இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, March 14, 2010

பொய் வழக்குப் போடும் பெண்களின் எதிர்காலம்!

தினஇதழ் என்ற பத்திரிக்கையில் சீனாவில் திருமணத்திற்காக பெண்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்ற செய்தி வந்திருக்கிறது.


அறைகுறை ஆடையுடன் தெருவில் நடனமாடி மாப்பிள்ளையை தேர்ந்தடுக்க பெண்கள் நடத்திய நூதன சுயம்வரம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.

சீனாவில் உள்ள கான் சாலு என்ற இடத்தில் அங்குள்ள சுரங்கப்பாதை அருகே 8 இளம் பெண்கள் கூடினார்கள். அவர்கள் திடீரென தங்கள் மேலாடைகளை கழற்றி வீசி விட்டு ஜட்டி, பிராவுடன் நடனம் ஆடினார்கள். இளம் பெண்கள் நடனத்தை பார்த்ததும் என்ன, ஏதென்று தெரியாமல் ஏராளமானோர் கூடிவிட்டனர்.

அங்கு வந்திருந்த வாலிபர்களை பார்த்த அவர்கள் எங்களை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கெஞ்சியபடி நடனத்தை தொடர்ந்தனர். நடனமாடிய அனைவரும் அவர்கள் கையில் சில பேப்பர்களை வைத்து இருந்தனர். அதில் அவர்களை பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.

ஏன் இப்படி திடீர் நடன மாடுகிறீர்கள் என்று கேட்ட போது அவர்கள் கூறிய கதையை கேட்க பரிதாபமாக இருந்தது. அவர்கள் கூறியதாவது, எங்கள் அனைவருக்கும் 30 வயதை எட்டி விட்டது. இன்னும் திருமணமாக வில்லை. மாப்பிள்ளைகளை தேடுகிறோம் யாரும் கிடைக்கவில்லை. இதனால் எங்கள் பெற்றோர் இன்னும் வாழ்க்கையை அமைத்து கொள்ளாமல் என்ன செய்கிறீர்கள் என்று கூறி திட்டுகிறார்கள்.

நாங்கள் எல்லோருமே அழகாகத்தான் இருக்கிறோம். ஆனால் எந்த வாலிபரும் எங்களை திருமணம் செய்ய முன்வரவில்லை. எனவேதான் இப்படி நடனம் ஆடி மாப்பிள்ளைகளை தேர்வு செய்ய முடிவு செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். நீண்ட நேரம் அவர்கள் அங்கு நடனம் ஆடியும் கூட ஒரு வாலிபர் கூட அவர்களை திருமணம் செய்ய முன்வரவில்லை. எனவே மாப்பிள்ளை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் களைந்து சென்றனர்.


Calling themselves the 'Crazy Beauties', the women said they had deliberately timed the event to coincide with International Women's Day. "We think we are beauties, but we can't find our Mr Rights. Our age is close to 30, so we have to do something."

===========================

“நாங்கள் எல்லோருமே அழகாகத்தான் இருக்கிறோம். ஆனால் எந்த வாலிபரும் எங்களை திருமணம் செய்ய முன்வரவில்லை” என்று இந்தப் பெண்கள் வருத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த செய்தியைப் படித்த பிறகு நம்ம ஊரில் இருக்கும் பொய் வரதட்சணை வழக்குப் போடும் பத்தினிகளின் எதிர்காலம் தான் நினைவிற்கு வருகிறது.

நம்ம ஊரில் பொய் வரதட்சணை கேசு போட்டு கணவனின் வாழ்வை நாசமாக்குவதுடன் தனது இளமைக்கால வாழ்வையும் தொலைத்துக்கொண்டிருக்கும் பல இளம் பெண்கள் பத்து பதினைந்து ஆண்டுகள் நீதிமன்றத்தில் வழக்கை இழுத்தடித்தபிறகு கணவன் அந்த வழக்கில் கடைசியில் வெற்றி பெற்றுவிடுவான். பிறகு இந்தப் பெண்கள் இளமையில் இருந்த நல்ல வாழ்க்கையையும் தொலைத்து விட்டு வழக்கிலும் தோற்றபிறகு வாழ்க்கைத் துணை வேண்டி மறுமணத்திற்கு ஆள் தேடும்போது இப்படி ஒரு சூழ்நிலை அந்த அப்பாவிப் பெண்களுக்கு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பொய்கேசு போடுவதற்கு மட்டும் தான் சட்டங்களும் அரசாங்கமும், போலிசும், வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களும் பெண்ணுக்கு உதவி செய்யும். வழக்கில் தோற்றபிறகு வாழ்க்கையைத் தொலைக்கும் பெண்ணுக்கு பொய்கேசு போட உதவிய இந்ததக் கூட்டணி மறுமணம் செய்துவைத்து ஆதரவு கொடுக்குமா?

இப்படி அரசை நம்பி புருசனை கைவிடும் பெண்களின் நிலை மேலே சொல்லப்பட்ட சீன நாட்டுச் செய்தியைப் போலத்தான் இருக்கும். இதுபோன்ற நிலைதான் நாட்டில் இப்போது உருவாகிக்கொண்டிருக்கிறது. ஐயோ பாவம். இந்த பொய் வழக்குப் போடும் அபலைப் பெண்களை யார் காப்பாற்றப்போகிறார்களோ.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.