இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, April 29, 2011

மனைவிக்கு இடையூறு செய்யும் கணவர்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவில் திருமணம் செய்து கணவனாகிவிட்டவர்கள் தங்கள் மனைவியிடம் பக்குவமாக எந்தஒரு இடையூறும் செய்யாமல் நடந்துகொள்ளவேண்டும். ஏனென்று தெரிந்துகொள்ள பின்வரும் செய்தியை படியுங்கள். அதிகமாக இடையூறு செய்தால் இரண்டு லட்சம் போதும் உங்களை அடக்கி அடக்கமே செய்துவிடுவார்கள்.

பின்வரும் செய்தியைப் படிப்பதற்கு முன்பு திருவள்ளுவரின் இந்த திருக்குறள்களை படித்து மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.

"மனைவி" என்ற உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தெய்வப் புலவர் திருவள்ளுவரின் விளக்கம்

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.

***********************

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.


மனைவியின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை :கூலிப்படையினருடன் மனைவியும் கைது
ஏப்ரல் 30,2011 தினமலர்


திருவள்ளூர், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி ஜோதி மற்றும் கூலிப்படையினர் தைரியநாதன், ரமேஷ், ரவீந்திரன், ஜானகிராமன்.

திருவள்ளூர்:கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கழுத்தறுத்துக் கொலை செய்த பாசக்கார மனைவியை, கூலிப் படையினருடன் போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வகுமார்(45); ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜோதி(38). இவர்களுக்கு திருமணமாகி அபிலாஷ்(15), அஜீத்(12) என இரண்டு மகன்களும், பிரீத்தா(10) என்ற மகளும் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 21ம் தேதி அதிகாலை செல்வகுமார் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் அறுக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி ஜோதி செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.கொலையாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகளை திருவள்ளூர் எஸ்.பி., வனிதா அமைத்தார்.

விசாரணையில், செல்வகுமாரின் சொந்த ஊரான பெரம்பூர் அகரம் பகுதியை சேர்ந்த தைரியநாதன், அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்து சென்றதும், செல்வகுமாரின் இறுதிச்சடங்கில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, அடக்கம் செய்யும் வரை இருந்துவிட்டுச் சென்றதும் தெரிந்தது.மேலும்,தைரியநாதன் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை செல்வகுமாருக்கு கடன் கொடுத்திருந்ததும், அதனால் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்ததும், இங்கு வந்து செல்லும்போது செல்வகுமார் மனைவி ஜோதியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதும் தெரிந்தது.

செல்வகுமார் மனைவி ஜோதியை கைது செய்து விசாரித்தபோது, தைரியநாதனுடன் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாலும், கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்ததால், தைரியநாதன் உதவியோடு கணவரை கொலை செய்ய முடிவு செய்ததாக, அவர் போலீசாரிடம் கூறினார் மேலும் செல்வகுமாரை கொலை செய்வதற்காக தைரியநாதன், புளியந்தோப்பு மற்றும் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கூலிப் படையினரிடம் 2 லட்சம் ரூபாய் பேரம் பேசி, ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, செல்வகுமார் மனைவி ஜோதி ஒத்துழைப்போடு 20ம் தேதி இரவு வேப்பம்பட்டு அம்பேத்கர் நகர் வந்தனர்.

அன்று இரவு செல்வகுமார் கீழ் தளத்தில் படுத்துறங்கியதும், வீட்டின் தெரு கதவை திறந்து வைத்துவிட்டு, பிள்ளைகளுடன் மாடியில் படுத்துக் கொண்ட ஜோதி, தைரியநாதனுக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக அங்கு கூலிப்படையுடன் வந்த தைரியநாதன், தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமாரை கத்தியால் கழுத்தை அறுத்தும், முதுகு, வயிற்றுப் பகுதியில் அறுத்தும் கொலை செய்ததாக தைரியநாதன் போலீசாரிடம் கூறினார்.இதையடுத்து தைரியநாதன் அடையாளம் காட்ட, சென்னையில் பதுங்கியிருந்த கூலிப்படையினரான அகரம் பெரம்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்(24), கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த ரவீந்திரன்(24), ஜானகிராமன்(24) ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வேலு, தங்கமணி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
====

உயிர்மீது பயம் இருக்கும் கணவர்கள் பின்வரும் வீடியோவில் இருக்கும் பாதுகாப்பான வழியைப் பின்பற்றலாம்.





Sunday, April 24, 2011

கோயிலுக்குச் சென்றால் கொடுமை!

“கொடுமை கொடுமை என்று கோயிலுக்குச் சென்றால் அங்கே இரண்டு கொடுமைகள் ஜிங்கு ஜிங்கு என்று ஆடிக்கொண்டிருந்ததாம்” என்று நாட்டுப் புறங்களில் தங்களது குறைகளைத் தீர்க்க வழியில்லாமல் மக்கள் புலம்பிக்கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்.

இதுதான் இன்றைய இந்தியத்திருமண வாழ்க்கையில் சிக்கியிருப்பவர்களின் நிலை. இக்காலத்தில் கணவன் மனைவிக்கிடையே சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் “புதிய பெண்ணுரிமை” கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட பல மனைவியர் தாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் எல்லா குடும்பப் பிரச்சனைகளுக்கும் வரதட்சணைக் கொடுமை என்ற ஒரே சாயம் பூசி கணவனுக்கெதிராக வரதட்சணைப் புகாரை எழுதி எடுத்துக்கொண்டு மகளிர் காவல்நிலையத்திற்குச் சென்று புகாரை நீட்டிவிடுகிறார்கள்.

