இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, April 17, 2011

இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் பெண்கொடுமை

தினமலரில் வந்துள்ள செய்திப் படத்தைப் பாருங்கள். இதுவும் இந்தியப் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைதான். பெண்களின் வாழ்க்கைத்தரம் இப்படி கீழ்நிலையில் இருப்பதற்குக்காரணம் யார்? இதற்கும் கணவனும், மாமியார் கொடுமைதான் காரணமா?

வரதட்சணை மட்டுமே பெண்களுக்கான பிரச்சனை கிடையாது அதையும்தாண்டி பல முக்கியமான பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஏன் பெண்ணுரிமை சங்கங்களும், பெண்கள் நல வாரியங்களும் கண்டுகொள்வதில்லை?

வரதட்சணை இன்னும் இந்தியாவில் இருப்பதாகக் கற்பனை செய்தால்கூட அது இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்குமே தவிர ஒவ்வொரு இந்தியக் குடும்பத்திலும் இருக்கின்ற விஷயம் கிடையாது. ஆனால் பின்வரும் படத்திலுள்ளது போன்ற கொடுமைகள் ஒவ்வொரு சராசரி இந்தியப் பெண்ணும் தினசரி அனுபவித்துக்கொண்டிருக்கும் கொடுமையாகும். இதுபோன்ற பிரச்சனைகளை பெண்விடுதலை பேசும் அமைப்புகள் ஏன் திரும்பிக்கூட பார்ப்பதில்லை?


(தினமலரின் கருத்து) எத்தனையோ இலவச திட்டங்களை அறிவித்து மக்களை மயக்கி, ஓட்டுகள் வாங்கும் அரசியல்வாதிகளே இதை பாருங்கள்... நல்ல தண்ணீர் குழாய் அருகே கழிவு நீர் சாக்கடை ஓடுகிறது, இதனால் அப்பகுதிமக்கள் கழிவு நீர் கலந்த குடிநீரை பலகாலமாக பருகி பல்வேறு நோய்களுக்கு ஆளாகியது தான் மிச்சம். இந்நிலை மாற இலவசங்கள் வேண்டாம் சுத்தமான தண்ணீர் சுகாதாரமான வாழ்வை மக்களுக்கு தருவீர்களா? இடம் : மடிப்பாக்கம் கங்கையம்மன் தெரு.

குடிநீருக்காக கஷ்டப்படும் இந்தியப் பெண்கள் (தினமலர் படம்)

Pesum Padam


இந்தக் கொடுமை வெறும் செய்திப்படமல்ல. ஒவ்வொரு இந்தியக் குடும்பத்திலும் அன்னையரும், சகோதரிகளும் தினமும் அனுபவித்துக்கொண்டிருக்கும் கஷ்டங்கள். இவர்களின் நலனுக்காக குரல்கொடுக்க உண்மையான பெண்ணுரிமை பேசும் பெண்ணியவாதிகள் ஒருவர்கூட இல்லை.

ஆனால் பெண்ணுக்கு மதுசாலையில் குடிக்க உரிமையும், மேல்தட்டுவர்க்க பெண்களின் கள்ளக்காதலுக்குத் தடையாக இருக்கும் கணவனை பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் தண்டித்து “பெண் விடுதலை” வாங்கித்தரவும் பலர் போட்டிபோட்டுக்கொண்டு கோஷமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இதுபோன்ற விஷயங்களில் அதிக லாபம் கிடைக்கிறது என்பது பலருக்கும் தெரியாத ஒரு பெண்ணிய வியாபார ரகசியம்!

`Pub bharo' to beat moral police: Renuka Choudhary - Times Of India

Feb 6, 2009 ... NEW DELHI: Turning the iconic freedom struggle slogan " jail bharo" on its head, Minister of State for Women and Child Development since ...

August 29, 2007 Rediff News

"I am here to teach men what their mothers didn't teach them," declared Women and Child Development Minister Renuka Chaudhury


Thats Tamil News, 3/4/2008

கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

ஜனாதிபதியை எதிர்க்கும் பெண்கள் சங்கத்தலைவிகள்

தினமலர் ஜனவரி 06,2009

புதுடில்லி : "வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான சட்டத்தை பெண்களில் சிலர், தவறாகப் பயன்படுத்தி கணவர்களைத் தண்டிக்கின்றனர் என்ற சர்வே தகவல் கூறுகிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவி சுதா சுந்தரம் கூறுகையில், "பெண்கள் சம்பந்தப்பட்ட பல சட்டங்கள் போதுமான அளவில் அமல்படுத்தப்படுவதில்லை. பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ள சட்டங்களை சரியாக அமல்படுத்தாத நிலையில், ஜனாதிபதியின் கருத்து வேதனையானது' என்று தெரிவித்தார்.


2 comments:

சுதர்ஷன் said...

பெண்களால் தான் எந்தப்பெரிய புரட்சியும் வெற்றியடையும் ..ஆனால் பெண்கள் இன்னும் மாபெரும் புரட்ச்சியில் இறங்கியதில்லை ..இறங்கவேண்டும் ..அப்போது தான் எல்லாவற்றுக்கும் முடிவுண்டு .:)

Anonymous said...

எங்கள் ஏரியா மடிப்பாக்கத்தை மட்டும் சொல்லி எங்களை அசிங்க படுத்தாதிர்கள். இந்திய அதிகமான இடங்களில் இந்த நிலைமைதான் உள்ளது . போலி பெண்ணியக்கம் பேசுபவர்கள் இதில் அக்கறை கொள்வதில்லை.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.