சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, September 16, 2010

குழந்தையைக் கொலை செய்யும் பெண்கள்

பெண்ணிற்கு காமம் மேலோங்கி அறிவுக்கண்ணை மறைத்திருக்கும்போது காமத்திற்குத் தடையாக யார் வந்தாலும் கொலை செய்யவும் தயங்கமாட்டாள். தான் பெற்ற குழந்தையாக இருந்தாலும் சரி, கள்ளக்காதலுக்குத்தடையாக இருக்கும் தாலிகட்டிய கணவனாக இருந்தாலும் சரி. கொலை செய்ய அஞ்சமாட்டார்கள் என்பதைத்தான் கீழுள்ள செய்திகள் காட்டியிருக்கின்றது.

"உல்லாசத்திற்கு' இடையூறாக இருந்த குழந்தை கொலை நாடகமாடிய தாய்
தினமலர் செப்டம்பர் 16,2010

சிதம்பரம்: சிதம்பரம் அருகே, உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்து நாடகமாடிய தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த அரியூரைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி இன்பநிலா (28). இருவரும் சென்னையில் கட்டட வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு வயதில் தமிழ்ச்செல்வன் என்ற குழந்தை இருந்தது. கடந்த 10 மாதத்திற்கு முன், பாபு இறந்து விட்டார். தனது இரண்டு வயது குழந்தையுடன் சென்னையில் தங்கி, சித்தாள் வேலை செய்து வந்தார் இன்பநிலா. அப்போது, உடன் வேலை செய்த சிதம்பரம் அடுத்த கீழகுண்டலபாடி சந்துரு (எ) பாலச்சந்துருவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

கடந்த மாதம் பாலச்சந்துரு, இன்பநிலாவிடம் அரை சவரன் நகையை வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு வந்தவர், சென்னைக்கு செல்லவில்லை. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து தனது குழந்தையுடன் இன்பநிலா சிதம்பரம் வந்து பாலச்சந்துருவை சந்தித்து பேசினார். அப்போது பாலச்சந்துரு அரை சவரன் நகையை கொடுத்து பண்ருட்டியில் தங்கச் சொல்லி பஸ் ஏற்றி விட்டு தான் சொந்த ஊருக்கு சென்றார்.

இன்பநிலா, பண்ருட்டிக்கு செல்லாமல் சிதம்பரம் கஞ்சித்தொட்டி பஸ் நிலையத்தில் இறங்கி மீண்டும் பாலச்சந்துருவை தேடி வேளக்குடிக்கு சென்றார். பின், இருவரும் மது அருந்திவிட்டு கொள்ளிடக்கரை ஆற்றில் உல்லாசமாக இருந்தபோது, குழந்தை அழுதுள்ளது. ஆத்திரத்தில் குழந்தையை எட்டி உதைத்ததும், குழந்தை மூச்சுப்பேச்சு இல்லாமல் இருந்துள்ளது. பின், பாலச்சந்துரு, குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இன்பநிலா நடந்த சம்பவத்தை மறைத்து நாடகமாடி மருத்துவமனையில் சேர்த்தார். அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து இன்பநிலா, அவரது கள்ளக்காதலன் பாலச்சந்துரு ஆகிய இருவரையும் கைது செய்தனர். நாடகமாடிய கல்நெஞ்சக்காரி தனது இன்பத்திற்கு இடையூறாக இருந்த குழந்தையை கல்நெஞ்சத்தோடு கொலை செய்துவிட்டு இன்பநிலா நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.


போலீசாரிடம் இன்பநிலா கூறுகையில், "கணவரிடம் ஏற்பட்ட தகராறில் பெங்களூரில் இருந்து கோபத்தோடு புறப்பட்டு, என்னோடு வேலை பார்த்த வல்லம்படுகை வசந்தியை பார்க்க குழந்தையோடு வந்தேன். வழி தெரியாமல் வேளக்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கியபோது அவ்வழியாக பைக்கில் வந்த இருவர், வழி காட்டுவதாகக் கூறி என்னை அழைத்துச் சென்றனர். ஆள் அரவமற்ற புதர் மறைவில் சென்றபோது, என்னை இறக்கிவிடுமாறு கூச்சலிட்டேன். என்னை கற்பழிக்க முயன்றனர். அப்போது குழந்தை அழுததால் கால்களை பிடித்து தரையில் அடித்து கொன்று, என்னை கற்பழிக்க முயன்றனர்' என்றார். போலீசாரின் முறையான விசாரணையில் பெற்ற மகனையே கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது. கல்நெஞ்சம் படைத்த இன்பநிலா, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