இதுபோன்ற மனைவியர் மகளிர் காவல் நிலையங்களை மனைவியரின் சகலவிதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் கற்பக மரத்தடி தேவலோகம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் “கொடுமை கொடுமை என்று கோயிலுக்குச் சென்றால் அங்கே இரண்டு கொடுமைகள் ஜிங்கு ஜிங்கு என்று ஆடிக்கொண்டிருந்ததாம்” என்ற பழமொழி மகளிர் காவல் நிலையங்களுக்குத்தான் நன்றாக பொருந்தியிருக்கிறது என்பது இந்த மனைவியருக்குத் தெரிவதில்லை.

ஏனென்றால் மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண்களின் நிலைமையே தலைகீழாக இருக்கிறது. அங்கிருக்கும் பெண் போலிஸிற்கே பாலியல் கொடுமை, குடும்பப் பிரச்சனை, வழக்குகளை கையாள முடியாத மன அழுத்தம் போன்ற பல தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் இருக்கும் பெண் காவலர்கள் கணவனிடம் சண்டை போட்டுவிட்டு எடுத்ததற்கெல்லாம் காவல்நிலையத்திற்கு ஓடும் மனைவியரை விட மிகுந்த பரிதாபமான, மன உளைச்சல் மிக்க சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

இவர்களை நாடி செல்லும் மனைவியருக்கு இந்த மகளிர் காவல்நிலையங்களில் ஏதாவது தீர்வு கிடைக்குமா? ஏற்கனவே பலவித மன உளைச்சலுடன் இருக்கும் காவலர்கள் இதுபோன்ற மனைவியர் தங்கள் கணவன் மீது பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்ய வரும்போது யார் குடி கெட்டால் நமக்கென்ன என்ற மனப்பான்மையுடன் வருகின்ற புகாருக்கெல்லாம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை ஏதும் செய்யாமல் வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள். இதுதான் இன்று பல பொய் வரதட்சணை வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் குவிந்திருப்பதற்குக் காரணம்.

கடைசியில் அழிந்துபோவது யாருடைய வாழ்க்கை என்று உங்களுக்குத் தெரியுமா?


மதுரை:வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளாலும், குடும்பத்தினராலும் மனஅழுத்தத்திற்கு ஆளாகும் பெண் போலீசார், "கவுன்சிலிங்' பெற வழியின்றி, தற்கொலை முடிவை தேடுகின்றனர்.

அதேபோல், குடும்ப பிரச்னையுடன் வரும் பெண்களுக்கு, பெண் போலீஸ் பற்றாக்குறையால் "கவுன்சிலிங்' அளிக்க முடியவில்லை. ஈரோடு ஏட்டு வள்ளி(35), போலீஸ் அதிகாரிகளால் "செக்ஸ்' தொந்தரவுக்கு ஆளான விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பெண் போலீசாரின் பாலியல் புகார் குறித்து விசாரிக்க, அந்தந்த மாவட்டங்களில் எஸ்.பி., அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, கடந்தாண்டு மார்ச் 14ல், மதுரை போலீஸ் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில், டி.ஜி.பி., லத்திகா சரண் தெரிவித்தார்.அதிகாரிகளால் "செக்ஸ்' தொந்தரவுக்கு ஆளாகும் பெண் போலீசார், "புகார் கூறினால் வேலைக்கு ஆபத்தாகி விடும்' என தயங்குகின்றனர். சமீபத்தில், தென்மாவட்ட எஸ்.பி., ஒருவர் மீது செக்ஸ் புகார் கூறிய பெண் எஸ்.ஐ., வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். "இதுபோன்ற காரணங்களால், செக்ஸ் புகார்களை சொல்ல தயங்குகிறோம். அதையும் மீறி கூறினால், அசிங்கப்படுத்தப்படுகிறோம்,'' என பெண் போலீசார் புலம்புகின்றனர். இவர்களுக்கு "கவுன்சிலிங்' அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படாததால், பெண் போலீசார் தற்கொலை செய்கின்றனர். மதுரையில் மூன்று ஆண்டுகளில், நான்கு பெண் எஸ்.ஐ.,க்கள், இரு போலீசார் இறந்தனர். இவர்கள் தற்கொலைக்கு, வழக்கமாக சொல்லப்படும் "குடும்ப பிரச்னை, உடல்நலப்பிரச்னை' என காரணம் கூறப்பட்டது.

போலீசாருக்கு இந்த நிலை என்றால், அவர்களிடம் புகார் கூறவரும் சாதாரண குடும்ப பெண்களின் நிலைமை பரிதாபம். வரதட்சணை கொடுமை, பெண்கள் மீதான வன்கொடுமை போன்றவற்றை விசாரித்து நடவடிக்கை எடுக்க, மதுரையில் நகர், தெற்கு, வடக்கு ஸ்டேஷன்கள் உள்ளன. இந்த ஸ்டேஷன் போலீசார், வழக்குப்பதிவு செய்யாமல், புகார்தாரர்கள் சமரசமாக செல்ல, "கவுன்சிலிங்' நடத்த சென்னையில் பயிற்சி பெற்றனர். புகார் செய்தவர்களின் ஊருக்கே சென்று "கவுன்சிலிங்' நடத்த ஒரு எஸ்.ஐ., இரு ஏட்டுகள், டாக்டர், தொண்டு நிறுவன ஊழியர், வக்கீல், மனவள நிபுணரைக் கொண்ட நடமாடும் குழுவும் உருவாக்கப்பட்டது.

