இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, September 02, 2010

வழக்குகளை விரைந்து முடிக்க எளிய வழி!

பொய் வரதட்சணை வழக்கில் சிக்குபவர்களுக்கு இந்த வழிமுறைதான் பலகாலமாக கலங்கரைவிளக்கு போல் இருந்து வழிகாட்டப்படுகிறது. வீடு இரண்டுபட்டால் காவலுக்கும் நீதிக்கும் கொண்டாட்டம்தான்!

வழக்கை முடிவுக்கு கொண்டு வர லஞ்சம்: சிறப்பு எஸ்.ஐ., கைது
செப்டம்பர் 03,2010 தினமலர்

ஆண்டிபட்டி: வழக்கை முடிவுக்கு கொண்டுவர கூடுதல் லஞ்சம் கேட்ட, சிறப்பு எஸ்.ஐ., லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பிராதுகாரன்பட்டியை சேர்ந்தவர் முத்தையா(80). இவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி மகன்கள் மலைச்சாமி, செல்வம். இரண்டாவது மனைவி மகள் செல்வி. முத்தையா கடந்த மே மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது தந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, க.விலக்கு போலீசில் செல்வி புகார் செய்தார். சிறப்பு எஸ்.ஐ., கருப்பையா வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார்.

இந்நிலையில் செல்வி கணவர் செந்தில்குமார், தனது மைத்துனர் மற்றும் உறவினர்களுடன் சமரசம் பேசி வழக்கை வாபஸ் பெறுவதாக எஸ்.ஐ.,யிடம் தெரிவித்துள்ளார். இதற்காக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளார். இந்நிலையில், மேலும் 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று எஸ்.ஐ., நிபந்தனை விதித்துள்ளார். இது குறித்து செந்தில்குமார் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார். டி.எஸ்.பி., பாலசுப்பிரமணி ஆலோசனையில், இன்ஸ்பெக்டர் முத்துராஜ், எஸ்.ஐ., கோதண்டராமன், ஏட்டுக்கள் சந்திரசேகரன், சரவணன், ராமகிருஷ்ணன் ஆகியோர், செந்தில்குமாரிடம் ரசாயனம் தடவிய நோட்டுக்களை கொடுத்து அனுப்பினர். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த போலீசார், எஸ்.ஐ., கருப்பையாவை கைது செய்தனர்.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.