கணவன் வரதட்சணைக் கேட்டால் மனைவி கள்ளக்காதலில் ஈடுபடலாம் என்று சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரலாம். பல மருமகள்கள் பொய் வரதட்சணை வழக்குப் போட்டுவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மருமகள் நலனில் அக்கறை உள்ளவர்கள் இந்த புதிய சட்டத்திற்கு வழிவகை செய்தால் பல மருமகள்களின் வாழ்வு ஒளிபெறும்.
பெரும்பாலும் கள்ளக்காதலும் வரதட்சணைக் கொடுமை வழக்குகளும் ஒன்றாக இணைந்தே இருக்கும். இதில் எதன் மூலம் எது ஆரம்பித்தது என்று பிரித்தறிய சிறப்பான பயிற்சி வேண்டும்.
செப்டம்பர் 04,2010 தினமலர்
புதுக்கோட்டை : மனைவியின் கள்ளக்காதலனை கூலிப்படையினர் உதவியுடன் வெட்டிக் கொன்ற கணவர் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் அடுத்த கண்ணாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் யேசுதாஸ் (42); இவரது மனைவி ஆரோக்கிய ஜெயராணி(38). ஆர்.புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு, பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், வரதட்சணையாக மேலும் நகை, பணம் வாங்கி வருமாறு கணவர் வற்புறுத்தவே, ஆலமங்கலம் கிராமத்தில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றார். ஆலத்தூர் தெற்கு குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து மகன் ஜெயக்குமார்(40) என்பவருடன், ஆசிரியை ஆரோக்கிய ஜெயராணிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.ஜெயக்குமாருக்கு திருமணமாகி வனிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.கள்ளத்தொடர்பு குறித்து யேசுதாசுக்கு தெரிந்து, மனைவியை கண்டித்தும், இது தொடர்ந்தது. பொறுமையிழந்த யேசுதாஸ், தன் சகோதரர்கள் அருள்(49), ராஜமாணிக்கம்(29) மற்றும் கூலிப்படையினர் உதவியுடன், மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை படுகொலை செய்ய திட்டம் தீட்டினார்.நேற்று அதிகாலை, ஆரோக்கிய ஜெயராணியின் வீட்டுக்குச் சென்ற ஜெயக்குமார், அவருடன் உல்லாசமாக இருந்தார். இதை நேரில் பார்த்த யேசுதாஸ், சகோதரர்கள் மற்றும் கூலிப்படையினர் உதவியுடன், ஜெயக்குமாரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். தடுக்க முயன்ற ஆரோக்கிய ஜெயராணிக்கும் அரிவாள் வெட்டு விழுந்து, படுகாயமடைந்த அவரை உறவினர்கள், அறந்தாங்கி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்த திருப்புனவாசல் போலீசார், ஜெயக்குமாரின் உடலை மீட்டு, யேசுதாஸ், அவரது சகோதரர்கள் இருவரை கைது செய்தனர். தலைமறைவான கூலிப்படையினர் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment