சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, March 23, 2010

மொட்டைத்தலை + முழங்கால் = இந்திய நீதிமன்றம்!

தலைப்பைப் பார்த்து குழப்பமாக இருக்கிறதா? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? அது தான் இந்திய நீதிமன்றங்களின் இன்றைய நிலை. பொறுப்பான நிலையில் இருக்கும் உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருக்கும் கருத்துக்களை பார்க்கும் போது அதுபோலத்தான் தோன்றுகிறது.


==========================================

திருமணத்துக்கு முன் செக்ஸ் தவறு இல்லை: சுப்ரீம் கோர்ட்
தினமலர் மார்ச் 24,2010

Front page news and headlines today

புதுடில்லி : 'திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் விரும்பும் பட்சத்தில் இணைந்து வசிப்பதோ எந்தவிதத்திலும் தவறு இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது தொடர்பாக சினிமா நடிகை குஷ்பு, 2005ல் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். தமிழ் கலாசாரத்தை பாதிக்கும் வகையில் குஷ்பு தனது கருத்தை தெரிவித்ததாகக் கூறி அவர் மீது தமிழக கோர்ட்டுகளில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, தன்மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் குஷ்பு மனு தாக்கல் செய்தார். இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா மற்றும் சவுகான் ஆகியோர் முன்னிலையில் நேற்று வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: தகுந்த வயதை அடைந்த இருவர் ஒன்றாக வாழ்வதை எப்படி குற்றமாக கருத முடியும்? ராதையும், கிருஷ்ணனும் ஒன்றாகவே வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் ஒன்றாக வாழ்வதையோ தவறு என எந்த சட்டமும் கூறவில்லை. குஷ்பு தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தனது தனிப்பட்ட சொந்த கருத்துக்கள். எந்தவகையில் அது கலாசாரத்தை சீரழிப்பதாக கருதமுடியும்? எத்தனை வீடுகள் இந்த பேட்டியால் பாதிக்கப்பட்டுள்ளன? இவ்வாறு நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.

======================================

கிருஷ்ணரும் ராதையும் ஒன்றாக வாழ்ந்தார்களாம் அதனால் இந்தியாவில் திருமணம் செய்யாமல் எல்லோரும் கூடி வாழலாம் என்று சொல்கிறது நீதிமன்றம். இவர்கள் கடவுளை வைத்து இந்தியர்களை அவமானம் செய்கிறார்களா அல்லது கடவுள் பக்தியோடு கடவுள் காட்டிய வழியில் நடக்கவேண்டும் என்று சொல்கிறார்களா? அப்படியென்றால் ராமபிரானின் தந்தை தசரதனுக்கு நூற்றுக்கணக்கான மனைவியர் இருந்தனர். அதனால் புராணங்கள் காட்டியவழியில் எல்லோரும் கணக்கிலடங்கா திருமணம் செய்துகொண்டால் அதற்கு நீதிமன்றம் இதுபோல ஆதரவு தருமா?

இந்தியாவில் பிறகெதற்கு இந்து திருமணச் சட்டம் என்று ஒன்றை வைத்திருக்கிறார்கள்? யாரும் யாரோடு வேண்டுமானாலும் பிடித்தவரை கூடி வாழ்ந்துவிட்டு பிள்ளைகளைப் பெற்றுப் போட்டுவிட்டு விலங்கினங்கள் போல நாட்டில் திரிந்துகொண்டிருக்கலாமே?

ஒரு தனிப்பட்ட நபர் சொல்லிய கருத்து அவரின் தனிப்பட்ட விஷயம் அதில் அடுத்தவர் அக்கறை காட்டத்தேவையில்லை என்று நாகரிகமாக வழக்கை முடிக்கத்தெரியாமல் கடவுளையும், புராணங்களையும் கொச்சைப்படுத்தி மேற்கோள்காட்டி மனித ஒழுக்கநெறியை உடைக்கும் விதமாக இப்படி ஒரு செய்தியைக்கொடுப்பதற்கு நீதிமன்றங்கள் எதற்கு? அதை கீழ்த்தரமான
ஒரு மஞ்சள் புத்தகமே எளிதாக செய்துவிடுமே!

இந்தியாவிற்கு உலகளவில் பெருமை சேர்த்துத் தருவது பாரம்பரியம் மிக்க இந்திய குடும்ப அமைப்புமுறை. அரசியல்வாதிகளும் நீதிமன்றங்களும் அல்ல.
இதுபோன்ற பொறுப்பற்ற நீதிமன்ற கருத்துக்களின் பின்னணியில் இருப்பது மேற்கத்திய கலாச்சார இறக்குமதியும் அதற்கு கிடைத்துக்கொண்டிருக்கும் வெகுமதியும்.

மேலைநாடுகளில் தந்தையில்லாமல் குழந்தைகள் பிறப்பது சர்வசாதாரணமான விஷயம். குழந்தைப் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பத்தில் தந்தையில்லாத குழந்தை என்று குறிப்பிடும் வசதியும் இருக்கிறது அந்த நாடுகளில். தந்தை அல்லது தாய் இல்லாமல் ஒற்றைப் பெற்றோருடன் பலகுடும்பங்கள் இருக்கின்றன. அந்தக் குடும்பத்துக் குழந்தைகளுக்கு சரியான வளர்ப்பு முறை இல்லாமல் மனித இனத்திற்குறிய கலாச்சாரமும் பண்பாடும் இல்லாமல் மனம்போன போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அதுபோன்ற இழிநிலை இந்தியாவிற்கு வரவேண்டும் என்பதுதான் இன்றைய அரசியல்தலைவர்களின் நீண்டநாள் கனவு. அதற்கு அவர்கள் கொடுத்திருக்கும் பெயர் “பெண் சுதந்திரம்”! இந்தக் கனவு நனவாவதற்கு அவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதியுதவியும் கிடைக்கிறது. அந்த திட்டத்திற்குப் பெயர்தான் iVAWA

அரசியல் தலைவர்களின் அந்தக் கனவின் ஒரு வெளிப்பாடுதான் இந்திய நீதிமன்றத்தின் இந்த மொட்டைத்தலை + முழங்கால் கருத்துக்கள்!
Monday, March 22, 2010

அமிலம் ஊற்றி காதல் வளர்க்கும் புதுமைப்பெண்

கள்ளக்காதலில் கற்புநெறிபோற்றி வந்த அப்பாவிப் பெண்கள் இப்போது நேர்வழிக்காதலிலும் ஒரு புதுமுறையை பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். அதுதான் வன்முறைக்காதல்.

இதுவரை இந்த சமுதாயத்தில் ஆண் என்பவன் எப்போதும் முரட்டுக்குணமுடையவன், குற்றம் செய்வதற்கென்றே பிறந்தவன் என்று
பல முட்டாள்கள் தானாக ஒரு கற்பனை செய்துகொண்டு ஒரு பெண் தன்னிடம் வந்து கண்களை கசக்கி நின்றால் உடனே ஐயோ பாவம் அபலைப் பெண்ணுக்கு கொடுமை செய்துவிட்டார்கள் என்று கூப்பாடு போட்டு ஆண்களை சிறையில் தள்ளவேண்டும் என்று புதிய புதிய சட்டங்களை இயற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்தக்காலத்தில் பல புத்திசாலிப்பெண்கள் இந்த முட்டாள்களின் தவறான எண்ணத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு எல்லாவகை அட்டூழியங்களையும் செய்து வருகிறார்கள். குறிப்பாக நகரத்து படித்த மேல்தட்டு வர்க்கப் பெண்கள் அப்பாவிப் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு சட்டங்களை போர்வையாக்கிக்கொண்டு எல்லாவித குற்றங்களையும் செய்துவருகிறார்கள். அதனால் இவை வெளியுலகத்திற்கு தெரிவதில்லை. எல்லோரும் எப்போதும் பெண் என்றால் அப்பாவி என்ற தவறான எண்ணத்திலேயே தவறான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சுயநினைவூட்டுவதற்காகத்தான் இந்த செய்தி வந்திருக்கிறது.


