இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, December 31, 2011

பெண்கள் கற்பழிப்புக்கு காரணம் ஆண்களல்ல

பெண்ணுக்கு உண்மையான சுதந்திரம் என்பது அவர்கள் அணியும் ஆடையில்தான் இருக்கிறது!! சம உரிமை என்பது எந்த அளவு ஆண்களை அடக்க முடியுமோ அவ்வளவு சமஉரிமை என்று அர்த்தம்!

ஐதராபாத்: பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு பெண்களின் ஆடைகள், ஆண்களை கவர்ச்சியூட்டி கவர்ந்திழுப்பதே காரணம். இன்றைய கிராமத்து பெண்கள் நாகரீக ஆடைகளை அணிகின்றனர் என ஆந்திரமாநில டி.ஜி.பி., தினேஷ் ரெட்டி கூறியுள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, டி.ஜி.பி.,யின் கருத்து முறையானதல்ல. அரசாங்கமோ அல்லது போலீசாரோ பெண்கள் என்ன அணிய வேண்டும் என்பது பற்றி முடிவு செய்ய முடியாது. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்வதற்கு பல காரணங்கள் இருக்கும். ஆனால் அதனை தடுப்பதும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுமே முக்கியம் என கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், டி.ஜி.பி., கருத்தில் உடன்பாடு கிடையாது. நாட்டில் உள்ள அனைவருக்கும் என்ன அணிய வேண்டும் என்பதை உரிமை செய்ய அவர்களுக்கு உண்டு. இதனை கொள்கையாக மாற்ற முடியாது. இது போன்ற கருத்து மாநில டி.ஜி.பி.,யிடமிருந்து வரும் என எதிர்பார்க்கவில்லை என கூறினார்.

முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான கிரண்பேடியும் ஆந்திர டி.ஜி.பி.,கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Monday, December 26, 2011

திருமண வரதட்சணைக்கு இன்சூரன்ஸ் உண்டா?


புதுடில்லி : திருமண விருந்தின் போது உணவு விஷமாகி, உறவினர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டால் கூட, இழப்பீடு கோரும் வகையில், இன்சூரன்ஸ் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என கூறப்பட்டாலும், இதற்காக, சாமானிய மக்களும், பல லட்ச ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. பல்வேறு சிரமங்களுக்கிடையே கூடி வரும் திருமணம், கடைசி நேரத்தில் ஒரு சில காரணங்களால் தடைபட்டு, ஏராளமான பணம் வீணாக நேரிடுகிறது. இந்த சிரமத்தை போக்க, "ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்ட்' நிறுவனமும், "பஜாஜ் அலையன்ஸ்' நிறுவனமும், திருமண இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

நான்கு வகை பிரிவுகளில், இன்சூரன்ஸ் செய்வோருக்கு, இரண்டு லட்சம், நான்கு லட்சம், ஆறு லட்சம் மற்றும் எட்டு லட்ச ரூபாய் வரை, இழப்பீடு அளிக்கப்படுகிறது. இதற்காக, 4 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை, பிரீமியம் செலுத்த வேண்டும்.

தீ விபத்து மற்றும் வேறு வகையான விபத்துகள், கொள்ளை, திருட்டு ஆகிய காரணங்களால், திருமணம் தடைபட்டால், இந்த இழப்பீடு வழங்கப்படும். திருமண விருந்தின் போது, உணவு விஷமாகி விருந்தினர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டால் கூட, இழப்பீடு பெற இந்த இன்சூரன்ஸ் திட்டங்கள் வழி செய்கின்றன.

சில மரணங்களாலோ, மணமக்கள் காயம் பட்டு, அதனால் திருமணம் தடை பட்டாலோ அல்லது தள்ளி வைக்கப்பட்டாலோ, இழப்பீடு பெற முடியும். ஆனால், மணமக்களுக்கிடையே ஏற்படும் தனிப்பட்ட முறையிலான கருத்து வேறுபாட்டால் திருமணம் தடைபட்டால், இந்த இழப்பீடு பொருந்தாது.