இன்று ஆள் பற்றாக்குறையாலும், போலீஸ் துறை அல்லாதவர்கள் "கவுன்சிலிங்' செய்ய முன்வராததாலும், இக்குழு முடங்கி உள்ளது. இதனால், ஸ்டேஷனில் விசாரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

கடந்தாண்டு தெற்கு மகளிர் ஸ்டேஷனில் புகார் கொடுத்த மேலபொன்னகரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதிப்பதாக கூறி, ஸ்டேஷன் முன் விஷம் குடித்து, தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்த கணவரும் விஷம் அருந்தி, தற்கொலைக்கு முயன்றார். இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க, பெண் போலீசார் தைரியத்துடன் முன்வந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது புகார் கொடுக்க வழிவகைகள் செய்ய வேண்டும். குடும்ப பெண்களின் பிரச்னை தீர, அனுபவம் வாய்ந்த, பயிற்சி பெற்ற ஏட்டுக்களை "கவுன்சிலிங்' செய்ய நியமிக்க வேண்டும். நடமாடும் "கவுன்சிலிங்' குழுவுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Friday, April 22, 2011

சிறுமிகளை பெண்களாகக் கருதலாமா?


இந்த சிறுமி, குப்பை கொட்டவில்லை, கொட்டிய குப்பைக் குவியலில் இருந்து ஏதாவது கிடைக்குமா என்று தேடுகிறார். உலக பூமி தினமான நேற்று, அசாம் மாநிலம், திம்மபூர் குப்பை கிடங்கில், இந்த சிறுமியே குப்பை போல சமூகத்தால் தூக்கி எறியப்பட்டுள்ளார். இவரைப் போன்ற சிறுமியரை மீட்பது எப்போது. (தினமலர் கருத்துப்படம் 23.4.2011)

====

இந்தியாவில் ஏழைப் பெண்களும், சிறுமிகளும் வாழ வழியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகம் என்று தனி அமைச்சகமும் அதற்கு ஒரு மந்திரியும் இருக்கிறார், தேசிய மகளிர் வாரியம், மாநில மகளிர் வாரியம் என பல அரசாங்க அமைப்புகள் இருக்கின்றன. இது தவிர வெளிநாட்டு மற்றும் அரசாங்க உதவி பெறும் பெண்களுக்காக போராடும் தன்னார்வ அமைப்புகள் பல இருக்கின்றன.

இத்தனை அமைப்புகள் இருந்தாலும் மேலே செய்திப் படத்தில் இருப்பது போலத்தான் பல இந்தியப் பெண்களின் வாழ்க்கை இன்றும் இருக்கிறது. சரி அப்படியென்றால் இந்த அரசாங்க அமைப்புகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம்.

இந்த அமைப்புகளின் பார்வையெல்லாம் ஒரே பக்கம்தான் இருக்கும். அதுதான் வரதட்சணைக் கொடுமை என்ற கூப்பாடு. இது மட்டுமே இவர்கள் கருத்தில் எப்போதும் இருக்கின்ற பெண்களின் பிரச்சனை. இது தவிர “நவீன பெண்ணுரிமை” கோட்பாடும் இவர்களது மிக உயரிய குறிக்கோள். ஏனென்றால் “வரதட்சணை” என்ற பெயரில் பலவித சட்டங்கள் இயற்றலாம், நிதி ஒதுக்கீடு செய்யலாம், வெளிநாடுகளில் நிதியுதவி பெறலாம் இன்னும் என்னன்னவோ இருக்கிறது.

உண்மை நிலை இப்படியிருக்கும்போது இந்த பெண்கள் நல அமைப்புகளுக்கு ஏழ்மையில் தவிக்கும் இந்தியப் பெண்களின் நிலை குறித்து யோசிக்க நேரமிருக்குமா?

`Pub bharo' to beat moral police: Renuka Choudhary - Times Of India

Feb 6, 2009 ... NEW DELHI: Turning the iconic freedom struggle slogan " jail bharo" on its head, Minister of State for Women and Child Development since ...

August 29, 2007 Rediff News

"I am here to teach men what their mothers didn't teach them," declared Women and Child Development Minister Renuka Chaudhury


Thats Tamil News, 3/4/2008

கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

ஜனாதிபதியை எதிர்க்கும் பெண்கள் சங்கத்தலைவிகள்

தினமலர் ஜனவரி 06,2009

புதுடில்லி : "வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான சட்டத்தை பெண்களில் சிலர், தவறாகப் பயன்படுத்தி கணவர்களைத் தண்டிக்கின்றனர் என்ற சர்வே தகவல் கூறுகிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவி சுதா சுந்தரம் கூறுகையில், "பெண்கள் சம்பந்தப்பட்ட பல சட்டங்கள் போதுமான அளவில் அமல்படுத்தப்படுவதில்லை. பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ள சட்டங்களை சரியாக அமல்படுத்தாத நிலையில், ஜனாதிபதியின் கருத்து வேதனையானது' என்று தெரிவித்தார்.



Tuesday, April 19, 2011

இந்தியக் காதலுக்கு இது புதுசு!


