mantar.

Clearing the air, NGO members plan to observe the entire October as Domestic Violence Awareness Month, the first time it will be done in the country. "Our aim is to make it an international event for all men's rights and fathers' rights groups across the world. Our month-long campaign will focus on educating the Indian public about how the problem of domestic violence has been misrepresented; how DVA has been commercialized and how Indian laws, claiming to prevent domestic violence, are actually promoting domestic it as well as human rights abuse against men, women and children," Gupta added.


பெண்கள் நலத்துறை

கள்ளக்காதலி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு தூண்டிய காதலன் கைது
அக்டோபர் 02,2009

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கள்ளக்காதலி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு தூண்டிய காதலன் கைது செய்யப்பட்டார். பெருமாள்சேரியை சேர்ந்த ராக்கப்பன்(35) மனைவி பழனியம்மாள்(25). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வாழ்ந்து வந்தபோது ஆலத்தூர் பேச்சியப்பனுடன் தொடர்பு ஏற்பட்டது.

சிறிது காலத்திற்கு பின் அவருடைய தொடர்பை துண்டித்த பழனியம்மாளுக்கு ஸ்ரீவி., மல்லபுரம் தெருவை சேர்ந்த மாரிகுரு(29)வுடன் தொடர்பு ஏற்பட்டது. இவர்களது மகன் ஹரி கிருஷ்ணன் (1). தற்போது பழனியம்மாள் ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் மாரிகுரு தனது அக்கா மகள் தாமரை செல்வி(22)யை திருமணம் செய்ததால், பழனியம்மாளுடன் தொடர்பை துண்டித்தார்.

இதனால் பழனியம்மாள் சாப்பாட்டிற்கு வழியின்றி கஷ்டபட்டு வந்தார். நேற்று முன்தினம் காலை மாரிகுரு வீட்டிற்கு சென்ற பழனியம்மாள் சாப்பாட்டு செலவுக்கு பணம் தருமாறு கேட்டார். ஆத்திரமடைந்த மாரிகுரு, பழனியம்மாள் மீது மண்ணெண்ணெயை ஊற்றினார். வெறுப்படைந்த பழனியம்மாள் தன் உடல் மீது தீ வைத்து கொண்டார். ஆஸ்பத்திரியில் பழனியம்மாள் சேர்க்கப்பட்டார். டவுன் இன்ஸ்பெக்டர் சிவலிங்க சேகர், மாரிகுருவை கைது செய்தார்.

============

இந்தப் பெண் ஒவ்வொருமுறையும் ஆளை மாற்றும்போதும் நீதிமன்றத்தில் முறையாக விவாகரத்துப் பெற்று இந்திய சட்டங்களை மதித்து தனது வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறாரா? இது போன்ற பெண்களுக்கு பெண்கள் நலத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.