===============================================

காதலனை வேறு பெண்கள் ரசிப்பதை விரும்பாமல் ஆசிட் ஊற்றிய காதலி கைது
தினமலர் மார்ச் 23, 2010

சென்னை : காதலனின் அழகை வேறு பெண்கள் பார்க்க விரும்பாத காதலி, அவர் மீது ஆசிட் ஊற்றி அழகை கெடுக்க முயன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

தன்னை காதலிக்காத பெண்ணிற்காக காலமெல்லாம் காத்திருந்த காலம் போய், காதலிக்காத குற்றத்திற்காக அந்த பெண்ணின் மீது ஆசிட் ஊற்றுதல், கொலை செய்தல் என, சமீபத்திய நிகழ்வுகள் இதற்கு சாட்சியாக உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தலை காதலில் பொறியியல் கல்லூரி விரிவுரையாளரை, காதலன் அவரது வீட்டிற்கே சென்று வெட்டி சாய்த்தான். சென்னையில் தன்னை, 'லவ்' பண்ணாத காரணத்திற்காக, ஒரு பெண்ணை முகத்தில் பிளேடால் கிழித்த சம்பவம் நாம் அறிந்ததே. ஆனால், நேற்று சென்னையில் நடந்துள்ள சம்பவமே வேறு. காதலித்து கரம் பிடிக்கும் வேளையில் காதலி, சின்னஞ்சிறு விஷயத்திற்காக ஆத்திரப்பட்டு காதலனின் மேல் ஆசிட்டை ஊற்றி, தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

சென்னை பட்டினப்பாக்கம், நார்ட்டன் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (20). இவர் இரண்டாண்டுகளுக்கு முன், தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக்., ஐ.டி., படித்தார். அப்போது, அவரது வகுப்பில் குஜராத் மாநிலம், ஆமதாபாத்தைச் சேர்ந்த நிலாய்(20) என்பவரும் சேர்ந்தார். இருவரும் காதலில் இணைய, சந்தோஷமாய் சுற்றித் திரிந்தனர். இது பெண்ணின் வீட்டிற்கு தெரிய வர, கடந்தாண்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிலாயின் தாத்தா இறந்துவிட, திருமணம் ஓராண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டது. முதலாண்டு முடித்தவுடன் ஸ்ரீவித்யா, கல்லூரிக்கு செல்வதை நிறுத்தி விட்டார். காதல் தொடர்ந்து வந்த நிலையில், கல்லூரியில் நடக்கும், 'பேஷன் ÷ஷா' ஒன்றில் கலந்து கொள்ள நிலாய் முடிவு செய்திருந்தார். இச்செய்தியை ஸ்ரீவித்யாவிடம் தெரிவித்தார். அதற்கு ஸ்ரீவித்யா, கலந்து கொள்ளக்கூடாது என தடுத்தார். இதுகுறித்து பேச வேண்டும் என நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு நிலாயை வரவழைத்தார். காதலியின் அழைப்பை ஏற்று வந்த நிலாய், மீண்டும் தான் இந்த பேஷன் ஷோவில் கலந்து கொள்ளப் போவதாக தெரிவித்தார். தான் பார்க்க வேண்டிய உடலை மற்ற பெண்கள் பார்க்கக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் ஸ்ரீவித்யா. காதலன் மீண்டும் வற்புறுத்தவே ஆத்திரமடைந்த ஸ்ரீவித்யா, வீட்டில் கழிவறை சுத்தப்படுத்த வைத்திருந்த, 'ஆசிட்'டை எடுத்து, காதலன் நிலாய் மீது ஊற்றினார்.

இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் நிலாய் அனுமதிக்கப்பட்டார். கழிவறை சுத்தம் செய்யும், 'ஆசிட்' என்பதால், ஆழமான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. காதலியை ஒன்றும் செய்ய வேண்டாம் என நிலாய் கேட்டுக் கொண்டதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று ஸ்ரீவித்யா மீது வழக்கு பதிந்த போலீசார், அவரை கைது செய்தனர். சின்னஞ்சிறு விஷயத்திற்காக ஆத்திரப்பட்டு, விரைவில் கைப்பிடிக்க இருக்கும் காதலன் மீது ஆசிட் ஊற்றிய பெண், தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

==========================================

மென்மையான பெண்மையும், பரிவான தாய்மையும் குணத்தில் இருக்கும் ஒரு பண்பு. இந்த குணம் ஆண், பெண் என்ற இருபாலருக்கும் இருக்கலாம். ஆண் பெண் என்ற வித்தியாசம் இந்த குணங்களால் வரவேண்டிய விஷயம்.

உடலமைப்பில் காணப்படும் வித்தியாசங்கள் வெறும் பாலினத்தை வேறுபடுத்திக் காட்டும் ஒரு அடையாளமே. பெண்பாலின அமைப்பில் இருக்கும் ஒரு உயிரி குணத்தில் பெண்ணாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது கொடிய கயமை மனம் படைத்ததாகவும் இருக்கலாம். உதாரணத்திற்கு, தான் நினைத்ததை அடைய வேண்டும் என்பதற்காக கணவனின் ஒட்டுமொத்தக்குடும்பத்தையும் பொய் வரதட்சணை வழக்கில் சிறையில் தள்ளி சந்தோஷப்படும் குணம் பெண்மைக்குரிய குணம் கிடையாது. ஆனால் இந்த உயிரிகளுக்காக பல சட்டங்களை இயற்றியிருக்கிறார்கள் முட்டாள்கள்.

பரிவான தாய்மைக்குணம் ஒரு ஆண் பாலின உயிரினத்திற்குள்ளும் இருக்கலாம்.
ஆனால் இவர்கள் படும் இன்னல்களை செவிகொடுத்துக்கேட்பதற்குக்கூட யாரும் முன்வருவதில்லை. காரணம் இந்த சமுதாயம் பார்ப்பது வெறும் உடலமைப்பில் இருக்கும் பாலின வேறுபாட்டைத்தான். உண்மையான பெண்மைக்கும், தாய்மைக்கும் மரியாதை கொடுப்பதில்லை.

இந்த உண்மையை அறியாமல் சட்ட மூடர்களும், அரசியல் முட்டாள்களும் உடலமைப்பில் வித்தியாசமாக இருக்கும் பாலினத்திற்காக பல தவறான சட்டங்களை இயற்றி கயமை மனம் உள்ள பல பெண்பாலின உயிரினங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

மனிதனைப் படைத்த கடவுளுக்கு தாயுள்ளமும், தந்தையுள்ளமும் இருக்கும்போது கடவுள் படைத்த மனிதருக்குள்ளும் இந்த இரண்டு குணங்களும் இருக்காதா? ஆண் என்றால் தாயுள்ளம் இல்லாத கொடியவர் என்றும் பெண் என்றால் தாயுள்ளம் கொண்டவர் என்றும் சூழ்ச்சி செய்து மனிதமனங்களை உடலமைப்பால் பிரித்து சூழ்ச்சி செய்தது யார்? சட்டம் எழுதும் சதிகாரர்களா? அல்லது இதைப்பயன்படுத்தி ‘பெண்ணுரிமை’ என்றபெயரில் பணம் சம்பாதிக்கும் கூட்டங்களா?


இந்த உண்மையை மனித இனம்
என்று உணர்ந்துகொள்ளுமோ?
Sunday, March 21, 2010

கற்புநெறி தவறாத கள்ளக்காதல் கலாச்சாரம்

புனிதமான காதலின் போக்கு எந்தப் பாதையில் போய்க்கொண்டிருக்கிறது இந்த நாட்டில். கள்ளக்காதலுக்காக கணவனை பிரிந்து செல்லும் அப்பாவி மனைவிகளும், அரசாங்கத்தை நம்பி புருஷன் மீது பொய்கேசு போடும் அப்பாவிப் பெண்களும் நாட்டில் அதிகரித்துவருகின்றனர்.


மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது
தினமலர் மார்ச் 22,2010

கோவை: கள்ளக்காதலுக்காக கணவரை பிரிந்த நர்ஸ், மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக தனியார் மருத்துவமனை டாக்டரை போலீசார் கைது செய்தனர்.கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் நர்சாக பணியாற்றியவர் ரேணுகாதேவி(40). மகள் சுரேகா(12)வுடன், சிங்காநல்லூர், இந்திராநகரில் வசித்தார். சின்னியம்பாளையத்தில் கிளினிக் நடத்தும் டாக்டர் தரணிக்குமாருடன் ஐந்து ஆண்டுகளாக ரேணுகா தேவி நெருங்கிப் பழகினார்.இதையறிந்த ரேணுகாதேவியின் கணவர் சுரேஷ்குமார், மனைவியை கண்டித்தார். ஆனாலும், கள்ளக்காதல் தொடர்ந்தது. மனைவியை பிரிந்த சுரேஷ்குமார், விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து, துடியலூரில் வசிக்கிறார்.

இந்நிலையில், டாக்டர் தரணிக்குமார் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்த ரேணுகாதேவி அதிர்ச்சி அடைந்தார்; டாக்டரிடம் அதிருப்தியை தெரிவித்துள்ளார். சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டவர், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.முன்னதாக, தன் ஒரே மகளுக்கு ஊசியில் மயக்க மருந்து செலுத்தி, மயக்கமடைந்ததும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.நேற்று காலை வெகு நேரம் வீடு திறக்காததை கண்டு சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர், வீட்டை திறந்து பார்த்தபோது, உள்ளே ரேணுகாதேவி தூக்கில் தொங்கியபடியும், சிறுமி பிணமாகவும் கிடந்தனர். அதிர்ச்சி அடைந்தவர்கள், சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார், தாய், மகளின் பிணத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை நடந்த அறையில் போலீசார் சோதனை மேற்கொண்டதில், ரேணுகாதேவி எழுதி வைத்த கடிதம் சிக்கியது.கடிதத்தில், 'ஐந்து ஆண்டுகளாக டாக்டரை உயிருக்குயிராக காதலிக்கிறேன். இக்காதலுக்காக, எனது கணவரிடம் இருந்து பிரிந்தேன். தற்போது, தனியார் எப்.எம்.ரேடியோவில் பணியாற்றும் அறிவிப்பாளர் ஒருவருடன் அடிக்கடி டாக்டர் சுற்றுகிறார்.எங்கே என்னை விட்டு பிரிந்து விடுவாரோ என்ற அச்சத்தில் நானும், எனது மகளும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தோம். இந்த தற்கொலைக்கு டாக்டர் தரணிக்குமார் தான் முழுக் காரணம்' என, கடிதத்தில் ரேணுகாதேவி தெரிவித்துள்ளார்.விசாரணைக்குப் பின், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து டாக்டரை போலீசார் கைது செய்தனர். கைதான டாக்டர் தரணிக்குமார், திருமணமானவர். அவருக்கு, மனைவியும், குழந்தையும் உள்ளனர்.
========================

கள்ளக்காதல் போற்றும் பெண்டிரும், பொய்வழக்குப்போடும் மனைவியரும் தங்கள் கள்ளக்காதலிலும் கலாச்சாரத்திலும் ஒரு கற்பு நெறியை கடைபிடித்து வருகின்றனர். தன்னுடைய கள்ளக்காதலன் தனக்கு கிடைக்கவில்லையென்றால் ஒன்று அவனை கொலை செய்வது அல்லது தன்னுடையை குழந்தையையும் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டு போகிற போக்கில் கள்ளக்காதலனை போலிஸில் போட்டுவிட்டுப் போவது. இதுதான் இவர்களின் நவீன காலத்து கற்பு நெறி. இது கள்ளக்காதல் பெண்களின் கற்பு நெறி.

