இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, September 08, 2010

மாமனார்கள் ஜாக்கிரதை - மருமகள் வருகிறார்

இதுவரை மாமியார், கணவன் இவர்களை கொலை செய்துவந்த மருமகள்கள் சற்று முன்னேற்றம் அடைந்து இப்போது மாமனாரைக் கொலை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

கள்ளக்காதலை கண்டிக்கும் மாமியார் மற்றும் கணவனை பொய் வரதட்சணை வழக்கில் சிக்கவைத்துக்கொண்டிருந்த மருமகள்கள் இப்போது துணிந்து தைரியமாக கொலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த சாதாரண விஷயம்.

ஆனால் மாமனாருக்கு மட்டும் கொஞ்சம் கருணை காட்டி உயிர்ப் பிச்சைக் கொடுத்து கொலை செய்யாமல் வீட்டில் தனியாக இருக்கும்போது கையைப் பிடித்து இழுத்தார், சேலையைப் பிடித்து உருவினார் என்று வரதட்சணைப் புகாருடன் பாலியல் பலாத்காரப் புகாரையும் சேர்த்து கொடுத்துக்கொண்டிருந்த மருமகள்கள் இப்போது தங்களது கருணைப் பார்வையை மறைத்துவிட்டு இப்போது மாமனாரையும் கொலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் இந்திய மாமனார்கள் ஜாக்கிரதையாக இருக்கவும்.

மாமனார்களுக்கு பயன்படுத்துவதற்காகவே இந்திய அரசாங்கம் மருமகள்களுக்கு கீழுள்ள சிறப்புச் சட்டப்பிரிவுகளைக் கொடுத்திருக்கிறது. ஆனாலும் அவையெல்லாம் இப்போது பழையதாகிவிட்டதால் புதிதாக கொலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

  • வரதட்சணைக் கொடுமை
  • பாலியல் பலாத்காரம்
  • குடும்ப வன்முறை

பெண்களுக்கு சொத்தில் சமபங்கு கொடுக்கவேண்டும் என்று இந்தியாவில் சட்டம் போடப்பட்டிருந்தாலும் யாரும் தங்களுடைய மகளுக்கு சொத்தில் சம பங்கு கொடுக்காமல் ஏமாற்றி அதை “வரதட்சணை” என்ற சாயம் பூசி கடைசியில் “வரதட்சணைக் கொடுமை” என்று கணவன் மீதும் அவனது குடும்பத்தார் மீதும் பழியைப் போட்டு சிறைக்கு அனுப்பி வருகிறார்கள். இதுதான் இன்றைய வரதட்சணை சட்டங்களின் சுருக்கமான விளக்கம்.

பெண்களுக்கு இருக்கும் சொத்துரிமை பற்றியும் அதை ஒழுங்காக செயல்படுத்தவேண்டும் என்பது பற்றியும் எந்த மகளிர் சங்கமோ அல்லது மகளிர் வாரியமோ, மகளிர் அமைச்சகமோ இதுவரை மூச்சு விட்டது கிடையாது. ஏனென்றால் பெண்களுக்கு சொத்துரிமை கிடைத்தால் பெண்களின் வாழ்வு மேம்பட்டு சமுதாயத்தில் பெண்களின் நிலை உயர்வடைந்துவிடும். ஆனால் பொய் வரதட்சணை வழக்குகள் ஊக்குவிக்கப்பட்டு நாட்டில் பொய் வழக்குகள் பெருகினால் காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர்கள், பெண்ணுக்கு கொடுமை நடக்கிறது என்று ஓலமிட்டு நிதியுதவி பெறும் மகளிர் அமைப்புகள், வாரியங்கள் என்று ஒரு கூட்டத்திற்கே வாழ்வு வளம் பெறுமல்லவா? இதில் எது சிறந்தது? சொத்துரிமையில் ஒரு பெண் வளம் பெறுவதா அல்லது பொய் வழக்குகளால் ஒரு பெருங்கூட்டம் வளம் பெறுவதா?