Tuesday, December 13, 2011

இரண்டு பெண்களும் போலிஸூம்

பதவியை வைத்து மிரட்டக் கூடாது என்பதால் புகார் கூறினேன்: ஐ.பி.எஸ்., மீது பெண் புகார்
டிசம்பர் 14,2011 தினமலர்

சென்னை : "" ஐ.பி.எஸ்., பயிற்சி அதிகாரி வருணை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. பதவியை வைத்து மிரட்டக் கூடாது என்பதற்காக தான் புகார் அளித்தேன்,'' என்று பிரியதர்ஷிணி தெரிவித்துள்ளார். சென்னை, வளசரவாக்கம், கனகதாரா நகர், கிருஷ்ணா தெருவைச் சேர்ந்தவர் கோகுல் சாகர், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., இவரது மகள் பிரியதர்ஷினி. திருச்சியைச் சேர்ந்தவர் வருண்குமார், ஐ.பி.எஸ்., பயிற்சி அதிகாரி. இவர்கள் இருவரும், கடந்த 2007ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகடமி ஒன்றில் பயிற்சி பெற்றனர். அப்போது இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. தேர்வுக்காக டில்லி சென்ற போது, வருண் குமார், தன் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் பிரியதர்ஷிணியை அறிமுகப்படுத்தினார். அப்போது, அவர்கள் பயிற்சி முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று உறுதியளித்துள்ளனர்.

அதன் பின், தேர்வு எழுதியதில், வருண் குமார் வெற்றி பெற்று அடுத்த கட்ட தேர்வு எழுதுவதற்காக டில்லி சென்ற போது, பிரியதர்ஷிணியே அவருக்கு பொருளாதார உதவிகளை செய்து வந்தார். டில்லியில் இருவரும் இருந்த போது, தன் மகனை பார்த்துக் கொள்ளுமாறு பிரியதர்ஷிணிக்கு வருணின் தந்தை வீரசேகரன் பலமுறை இ-மெயில் அனுப்பியுள்ளார். பிரதான தேர்வு முடிந்த பின், வருணும் பிரியதர்ஷிணியும் கடந்தாண்டு நவம்பர், சென்னை வந்தனர். அதன் பின், நேர்முகத் தேர்வுக்கு தயாராகினார் வருண். அதற்கும் பல வழிகளில் பிரியதர்ஷிணியே பணம் செலவழித்துள்ளார்.

நேர்முகத் தேர்வுக்காக, தன்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் வருணுக்கு கொடுத்தார் பிரியதர்ஷிணி. இந்தாண்டு இறுதியில் இருவருக்கும் திருமணம் செய்வதாகவும் இரு குடும்பத்தினர் பேசினர். இதற்கிடையில், வருண்குமார் ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சிக்குச் சென்ற நிலையில், பிரியதர்ஷிணியை திருமணம் செய்ய வேண்டுமானால் பி.எம்.டபிள்யூ.,கார் மற்றும் 50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு கிலோ தங்கம் வேண்டும் என வருணின் பெற்றோர் கேட்டுள்ளனர்.

மற்றொருபுறம், பெற்றோரை சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொள்வதாக வருண், பிரியதர்ஷினியிடம் கூறியுள்ளார். அதன் பின், வருண் திருமணம் செய்து கொள்ள மறுக்க, பிரியதர்ஷிணி வருணிடம் கேட்ட போது, மிரட்டியுள்ளார். இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், சமீபத்தில் பிரியதர்ஷிணி புகார் அளித்தார். புகார் குறித்து, விசாரணை நடத்துமாறு, வடபழனி உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று பகல் பிரியதர்ஷிணி, எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் அபெய்குமார் சிங்கை சந்தித்துவிட்டு வந்த அவர் கூறியதாவது: நான் ஏற்கனவே அளித்த புகாருக்கு தேவையான ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்காக இங்கு வந்தேன். அவர் தேர்வில் வெற்றி பெற்ற சந்தர்ப்பத்தில், அவரது குடும்பத்தினருடன் நான் இருந்த போட்டோ, கடந்த மாதம் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. மேலும், அவர் எனக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ்., விவரங்களையும் பதிவு செய்து கூடுதல் கமிஷனரிடம் கொடுத்துள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். போலீசார் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

வருண்குமார், தற்போது என்னை தெரியாது என்றும், எனது நடத்தையை குறையாகவும் கூறியுள்ளார். பழகி விட்டு, அதன் பின் ஒரு பெண் எதிர்த்தால், அப்பெண்ணைப் பற்றி அவதூறு பேசுகின்றனர். எனக்கு, வருண் குமாரை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தன் பதவியை பயன்படுத்தி, மற்றவர்களை மிரட்டுகிறார். அப்படி இனியாரையும் அவர் மிரட்டக் கூடாது. பிரச்னைகளை பேசி தீர்த்திருக்க வேண்டும். அதை விடுத்து, அவர் எனது உயிருக்கே மிரட்டல் விடுத்ததால் தான் நான் புகார் அளித்தேன். அவர், என்னை தெரியாது என்கிறார். அப்படியானால், அவர் வைத்திருக்கும் மொபைல் எண்ணில் இருந்து எனக்கு," நான் வேறு பெண்களை பற்றி கூறியபோதும் என் பெற்றோர் வேண்டாம் என்றனர். உன்னையும் வேண்டாம் என்கின்றனர். அவர்களை சம்மதிக்க வைப்பேன்' என்று எஸ்.எம்.எஸ்., அனுப்பியுள்ளார். அது எப்படி சாத்தியமாகும். அவரை பழிவாங்க வேண்டி, புகார் அளிக்கவில்லை. விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தான் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


