பெண் அதிகாரிகளின் உதவி மனப்பான்மைக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது!
உதவி செய்யாத சூடான் மாணவனின் பாஸ்போர்ட்டை முடக்கிய பெண் ஊழியர் சஸ்பெண்ட்
தினகரன் 10/10/2010
உதவி செய்யாத சூடான் மாணவனின் பாஸ்போர்ட்டை முடக்கிய பெண் ஊழியர் சஸ்பெண்ட்
தினகரன் 10/10/2010
கோவை: வெளிநாட்டு மாணவனின் பாஸ்போர்ட்டை முடக்கிய பெண் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கோவை மாநகர காவல்துறை கமிஷனர்அலுவலக கட்டடத்தில் மூன்றாவது தளத்தில் பாஸ்போர்ட் பிரிவு உள்ளது. மாநகரை சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்யும்போது, பரிசீலனை செய்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்புவது இப்பிரிவின் பணி. தவிர, கோவையிலிருந்து வெளிநாடு செல்கிறவர்கள், வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வருகிறவர்கள் பற்றிய முழு விவரமும் இவ்வலுவலகத்தில் பராமரிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வருகை தருவோர் விசா காலம் முடிந்த பிறகும் நாடு திரும்பவில்லையெனில் இப்பிரிவு அலுவலர்களிடம் அதற்குரிய விளக்கம் அளித்து, தடையின்மை சான்றிதழ் பெற்ற பிறகே மீண்டும் நாடு திரும்ப முடியும்.
இந்த அலுவலகத்தில் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியை சேர்ந்த ஸ்வர்ணலதா (40) என்பவர் எழுத்தராக பணிபுரிகிறார். இவர், சூடான் நாட்டை சேர்ந்த ஒரு மாணவனிடம் சில உதவிகளை கேட்டுள்ளார். ஆனால், அவர் தன்னால் செய்துகொடுக்க இயலாது எனக்கூறியுள்ளார். இதையடுத்து, அம்மாணவனின் பாஸ்போர்ட்டை கடந்த 6 மாத காலமாக முடக்கிவைத்துள்ளார். இதனால், அம்மாணவன் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார்செய்தார். இதுபற்றி விசாரணை நடத்திய அவர், நேற்று முன்தினம் ஸ்வர்ணலதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதுபற்றி கமிஷனர் கூறுகையில், ஸ்வர்ணலதா மீது இதுபோன்று பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. அதுபற்றியும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment