இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, April 29, 2011

மனைவிக்கு இடையூறு செய்யும் கணவர்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவில் திருமணம் செய்து கணவனாகிவிட்டவர்கள் தங்கள் மனைவியிடம் பக்குவமாக எந்தஒரு இடையூறும் செய்யாமல் நடந்துகொள்ளவேண்டும். ஏனென்று தெரிந்துகொள்ள பின்வரும் செய்தியை படியுங்கள். அதிகமாக இடையூறு செய்தால் இரண்டு லட்சம் போதும் உங்களை அடக்கி அடக்கமே செய்துவிடுவார்கள்.

பின்வரும் செய்தியைப் படிப்பதற்கு முன்பு திருவள்ளுவரின் இந்த திருக்குறள்களை படித்து மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.

"மனைவி" என்ற உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தெய்வப் புலவர் திருவள்ளுவரின் விளக்கம்

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.

***********************

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.


மனைவியின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை :கூலிப்படையினருடன் மனைவியும் கைது
ஏப்ரல் 30,2011 தினமலர்


திருவள்ளூர், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி ஜோதி மற்றும் கூலிப்படையினர் தைரியநாதன், ரமேஷ், ரவீந்திரன், ஜானகிராமன்.

திருவள்ளூர்:கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கழுத்தறுத்துக் கொலை செய்த பாசக்கார மனைவியை, கூலிப் படையினருடன் போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வகுமார்(45); ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜோதி(38). இவர்களுக்கு திருமணமாகி அபிலாஷ்(15), அஜீத்(12) என இரண்டு மகன்களும், பிரீத்தா(10) என்ற மகளும் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 21ம் தேதி அதிகாலை செல்வகுமார் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் அறுக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி ஜோதி செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.கொலையாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகளை திருவள்ளூர் எஸ்.பி., வனிதா அமைத்தார்.

விசாரணையில், செல்வகுமாரின் சொந்த ஊரான பெரம்பூர் அகரம் பகுதியை சேர்ந்த தைரியநாதன், அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்து சென்றதும், செல்வகுமாரின் இறுதிச்சடங்கில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, அடக்கம் செய்யும் வரை இருந்துவிட்டுச் சென்றதும் தெரிந்தது.மேலும்,தைரியநாதன் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை செல்வகுமாருக்கு கடன் கொடுத்திருந்ததும், அதனால் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்ததும், இங்கு வந்து செல்லும்போது செல்வகுமார் மனைவி ஜோதியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதும் தெரிந்தது.

செல்வகுமார் மனைவி ஜோதியை கைது செய்து விசாரித்தபோது, தைரியநாதனுடன் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாலும், கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்ததால், தைரியநாதன் உதவியோடு கணவரை கொலை செய்ய முடிவு செய்ததாக, அவர் போலீசாரிடம் கூறினார் மேலும் செல்வகுமாரை கொலை செய்வதற்காக தைரியநாதன், புளியந்தோப்பு மற்றும் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கூலிப் படையினரிடம் 2 லட்சம் ரூபாய் பேரம் பேசி, ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, செல்வகுமார் மனைவி ஜோதி ஒத்துழைப்போடு 20ம் தேதி இரவு வேப்பம்பட்டு அம்பேத்கர் நகர் வந்தனர்.

அன்று இரவு செல்வகுமார் கீழ் தளத்தில் படுத்துறங்கியதும், வீட்டின் தெரு கதவை திறந்து வைத்துவிட்டு, பிள்ளைகளுடன் மாடியில் படுத்துக் கொண்ட ஜோதி, தைரியநாதனுக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக அங்கு கூலிப்படையுடன் வந்த தைரியநாதன், தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமாரை கத்தியால் கழுத்தை அறுத்தும், முதுகு, வயிற்றுப் பகுதியில் அறுத்தும் கொலை செய்ததாக தைரியநாதன் போலீசாரிடம் கூறினார்.இதையடுத்து தைரியநாதன் அடையாளம் காட்ட, சென்னையில் பதுங்கியிருந்த கூலிப்படையினரான அகரம் பெரம்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்(24), கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த ரவீந்திரன்(24), ஜானகிராமன்(24) ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வேலு, தங்கமணி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
====

உயிர்மீது பயம் இருக்கும் கணவர்கள் பின்வரும் வீடியோவில் இருக்கும் பாதுகாப்பான வழியைப் பின்பற்றலாம்.





1 comment:

Anonymous said...

Hi - I am definitely happy to discover this. Good job!

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.