சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, April 01, 2011

50/50 சமநிலையில் இருக்கும் இந்தியா!

இந்தியாவில் பெண்களுக்கு சமஉரிமை இல்லை என்று கூப்பாடு போடும் கூட்டம் ஒருபோதும் நீதித்துறை, காவல்துறை, ராணுவம் போன்றவற்றில் பெண்களுக்கு கட்டாயமாக 50% பணி நியமனம் கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைப்பதில்லை.

அதே போல பார்லிமெண்டில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டிற்காக எதையும் தியாகம் செய்யத் தயார் என்று கூப்பாடு போட்ட கூட்டங்களில் எத்தனை கட்சிகள் இந்த தேர்தலில் தங்களது வேட்பாளர் பட்டியலில் 50% தொகுதிகளை தங்கள் கட்சியில் இருக்கும் பெண்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள?

தேவையான விஷயங்களைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் இந்தியாவில் ஆணும் பெண்ணும் சரி சமமாக 50/50 என்ற சம நிலையில்தான் இருக்கிறார்கள் என்று பின்வரும் செய்தியைப் படித்து இப்போதாவது தெரிந்துகொள்ளுங்கள்.

சமுதாயத்தை மேலோட்டமாக பார்ப்பவருக்குத் தெரியும் முதல் 50%

கள்ளத் தொடர்பை தட்டிக் கேட்ட மனைவி கொலை: கணவன் கைது
ஏப்ரல் 02,2011 தினமலர்

கும்மிடிப்பூண்டி : பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததை தட்டிக் கேட்ட மனைவியை, குழந்தைகள் கண் முன் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே பூவலம்பேடு திடீர் நகரை சேர்ந்தவர் ராஜா(29). இவரது மனைவி, புல்லரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முருகையன் மகள் நதியா(27). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த இவர்களுக்கு நவீன்(7) என்ற மகனும், அரிதர்ஷினி(2) என்ற மகளும் உள்ளனர்.ராஜா பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தது நதியாவுக்கு தெரிந்தது. நேற்று அதிகாலை இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக கொக்கு மருந்தை கரைத்த ராஜா, வலுக்கட்டாயமாக நதியாவின் வாயில் ஊற்றியுள்ளார். சத்தம் போட்ட நதியா வாயில் துணி கொண்டு அடைத்தார். இதை கண்ட மகன் நவீன் தடுக்க முயன்றான். சிறிது நேரத்தில் நதியா பரிதாபமாக இறந்தார்.ஏற்கனவே ராஜா மீது பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், ஆரம்பாக்கம், சிப்காட் போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், கவரைப்பேட்டை போலீசார் தப்பி ஓடிய ராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.


கண்ணுக்குத் தெரியாமல் சமுதாயத்தில் புரையோடியிருக்கும் இரண்டாவது 50%

சாணார்பட்டி : கள்ளக் காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்து விட்டு, காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் தவசிமேடையைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(40).விவசாயக்கூலி. இவரது மனைவி வெள்ளையம்மாள்(40).இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். வெள்ளையம்மாளுக்கும், இதே ஊரைச்சேர்ந்த ஆரோக்கியசாமிக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்தது. வெள்ளைச்சாமி கண்டித்துள்ளார்.

நேற்று முன்தினம் ஆடு மேய்க்க சென்ற வெள்ளைச்சாமியை, வெள்ளையம்மாளும் கள்ளக்காதலன் ஆரோக்கியச்சாமியும் சேர்ந்து கொலை செய்து, உடலை சிறுமலை அடிவாரம் பகுதியில் ஒரு பள்ளத்தில் மூடி, விட்டனர். பின், வெள்ளையம்மாளே சாணார்பட்டி போலீசில் தனது கணவர் வெள்ளைச்சாமி காணவில்லை என புகார் செய்தார்.போலீசாருக்கு வெள்ளையம்மாள் மீது சந்தேகம் ஏற்பட்டது. வெள்ளையம்மாளை விசாரித்ததில், அவர்," நானும் எனது கள்ளக்காதலன் ஆரோக்கியசாமியும் சேர்ந்து வெள்ளைச்சாமியை கொன்றோம்,'' என ஒப்புக்கொண்டார். இறந்த வெள்ளைச்சாமி உடல் மதுரைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. போலீசார் வெள்ளையம்மாள், ஆரோக்கியசாமியை கைது செய்து திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
=====

மேலுள்ள இரண்டு செய்திகளிலிருந்தும் இந்தியாவில் ஆணும் பெண்ணும் சரி சமமாகத்தான் இருக்கிறார்கள் என்று நீங்கள் தெரிந்துகொண்டிருப்பீர்கள். இவற்றையெல்லாம்விட நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது.