ஈரோடு : கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி, அவரது வீட்டின் முன் குழந்தையுடன் அமர்ந்து, இளம்பெண் தர்ணா போராட்டம் செய்தார். திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தம். இவரது மகள் பிருந்தா தேவி,29; திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார். இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

ஈரோடு அருகே வில்லரசம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுக கவுண்டர் மகன் ராதாகிருஷ்ணன். திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவரது வீட்டுக்கு வந்த பிருந்தா தேவி, தன் குழந்தையுடன் வீட்டு வாயிலில் அமர்ந்தார். "எங்கள் இரண்டு பேரையும் சேர்த்து வைக்க வேண்டும்' எனக் கோரி, விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பிருந்தா தேவி கூறியதாவது: திருப்பூர் பனியன் கம்பெனியில் பணிபுரிந்தேன். வில்லரசம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், அங்கு பனியன் கம்பெனி நடத்தி வந்தார். எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. 2008ல் திருப்பூர் மாவட்டம், மூலனூரில் உள்ள குலதெய்வம் கோவிலில், எங்கள் குடும்பத்தார் சம்மதத்துடன், எனக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. மாற்று ஜாதி காரணமாக, கணவர் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கள் வீட்டிலேயே இருவரும் குடும்பம் நடத்தி வந்தோம். நான் ஏழு மாதம் கர்ப்பமாக இருந்த போது, ராதாகிருஷ்ணன் ஈரோட்டில் உள்ள வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது திருப்பூர் போலீசாரிடம் புகார் தெரிவித்தேன். போலீசார் தலையிட்டு, எங்களை சேர்த்து வைத்தனர்.டிச., 5ம் தேதி, திருப்பூர் வந்த ராதாகிருஷ்ணனின் அண்ணன் சிவசங்கர், உறவினர்கள் கஸ்தூரி, லலிதா, சிவசங்கர் ஆகியோர், என் கணவரை அழைத்துச் சென்று விட்டனர். அவரது மொபைல் போன், "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்தேன். நேற்று முன்தினம் மாலை, மகளிர் போலீஸ் ஒருவர், ஈரோட்டில் உள்ள என் கணவன் வீட்டுக்கு என்னை அழைத்து வந்தார். என் கணவரிடம், "சேர்ந்து வாழுங்கள்' என, அறிவுரை கூறிவிட்டு, பெண் போலீஸ் சென்று விட்டார். ஆனால், என் கணவர் குடும்பத்தார், "உனக்கும் என் மகனுக்கும் திருமணமே நடக்கவில்லை. பல ஆண்களுடன் உனக்கு தொடர்பு உள்ளது. இந்த குழந்தை வேறு யாருக்கோ பிறந்தது' என்று கூறி, என்னை வெளியே தள்ளி, வீட்டை பூட்டிச் சென்று விட்டனர். இதுவரை யாரும் வந்து பார்க்கவில்லை. இவ்வாறு பிருந்தா தேவி கூறினார்.

ராதாகிருஷ்ணன் உறவினர்கள் கூறுகையில், "இவர் விபசார கும்பலை சேர்ந்தவர். இவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ளது. ராதாகிருஷ்ணனுக்கும், இவருக்கும் திருமணமாகவில்லை. இதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன' என்றனர்.

பிருந்தா தேவி கூறுகையில், ""ராதாகிருஷ்ணன் தான் என் கணவர். வேண்டுமானால் என் குழந்தைக்கு டி.என்.ஏ., பரிசோதனை செய்ய தயார்,'' என்றார்.

கணவன் வீட்டாரால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பிருந்தா தேவிக்கு, வீரப்பன்சத்திரம் போலீசார் இரண்டு பேர், பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். நேற்று இரவு வரை, பிருந்தா தேவி அங்கேயே இருந்தார். இச்சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.