பொய் வரதட்சணை கேசு போடும் மனைவிகளின் கற்பு வித்தியாசமானது. தான் நினைத்ததை அடைய முடியவில்லையென்றால் கணவன் மற்றும் அவனது ஒட்டுமொத்தக் குடும்பமும் சிறையில் தள்ளப்படவேண்டும் என்பதுதான் பொய் வழக்குப் போடும் பெண்களின் பெருமைமிகு கலாச்சாரம். என்ன ஒரு கலாச்சாரப் பற்று.

கற்புநெறி தவறாத கள்ளக்காதல் மனைவியருக்கும், பொய்வழக்குப் போட்டு கலாச்சாரத்தைப் போற்றும் மனைவியருக்கும் துணை செய்வதையே கடமையாகச் செய்யும் சட்டங்களும், நீதி, காவல்துறைகளும் வாழ்க! இந்த கடமை தவறாத கண்ணியவான்களுக்கு உண்மையான அப்பாவிப் பெண்களான வயதான தாய்மார்களும், சகோதரிகளும் என்றுமே கண்களுக்கு தெரியமாட்டார்கள்.
பெண்ணுக்கு அரைகுறை ஆடையும் பார்ப்பவர்க்கு தடித்த தோலும்

இந்த வார வாரமலரில் அந்துமணி கேள்வி பதில் பகுதியில் வந்துள்ள செய்தி இது.

===========================================================

அ.வள்ளி, காமநாயக்கன்பாளையம்:
அங்கங்களை அம்பலப்படுத்தி நடிக்கும் சினிமா நடிகைகளால், பெண்களான எங்களுக்கு கோபம் ஏற்படுகிறதே....
* காமநாயக்கன் பாளையத்திலிருந்து சென்னை வந்து பாருங்கள். நடிகைகளின் உடைகளைத் தூக்கி சாப்பிடும் வகையில் உடை அணிகின்றனர் சென்னை பெண்கள். இதெல்லாம், 'பார்ட் அண்ட் பார்சல் ஆப் லைப்' ஆகிக் கொண்டு வருகிறது... தடித்த தோலுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டியது தான்!
===========================================================

நகரத்துப் பெண்களிடையே ஏற்படும் அனைத்து மாற்றங்களையும் “பார்ட் அண்ட் பார்சல் ஆப் லைப்” என்று எடுத்துக்கொள்ளவேண்டும்! இவர்கள் போடும் பொய்வரதட்சணை வழக்குகளும் அப்படித்தான்.

உடை விஷயத்தில் மட்டுமல்ல. பெண்கள் சட்டங்களைத் தவறாகப்பயன்படுத்தி பொய்வழக்குகள் போடுகிறார்கள். இது ஒரு தவறான செயல் என்பதை உணரும் நிலையில் கூட இல்லாமல் இந்த ஒட்டுமொத்த சமுதாயமும் தடித்த தோலுடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

பொய் வரதட்சணை வழக்கில் சிக்கினாலும் நீதிமன்றங்களும் பொதுமக்களும் பொய்வழக்கில் சிக்கியவருக்கு சொல்லும் முதல் அறிவுரையும் இது தான் “இதெல்லாம், 'பார்ட் அண்ட் பார்சல் ஆப் லைப்' ... தடித்த தோலுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டியது தான்!


இதுபோன்ற நகரத்து மேல்தட்டுவர்க்கப் பெண்கள்தான் தங்களின் வாழ்க்கைத்தரம் அடிமட்டத்தில் இருப்பதாகவும் தங்களின் தரம் மேலும் உயர அரசியலில் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று
மகளிர் சங்கங்கள் என்ற பெயரில் நாடெங்கும் புரட்சி முழக்கமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
Tuesday, March 16, 2010

அரக்கிகளை ஒடுக்கக் கிளம்பியுள்ள ஆதிபராசக்திகள்

தினமலர் மார்ச் 15,2010

மும்பை: இந்திய தண்டனைச் சட்டத்தின் ஒரு பிரிவைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, மாமியார் களையும் நாத்தனார்களையும் வதைக்கும் மருமகள்களுக்கு எதிராக, மாமியார்கள் கூட்டணி அணி திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத் தின் 498 -ஏ பிரிவு, கணவன் மற்றும் அவனது குடும்பத்தார், உதவியற்ற நிலையில் உள்ள மனைவி மீது வரதட்சணை உள்ளிட்ட சில பிரச்னைகளுக் காக வன் கொடுமை செய்வதைத் தடுக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரம், மாமியார், நாத்தனார், மாமனார் இவர்களைப் பழிவாங்க நினைக்கும் மனைவி மார்களும் இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

சமீபத்தில், மும்பையில், தன் மாமியார் லதா மிஸ்ரா, மாமனார் நாராயணன், இவர்களின் மனநிலை சரியில்லாத மகள் மூவரும் சேர்ந்து தன்னை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக 498-ஏ பிரிவின் கீழ் ஆர்த்தி என்பவர் புகார் கொடுத்தார்.லதா மிஸ்ரா, தினமும் "டயாலிசிஸ்' செய்ய வேண்டிய உடல்நிலை உள்ளவர். போலீசார் மூவரையும் தூக்கி உள்ளே வைத்துவிட்டனர்.

லதா மிஸ்ராவுக்கும் அவரது மனநிலை சரியில்லாத மகளுக்கும் மட்டும் கைது செய்த அன்று, உடல்நிலைக்காக ஜாமீன் வழங்கப் பட்டது. ஆனால், மாமனார் நாராயணன் இரண்டு நாள் சிறையில் கழித்து விட்டுத்தான் விடுதலையாகி இருக்கிறார்.இதனால், கொதித்துப் போன லதா மிஸ்ரா, மகளிர் தினத்தன்று, "கணவனின் தாய், மகள் மற்றும் தந்தை மீது சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துதல்' என்ற அமைப்பின் கீழ் பல பெண் களை இணைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இந்த அமைப்பு ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது.

மனைவிமார்கள் மட்டும் தான் பெண்களா? ஒரு ஆணின் அம்மா, சகோதரிகள் எல்லாம் பெண்கள் இல்லையா? மனைவிகளை மட்டுமே மையமாகக் கொண்டு தான் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.என் மருமகள் செய்த காரியத்தால் நாங்கள் தற்கொலை செய்யும் நிலைக்குச் சென்று விட்டோம். எங்களைப் போல பாதிக்கப் பட்டவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்' எனக் கொதிக்கிறார் லதா.

இவர்களின் குழு, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுகிறது. தங்கள் குறைகளை இதில் பலர் விவாதிக்கின்றனர். மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை சட்டரீதியாக எடுப்பதற்கு முயல்கின்றனர். சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது அங்கீகரிக்கப் பட்டால் இது ஒருவகையில் சட்டரீதியான துன்புறுத்தல் என்று தான் கொள்ளப்படும். பல வழக்குகள் மாமியாருக்கு ஜாமீன் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே வெள்ளிக் கிழமைகளில் தான் பதிவு செய்யப்படுகின்றன' என்கிறார் மினாள்வர்மா என்பவர்.
=======================================

கடந்த பல ஆண்டுகளாக நாட்டில் மருமகள் என்ற வடிவில் பல அரக்கிகள் உலவிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு துணைசெய்யும் துணை-அரக்கர்களாகவும் அரக்கிகளாகவும் பல சட்டங்களும் சட்டஅமைப்புகளும் செயல்பட்டு இந்தியக் குடும்ப அமைப்பு முறையை ஒழிக்கும் இழிசெயலில் ஈடுபட்டு வருகின்றன. இவைகளின் அட்டூழியங்கள் எல்லைமீறிவிட்டது.

எப்போதெல்லாம் நாட்டில் துஷ்டர்களின் ஆதிக்கம் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் கடவுள் ஏதாவது ஒரு உருவத்தில் தோன்றி அந்த துஷ்டர்களை ஒடுக்குவது இதிகாச காலந்தொட்டு நடந்துவரும் ஒரு செயலாகும்.அது போல இப்போது மருமகள் என்ற ஒரு புனிதமான உறவின் பெயரை வைத்துக்கொண்டு பல அரக்கிகள் அட்டூழியம் செய்துவருவதை ஒடுக்க அன்னை ஆதிபராசக்தி அன்னையர்களின் வடிவில் ஒருங்கிணைந்து வந்துகொண்டிருக்கிறாள்.
புனிதப்பணியில் ஈடுபடும் இந்த அன்னையருக்கு நீங்கள்உதவிசெய்து நாட்டில் அமைதியை நிலைநாட்டி குடும்பங்களையும் உங்களது பெற்றோர்களையும், சகோதரிகளையும் காப்பாற்றுங்கள்.

