இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, March 08, 2010

100-வது மகளிர் தினமும் 33 புரியாத புதிரும்

உலக மகளிர் தினத்தின் 100-வது ஆண்டு நாளில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயலாக இந்தியப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறப்போகும் படித்த பெண்கள் செய்யும் செயல் எப்படியிருக்கிறது பாருங்கள். ஐந்து கிலோமீட்டர் துணியில் கையெழுத்துப்போட்டு கின்னஸ் சாதனை செய்கிறார்களாம்!


தினமலர் மார்ச் 09,2010



கோவை : கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில், 5 கி.மீ., நீளமுள்ள வெள்ளைத் துணியில், மகளிர் தின வாழ்த்து எழுதும் சாதனை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில், 5 கி.மீ., நீள வெள்ளைத் துணியில் பெண்கள் வாழ்த்து எழுதும் கின்னஸ் சாதனை முயற்சியை, பல்கலை துணைவேந்தர் சரோஜா கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். பல்கலை பதிவாளர் கவுரி, ஆசிரியைகள், மாணவியர் ஒவ்வொருவரும் மகளிர் தின வாழ்த்து செய்தி எழுதி கையெழுத்திட்டனர். பல்கலை வளாகத்தில், இந்த கின்னஸ் சாதனை முயற்சி பற்றி அறிந்த கோவை பெண்கள் கையெழுத்திட்டு தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்தனர். நேற்று பிற்பகல் வரை 10,458 மகளிர் கையெழுத்திட்டுள்ளனர். பல பெண்களின் பங்களிப்பை ஈர்க்க இரண்டு நாட்களுக்கு நிகழ்ச்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.

பல்கலை துணைவேந்தர் சரோஜா கூறுகையில், ""கின்னஸ் சாதனைக்கு இதை அனுப்பி வைக்க உள்ளோம்,'' என்றார்.
==================================================

நாட்டில் எத்தனையோ ஏழைப்பெண்கள் கட்டிக்கொள்ள துணியில்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற ஏழைப்பெண்களுக்கு உதவி செய்திருக்கலாமே. பெண்கள் தினத்தன்று ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்கு உதவி செய்தவற்குக்கூட 33% இடஒதுக்கீடு இருந்தால் தான் செய்வார்களோ? அல்லது யாராவது ஆணாதிக்கத்தலைவர்கள் இதுபோன்ற செயல்களை தடுக்கிறார்களா?


இந்த நாளில் எத்தனையோ பல நல்லகாரியங்களை பெண்களே பெண்களுக்குச் செய்யலாம் அல்லவா.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும், எத்தனை சலுகைகள் கொடுத்தாலும் இந்தப் பெண்கள் இப்படித்தான் இருப்பார்களோ?
படித்த பெண்களே இப்படி இருந்தால் கிராமங்களில் வாழும் அப்பாவிப் பெண்களின் நிலை எப்படி இருக்குமோ? இவர்களுக்கு 100% சதவீத ஒதுக்கீடு கொடுத்தாலும் இவர்கள் நிலை அப்படியேதான் இருக்கும் போலிருக்கிறது. இவர்களை நம்பி எப்படி 33% இடஒதுக்கீடு நடந்துகொண்டிருக்கிறது என்பதுதான் ஒரு புரியாத புதிராக இருக்கிறது.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.