துரைப்பாக்கம் : பழைய காதலனுடன் தொடர்பு வைத்திருந்ததால் மனைவியை ஒன்றரை மாதத்துக்கு முன் வீட்டை விட்டு விரட்டினார் மெக்கானிக். குழந்தையை கேட்டு திரும்பி வந்த மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு போலீசில் அவர் சரணடைந்தார்.

பெருங்குடி கல்லுக்குட்டை அம்பேத்கர் புரட்சி நகரை சேர்ந்தவர் பாரி (25). ஆட்டோ மெக்கானிக். இவரது மனைவி கவிதா (22). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடமாகிறது. ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

கடந்த சில மாதங்களாக கணவன் வேலைக்கு சென்றதும் கவிதா வெளியே சென்றுள்ளார். இதை பாரி கண்காணித்துள்ளார். அப்போது, ராயபுரத்தை சேர்ந்த கதிர் என்பவரை கவிதா திருமணத்துக்கு முன்பே காதலித்து சுற்றித் திரிந்ததும், அவர்களுக்குள் மீண்டும் தொடர்பு ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்தது. மனைவியை கண்டித்து, கதிருடன் தொடர்பை விடும்படி கூறியுள்ளார்.

எனினும் அவர்கள் தொடர்பு நீடித்துள்ளது. இதனால் ஒன்றரை மாதத்துக்கு முன்பு குழந்தையை வாங்கிக் கொண்டு, காதலனுடன் போய் விடு என்று திட்டி அனுப்பியுள்ளார் பாரி. ராயபுரத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கிய கவிதா, விவாகரத்து கேட்டும் குழந்தையை கேட்டும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் தாய் சுமதியுடன், குழந்தையை பார்க்க நேற்று பெருங்குடிக்கு கவிதா வந்துள்ளார். தாய் வெளியே நின்றுகொள்ள, கவிதா மட்டும் வீட்டில் சென்று பாரியிடம் குழந்தையை கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த பாரி, கவிதாவின் துப்பட்டாவை பறித்து அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் துரைப்பாக்கம் போலீஸ் நிலையம் சென்று சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
====

திருமணத்திற்கு முந்தைய காமத்தை திருமணத்திற்குப் பிறகும் தடையில்லாமல் கணவனுக்குத் தெரியாமல் கள்ளக் காமமாகத் தொடர உதவுவதுதான் இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டங்கள்.

கள்ளக்காமம் கணவனுக்குத் தெரியவரும்போதே அவன் மீது பொய் வரதட்சணை வழக்கைப் போட்டுவிட்டால் அவன் தனது குடும்பத்தோடு காவல்நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலைந்துகொண்டிருப்பான். இப்படி கள்ளக்காமத்திற்குத் தடையாக இருக்கும் கணவனை வரதட்சணை வழக்கு என்ற “சிறு வேலை” கொடுத்து “பிஸியாக” வைத்திருந்தால் மனைவியை கண்டிக்கவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்படுமா?
அல்லது அதைப்பற்றித்தான் சிந்திக்க நேரம் இருக்குமா? இந்தியாவில் பலருக்கும் இந்த இந்திய சட்ட ரகசியம் தெரியும்.

இப்படிக் கணவனை பொய் வரதட்சணை வழக்கில் சிக்கவைத்துவிட்டு பிறகு தன்வசதிக்கேற்றபடி மனைவி யாருடன் வேண்டுமானாலும் உல்லாசமாக இருக்கலாம். பெண்ணுக்கு கள்ளக்காமம் செய்யவேத் தெரியாது என்று பாரத அன்னை மீது சத்தியம் செய்யாத குறையாக இந்திய சட்டம் கள்ளக்காமப் பெண்ணுக்கு பாதுகாப்பாக வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறது. அதனால் இதுபோன்ற சட்டங்கள் இருக்கின்ற வரையில் கள்ளக்காம மனைவி சட்டத்தின் அங்கீகாரத்துடன் இன்பமாக இருக்கலாம் அல்லவா? இதைப் பற்றித் தெரியாதவர்கள்தான் இப்படி துன்பத்திற்கு ஆளாகிறார்கள். பாவம்!
IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
W.P.No.45974 of 2006
(O.A.No.8971 of 2000)
DATED: 28.02.2011

23. In this context, an analogy must be drawn to the offence of 'adultery' defined in Section 497 of IPC. The offence of adultery as defined in that section can only be committed by a man, not by a woman. Section itself provides that the wife shall not be punishable even as an abettor. The Indian penal Code itself contemplates that the wife, who is involved in an illicit relationship with another man, is a victim and not author of the crime. .... ... ...


Sunday, April 17, 2011

இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் பெண்கொடுமை

தினமலரில் வந்துள்ள செய்திப் படத்தைப் பாருங்கள். இதுவும் இந்தியப் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைதான். பெண்களின் வாழ்க்கைத்தரம் இப்படி கீழ்நிலையில் இருப்பதற்குக்காரணம் யார்? இதற்கும் கணவனும், மாமியார் கொடுமைதான் காரணமா?

வரதட்சணை மட்டுமே பெண்களுக்கான பிரச்சனை கிடையாது அதையும்தாண்டி பல முக்கியமான பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஏன் பெண்ணுரிமை சங்கங்களும், பெண்கள் நல வாரியங்களும் கண்டுகொள்வதில்லை?

