தினமலர் மார்ச் 15,2010
மும்பை: இந்திய தண்டனைச் சட்டத்தின் ஒரு பிரிவைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, மாமியார் களையும் நாத்தனார்களையும் வதைக்கும் மருமகள்களுக்கு எதிராக, மாமியார்கள் கூட்டணி அணி திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத் தின் 498 -ஏ பிரிவு, கணவன் மற்றும் அவனது குடும்பத்தார், உதவியற்ற நிலையில் உள்ள மனைவி மீது வரதட்சணை உள்ளிட்ட சில பிரச்னைகளுக் காக வன் கொடுமை செய்வதைத் தடுக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரம், மாமியார், நாத்தனார், மாமனார் இவர்களைப் பழிவாங்க நினைக்கும் மனைவி மார்களும் இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
சமீபத்தில், மும்பையில், தன் மாமியார் லதா மிஸ்ரா, மாமனார் நாராயணன், இவர்களின் மனநிலை சரியில்லாத மகள் மூவரும் சேர்ந்து தன்னை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக 498-ஏ பிரிவின் கீழ் ஆர்த்தி என்பவர் புகார் கொடுத்தார்.லதா மிஸ்ரா, தினமும் "டயாலிசிஸ்' செய்ய வேண்டிய உடல்நிலை உள்ளவர். போலீசார் மூவரையும் தூக்கி உள்ளே வைத்துவிட்டனர்.
லதா மிஸ்ராவுக்கும் அவரது மனநிலை சரியில்லாத மகளுக்கும் மட்டும் கைது செய்த அன்று, உடல்நிலைக்காக ஜாமீன் வழங்கப் பட்டது. ஆனால், மாமனார் நாராயணன் இரண்டு நாள் சிறையில் கழித்து விட்டுத்தான் விடுதலையாகி இருக்கிறார்.இதனால், கொதித்துப் போன லதா மிஸ்ரா, மகளிர் தினத்தன்று, "கணவனின் தாய், மகள் மற்றும் தந்தை மீது சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துதல்' என்ற அமைப்பின் கீழ் பல பெண் களை இணைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இந்த அமைப்பு ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது.
மனைவிமார்கள் மட்டும் தான் பெண்களா? ஒரு ஆணின் அம்மா, சகோதரிகள் எல்லாம் பெண்கள் இல்லையா? மனைவிகளை மட்டுமே மையமாகக் கொண்டு தான் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.என் மருமகள் செய்த காரியத்தால் நாங்கள் தற்கொலை செய்யும் நிலைக்குச் சென்று விட்டோம். எங்களைப் போல பாதிக்கப் பட்டவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்' எனக் கொதிக்கிறார் லதா.
இவர்களின் குழு, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுகிறது. தங்கள் குறைகளை இதில் பலர் விவாதிக்கின்றனர். மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை சட்டரீதியாக எடுப்பதற்கு முயல்கின்றனர். சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது அங்கீகரிக்கப் பட்டால் இது ஒருவகையில் சட்டரீதியான துன்புறுத்தல் என்று தான் கொள்ளப்படும். பல வழக்குகள் மாமியாருக்கு ஜாமீன் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே வெள்ளிக் கிழமைகளில் தான் பதிவு செய்யப்படுகின்றன' என்கிறார் மினாள்வர்மா என்பவர்.
=======================================
கடந்த பல ஆண்டுகளாக நாட்டில் மருமகள் என்ற வடிவில் பல அரக்கிகள் உலவிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு துணைசெய்யும் துணை-அரக்கர்களாகவும் அரக்கிகளாகவும் பல சட்டங்களும் சட்டஅமைப்புகளும் செயல்பட்டு இந்தியக் குடும்ப அமைப்பு முறையை ஒழிக்கும் இழிசெயலில் ஈடுபட்டு வருகின்றன. இவைகளின் அட்டூழியங்கள் எல்லைமீறிவிட்டது.
எப்போதெல்லாம் நாட்டில் துஷ்டர்களின் ஆதிக்கம் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் கடவுள் ஏதாவது ஒரு உருவத்தில் தோன்றி அந்த துஷ்டர்களை ஒடுக்குவது இதிகாச காலந்தொட்டு நடந்துவரும் ஒரு செயலாகும்.

அது போல இப்போது மருமகள் என்ற ஒரு புனிதமான உறவின் பெயரை வைத்துக்கொண்டு பல அரக்கிகள் அட்டூழியம் செய்துவருவதை ஒடுக்க அன்னை ஆதிபராசக்தி அன்னையர்களின் வடிவில் ஒருங்கிணைந்து வந்துகொண்டிருக்கிறாள். புனிதப்பணியில் ஈடுபடும் இந்த அன்னையருக்கு நீங்கள்உதவிசெய்து நாட்டில் அமைதியை நிலைநாட்டி குடும்பங்களையும் உங்களது பெற்றோர்களையும், சகோதரிகளையும் காப்பாற்றுங்கள்.
"மருமகள்" என்ற பெயரில் இருக்கும் இந்த அரக்கிகளின் இழிசெயலால் உங்கள் வீட்டிலும் வயதான தாயார் அல்லது சகோதரிகள் பாதிக்கப்பட்டிருந்தால் கீழுள்ள இணைப்பில் உதவிகளைப் பெறலாம்.

All India helpline for mother-in-laws
No comments:
Post a Comment