சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, October 01, 2010

சூப்பர் நியூஸ்!

அக்டோபர் 1, 2010, Thats Tamil

போளூர்: வரதட்சணை புகார் தொடர்பாக போளூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேடியப்பன் திடீர் என தலைமறைவாகி உள்ளார்.

கடந்த 1991-ம் அண்டு அதிமுக கட்சி சார்பாக போளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வேடியப்பன்.

இவரது மகன் தண்டபானிக்கும், சத்யா என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் சத்யா போளூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வேடியப்பன் மீது ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

அதில் தனது கணவர் தண்டபாணி, மாமனார் வேடியப்பன், மாமியார் சந்தியா ஆகியோர் 100 சவரன் நகை, கார், ஜே.சி.பி. இயந்திரம் வேண்டும் என வரதட்சனை கேட்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் போளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வேடியப்பனைத் தேடி அவரது வீட்டிற்குச் சென்றனர்.

ஆனால் அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. வேடியப்பன் மற்றும் அவரது மனைவி சந்தியா, மகன் தண்டபாணி ஆகியோர் திடீரென தலைமறைவாகி விட்டனர். இதையடு்த்து அவர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.