"மருமகள்" என்ற பெயரில் இருக்கும்
இந்த அரக்கிகளின் இழிசெயலால் உங்கள் வீட்டிலும் வயதான தாயார் அல்லது சகோதரிகள் பாதிக்கப்பட்டிருந்தால் கீழுள்ள இணைப்பில் உதவிகளைப் பெறலாம்.


All India helpline for mother-in-laws
  • +91 80 41676716 - Bangalore
  • +91 9886250907 - Bangalore
  • +91 80 41708757 - Bangalore
  • +91 8088324778 - Bangalore
  • +91 9886115697 - Bangalore
  • +91 9441037858 - Amalapuram
  • +91 9177722930 - Vijayawada
  • +91 9435548142 - Guwahati
  • +91 9381007247 - Chennai
  • +91 9941693131 - Chennai


Sunday, March 14, 2010

பொய் வழக்குப் போடும் பெண்களின் எதிர்காலம்!

தினஇதழ் என்ற பத்திரிக்கையில் சீனாவில் திருமணத்திற்காக பெண்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்ற செய்தி வந்திருக்கிறது.


அறைகுறை ஆடையுடன் தெருவில் நடனமாடி மாப்பிள்ளையை தேர்ந்தடுக்க பெண்கள் நடத்திய நூதன சுயம்வரம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.

சீனாவில் உள்ள கான் சாலு என்ற இடத்தில் அங்குள்ள சுரங்கப்பாதை அருகே 8 இளம் பெண்கள் கூடினார்கள். அவர்கள் திடீரென தங்கள் மேலாடைகளை கழற்றி வீசி விட்டு ஜட்டி, பிராவுடன் நடனம் ஆடினார்கள். இளம் பெண்கள் நடனத்தை பார்த்ததும் என்ன, ஏதென்று தெரியாமல் ஏராளமானோர் கூடிவிட்டனர்.

அங்கு வந்திருந்த வாலிபர்களை பார்த்த அவர்கள் எங்களை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கெஞ்சியபடி நடனத்தை தொடர்ந்தனர். நடனமாடிய அனைவரும் அவர்கள் கையில் சில பேப்பர்களை வைத்து இருந்தனர். அதில் அவர்களை பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.

ஏன் இப்படி திடீர் நடன மாடுகிறீர்கள் என்று கேட்ட போது அவர்கள் கூறிய கதையை கேட்க பரிதாபமாக இருந்தது. அவர்கள் கூறியதாவது, எங்கள் அனைவருக்கும் 30 வயதை எட்டி விட்டது. இன்னும் திருமணமாக வில்லை. மாப்பிள்ளைகளை தேடுகிறோம் யாரும் கிடைக்கவில்லை. இதனால் எங்கள் பெற்றோர் இன்னும் வாழ்க்கையை அமைத்து கொள்ளாமல் என்ன செய்கிறீர்கள் என்று கூறி திட்டுகிறார்கள்.

நாங்கள் எல்லோருமே அழகாகத்தான் இருக்கிறோம். ஆனால் எந்த வாலிபரும் எங்களை திருமணம் செய்ய முன்வரவில்லை. எனவேதான் இப்படி நடனம் ஆடி மாப்பிள்ளைகளை தேர்வு செய்ய முடிவு செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். நீண்ட நேரம் அவர்கள் அங்கு நடனம் ஆடியும் கூட ஒரு வாலிபர் கூட அவர்களை திருமணம் செய்ய முன்வரவில்லை. எனவே மாப்பிள்ளை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் களைந்து சென்றனர்.


Calling themselves the 'Crazy Beauties', the women said they had deliberately timed the event to coincide with International Women's Day. "We think we are beauties, but we can't find our Mr Rights. Our age is close to 30, so we have to do something."

===========================

“நாங்கள் எல்லோருமே அழகாகத்தான் இருக்கிறோம். ஆனால் எந்த வாலிபரும் எங்களை திருமணம் செய்ய முன்வரவில்லை” என்று இந்தப் பெண்கள் வருத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த செய்தியைப் படித்த பிறகு நம்ம ஊரில் இருக்கும் பொய் வரதட்சணை வழக்குப் போடும் பத்தினிகளின் எதிர்காலம் தான் நினைவிற்கு வருகிறது.

நம்ம ஊரில் பொய் வரதட்சணை கேசு போட்டு கணவனின் வாழ்வை நாசமாக்குவதுடன் தனது இளமைக்கால வாழ்வையும் தொலைத்துக்கொண்டிருக்கும் பல இளம் பெண்கள் பத்து பதினைந்து ஆண்டுகள் நீதிமன்றத்தில் வழக்கை இழுத்தடித்தபிறகு கணவன் அந்த வழக்கில் கடைசியில் வெற்றி பெற்றுவிடுவான். பிறகு இந்தப் பெண்கள் இளமையில் இருந்த நல்ல வாழ்க்கையையும் தொலைத்து விட்டு வழக்கிலும் தோற்றபிறகு வாழ்க்கைத் துணை வேண்டி மறுமணத்திற்கு ஆள் தேடும்போது இப்படி ஒரு சூழ்நிலை அந்த அப்பாவிப் பெண்களுக்கு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பொய்கேசு போடுவதற்கு மட்டும் தான் சட்டங்களும் அரசாங்கமும், போலிசும், வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களும் பெண்ணுக்கு உதவி செய்யும். வழக்கில் தோற்றபிறகு வாழ்க்கையைத் தொலைக்கும் பெண்ணுக்கு பொய்கேசு போட உதவிய இந்ததக் கூட்டணி மறுமணம் செய்துவைத்து ஆதரவு கொடுக்குமா?

இப்படி அரசை நம்பி புருசனை கைவிடும் பெண்களின் நிலை மேலே சொல்லப்பட்ட சீன நாட்டுச் செய்தியைப் போலத்தான் இருக்கும். இதுபோன்ற நிலைதான் நாட்டில் இப்போது உருவாகிக்கொண்டிருக்கிறது. ஐயோ பாவம். இந்த பொய் வழக்குப் போடும் அபலைப் பெண்களை யார் காப்பாற்றப்போகிறார்களோ.
சாதிகள் இல்லையடி பாப்பா!

இது திருமணச் சந்தையில் நடக்கும் சாதிய வியாபாரம்


அரசியல் மேடைகளில் புரட்சி முழக்கமிடும் தலைவர்களால் உண்மையாகவே சாதியை ஒழிக்க முடியுமா? இளம் வயதிலேயே பிஞ்சு மனங்களில் சாதியை விதைக்கும் மையங்களாக இருக்கும் பள்ளிகளில் கூட
சாதியை இன்னும் ஒழிக்க முடியவில்லை. சாதி இல்லாமல் அரசியல் தான் நடத்த முடியுமா? இருக்கின்ற சாதிகள் போதாது என்று இப்போது அரசியல் லாபத்திற்காக இடஒதுக்கீடு என்ற பெயரில் "பெண்” என்ற புதிய சாதியை உருவாக்கும் முயற்சியில் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் முழுமூச்சுடன் இறங்கியிருக்கிறார்கள். தற்போது அரசியல் சந்தையில் “பெண்” என்ற சாதிய வியாபாரம் தான் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

இதுவரை சாதியின் பெயரால் மக்களைப் பிரித்து தொழில் நடத்திவந்த அரசியல்வாதிகள் கடைசியில் மனிதஇனத்திற்குள்ளேயே ஒரு தனி சாதியை உருவாக்கும் வழியைக் கண்டுபிடித்து பெண்களையே ஒரு தாழ்த்தப்பட்ட சாதியாக்கி லாபம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இதன் பின்னணியில் இருக்கும் கொடிய உண்மையை புரிந்துகொள்பவர்கள் எத்தனை பேர்?

தினமலர் மார்ச் 14,2010

ராஜ்ய சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதும், பத்திரிகையாளர்கள் 10, ஜன்பத் சாலையிலுள்ள சோனியாவின் வீட்டிற்கு படையெடுத்தனர். இந்த மசோதா நிறைவேறுவதற்கு, காரணகர்த்தாவான சோனியாவை, பேட்டி எடுக்க முயன்றனர். பிரபல ஆங்கில "டிவி' சேனல்களுக்கு பேட்டியளித்தார் சோனியா. இந்த சேனல்களின் நிருபர்கள் அனைவருமே பெண்கள். ஒரு ஆண் நிருபர், சோனியாவை பேட்டி காண விரும்பினார். "இது மகளிர் மசோதா எனவே, பெண்களுக்குத்தான் முன்னுரிமை, உங்களுக்குப் பேட்டி கிடையாது...' என்று சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டார் சோனியா. நொந்து போன அந்த நிருபர், "பார்லிமென்டில்தானே இட ஒதுக்கீடு... பேட்டி கொடுப்பதற்குமா?' என்று கேட்க. சோனியா பதிலே சொல்லாமல் சிரித்து மழுப்பி விட்டார்.