வரதட்சணை இன்னும் இந்தியாவில் இருப்பதாகக் கற்பனை செய்தால்கூட அது இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்குமே தவிர ஒவ்வொரு இந்தியக் குடும்பத்திலும் இருக்கின்ற விஷயம் கிடையாது. ஆனால் பின்வரும் படத்திலுள்ளது போன்ற கொடுமைகள் ஒவ்வொரு சராசரி இந்தியப் பெண்ணும் தினசரி அனுபவித்துக்கொண்டிருக்கும் கொடுமையாகும். இதுபோன்ற பிரச்சனைகளை பெண்விடுதலை பேசும் அமைப்புகள் ஏன் திரும்பிக்கூட பார்ப்பதில்லை?


(தினமலரின் கருத்து) எத்தனையோ இலவச திட்டங்களை அறிவித்து மக்களை மயக்கி, ஓட்டுகள் வாங்கும் அரசியல்வாதிகளே இதை பாருங்கள்... நல்ல தண்ணீர் குழாய் அருகே கழிவு நீர் சாக்கடை ஓடுகிறது, இதனால் அப்பகுதிமக்கள் கழிவு நீர் கலந்த குடிநீரை பலகாலமாக பருகி பல்வேறு நோய்களுக்கு ஆளாகியது தான் மிச்சம். இந்நிலை மாற இலவசங்கள் வேண்டாம் சுத்தமான தண்ணீர் சுகாதாரமான வாழ்வை மக்களுக்கு தருவீர்களா? இடம் : மடிப்பாக்கம் கங்கையம்மன் தெரு.

குடிநீருக்காக கஷ்டப்படும் இந்தியப் பெண்கள் (தினமலர் படம்)

Pesum Padam


இந்தக் கொடுமை வெறும் செய்திப்படமல்ல. ஒவ்வொரு இந்தியக் குடும்பத்திலும் அன்னையரும், சகோதரிகளும் தினமும் அனுபவித்துக்கொண்டிருக்கும் கஷ்டங்கள். இவர்களின் நலனுக்காக குரல்கொடுக்க உண்மையான பெண்ணுரிமை பேசும் பெண்ணியவாதிகள் ஒருவர்கூட இல்லை.

ஆனால் பெண்ணுக்கு மதுசாலையில் குடிக்க உரிமையும், மேல்தட்டுவர்க்க பெண்களின் கள்ளக்காதலுக்குத் தடையாக இருக்கும் கணவனை பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் தண்டித்து “பெண் விடுதலை” வாங்கித்தரவும் பலர் போட்டிபோட்டுக்கொண்டு கோஷமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இதுபோன்ற விஷயங்களில் அதிக லாபம் கிடைக்கிறது என்பது பலருக்கும் தெரியாத ஒரு பெண்ணிய வியாபார ரகசியம்!

`Pub bharo' to beat moral police: Renuka Choudhary - Times Of India

Feb 6, 2009 ... NEW DELHI: Turning the iconic freedom struggle slogan " jail bharo" on its head, Minister of State for Women and Child Development since ...

August 29, 2007 Rediff News

"I am here to teach men what their mothers didn't teach them," declared Women and Child Development Minister Renuka Chaudhury


Thats Tamil News, 3/4/2008

கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

ஜனாதிபதியை எதிர்க்கும் பெண்கள் சங்கத்தலைவிகள்

தினமலர் ஜனவரி 06,2009

புதுடில்லி : "வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான சட்டத்தை பெண்களில் சிலர், தவறாகப் பயன்படுத்தி கணவர்களைத் தண்டிக்கின்றனர் என்ற சர்வே தகவல் கூறுகிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவி சுதா சுந்தரம் கூறுகையில், "பெண்கள் சம்பந்தப்பட்ட பல சட்டங்கள் போதுமான அளவில் அமல்படுத்தப்படுவதில்லை. பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ள சட்டங்களை சரியாக அமல்படுத்தாத நிலையில், ஜனாதிபதியின் கருத்து வேதனையானது' என்று தெரிவித்தார்.


Saturday, April 09, 2011

பெண் - காதல் - கொலை - திருமணம்?

மனைவி சட்டத்தின் துணையோடு கள்ளக்காதல் புரியலாம், சட்டம் அப்பாவிக் கணவன்களை மட்டும்தான் தண்டிக்கும், தெய்வம் நின்று கொல்லும், கணவன்... ... ... ? இதெல்லாம் இங்கேதான் நடந்துகொண்டிருக்கிறது.

இந்திய சட்டத்தைப் படித்துவிட்டு பிறகு செய்தியைப் படியுங்கள்... ... ...

IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


ஏப்ரல் 09, 2011 தினமலர்

கள்ளிக்குடி:விசாணைக்கு காரில் அழைத்து வரும் வழியில், மனைவியின் கள்ளக்காதலனின் கழுத்தை போலீசார் முன்னிலையில் அறுத்து கணவர் கொலை செய்தார்.தூத்துக்குடி அருகே வள்ளநாயக்கன்புதூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (30). பால் வியாபாரியான இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் திருப்பூரில் குடியேறினார். வாடகை வீட்டின் உரிமையாளர் ராமசாமியின் மகன் சதீஷ் (21)க்கும் கிருஷ்ணமூர்த்தி மனைவி முருகேஸ்வரி (25)க்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் மனைவியை கிருஷ்ணமூர்த்தி கண்டித்தார். ஆனால் கள்ளத்தொடர்பு தொடரவே, குடும்பத்துடன் தன் சொந்த ஊருக்கு கடந்த மாதம் திரும்பினார். முருகேஸ்வரியின் கள்ளத்காதல் மொபைல் போனில் தொடர்ந்தது.

