சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, October 09, 2010

காதல் காதல் புனிதமான கள்ளக்காதல்

தான் பெற்ற மகனுக்கும் வயது 23, தனது காதலனுக்கும் வயது 23. நல்ல புனிதமான காதல்.

சட்டங்கள் சமமாக இல்லாமல் பாரபட்சம் காட்டுவதால் கள்ளக்காதலில் இந்த வயது வித்தியாசங்கள் காட்டப்படுவதில்லை.


ஈரோட்டில் பரபரப்பு 23 வயது காதலனை பிரித்ததால் 42 வயது காதலி தற்கொலை

தினகரன் 10/10/10

கொடுமுடி: இளம் வயது காதலனை பிரித்ததால் 42 வயது காதலி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த பாஸ்கரன் மனைவி சரசு(42). 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு 23 வயதும், இளைய மகனுக்கு 18 வயதும் ஆகிறது. சரசு கூலி வேலைக்காக சிவகங்கை மாவட்டம் முடிக்கரைக்கு அடிக்கடி செல்வார். அங்கு வசிக்கும் சதீஷ்குமார்(23) என்ற வாலிபருடன் காதல் ஏற்பட்டது. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர். இவர்கள் இங்கு தனிக்குடித்தனம் நடத்துவது சதீஷ்குமாரின் பெற்றோருக்கு தெரியவந்தது. சதீஷ்குமாரின் பெற்றோரும், உறவினர்களும் ஊஞ்சலூர் வந்து, தங்களுடன் அழைத்து செல்ல முயன்றனர். காதலனை தன்னிடமிருந்து பிரித்து விடுவார்களோ என அஞ்சிய சரசு, தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.