எம்.பி.,க்களுக்கு எஸ்.எம்.எஸ்.,சில் உத்தரவு: பார்லிமென்டில் எந்த ஒரு விஷயத்தின் மீது ஓட்டளிப்பு நடந்தாலும், அதில் எப்படி ஓட்டளிக்க வேண்டும் என்பது குறித்து கட்சிகள், தங்கள் எம்.பி.,க்களுக்கு, "விப்' எனப்படும் உத்தரவை அனுப்பும். இதை மீறினால், எம்.பி., பதவி பறிபோகும். வழக்கமாக பேப்பர் மூலமாக அனைத்து எம்.பி.,க்களுக்கும், இந்த, "விப்' போகும். ஆதரவாக ஓட்டளியுங்கள் அல்லது எதிர்த்து ஓட்டளியுங்கள் என்று, மூன்று வரியில் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், தற்போது எங்கு பார்த்தாலும், மொபைல் என்பதால் நிலைமை மாறிவிட்டது. எம்.பி.,க்களுக்கு எஸ்.எம்.எஸ்.,சில் "விப்' அனுப்பப்படுகிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஓட்டளிக்க காங்கிரசும், பா.ஜ.,வும், பேப்பரில், "விப்' அனுப்பாமல், எஸ்.எம்.எஸ்., அனுப்பியது. சட்டப்படி எஸ்.எம்.எஸ்., விப் செல்லாது. ஆனாலும், சுலபமாக எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம் என்பதால், கட்சிகள் இந்த முறையை மேற்கொள்கின்றன. மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில், தி.மு.க.,வும் எஸ்.எம்.எஸ்., முறையை பின்பற்றியது. "வழக்கம் போல பேப்பர் முறையை பயன்படுத்த வேண்டும்; எதற்கு எஸ்.எம்.எஸ்.,' என, சில தி.மு.க., எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர்.

மகளிர் மசோதாவால் இனி காங்கிரசுக்கு பிரச்னை: மகளிர் மசோதா, இனிமேல் காங்கிரசுக்கு பெரும் தலைவலியை தரப்போகிறது என்பதுதான் டில்லி வட்டாரங்களில் பேச்சு. மகளிர் தினத்தன்று கொண்டு வந்த இந்த மசோதா, அடிதடியில் முடிந்தது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சீனியர் காங்கிரசாரும், பிரதமரும் சொல்ல, சோனியா பிடிவாதமாக இருந்தார். "எப்படியும் இந்த மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றியே ஆக வேண்டும். என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்' என்று, கட்சியினருக்கு கட்டளையே போட்டுவிட்டார். முலாயம் சிங் யாதவ், லாலு போன்றோர், பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ், பா.ஜ.,வினர், ஆதரவாக ஓட்டளித்தாலும், உள்ளுக்குள் நிறைய எம்.பி.,க்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பாக இருந்தனர். ராஜ்ய சபாவில் மசோதா நிறைவேறினாலும், மகளிர் மசோதா லோக்சபாவுக்கு வரும் போது, பெரும் பிரச்னை ஏற்படும் என்று கூறப்படுகிறது. பட்ஜெட்டை நிறைவேற்றிய பின், இந்த மசோதாவை கொண்டு வந்திருக்கலாம். சோனியா அவசரப்பட்டு விட்டார் என்று காங்கிரசுக்குள்ளாகவே பேசப்படுகிறது. மேலும், ராஜ்யசபாவில் காங்கிரசுக்கு மெஜாரிடி கிடையாது. எந்த ஒரு விஷயமானாலும், எதிர்க்கட்சிகள் தயவு தேவை. இனிமேல் முக்கிய மசோதாக்களை, மத்திய அரசு கொண்டு வந்தால் லாலு, முலாயம் கட்சிகள் எதிர்க்கும். அத்தோடு, பா.ஜ.,வும், தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்கும். வரும் நாட்களில் பார்லிமென்டில், காங்கிரஸ் பெரும் பிரச்னைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். "மகளிர் மசோதா, மத்திய அரசை வீக் ஆக்கிவிட்டது' என்று சீனியர் காங்கிரஸ் அமைச்சர்கள் புலம்புகின்றனர். இன்னொரு பக்கம், திடீரென மம்தா பல்டி அடித்துவிட்டார். மகளிர் மசோதாவை ஆதரிப்பதாக சொல்லிவிட்டு, கடைசியில் தன் வேலையைக் காட்டிவிட்டார். காரணம், அடுத்த வருடம் நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டசபை தேர்தல்தான். முஸ்லிம் மகளிருக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்பது, இவரது கோரிக்கை. முஸ்லிம் வாக்காளர்களை, தன் பக்கம் இழுக்கவே இப்படி.Thursday, March 11, 2010

எத்துறையிலும் முன்னேறுவோம்! இடஒதுக்கீடே தேவையில்லை!!

எத்துறையிலும் முன்னேறுவோம் என்று சவால் விடும் அளவிற்கு போலிஸ், சிபிஐ, இராணுவம், பாஸ்போர்ட் உயர் அதிகாரி என எல்லாதுறைகளிலும் கொடிகட்டி பறக்கும் இவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இவர்களது முன்னேற்றத்தை யாராலும் தடுக்கமுடியாது.

இவர்களுக்கு எந்த ஒரு ஒதுக்கீடும் தேவையில்லை. எங்கிருந்தாலும் இவர்கள் ஒளிவீசி பிரகாசமாக முன்னேறுவார்கள். படித்தப் பெண்கள் சட்டங்களைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் கிரிமினல் வேலைகள் செய்வது என்பதை நன்றாக தெரிந்துவைத்திருக்கிறார்கள். குறிப்பாக இந்தக்காலத்தில் வரதட்சணை சட்டங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் இளம் மனைவியர் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதுபோன்றவர்களைத்தான் ஒடுக்கப்பட்டவர்களாக நினைத்து அரசாங்கம் பல சலுகைகள் செய்துகொண்டிருக்கிறது.

கிராமப்புறங்களில் வாழும் உண்மையான அப்பாவிப்பெண்களுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை.தினமலர் மார்ச் 12,2010

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் சி.பி.ஐ., அதிகாரி போல் நடித்து, "ரியல் எஸ்டேட்' உரிமையாளரிடம் பணம் பறித்த, "டிப்-டாப்' பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள சீலக்காம்பட்டியைச் சேர்ந்தவர் நந்தகோபாலகிருஷ்ணன் (எ) தம்பு; பொள்ளாச்சி சுற்றுப் பகுதிகளில், "ரியல் எஸ்டேட்' தொழில் செய்து வருகிறார். பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவர், தம்புவுக்கு போன் செய்து சி.பி.ஐ., பெண் அதிகாரி ஒருவர் பொள்ளாச்சி வந்திருப்பதாகவும், தம்புவை பற்றி விசாரித்ததாகவும் கூறியுள்ளார்.அதேபோன்று, தம்புவுக்கு நேற்று முன்தினம் புதிய எண்ணில் இருந்து போன் வந்துள்ளது. போனில் பேசிய பெண் தன்னை, சி.பி.ஐ., அதிகாரி சூர்யகலா என்று அறிமுகம் செய்து, "ரியல் எஸ்டேட் வியாபாரத்திற்கு எப்படி பணம் வந்தது, எப்படி சொந்தமாக கார் வாங்கினாய், வருமானவரி முறையாக செலுத்தியுள்ளாயா' என்று சரமாரியாக கேள்வி கேட்டு விசாரித்துள்ளார்.

மறுபடியும் மாலையில் போன் செய்து, பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் திப்பம்பட்டி அருகே நிற்பதாகவும், நேரில் வந்து சந்திக்க வேண்டும் என்றும், வெள்ளை நிற டீ சர்ட்டும், நீல நிற ஜீன்ஸ் பேன்ட் அணிந்திருப்பதாகவும் அடையாளம் கூறினார்.அதன்படி, மாலை 6.00 மணிக்கு திப்பம்பட்டிக்கு சென்று ரோட்டோரத்தில் தனியாக காத்திருந்த, சி.பி.ஐ., அதிகாரி சூர்யகலாவை சந்தித்தார்."செய்யும் தொழிலுக்கு முறையாக வருமான வரி செலுத்தவில்லை, அதை கண்டுகொள்ளாமல் இருக்க, 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்; இல்லாவிட்டால், வீட்டில், சி.பி.ஐ., ரெய்டு நடத்தும்' என, "டிப்-டாப்' பெண்மணி மிரட்டியுள்ளார்.அவரது பேச்சு தோரணையை பார்த்து நிஜ அதிகாரி என்று நம்பிய தம்பு, பாக்கெட்டில் இருந்த, 10 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். மீண்டும் போன் செய்யும் போது மீதிப்பணத்தை கொடுக்க வேண்டும் என்று சூர்யகலா எச்சரித்துள்ளார்."டிப்-டாப்' பெண்ணுடன் தம்பு பேசிக்கொண்டிருப்பதை பார்த்த திப்பம்பட்டியைச் சேர்ந்தவர்கள், "அந்த அம்மாவை உங்களுக்கு தெரியுமா? திப்பம்பட்டி ரேஷன் கடையில் கடந்த இரண்டு நாட்களாக அந்த அம்மா விசாரணை செய்து வருகிறார். கோவையில் இருந்து வந்திருக்கும் சிவில் சப்ளை அதிகாரி எனக் கூறி, ரேஷன் கடை பணியாளர்களை மிரட்டி, பொருட்கள் வாங்குபவர்களிடமும் விசாரித்து வருகிறார்' என்று கூறியுள்ளனர்.இதனால் சந்தேகமடைந்த அவர் அந்த பெண்ணை உடனடியாக விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல் கொடுத்ததால், கோமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