பல மருமகள்களும் புத்திசாலிகள்தான். தங்களுக்குச் சேரவேண்டிய சொத்தை தன் குடும்பத்திலிருந்து வாங்காமல் புகுந்த வீட்டில் கணவனின் குடும்பத்தைப் பிரித்து எப்படி சொத்தை அபகரிப்பது என்று திட்டமிட்டுத்தான் திருமணமே செய்கிறார்கள். அப்படி தங்களின் கணக்கு ஒத்துவராதபோது கணவன் மற்றும் அவனது குடும்பத்தார் மீது “வரதட்சணைக் கொடுமை” என்று புகார் கொடுத்துவிடுவார்கள். அதற்குத்தான் இந்த சட்டங்கள் இருக்கின்றன என்று பட்டிக்காடு முதல் பட்டிணத்தில் இருக்கும் மருமகள் வரை எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

இப்படி கொடுக்கப்படும் வரதட்சணை வழக்குகளின் பின்னணியில் பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் குறிப்பாக தனிக்குடித்தனம் வராத கணவன், சொத்தை பிரித்து வாங்காத கணவன், சகோதரிகளுக்கு உதவி செய்யும் கணவன், மருமகளின் கள்ளக்காதலுக்கு இடையூராக இருக்கும் கணவன் மற்றும் மாமியார், மருமகளின் கள்ளக்காதலை கையும் “கலவுமாக” பார்த்துவிட்ட கணவன் போன்றவர்கள் இப்படித்தான் மருமகள் கொடுக்கும் வரதட்சணை வழக்கில் அப்பாவித்தானமாக சிக்கிக் கொள்கிறார்கள்.

இன்றைய செய்தியில் சொத்தை சரியாகப் பிரித்துக்கொடுத்த ஒரு அப்பாவி மாமனார் மருமகளால் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுபோல இன்னும் பல செய்திகள் வரும். ஏனென்றால் மருமகள்கள் இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கும் சட்டங்கள் மூலம் “பெண்ணுரிமை” பெற்றுவிட்டார்கள் அல்லவா! அவர்களும் தங்களது முன்னேற்றத்தை இந்த சமுதாயத்திற்குக் காட்டி நல்ல மதிப்பைப் பெறவேண்டுமென்றால் இப்படி ஏதாவது செய்தால்தான் மகளிர் சங்கத்தில் நாலுபேர் மதிப்பார்கள். பெண்ணுரிமைப் பேரொளி என்று பட்டம் கொடுத்து கவுரவிப்பார்கள்.

சொத்து பிரிப்பதில் தகராறு: மாமனாரை கொன்ற மருமகள்

செப்டம்பர் 09,2010 தினமலர்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில், சொத்தை பிரித்து கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மாமனாரை கட்டையால் அடித்து மருமகள் கொலை செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் விஸ்வநாதநகரைச் சேர்ந்தவர் குமார் (75). இவருக்கு 5 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த ஆண்டு நடந்த விபத்தில் மகன் தர்மராஜ் இறந்தார். தர்மராஜின் மனைவி பாக்கியலட்சுமி (30), இவர்களுடைய மகள் நித்யா (4), குமார் வீட்டிலேயே வசித்து வந்தனர். தன்னுடைய சொத்துக்களை ஆறு பங்குகளாக பிரித்து, 5 பங்குகளை மகள்களுக்கும், மீதி ஒரு பங்கை பேத்தி நித்யா மேஜர் ஆனதும் கிடைக்கும் வகையில் மாமனார் உயில் எழுதி வைத்திருந்தார். மாமனார் தன்னுடைய மகள்களுக்கு சொத்து கொடுத்தது பாக்கியலட்சுமிக்கு பிடிக்கவில்லை. இது சம்பந்தமாக இருவருக்கும், அடிக்கடி தகராறு ஏற்பட்டது.நேற்று முன்தினம் இது தொடர்பாக மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. மாமனார் உயிரோடு இருந்தால் தனது மகளான நித்யாவிற்கு எழுதி வைத்த சொத்துக்களையும், அவரது மகள்களுக்கே பிரித்து கொடுத்து விடுவார் எனக்கருதிய பாக்யலட்சுமி, அருகிலிருந்த கட்டையால் மாமனாரின் தலையில் அடித்து கொலை செய்தார். பாக்கியலட்சுமியை ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயராமன் கைது செய்தார்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.