கிராமப்புறத்துப் பெண்ணே தனது குற்றத்தை மறைக்க இப்படி அழகாக ஒரு கதை எழுதும்போது நகரத்து படித்த பெண்கள் தங்களது குற்றங்களை மறைக்க கணவனின் குடும்பத்தார் மீது எப்படியெல்லாம் பொய் வரதட்சணைப் புகார்களை எழுதுவார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.

|||||||||||||||

காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகளுக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த ஆசிரியை
செப்டம்பர் 16, 2010 ThatsTamil

நெல்லூர்: தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததற்காக 6 வயது மகளுக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த ஆசிரியையை கைது செய்துள்ளனர் போலீஸார்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் வெங்கடாச்சலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சைதன்யா. இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கணவர் இறந்து விட்டார். 6 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நாகேஷ் என்பவருக்கும், சைதன்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்தது. ஆனால் மகள் இடையூறாக இருப்பதாக உணர்ந்தார் சைதன்யா, இதனால் அவள் மீது கோபம் மூண்டது.

இதையடுத்து கடந்த சில நாட்களாக இரும்புக் கம்பியால் சூடு வைத்து சித்திரவதை செய்துள்ளார். குழந்தை கதறித் துடித்து அழும்போது டிவி வால்யூமை அதிகரித்து விடுவார். இதனால் அக்கம் பக்கத்தினருக்கு எதுவும் கேட்காது. ஆனால் அடிக்கடி திடீர் திடீரென டிவி சத்தம் அதிகமாக கேட்டதால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது சிறுமி உடல் முழுவதும் தீக்காயத்துடன் காணப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், சைதன்யா, தனது குழந்தையை சித்திரவதை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சைதன்யாவை போலீஸார் கைது செய்தனர். கள்ளக்காதலன் நாகேஷும் கைது செய்யப்பட்டார்.

================

இது முன்பு வந்த செய்தி....

கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்

தினமலர் அக்டோபர் 29, 2009

திண்டுக்கல் : கள்ளக்காதலனுடன் பத்து மாதங்களுக்கு முன்பு ஓடிப்போன தாயை கோர்ட்டில் பார்த்ததும், அவரது இரண்டு ஆண் குழந்தைகளும் கதறி அழுது தங்களுடன் வருமாறு அழைத்தனர். திண்டுக்கல் அருகேயுள்ள கள்ளிமந்தையம் செரியன்நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் (35). இவருக்கும் உஷா (27) என்பவருக்கும், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சாம்பிரசன்னா (5), சுதன் (3) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நர்ஸ் வேலை பார்த்த உஷா தான் படிக்கும் போதே காதலித்த பிரகாஷ் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் ஓடிப்போனார். இது குறித்து சாமுவேல் கள்ளிமந்தையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

சாமுவேல் தனது நண்பர்கள், உறவினர்களுடன் சென்று திருவாரூரில் காதலனுடன் தங்கியிருந்த உஷாவை அழைத்து வந்து கள்ளிமந்தையம் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். போலீசார் நேற்று உஷாவை திண்டுக்கல் ஜே.எம்.,1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில், கணவனுடன் செல்ல மறுத்த உஷா, தன் தாய் வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தார். கோர்ட் முடிந்து வாசலுக்கு வந்த தாயைப் பார்த்ததும், இரு குழந்தைகளும் கதறி அழுதன. "அம்மா நம்ம வீட்டுக்கு வாம்மா, அப்பாவுடன் சேர்ந்து நாலு பேரும் ஒன்றாக இருக்கலாம்'' என அழைத்தனர். இதனை கேட்டு கோர்ட் ஊழியர்களும், அங்கிருந்தவர்களும் கண் கலங்கினர். ஆனாலும் உஷா தன் கணவனுடன் செல்ல மறுத்து விட்டார். உஷா காதலனுடன் செல்வதற்காகவே என்னுடன் வர மறுக்கிறார். அவரை அழைத்து வந்த காதலன் பிரகாஷ் கோர்ட்டிற்கு வந்திருப்பதாக சாமுவேல் தெரிவித்தார்.

====================


இப்படித்தான் பொய் வரதட்சணை வழக்குகளும் நாட்டில் உருவாகின்றன. தனது கள்ளக்காதலுக்குத் தடையாக இருக்கும் கணவன் அவனது குடும்பம், அல்லது தனது சொல்லுக்குக்கு கட்டுப்பட்டு அடிமையாக இருப்பதற்கு ஒத்துவராத கணவன் இவர்களெல்லாம் இப்படித்தான் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கவைக்கப்படுகிறார்கள்.
1 comment:

DrPKandaswamyPhD said...

கொலையும் செய்வாள் பத்தினி என்று அந்தக் காலத்திலேயே பாடி வைத்திருக்கிறார்கள்

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.