இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, April 22, 2011

சிறுமிகளை பெண்களாகக் கருதலாமா?


இந்த சிறுமி, குப்பை கொட்டவில்லை, கொட்டிய குப்பைக் குவியலில் இருந்து ஏதாவது கிடைக்குமா என்று தேடுகிறார். உலக பூமி தினமான நேற்று, அசாம் மாநிலம், திம்மபூர் குப்பை கிடங்கில், இந்த சிறுமியே குப்பை போல சமூகத்தால் தூக்கி எறியப்பட்டுள்ளார். இவரைப் போன்ற சிறுமியரை மீட்பது எப்போது. (தினமலர் கருத்துப்படம் 23.4.2011)

====

இந்தியாவில் ஏழைப் பெண்களும், சிறுமிகளும் வாழ வழியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகம் என்று தனி அமைச்சகமும் அதற்கு ஒரு மந்திரியும் இருக்கிறார், தேசிய மகளிர் வாரியம், மாநில மகளிர் வாரியம் என பல அரசாங்க அமைப்புகள் இருக்கின்றன. இது தவிர வெளிநாட்டு மற்றும் அரசாங்க உதவி பெறும் பெண்களுக்காக போராடும் தன்னார்வ அமைப்புகள் பல இருக்கின்றன.

இத்தனை அமைப்புகள் இருந்தாலும் மேலே செய்திப் படத்தில் இருப்பது போலத்தான் பல இந்தியப் பெண்களின் வாழ்க்கை இன்றும் இருக்கிறது. சரி அப்படியென்றால் இந்த அரசாங்க அமைப்புகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம்.

இந்த அமைப்புகளின் பார்வையெல்லாம் ஒரே பக்கம்தான் இருக்கும். அதுதான் வரதட்சணைக் கொடுமை என்ற கூப்பாடு. இது மட்டுமே இவர்கள் கருத்தில் எப்போதும் இருக்கின்ற பெண்களின் பிரச்சனை. இது தவிர “நவீன பெண்ணுரிமை” கோட்பாடும் இவர்களது மிக உயரிய குறிக்கோள். ஏனென்றால் “வரதட்சணை” என்ற பெயரில் பலவித சட்டங்கள் இயற்றலாம், நிதி ஒதுக்கீடு செய்யலாம், வெளிநாடுகளில் நிதியுதவி பெறலாம் இன்னும் என்னன்னவோ இருக்கிறது.

உண்மை நிலை இப்படியிருக்கும்போது இந்த பெண்கள் நல அமைப்புகளுக்கு ஏழ்மையில் தவிக்கும் இந்தியப் பெண்களின் நிலை குறித்து யோசிக்க நேரமிருக்குமா?

`Pub bharo' to beat moral police: Renuka Choudhary - Times Of India

Feb 6, 2009 ... NEW DELHI: Turning the iconic freedom struggle slogan " jail bharo" on its head, Minister of State for Women and Child Development since ...

August 29, 2007 Rediff News

"I am here to teach men what their mothers didn't teach them," declared Women and Child Development Minister Renuka Chaudhury


Thats Tamil News, 3/4/2008

கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

ஜனாதிபதியை எதிர்க்கும் பெண்கள் சங்கத்தலைவிகள்

தினமலர் ஜனவரி 06,2009

புதுடில்லி : "வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான சட்டத்தை பெண்களில் சிலர், தவறாகப் பயன்படுத்தி கணவர்களைத் தண்டிக்கின்றனர் என்ற சர்வே தகவல் கூறுகிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவி சுதா சுந்தரம் கூறுகையில், "பெண்கள் சம்பந்தப்பட்ட பல சட்டங்கள் போதுமான அளவில் அமல்படுத்தப்படுவதில்லை. பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ள சட்டங்களை சரியாக அமல்படுத்தாத நிலையில், ஜனாதிபதியின் கருத்து வேதனையானது' என்று தெரிவித்தார்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.