கோவில்பட்டிக்கு வருமாறு சதீஷை முருகேஸ்வரி அழைத்தார். கடந்த 5ம் தேதி மகன் அபிஷேக்கிற்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி கோவில்பட்டி ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு வந்த சதீஷுடன் திருப்பூருக்கு சென்று விட்டார். நாலாட்டின்புதூர் போலீஸ் ஸ்டேஷனில், தன் மனைவியை சதீஷ் கடத்தி விட்டதாக கிருஷ்ணமூர்த்தி புகார் கூறினார்.கிருஷ்ணமூர்த்தி அவரது உறவினர்கள் தாமோதரன், ராஜேந்திரனுடன், எஸ்.ஐ., ஆறுமுகம் நயினார், ஏட்டு முருகன் ஆகியோர் திருப்பூருக்கு தேடிச்சென்றனர். அங்கு அவினாசி போலீஸ் உதவியுடன் சதீஷையும், முருகேஸ்வரியையும் பிடித்தனர். விசாரணைக்கு நேற்று முன்தினம் இரவு சுமோ காரில் அழைத்து வந்தனர். திண்டுக்கல்லில் டீ குடிக்க நிறுத்தினர். அப்போது கிருஷ்ணமூர்த்தி கடையில் கத்தியை வாங்கி இடுப்பில் மறைத்து வைத்து கொண்டார். டிரைவருடன் முன் சீட்டில் சதீஷ் அமர்ந்திருந்தார். பின் சீட்டில் கிருஷ்ண மூர்த்தி மற்றும் போலீசார் அமர்ந்தனர். கார் கள்ளிக்குடி அருகே வரும் போது கிருஷ்ண மூர்த்தி, கத்தியை எடுத்து சதீஷ் கழுத்தை அறுத்தார். இதில் சதீஷ் இறந்தார். கள்ளிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கணவர் செய்தது சரியா தவறா என்று தெரிந்துகொள்ள சமீபத்திய நீதிமன்ற தீர்ப்பிலுள்ள வசனங்களை படித்துப் பாருங்கள் பொருள் விளங்கும்...

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
W.P.No.45974 of 2006
(O.A.No.8971 of 2000)
DATED: 28.02.2011
CORAM:THE HONBLE MR.JUSTICE K.CHANDRU


23. In this context, an analogy must be drawn to the offence of 'adultery' defined in Section 497 of IPC. The offence of adultery as defined in that section can only be committed by a man, not by a woman. Section itself provides that the wife shall not be punishable even as an abettor. The Indian penal Code itself contemplates that the wife, who is involved in an illicit relationship with another man, is a victim and not author of the crime. The said provision of Section 497 came to be challenged as being discriminatory because the consenting woman is not punished and hence the provision was violative of Article 14 of the Constitution.

24. The Supreme Court in the case relating to Yusuf Abdul Aziz v. State of Bombay reported in AIR 1954 SC 321 held that the Section do not offend Articles 14 and 15 of the Constitution. In that case, it was also held that very often because of her position in the society is weak and unable to defend, the law can make a distinction in the matter of defining an offence between a man and a woman. Subsequently, the Law Commission in its 42nd Report in 1971 recommended the retention of Section 497 with a modification that even a married woman who has sexual relationship with a person other than her husband should be made punishable for 'adultery', but the said recommendation was not accepted by the law makers .

இதுபோன்ற பஞ்சாயத்துக்கள் நமக்கு வேண்டாம் என்று நினைக்கும் கணவன்கள் இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும்....




Thursday, April 07, 2011

உன்னைப்போல் ஒருவன் ஸ்டைலில் செல்போனில் கோவையை கலக்கிய e-மருமகள்!

தக்க வயதில் கணவனின் அன்பு கிடைக்காத பெண் இளமையிலேயே முதுமை தோற்றத்தை அடைவாள் என்று சாணக்கியர் எழுதியிருக்கிறார். அது எந்த அளவிற்கு அறிவியல்பூர்வமாக உண்மையானது என்று கணவன் மீது பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்துவிட்டு ஏக்கக் கனவுகளோடு இளமையில் தனித்திருக்கும் இந்திய இளம் மனைவிகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

இதுபோன்ற பெண்களுக்கு முதுமை வந்தால் என்ன? அல்லது என்றும் பதினாறு போல “டீன் ஏஜ்” தோற்றத்தில் இருந்தால் நமக்கென்ன?! ஆனால் இதுபோன்ற பெண்களால் சமுதாயத்திற்கு ஆபத்துக்கள் மிக அதிகம். அதுதான் மிகவும் கவலைக்குரிய விஷயம். மேலும் தகவலுக்கு இந்தப் பதிவை படித்துப்பாருங்கள் -->கணவனைப் பிரிந்த 498A-காரிகைகளுக்கு நல்வழி பிறக்குமா?

ஏதோ ஒரு உந்துதலால் கணவன் மீது பொய் வழக்குப் பதிவுசெய்துவிட்டு பிறகு பல ஆண்டுகள் தனிமையில் இருக்கும் இளம் பெண்ணுக்கு சாணக்கியர் கூறியிருப்பது போன்ற உடலியல் மாற்றங்கள் ஏற்படும். அப்போது கவலைகள் தானாக உருவாகும். அந்தக் கவலைகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து மன விரக்தியை உருவாக்கும். கடைசியில் இந்த மனவெறுப்புக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கட்டுக்கடங்காத ஆத்திரமாக உருவாகி யாரைப் பழிவாங்கலாம் என்ற எண்ணம் உருவாகும்.