ஒருசில பிரச்னைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்ததால் பணம் கிடைத்துள்ளது. உடல் உழைப்பின்றி எளிதாக பணம் கிடைத்ததால், போலீஸ் போன்று நடித்து பணம் பறிக்க துவங்கியுள்ளார். ஆங்கிலத்தில் பேசும் திறமையை பயன்படுத்தி தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்வி நிறுவன உரிமையாளர்களுக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்து பணம் பறித்துள்ளார்.போலீஸ் அதிகாரி போன்று நடித்து பணம் பறித்ததாக, கோவை சிறுமுகை, பேரூர் போலீஸ் ஸ்டேஷன்களில் சூர்யகலா மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன. இந்நிலையில், பொள்ளாச்சியில், சி.பி.ஐ., அதிகாரி போன்று நடித்து பணம் பறித்துள்ளார்.ஒவ்வொரு இடத்திலும் பெயரை மாற்றி கூறியுள்ளார். கீதா, ராஜேஸ்வரி, சூர்யகலா என்ற பெயர்களில் ஆள் மாறாட்டம் செய்து, அரசு ஊழியர் போன்று நடித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே பொழப்பு தான்: சி.பி.ஐ., அதிகாரியாக நடித்த சூர்யகலாவுக்கு, பெற்றோர் நடராஜ் - சத்யா மற்றும் இரண்டு தங்கைகள் உள்ளனர். குடும்பத்தை நிர்வாகம் செய்வது சூர்யகலா தான். அவர், 15வது வயதில் இருந்து, அரசு அதிகாரிகள் போன்று நடித்துள்ளார்.தனிப்பட்ட பிரச்னைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்ய செல்லும் போது, முக்கிய பிரமுகர்களின் போட்டோக்களை சேகரித்து வைத்துள்ளார். அவரிடம் இருந்த மொபைல்போனில் அனைத்து அதிகாரிகளின் மொபைல்போன் எண்களும், அரசியல்வாதிகள், கல்வி நிறுவன உரிமையாளர்களின் போட்டோக்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
=======================


சண்டிகார்: ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பெண் அதிகாரி ஒருவருக்கு, மோசடி வழக்கு ஒன்றில் ஓராண்டு சிறை தண்டனை வழங்குவதோடு, அவரின் பணிச் சலுகைகளை திரும்ப பெற வேண்டும்' என, ராணுவ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பெண் அதிகாரி மேஜர் டிம்பிள் சிங்லா(37). இவர், ராணுவத்தின் சட்டப் பிரிவில் பணியாற்றினார்.கடந்த 2006ம் ஆண்டு, டேராடூனில், ராணுவ வீரரான ஹவில்தார் சந்திரன் என்பவருக்கு எதிரான வழக்கு ஒன்றில், ராணுவ கோர்ட்டின் நடவடிக்கைகள் அவருக்கு சாதகமாக இருக்க, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், அவர் சந்திரனுக்கு ஒரு வக்கீலின் பெயரை பரிந்துரை செய்ததோடு, அவருக்கு ஆதரவான அதிகாரியான கேப்டன் கமுத் மெய்னி என்பவரை சந்தித்துள்ளார். இது, ராணுவ சட்டப் பிரிவு 52 மற்றும் 63ன் கீழ் குற்றமாக கருதப்படுகிறது.எனவே, வழக்கில் பாரபட்சம் காட்டியதாக டிம்பிள் சிங்லா மீது குற் றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை, ராணுவத்தின் மேற்கு பிரிவைச் சேர்ந்த கர்னல் சஞ்சீவ் ஜோஸ் என்பவர் விசாரித்தார்.இவ்வழக்கில், டிம்பிள் சிங்லா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஓராண்டு காலம் கடும் சிறை தண்டனை மற்றும் அவரின் பணிச்சலுகைகளை திரும்ப பெற, கர்னல் சஞ்சீவ் ஜோஸ் உத்தரவிட்டார்.

தினமலர் July 11, 2009


சண்டிகார்: உயரதிகாரிகள் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக பொய் புகார் கூறிய பெண் ராணுவ அதிகாரியை, பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யும்படி ராணுவ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரியானா, கல்கா என்ற இடத்தில் உள்ள ராணுவ தளவாடப் பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் கேப்டன் பூனம்.

உயரதிகாரிகள் மூன்று பேர் தன்னை பாலியல் ரீதியாகவும், மன அளவிலும் தொந்தரவு செய்ததாக ஒரு ஆண்டுக்கு முன்னர் புகார் கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இருந்தாலும், ராணுவ தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு, ராணுவ கோர்ட்டில் நடந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் ராணுவ கோர்ட் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கேப்டன் பூனம் வக்கீல் அகர்வால் கூறியதாவது: உயரதிகாரிகள் மீது பொய் குற்றச்சாட்டு கூறியது, ராணுவப் பணி தொடர்பான விஷயங்களை மீடியாக்களுக்கு தெரிவித்தது உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் கேப்டன் பூனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொய்யான குற்றச்சாட்டை கூறியதற்காக பூனத்தை பணியிருந்து டிஸ்மிஸ் செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்றார்.
===================

போலி ஐ.பி.எஸ்., சாருலதா

தினமலர் பிப்ரவரி 16,2010

சென்னை :போலி ஐ.பி.எஸ்., அதிகாரி சாருலதாவிற்கு எதிராக புகார்கள் குவிந்து வருகின்றன. அவரது மோசடிகள் குறித்து மேலும் விவரங்களை அறிய, சாருலதாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை விருகம்பாக்கம் ஓ.பி., கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாருலதா(36). பள்ளி இறுதியாண்டு வரை மட்டுமே படித்துள்ள சாருலதா, ஐ.பி.எஸ்., அதிகாரியைப் போல நடித்து, போலீசில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றினார்.இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த ஒருவர், போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, வண்ணாரப்பேட்டை போலீசார், கடந்த வாரம் சாருலதாவை கைது செய்தனர்.சாருலதாவிடமிருந்து போலி போலீஸ் அடையாள அட்டை, யூனிபார்ம், லேப்-டாப், பென் டிரைவ் மற்றும் போலீஸ் ஆட்கள் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் உட்பட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.போலி அடையாள அட்டையில், "கே.சவுதாமணி, உதவி இணைக் கமிஷனர், சென்னை நகரம்' என குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அடையாள அட்டை ஆயுதப்படை போலீசார் பயன்படுத்துவது என கூறப்படுகிறது.

போலி அடையாள அட்டை, 1998ம் ஆண்டு பிப்., 27ம் தேதி வழங்கப்பட்டதாக, பச்சை நிறப் பேனாவால் கையெழுத்திடப்பட்டிருந்தது. இந்த போலி அடையாள அட்டையை போலீஸ் அதிகாரி ஒருவர் தான் கையெழுத்திட்டு வழங்கியிருக்க வேண்டும் என்று தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போலீஸ் உடல்திறன் தேர்வு சமீபத்தில் நடந்தது. அப்போது, போலீஸ் அதிகாரி ஒருவருடன், சாருலதாவும் வலம் வந்தார். அப்போது, சாருலதாவை போலீஸ் அதிகாரி என நினைத்து, வேலை வாங்கித் தருமாறு அணுகியவர்களிடம், ஏமாற்றி பணம் பெற்றிருக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சாருலதாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட போலீஸ் உடை, எஸ்.ஐ., பயன்படுத்துவது என்பதும் தெரியவந்துள்ளது. தன்னை ஐ.பி.எஸ்., அதிகாரி எனக் கூறிக் கொண்ட சாருலதா, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எந்த உடை அணிவார்கள் என்பது கூட தெரியாமல், எஸ்.ஐ., அணியும் உடையை அணிந்து வலம் வந்தார்.சாருலதா போலீஸ் உடையில் சில போலீசாருடன் வலம் வந்ததை பார்த்திருப்பதாக பலர், போலீசில் கூறியுள்ளனர். சாருலதாவுடன் வந்தவர்கள் உண்மையான போலீசாரா அல்லது மற்றவர்களை நம்ப வைப்பதற்காக சாருலதாவை சிலரை போலீஸ் உடையில் தன்னுடன் அழைத்து வந்தனரா என்றும் விசாரணை நடக்கிறது.

சாருலதாவுக்கு கபடிப் போட்டி மூலம், முன்னாள் டி.ஜி.பி., ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்தி, போலீஸ் துறையில் உள்ள பல அதிகாரிகளுடன் சாருலதா நெருங்கிப் பழகினார். இப்பழக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, வெளியில் ஐ.பி.எஸ்., அதிகாரி எனக் கூறி போலீசில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியிருக்கலாம் என தெரியவந்துள்ளது. ஏட்டுகளுக்கு எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு வழங்குவதற்கு பட்டியல் தயாரானபோது, இடைச்சொருகல்களாக சிலரது பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், இதில் சாருலதாவுக்கும், சில போலீசாருக்கும் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. எனவே, இந்த கோணத்திலும் விசாரணை நடக்கவுள்ளது.

சாருலதாவின் மோசடி குறித்து முழுமையாக அறிய, அவரை ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கோர்ட் அனுமதி கிடைத்தால், இன்று சாருலதா போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என கூறப்படுகிறது. இந்த மோசடியில் உள்ள போலீஸ் அதிகாரிகளை காப்பாற்ற நினைக்காமல், நியாயமான முறையில் விசாரணை நடந்தால், பல போலீஸ் அதிகாரிகள் இந்த மோசடியில் சிக்கக்கூடும் எனத் தெரிகிறது.

