சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, February 13, 2011

அத்தைக்கு வந்த விபரீத ஆசை!

அத்தைக்கு வந்த விபரீத கள்ளக்காம ஆசையால் கோபம் கொண்ட இளைஞர் கடைசியில் கொலையாளியாகிவிட்டார். ஒவ்வொரு ஆணின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஒரு பெண்தான் இருப்பாள் என்பது எவ்வளவு உண்மை!

பெண்கள் நாட்டின் கண்கள் அல்லவா! அதைப்பொறுத்துத்தான் நாடும் உருவாகும். பெண் நல்லவளாக இருந்தால் ஆணும் நல்லவனாக இருப்பான். பெண் கெடுமதி கொண்டவளாக இருந்தால் ஆணும் அப்படித்தான் உருவாக்கப்படுவான். இப்போது நாட்டில் நடக்கும் பலவித செயல்களை பார்க்கும்போது எப்படிப்பட்ட சமுதாயம் உருவாகிக்கொண்டிருக்கிறது அதற்குக் காரணம் யார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

14/2/2011 தினகரன்

சென்னை : தாமல் ஏரிக்கரையில் தலையில்லாமல் கிடந்த உடலுக்குரிய தலை போளூரில் கிடைத்தது. கொலையானவர் சலூன் கடைக்காரர் என்பதும், கொலையாளியின் அத்தையுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் கொல்லப்பட்டார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசில் சீனிவாசன் அளித்த வாக்குமூலம்:

ரவியின் சலூன் கடைக்கு அடிக்கடி வருவேன். இதனால் நண்பர்களானோம். அவரும் எனது வீட்டுக்கு வருவார். அப்போது, எனது அத்தை லட்சுமியுடன் ரவிக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இருவரும் உல்லாசமாக இருந்ததை நான் பார்த்து ஆத்திரமடைந்தேன். பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து, ரவியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினேன். அதன்படி கடந்த 10ம் தேதி மது வாங்கி தருவதாக ரவியை காரில் அழைத்துச்சென்று, சென்னையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினோம்.

போதை தலைக்கேறியதும் காரில் வைத்து ரவியை அடித்து உதைத்தோம். அவர் மயங்கியதால், தாமல் ஏரி பகுதிக்கு கொண்டு வந்தோம். அங்கு, ரவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தோம். உடலை ஏரியில் வீசிவிட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க தலையை தனியாக துண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே படவேடு கிராம மலை பகுதியில் புதைத்தோம். இவ்வாறு சீனிவாசன் கூறினார்.

இதையடுத்து, புதைக்கப்பட்ட தலையை மீட்பதற்காக 4 பேரையும் படவேடு மலை பகுதிக்கு போலீசார் அழைத்துச்சென்றனர். அடையாளம் காட்டிய இடத்தில் தலையை தோண்டி எடுத்தனர். பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு தலை அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து கத்தி, கொலைக்கு பயன்படுத்திய குவாலிஸ் கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

======

அத்தைக்கு மட்டுமல்ல பலருக்கு இதுபோல் ஏற்பட்ட ஆசையால் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று நீங்களே பாருங்கள்...


தினமலர் நவம்பர் 06,2010

குழந்தைகளை தவிக்கவிட்டு மருமகனுடன் அத்தை ஓட்டம்
புதன்கிழமை, அக்டோபர் 27, 2010 Thats Tamil

கள்ளத்தொடர்பில் பிறந்த சிசுவைக் கொலை செய்த தாய்

அக்டோபர் 25,2010 தினமலர்

அக்டோபர் 09,2010 தினமலர்
கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆயுள்
தினமலர் அக்டோபர் 02,2010
"உல்லாசத்திற்கு' இடையூறாக இருந்த குழந்தை கொலை நாடகமாடிய தாய்
தினமலர் செப்டம்பர் 16,2010
காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகளுக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த ஆசிரியை
செப்டம்பர் 16, 2010 ThatsTamil
ஜூலை 29,2010 தினமலர்
கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்
அக்டோபர் 29,2009 தினமலர்

====No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.