இதுபோன்ற ஒரு இளம் மருமகளின் கட்டுக்கடங்காத விரக்தியும், கோபமும் எப்படி வெளியாகியிருக்கிறது என்று பின்வரும் செய்தியில் பாருங்கள். உன்னைபோல் ஒருவன் கமலஹாசன் பாணியில் பல செல்போன்களைப் பயன்படுத்தி கணவனுக்கும், மாமியாருக்கும், நாத்தனாருக்கும் பலவித கோணங்களில் SMS அனுப்பி ஒரு இளம் மருமகள் குடும்பத்தையே கலக்கியிருக்கிறார்.


Woman held for sending obscene SMS to in-laws
Apr 6, 2011 The Times of India

COIMBATORE: In a rare case, a daughter-in-law was arrested in the city for sending abusive messages from her mobile phone to her estranged husband, mother-in-law and sister-in-law.

A computer science graduate from Madurai, the 21-year-old woman married software engineer, M Annamalai, a native of Singanallur, a few months ago, but she returned to live with her parents after living with her husband and his family for only 20 days. Aggrieved over the way she was treated by her husband's mother, M Meena (50), and his sister, M Shanthini (27), the woman started sending them anonymous abusive messages. The accused wished to work but Annamalai, Meena and Shanthini did not allow her to do so. Shanthini, separated from her husband, was a diploma holder working with Pricol.

Unable to withstand the anxiety about receiving abusive phone messages, Annamalai's family lodged a complaint with the city police. Cyber cell of the police traced the messages to Madurai. They were being dispatched from nine different mobile phones. After verifying the veracity of the messages, they arrested the accused on Tuesday morning in Madurai.

The woman confessed she sent the messages to her husband and his family to take revenge on them for ill-treating her. She wanted to teach them a lesson, especially Shanthini who remained adamant in not letting her work. The text messages were aimed at creating suspicion in the minds of each recipient, pertaining to illicit relationships. She hoped these messages would encourage Shanthini to return to her husband, after which the accused said she would reunite with her husband. Eight sim cards and three mobile phones were seized from her.



Friday, April 01, 2011

50/50 சமநிலையில் இருக்கும் இந்தியா!

இந்தியாவில் பெண்களுக்கு சமஉரிமை இல்லை என்று கூப்பாடு போடும் கூட்டம் ஒருபோதும் நீதித்துறை, காவல்துறை, ராணுவம் போன்றவற்றில் பெண்களுக்கு கட்டாயமாக 50% பணி நியமனம் கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைப்பதில்லை.

அதே போல பார்லிமெண்டில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டிற்காக எதையும் தியாகம் செய்யத் தயார் என்று கூப்பாடு போட்ட கூட்டங்களில் எத்தனை கட்சிகள் இந்த தேர்தலில் தங்களது வேட்பாளர் பட்டியலில் 50% தொகுதிகளை தங்கள் கட்சியில் இருக்கும் பெண்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள?

தேவையான விஷயங்களைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் இந்தியாவில் ஆணும் பெண்ணும் சரி சமமாக 50/50 என்ற சம நிலையில்தான் இருக்கிறார்கள் என்று பின்வரும் செய்தியைப் படித்து இப்போதாவது தெரிந்துகொள்ளுங்கள்.

சமுதாயத்தை மேலோட்டமாக பார்ப்பவருக்குத் தெரியும் முதல் 50%

கள்ளத் தொடர்பை தட்டிக் கேட்ட மனைவி கொலை: கணவன் கைது
ஏப்ரல் 02,2011 தினமலர்

கும்மிடிப்பூண்டி : பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததை தட்டிக் கேட்ட மனைவியை, குழந்தைகள் கண் முன் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே பூவலம்பேடு திடீர் நகரை சேர்ந்தவர் ராஜா(29). இவரது மனைவி, புல்லரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முருகையன் மகள் நதியா(27). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த இவர்களுக்கு நவீன்(7) என்ற மகனும், அரிதர்ஷினி(2) என்ற மகளும் உள்ளனர்.ராஜா பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தது நதியாவுக்கு தெரிந்தது. நேற்று அதிகாலை இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக கொக்கு மருந்தை கரைத்த ராஜா, வலுக்கட்டாயமாக நதியாவின் வாயில் ஊற்றியுள்ளார். சத்தம் போட்ட நதியா வாயில் துணி கொண்டு அடைத்தார். இதை கண்ட மகன் நவீன் தடுக்க முயன்றான். சிறிது நேரத்தில் நதியா பரிதாபமாக இறந்தார்.ஏற்கனவே ராஜா மீது பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், ஆரம்பாக்கம், சிப்காட் போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், கவரைப்பேட்டை போலீசார் தப்பி ஓடிய ராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.


கண்ணுக்குத் தெரியாமல் சமுதாயத்தில் புரையோடியிருக்கும் இரண்டாவது 50%

சாணார்பட்டி : கள்ளக் காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்து விட்டு, காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் தவசிமேடையைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(40).விவசாயக்கூலி. இவரது மனைவி வெள்ளையம்மாள்(40).இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். வெள்ளையம்மாளுக்கும், இதே ஊரைச்சேர்ந்த ஆரோக்கியசாமிக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்தது. வெள்ளைச்சாமி கண்டித்துள்ளார்.

