சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, March 04, 2010

மாறிவரும் " தாய்" என்ற சொல்


திருச்சி:"தன்னுடைய தாயுடன் தவறான தொடர்பு வைத்துக் கொண்டு கொடுமைப்படுத்தும் கணவன் மற்றும் தாய் மீதும், அவர்களுக்கு உதவும் வகையில் கொலை மிரட்டல் விடுக்கும் முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பிரின்ஸ் தங்கவேல் உள்ளிட்ட பலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பாதிக்கப்பட்ட இளம்பெண் கோரியுள்ளார்.

இதுகுறித்து முசிறி அந்தரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் விசாலாட்சி(22) நிருபர்களிடம் கூறியதாவது:நான், என் கணவர் நெடுமாறனை பிரிந்து வந்து, முசிறி அருகே அந்தரப்பட்டியில் தனியே வசிக்கிறேன். என்னுடைய அம்மா அய்யம்மாளுக்கு இரண்டு கணவர்கள். அதில் முதல் கணவருக்கு, நான் உட்பட ஐந்து பேர் பிறந்தோம். என்னுடைய சிறுவயதிலேயே என்னுடைய அப்பாவிடம் இருந்து அம்மா பிரிந்து விட்டார். பின், எங்களை அழைத்துக் கொண்டு திருப்பூர் சென்று, அங்கு இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நெடுமாறனுக்கும், என்னுடைய அம்மா அய்யம்மாளுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அந்த தவறான தொடர்பை தொடர, என்னை நெடுமாறனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.என்னுடைய அம்மாவுடன், என் கணவருக்கு இருந்த கள்ளத் தொடர்பால் மனமுடைந்த என் அண்ணன், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். நானும் ஒரு நாள், என் அம்மாவும், என் கணவரும் படுக்கையில் இருந்ததை பார்த்து விட்டேன். இதன் பின்னும் அவர்களுடன் இருக்கக்கூடாது என, முசிறியில் உள்ள என் அக்கா வீட்டுக்கு வந்து விட்டேன். நான் தங்கியிருந்த வீட்டில் இருந்து என்னை அடித்து, உதைத்து இழுத்துச் செல்ல முயன்றனர். ஆனால், நான் அவர்களிடம் இருந்து தப்பி விட்டேன்.

இது குறித்து, நான் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் செவந்திராஜாவுடன் சென்று முசிறி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தேன். மறுநாள், முசிறி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பிரின்ஸ் தங்கவேல், வக்கீல்கள் முத்துச்செல்வன், சேது ஆகியோருடன், என் தாய் மற்றும் அடியாட்கள் சிலர் வந்து, என்னை கடத்த முயற்சித்தனர். ஆனால், என் வீட்டின் உரிமையாளர் உதவியுடன் நான் திருச்சிக்கு தப்பினேன். இவ்வாறு விசாலாட்சி கூறினார்.அ.தி.மு.க., பிரின்ஸ் தங்கவேல் கூறியதாவது:இந்த பிரச்னைக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. அந்த விசாலாட்சி என்ற பெண், புருஷனை விட்டு விட்டு, வேறு ஒரு ஆளுடன் ஓடி வந்து முசிறியில் தங்கியுள்ளார். அதற்கு செவந்திராஜா அடைக்கலம் கொடுத்துள்ளார். இவ்வாறு பிரின்ஸ் கூறினார்.

=====================
இந்தியக் கலாச்சாரம் எந்த திசையில் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த செய்தி ஒரு உதாரணம். இதுபோன்ற தாய்மார்கள்தான் நிறைய உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற தாய்மார்களையும் இவர்கள் பெற்றுவிட்ட கண்மணிகளையும்தான் மகளிர் சங்கம் என்றபெயரில் இருக்கும் ஒரு கூட்டம் தத்தெடுத்துக்கொண்டு இலவச ஊட்டச்சத்தான IPC498A போன்ற சட்டங்களை பாசமுடன் ஊட்டிவளர்த்து நாட்டில் அலையவிட்டுகொண்டிருக்கிறார்கள்.
No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.