சென்னையைச் சேர்ந்த மோகனசுந்தரம் இரண்டு லட்சம் ரூபாய், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அன்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், தொட்டியம் பெரியபள்ளிபாளையத்தைச் சேர்ந்த அசோக்குமார் மூன்று லட்சம் ரூபாய், நாமக்கல்லைச் சேர்ந்த தனசீலன் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த லோகநாதன் 50 ஆயிரம் ரூபாய் சாருலதாவிடம் கொடுத்து ஏமாந்ததாக, சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் நேற்று புகார் செய்தனர்.

சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சிபிஐ ரெய்ட்-பெண் அதிகாரி கைது
தட்ஸ்தமிழ் சனிக்கிழமை, ஏப்ரல் 25, 2009


சென்னை: ஏஜெண்டுகளிடம் பணம் வசூலித்துக் கொண்டு பாஸ்போர்ட் வழங்கியதாக சென்னை பாஸ்போர்ட் அலுவலக பெண் அதிகாரி ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஒரு பெண் புரோக்கரும் கைதாகியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாக சிபிஐ அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

ஒரு புரோக்கர் ரூ.13,000 வாங்கிக் கொண்டு பாஸ்போர்ட் வாங்கித் லட்சுமணன் என்பவர் சிபிஐயில் புகார் செய்தார். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை பாஸ்போர்ட் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

நள்ளிரவு வரை நடந்த சோதனையில் பாஸ்போர்ட் அலுவலக பெண் அதிகாரி ஒருவரின் காரில் ரூ.5 லட்சம் பணம் இருந்ததாகவும் அதை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியாதகவும் தெரிகிறது. மேலும் இரவிலேயே அந்த அதிகாரியின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாகத் தெரிகிறது.

இந்த ரெய்டின்போது அங்கிருந்த 24 புரோக்கர்களும் சிக்கினர். டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் பாத்திமா என்பவரும் அடக்கம். இவர் தான் ரூ. 13,000 தந்தால் உடனே பாஸ்போர்ட் வாங்கித் தருபவர் என்கிறார்கள். அவரிடம் விசாரணை நடத்தியதில், பாஸ்போர்டுக்கு தான் வசூலிக்கும் பணத்தில் தான் ரூ. 4,000த்தை மட்டும் வைத்துக் கொண்டு ரூ.9,000த்தை பெண் பாஸ்போர்ட் அதிகாரியிடம் கொடுத்ததாக கூறியிருக்கிறார்.

அவர் கை கைட்டியதையடுத்து அந்த பெண் பாஸ்போர்ட் அதிகாரியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி இன்று அவரை கைது செய்ததாகத் தெரிகிறது. இதை சிபிஐ உறுதி செய்யவில்லை.

அதே நேரத்தில் பாத்திமா கைது செய்யப்பட்டுள்ளார்.

=======================

சென்னை, மதுரை பாஸ்போர்ட் அலுவலகங்களில் ரெய்டு : சி.பி.ஐ., அதிரடியில் சிக்கினார் பெண் அதிகாரி
தினமலர் பிப்ரவரி 06,2010

சென்னை : சென்னை மற்றும் மதுரையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களில் சி.பி.ஐ., போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கியது தொடர்பாக, மதுரை பாஸ்போர்ட் அலுவலக பெண் அதிகாரி உட்பட எட்டு பேரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன.

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், கடந்த ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அச்சோதனையின் போது, மண்டல பாஸ் போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன், சென்னையைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரான மற்றொரு பெண் என, இருவர் கைது செய்யப் பட்டனர். இந்நிலையில், சென்னை மற்றும் மதுரையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களில் பணம் பெற்றுக் கொண்டும், போலி ஆவணங்களை தயாரித்தும் பாஸ்போர்ட் வழங்குவது தொடர்ந்து வருவதாக சி.பி.ஐ.,க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
========================
இந்த செய்திகள் எல்லாம் கண்மணிகளின் அரும்பெரும் சாதனைகளை சொல்லும் ஒரு சிறு துளிதான்.
Monday, March 08, 2010

100-வது மகளிர் தினமும் 33 புரியாத புதிரும்

உலக மகளிர் தினத்தின் 100-வது ஆண்டு நாளில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயலாக இந்தியப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறப்போகும் படித்த பெண்கள் செய்யும் செயல் எப்படியிருக்கிறது பாருங்கள். ஐந்து கிலோமீட்டர் துணியில் கையெழுத்துப்போட்டு கின்னஸ் சாதனை செய்கிறார்களாம்!


தினமலர் மார்ச் 09,2010கோவை : கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில், 5 கி.மீ., நீளமுள்ள வெள்ளைத் துணியில், மகளிர் தின வாழ்த்து எழுதும் சாதனை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில், 5 கி.மீ., நீள வெள்ளைத் துணியில் பெண்கள் வாழ்த்து எழுதும் கின்னஸ் சாதனை முயற்சியை, பல்கலை துணைவேந்தர் சரோஜா கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். பல்கலை பதிவாளர் கவுரி, ஆசிரியைகள், மாணவியர் ஒவ்வொருவரும் மகளிர் தின வாழ்த்து செய்தி எழுதி கையெழுத்திட்டனர். பல்கலை வளாகத்தில், இந்த கின்னஸ் சாதனை முயற்சி பற்றி அறிந்த கோவை பெண்கள் கையெழுத்திட்டு தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்தனர். நேற்று பிற்பகல் வரை 10,458 மகளிர் கையெழுத்திட்டுள்ளனர். பல பெண்களின் பங்களிப்பை ஈர்க்க இரண்டு நாட்களுக்கு நிகழ்ச்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.

பல்கலை துணைவேந்தர் சரோஜா கூறுகையில், ""கின்னஸ் சாதனைக்கு இதை அனுப்பி வைக்க உள்ளோம்,'' என்றார்.
==================================================

நாட்டில் எத்தனையோ ஏழைப்பெண்கள் கட்டிக்கொள்ள துணியில்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற ஏழைப்பெண்களுக்கு உதவி செய்திருக்கலாமே. பெண்கள் தினத்தன்று ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்கு உதவி செய்தவற்குக்கூட 33% இடஒதுக்கீடு இருந்தால் தான் செய்வார்களோ? அல்லது யாராவது ஆணாதிக்கத்தலைவர்கள் இதுபோன்ற செயல்களை தடுக்கிறார்களா?


இந்த நாளில் எத்தனையோ பல நல்லகாரியங்களை பெண்களே பெண்களுக்குச் செய்யலாம் அல்லவா.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும், எத்தனை சலுகைகள் கொடுத்தாலும் இந்தப் பெண்கள் இப்படித்தான் இருப்பார்களோ?
படித்த பெண்களே இப்படி இருந்தால் கிராமங்களில் வாழும் அப்பாவிப் பெண்களின் நிலை எப்படி இருக்குமோ? இவர்களுக்கு 100% சதவீத ஒதுக்கீடு கொடுத்தாலும் இவர்கள் நிலை அப்படியேதான் இருக்கும் போலிருக்கிறது. இவர்களை நம்பி எப்படி 33% இடஒதுக்கீடு நடந்துகொண்டிருக்கிறது என்பதுதான் ஒரு புரியாத புதிராக இருக்கிறது.
Sunday, March 07, 2010

குடும்பவன்முறை சட்டத்தின் மூலம் மாமனாரையும் சேர்த்து திருமணம் செய்யலாமா?

பெண்களை பாதுகாக்க சட்டங்கள் இயற்றினால் சில பெண்கள் அதனைப் பயன்படுத்தி எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்ற முற்போக்கு சிந்தனையுடன் இருக்கிறார்கள்.


மாமனார் வீட்டில் பங்கு கேட்க மருமகளுக்கு உரிமையில்லை
தினமலர் மார்ச் 08,2010

புதுடில்லி: "மாமனார் வீட்டு சொத்தில் பங்கு கேட்க மருமகளுக்கு உரிமையில்லை' என, டில்லி கோர்ட் தெரிவித்துள்ளது.அரியானா மாநிலம் சோனிபட்டில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியை, தனது மாமனாரின் சொத்தில் பங்கு கேட்டு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்திருந்தார். ஆனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து டில்லி செஷன்ஸ் கோர்ட்டில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மது ஜெயின் கூறியதாவது:குடும்ப வன்முறை சட்டம் போன்றவை பெண்களின் பாதுகாப்புக்காக இயற்றப்பட்டது. இச்சட்டத்தை வைத்து பெண்கள் யாரையும் மிரட்டக் கூடாது. அதற்கு கோர்ட்டை ஒரு கருவியாகவும் பயன்படுத்தக்கூடாது.

