இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, September 30, 2010

பெண் அதிகாரிகளை துன்புறுத்தாதீர்

இப்போதெல்லாம் பெண் அதிகாரிகளுக்கு எதிரான கொடுமைகள் நாட்டில் அதிகரித்துவிட்டது. பெண்களை எப்போதுதான் இந்த சமுதாயம் நிம்மதியாக வாழவிடுமோ என்று தெரியவில்லை. ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண் தட்டுத்தடுமாறி கல்வி கற்று ஒரு நல்ல அரசாங்கப் பணியைப் பெற்றபிறகு லஞ்சம் வாங்கி நிம்மதியாக வாழ்க்கையை நடத்துவதற்கு இந்த சமுதாயத்தில் வழிஇல்லை. என்ன கொடுமை!


உதவித்தொகை பெற லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது
10/1/2010 தினகரன்

ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள சீலியம்பட்டியை சேர்ந்தவர் ராணி. இவர் தனது மகள் கலைச்செல்விக்கு திருமண உதவித்தொகை கேட்டு ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது ஊர் நல அலுவலர் ஜானகி ரூ1000 லஞ்சம் கேட்டுள்ளார். ராணியும் பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில், திருமணப் பதிவு சான்றிதழை பரிந்துரை செய்ய மேலும் ரூ500ஐ ஜானகி கேட்டுள்ளார். ஓரிரு நாட்களில் தருவதாக கூறிவிட்டு வந்த ராணி, அது பற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக துணை எஸ்பி சந்திரமௌலி ஆலோசனையின் பேரில், அலுவலகத்துக்கு சென்ற ராணி ரசாயனம் தடவிய க்ஷீ 500ஐ நேற்று ஜானகியிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜானகியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

=========

பெண்ணுக்குப் பெண்தான் எதிரி!
இதை மேற்கண்ட செய்தியை விவரிக்க இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம். எதில் லாபம் கிடைக்கிறதோ அந்தப் பக்கத்தில் சேர்ந்துகொண்டு பெண்ணுரிமை என்று குரல் கொடுக்கலாம்.

  • ஒரு பெண் தன் மகளுக்காக அரசாங்க நிதியுதவி கேட்டு அரசாங்க அதிகாரியான மற்றொரு பெண்ணை அனுகினால் அவர் உதவி செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் கடமையையாவது செய்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் தன்னிடம் உதவிகேட்டு வந்தப் பெண்ணிடம் லஞ்சம் கேட்டு துன்புறுத்தியிருக்கிறார்.
  • மேற்கண்ட செய்தியை நவீன “பெண்ணுரிமை” என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு இப்படியும் சொல்லலாம்: ஒரு பெண் கல்வி கற்று பலத்த போட்டிகளுக்கிடைய ஆண்களைப் பின்னுக்குத்தள்ளி அரசாங்கப் பணியையும் பெற்று சாதனை புரிந்து ஆணுக்கு நிகராக லஞ்சம் வாங்கலாம் என்று முயற்சி செய்யும்போது அவரை மற்றொரு பெண் ஊழல் புகாரில் சிக்கவைத்துவிட்டார். என்ன கொடுமை! ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை மற்றொரு பெண்ணே அழித்துவிட்டாரே.
பொய் வரதட்சணை வழக்குப்போடும் பெண்களுக்கு ஆதரவாக “பெண்ணுரிமை” என்று குரல் கொடுக்கும் கூட்டம் இதில் எந்தவகையைச் சேர்ந்தது என்று தெரிந்துகொள்ளுங்கள். பெண்களுக்கு கொடுமை நடக்கிறது. மதுபான விடுதியில் சுதந்திரம் இல்லை என்று பொய்வழக்குப்போடும் பெண்களுக்காக கூக்குரல் இடும் இந்ததக் கூட்டம் எப்படிப்பட்டது என்று புரிந்துகொள்ளுங்கள்.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.