இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, August 29, 2014

குடும்பப் பிரச்சனையில் டில்லி போலிஸ் தலையிடாதாம்!!!!

ஆகஸ்ட் 30,2014 தினமலர்


புதுடில்லி : டில்லியில் இளம்பெண்ணை, இரு இளைஞர்கள் மானபங்கம் செய்ய முயன்றதை தட்டிக் கேட்ட, தேசிய மகளிர் கமிஷன் முன்னாள் தலைவர், மோகினி கிரி, கும்பலால் தாக்கப்பட்டார். அங்கு வந்த போலீசாரிடம், தன்னை காப்பாற்றுமாறு மோகினி கேட்டுக் கொண்ட பிறகும், போலீசார் அந்த இடத்தை விட்டு அகன்றதாக, அவர் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து, மோகினி கிரி கூறியதாவது: தெற்கு டில்லி பகுதியில், நான் காரில் சென்று கொண்டு இருந்தேன். ஒரு இளம்பெண்ணை, இளைஞர்கள் இருவர் தாறுமாறாக அடித்துக் கொண்டிருந்தனர். காரை நிறுத்தி, அந்தப் பெண்ணை காப்பாற்ற முயன்றேன். அங்கிருந்த மற்றொரு பெண், என்னை தாக்கி, கீழே தள்ளினாள். அப்போது, அந்த வழியாக வந்த போலீஸ் வாகனம் ஒன்றை மறித்து, என்னையும், அந்தப் பெண்ணையும் காப்பாற்றுமாறு கேட்டேன். ஆனால், வாகனத்தை நிறுத்தி இறங்கிய போலீசார், 'எங்களால் முடியாது' என, கூறிச் சென்றுவிட்டனர். அந்த பகுதிக்கு, இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு போலீஸ்காரரை தடுத்து நிறுத்தி, உதவி செய்யுமாறு கேட்டேன்; அவரும் மறுத்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, டில்லி போலீசார் கூறுகையில், 'தாக்கப்பட்ட பெண்ணும், அவரை தாக்கி யவர்களும் நன்கு நெருக்கமானவர்கள். அது, அவர்களின் குடும்ப பிரச்னை என்பதை தெரிந்ததும் தான், போலீசார் தலையிடவில்லை. மோகினி கிரி கூறுவது போல, இளம்பெண் மீதான பாலியல் அத்துமீறலோ, அது தொடர்பான பிரச்னையோ அல்ல' என்றனர்.


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.