மாமனாரின் சொத்தில் பங்கு கேட்க மருமகளுக்கு உரிமை இல்லை. தேவைப்பட்டால் பராமரிப்பு செலவை கணவனிடமோ, மகன் மற்றும் மகளிடம் மட்டுமே கேட்க உரிமை உண்டு.மனு கொடுத்துள்ள பெண், அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். கணவர், தனியார் பள்ளியில் நூலகராக உள்ளார். இருவருடைய சம்பளமும் ஏறக்குறைய 20 ஆயிரமாக உள்ளது. இதை வைத்து அவர்கள் நல்லபடியாக குடும்பம் நடத்தலாம்.அதை விட்டுவிட்டு மாமனார் சொந்த பணத்தில் கட்டிய வீட்டில் பங்கு கேட்பதற்கு உரிமையில்லை. இந்த வீட்டை கட்டியதில் இவருடைய கணவரின் பங்கு ஏதும் இல்லை.அதுமட்டுமல்லாமல் திருமணமான புதிதில் ஓரிரு நாள் மாமனார் வீட்டுக்கு சென்றதோடு சரி. அதன் பிறகு அந்த பக்கம் திரும்பிக் கூட பார்த்திராத இந்த மருமகள், அந்த வீட்டில் பங்கு கேட்பதற்கு உரிமை கிடையாது. (மருமகள் மாமனார் வீட்டிலேயே தங்கியிருந்தால் மாமனார் இந்நேரம் வரதட்சணை கொடுமை சட்டத்தில் சிறையில் அல்லவா இருந்திருப்பார்!) இவ்வாறு நீதிபதி ஜெயின் கூறியுள்ளார். மனுவையும் தள்ளுபடி செய்து விட்டார்.

=================

நல்லவேளை இந்த மருமகள் குடும்பவன்முறை சட்டத்தின் மூலம் மாமனாரையும் தாலி கட்ட சொல்லுங்கள் என்று சொல்லி பிறகு சொத்தில் பங்குகேட்கலாம் என்று நினைக்கவில்லை. காசுக்காக சட்டத்தின் மூலம் எதைவேண்டுமானாலும் செய்வார்கள் போலிருக்கிறது.
Thursday, March 04, 2010

மாறிவரும் " தாய்" என்ற சொல்


திருச்சி:"தன்னுடைய தாயுடன் தவறான தொடர்பு வைத்துக் கொண்டு கொடுமைப்படுத்தும் கணவன் மற்றும் தாய் மீதும், அவர்களுக்கு உதவும் வகையில் கொலை மிரட்டல் விடுக்கும் முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பிரின்ஸ் தங்கவேல் உள்ளிட்ட பலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பாதிக்கப்பட்ட இளம்பெண் கோரியுள்ளார்.

இதுகுறித்து முசிறி அந்தரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் விசாலாட்சி(22) நிருபர்களிடம் கூறியதாவது:நான், என் கணவர் நெடுமாறனை பிரிந்து வந்து, முசிறி அருகே அந்தரப்பட்டியில் தனியே வசிக்கிறேன். என்னுடைய அம்மா அய்யம்மாளுக்கு இரண்டு கணவர்கள். அதில் முதல் கணவருக்கு, நான் உட்பட ஐந்து பேர் பிறந்தோம். என்னுடைய சிறுவயதிலேயே என்னுடைய அப்பாவிடம் இருந்து அம்மா பிரிந்து விட்டார். பின், எங்களை அழைத்துக் கொண்டு திருப்பூர் சென்று, அங்கு இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நெடுமாறனுக்கும், என்னுடைய அம்மா அய்யம்மாளுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அந்த தவறான தொடர்பை தொடர, என்னை நெடுமாறனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.என்னுடைய அம்மாவுடன், என் கணவருக்கு இருந்த கள்ளத் தொடர்பால் மனமுடைந்த என் அண்ணன், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். நானும் ஒரு நாள், என் அம்மாவும், என் கணவரும் படுக்கையில் இருந்ததை பார்த்து விட்டேன். இதன் பின்னும் அவர்களுடன் இருக்கக்கூடாது என, முசிறியில் உள்ள என் அக்கா வீட்டுக்கு வந்து விட்டேன். நான் தங்கியிருந்த வீட்டில் இருந்து என்னை அடித்து, உதைத்து இழுத்துச் செல்ல முயன்றனர். ஆனால், நான் அவர்களிடம் இருந்து தப்பி விட்டேன்.

இது குறித்து, நான் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் செவந்திராஜாவுடன் சென்று முசிறி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தேன். மறுநாள், முசிறி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பிரின்ஸ் தங்கவேல், வக்கீல்கள் முத்துச்செல்வன், சேது ஆகியோருடன், என் தாய் மற்றும் அடியாட்கள் சிலர் வந்து, என்னை கடத்த முயற்சித்தனர். ஆனால், என் வீட்டின் உரிமையாளர் உதவியுடன் நான் திருச்சிக்கு தப்பினேன். இவ்வாறு விசாலாட்சி கூறினார்.அ.தி.மு.க., பிரின்ஸ் தங்கவேல் கூறியதாவது:இந்த பிரச்னைக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. அந்த விசாலாட்சி என்ற பெண், புருஷனை விட்டு விட்டு, வேறு ஒரு ஆளுடன் ஓடி வந்து முசிறியில் தங்கியுள்ளார். அதற்கு செவந்திராஜா அடைக்கலம் கொடுத்துள்ளார். இவ்வாறு பிரின்ஸ் கூறினார்.

=====================
இந்தியக் கலாச்சாரம் எந்த திசையில் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த செய்தி ஒரு உதாரணம். இதுபோன்ற தாய்மார்கள்தான் நிறைய உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற தாய்மார்களையும் இவர்கள் பெற்றுவிட்ட கண்மணிகளையும்தான் மகளிர் சங்கம் என்றபெயரில் இருக்கும் ஒரு கூட்டம் தத்தெடுத்துக்கொண்டு இலவச ஊட்டச்சத்தான IPC498A போன்ற சட்டங்களை பாசமுடன் ஊட்டிவளர்த்து நாட்டில் அலையவிட்டுகொண்டிருக்கிறார்கள்.
இராணுவத்திலும் பெருமைமிகு பங்காற்றும் கண்மணிகள்!!


சண்டிகார்: ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பெண் அதிகாரி ஒருவருக்கு, மோசடி வழக்கு ஒன்றில் ஓராண்டு சிறை தண்டனை வழங்குவதோடு, அவரின் பணிச் சலுகைகளை திரும்ப பெற வேண்டும்' என, ராணுவ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பெண் அதிகாரி மேஜர் டிம்பிள் சிங்லா(37). இவர், ராணுவத்தின் சட்டப் பிரிவில் பணியாற்றினார்.கடந்த 2006ம் ஆண்டு, டேராடூனில், ராணுவ வீரரான ஹவில்தார் சந்திரன் என்பவருக்கு எதிரான வழக்கு ஒன்றில், ராணுவ கோர்ட்டின் நடவடிக்கைகள் அவருக்கு சாதகமாக இருக்க, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், அவர் சந்திரனுக்கு ஒரு வக்கீலின் பெயரை பரிந்துரை செய்ததோடு, அவருக்கு ஆதரவான அதிகாரியான கேப்டன் கமுத் மெய்னி என்பவரை சந்தித்துள்ளார். இது, ராணுவ சட்டப் பிரிவு 52 மற்றும் 63ன் கீழ் குற்றமாக கருதப்படுகிறது.எனவே, வழக்கில் பாரபட்சம் காட்டியதாக டிம்பிள் சிங்லா மீது குற் றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை, ராணுவத்தின் மேற்கு பிரிவைச் சேர்ந்த கர்னல் சஞ்சீவ் ஜோஸ் என்பவர் விசாரித்தார்.இவ்வழக்கில், டிம்பிள் சிங்லா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஓராண்டு காலம் கடும் சிறை தண்டனை மற்றும் அவரின் பணிச்சலுகைகளை திரும்ப பெற, கர்னல் சஞ்சீவ் ஜோஸ் உத்தரவிட்டார்.

தினமலர் July 11, 2009


சண்டிகார்: உயரதிகாரிகள் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக பொய் புகார் கூறிய பெண் ராணுவ அதிகாரியை, பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யும்படி ராணுவ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரியானா, கல்கா என்ற இடத்தில் உள்ள ராணுவ தளவாடப் பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் கேப்டன் பூனம்.

உயரதிகாரிகள் மூன்று பேர் தன்னை பாலியல் ரீதியாகவும், மன அளவிலும் தொந்தரவு செய்ததாக ஒரு ஆண்டுக்கு முன்னர் புகார் கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இருந்தாலும், ராணுவ தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு, ராணுவ கோர்ட்டில் நடந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் ராணுவ கோர்ட் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கேப்டன் பூனம் வக்கீல் அகர்வால் கூறியதாவது: உயரதிகாரிகள் மீது பொய் குற்றச்சாட்டு கூறியது, ராணுவப் பணி தொடர்பான விஷயங்களை மீடியாக்களுக்கு தெரிவித்தது உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் கேப்டன் பூனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொய்யான குற்றச்சாட்டை கூறியதற்காக பூனத்தை பணியிருந்து டிஸ்மிஸ் செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்றார்.
===================

எங்குசென்றாலும் இதுபோன்ற ஜந்துக்கள் பொய்வழக்குப்போடுதல் என்ற வேலையை சிறப்பாகச் செய்யும். இந்த ஜந்துக்களுக்கு பொய்வழக்குப்போடுதல் என்பது பிறப்புரிமை போன்றதாகிவிட்டது.

சட்டசபை, பார்லிமெண்ட் போன்றவற்றில் 33% கொடுத்தால் இன்னும் பல பெருமைகளை நாட்டிற்கு சேர்க்க முடியும். அது என்ன 33%? 50 % கொடுத்தால் என்ன அரசியல்வாதிகளின் சொத்தா குறைந்துவிடப்போகிறது? ஏன் இந்த பாரபட்சம்? தங்களுக்குப் போட்டியாகிவிடுமோ என்ற பயமாக இருக்கலாம்!
“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.