நேற்று முன்தினம் ஆடு மேய்க்க சென்ற வெள்ளைச்சாமியை, வெள்ளையம்மாளும் கள்ளக்காதலன் ஆரோக்கியச்சாமியும் சேர்ந்து கொலை செய்து, உடலை சிறுமலை அடிவாரம் பகுதியில் ஒரு பள்ளத்தில் மூடி, விட்டனர். பின், வெள்ளையம்மாளே சாணார்பட்டி போலீசில் தனது கணவர் வெள்ளைச்சாமி காணவில்லை என புகார் செய்தார்.போலீசாருக்கு வெள்ளையம்மாள் மீது சந்தேகம் ஏற்பட்டது. வெள்ளையம்மாளை விசாரித்ததில், அவர்," நானும் எனது கள்ளக்காதலன் ஆரோக்கியசாமியும் சேர்ந்து வெள்ளைச்சாமியை கொன்றோம்,'' என ஒப்புக்கொண்டார். இறந்த வெள்ளைச்சாமி உடல் மதுரைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. போலீசார் வெள்ளையம்மாள், ஆரோக்கியசாமியை கைது செய்து திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
=====

மேலுள்ள இரண்டு செய்திகளிலிருந்தும் இந்தியாவில் ஆணும் பெண்ணும் சரி சமமாகத்தான் இருக்கிறார்கள் என்று நீங்கள் தெரிந்துகொண்டிருப்பீர்கள். இவற்றையெல்லாம்விட நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது.

1. முதல் செய்தியில் தகாத உறவு பற்றி தட்டிக்கேட்ட மனைவியைக் கொன்ற கணவன் தப்பி ஓடிவிட்டார் என்று செய்தி வந்திருக்கிறது.

2. இரண்டாவது செய்தியில் தகாத உறவைத் தட்டிக்கேட்ட கணவனை மனைவி பக்குவமாக திட்டமிட்டுக் கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் காவல்நிலையத்திற்குச் சென்று கணவனைக் காணவில்லை என்று பொய்யான புகார் கொடுத்து சட்டத்தின் உதவியோடு தன்னை அப்பாவிபோல சித்தரித்திருக்கிறார். கல்வியறிவில் தன்னிறைவு அடையாத கிராமப்புறங்களிலே இப்படி ஒருநிலை என்றால் “பப்புக்குச்” சென்று நாட்டியம்போடும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ள நகர்ப்புறங்கள் எப்படியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்!

இதுபோலத்தான் இந்தியாவில் பல பெண்கள் தங்களது குற்றங்களை மறைக்க வரதட்சணை தடுப்புச் சட்டங்களை கவசமாகப் பயன்படுத்தி அப்பாவிக் கணவனையும் அவனது குடும்பத்தையும் குற்றவாளிகளைப்போல சித்தரித்து சிறையில் அடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுதான் இன்றைய நாட்டு நிலவரம். குற்றம் இழைக்கும் ஆண்கள் ஒருபோதும் சட்டத்தின் துணையை நாடுவதில்லை. மாறாக தங்களது செயலுக்காக சட்டத்தின் பிடியில் சிக்குகிறார்கள். ஆனால் பெண்கள் விஷயத்தில் இது தலைகீழாக நடந்துகொண்டிருக்கிறது. பெண்கள் எப்போதும் அப்பாவிகள் என்ற தவறான கண்ணோட்டத்துடன் பல ஒருதலைபட்சமான தவறான சட்டங்கள் இந்தியாவில் இயற்றப்பட்டிருக்கிறது. அதனால் அந்த சட்டங்களை தங்களுக்குத் துணையாக்கி பல பெண்கள் பல கொடிய குற்றங்களை செய்துவருகிறார்கள்.

இதுபோன்ற குற்றங்களில் ஒருவகைதான் பொய் வரதட்சணை வழக்குகள், பொய்யான கற்பழிப்பு வழக்குகள், பொய்யான குடும்ப வன்முறை வழக்குகள் போன்றவை. பெண்கள் தங்களுக்கு சாதகமாக இந்த சட்டங்களைப் பயன்படுத்தி சட்டங்களின் துணையோடு சமுதாயத்தில் எளிதாக அப்பாவிகளுக்கெதிராக கொடிய குற்றங்களை இழைப்பதற்கு வசதியாக இந்த சட்டங்கள் அனைத்தும் இயற்றப்பட்டுள்ளன. இதன் வெளிப்பாடுதான் இப்போது பல பொய் வரதட்சணை வழக்குகள் சமுதாயத்தில் உலவிக்கொண்டிருக்கின்றன.

இதுபோன்ற பெண் சுதந்திரத்திற்குத்தான் போலி பெண்ணியவாதிகள் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பெண் சுதந்திரம் என்ற பெயரில் இதுவரை பெண்களுக்கு நீதித்துறை, காவல்துறை, அரசியல், ராணுவம் போன்றவற்றில் இதுவரை 50% உரிமை வாங்கிக்கொடுக்காதவர்கள் பல தவறான சட்டங்களை உருவாக்கி பல பெண்களை சட்டத்தின் துணையோடு குற்றம் புரியும் கிரிமினல்களாக உருவாக்கித் தந்திருக்கிறார்கள். இதுதான் புதிய பெண்ணியத்தின் வெற்றி! போலி பெண்ணியவாதிகள் பெண்ணுக்கு சமஉரிமை கேட்பதெல்லாம் எதற்கு என்று இப்போது வெளிப்பாடையாகத் தெரிகிறதா?



“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.