1. முதல் செய்தியில் தகாத உறவு பற்றி தட்டிக்கேட்ட மனைவியைக் கொன்ற கணவன் தப்பி ஓடிவிட்டார் என்று செய்தி வந்திருக்கிறது.

2. இரண்டாவது செய்தியில் தகாத உறவைத் தட்டிக்கேட்ட கணவனை மனைவி பக்குவமாக திட்டமிட்டுக் கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் காவல்நிலையத்திற்குச் சென்று கணவனைக் காணவில்லை என்று பொய்யான புகார் கொடுத்து சட்டத்தின் உதவியோடு தன்னை அப்பாவிபோல சித்தரித்திருக்கிறார். கல்வியறிவில் தன்னிறைவு அடையாத கிராமப்புறங்களிலே இப்படி ஒருநிலை என்றால் “பப்புக்குச்” சென்று நாட்டியம்போடும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ள நகர்ப்புறங்கள் எப்படியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்!

இதுபோலத்தான் இந்தியாவில் பல பெண்கள் தங்களது குற்றங்களை மறைக்க வரதட்சணை தடுப்புச் சட்டங்களை கவசமாகப் பயன்படுத்தி அப்பாவிக் கணவனையும் அவனது குடும்பத்தையும் குற்றவாளிகளைப்போல சித்தரித்து சிறையில் அடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுதான் இன்றைய நாட்டு நிலவரம். குற்றம் இழைக்கும் ஆண்கள் ஒருபோதும் சட்டத்தின் துணையை நாடுவதில்லை. மாறாக தங்களது செயலுக்காக சட்டத்தின் பிடியில் சிக்குகிறார்கள். ஆனால் பெண்கள் விஷயத்தில் இது தலைகீழாக நடந்துகொண்டிருக்கிறது. பெண்கள் எப்போதும் அப்பாவிகள் என்ற தவறான கண்ணோட்டத்துடன் பல ஒருதலைபட்சமான தவறான சட்டங்கள் இந்தியாவில் இயற்றப்பட்டிருக்கிறது. அதனால் அந்த சட்டங்களை தங்களுக்குத் துணையாக்கி பல பெண்கள் பல கொடிய குற்றங்களை செய்துவருகிறார்கள்.

இதுபோன்ற குற்றங்களில் ஒருவகைதான் பொய் வரதட்சணை வழக்குகள், பொய்யான கற்பழிப்பு வழக்குகள், பொய்யான குடும்ப வன்முறை வழக்குகள் போன்றவை. பெண்கள் தங்களுக்கு சாதகமாக இந்த சட்டங்களைப் பயன்படுத்தி சட்டங்களின் துணையோடு சமுதாயத்தில் எளிதாக அப்பாவிகளுக்கெதிராக கொடிய குற்றங்களை இழைப்பதற்கு வசதியாக இந்த சட்டங்கள் அனைத்தும் இயற்றப்பட்டுள்ளன. இதன் வெளிப்பாடுதான் இப்போது பல பொய் வரதட்சணை வழக்குகள் சமுதாயத்தில் உலவிக்கொண்டிருக்கின்றன.

இதுபோன்ற பெண் சுதந்திரத்திற்குத்தான் போலி பெண்ணியவாதிகள் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பெண் சுதந்திரம் என்ற பெயரில் இதுவரை பெண்களுக்கு நீதித்துறை, காவல்துறை, அரசியல், ராணுவம் போன்றவற்றில் இதுவரை 50% உரிமை வாங்கிக்கொடுக்காதவர்கள் பல தவறான சட்டங்களை உருவாக்கி பல பெண்களை சட்டத்தின் துணையோடு குற்றம் புரியும் கிரிமினல்களாக உருவாக்கித் தந்திருக்கிறார்கள். இதுதான் புதிய பெண்ணியத்தின் வெற்றி! போலி பெண்ணியவாதிகள் பெண்ணுக்கு சமஉரிமை கேட்பதெல்லாம் எதற்கு என்று இப்போது வெளிப்பாடையாகத் தெரிகிறதா?No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.