இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, October 02, 2010

இளம்பெண்ணின் இரட்டைக் காதலில் சிறையில் தள்ளப்பட்ட ஆண்

இளம்பெண்ணின் இரட்டைக் காதலில் பலியாகி சிறையில் தள்ளப்பட்ட ஆண்

தினமலர் அக்டோபர் 02,2010

வேலூர் : இரண்டு பேரை காதலித்ததால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண், மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர், காட்பாடி அடுத்த தொண்டான் துளசி கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி (20). இவர், காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் மருத்துவ பரிசோதனை நிலையத்தில் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த இரு ஆண்டாக தொண்டான் துளசியை சேர்ந்த சக்திவேல் (22) என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு இரு வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், வாணியம்பாடியைச் சேர்ந்த சேட்டு (23) என்பவருக்கும், ரேவதிக்கும் திடீரென காதல் ஏற்பட்டது. இதனால், சக்திவேலை, ரேவதி ஒதுக்கித் தள்ளினார். இது தொடர்பாக கடந்த வாரம் ரேவதிக்கும், சக்திவேலுக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். நண்பர்கள் சமரசம் செய்ததன் பேரில் சக்திவேலை திருமணம் செய்து கொள்ள ரேவதி சம்மதித்தார். இதனால், சேட்டு கோபமடைந்தார்.

கடந்த 23ம் தேதி வேலைக்கு சென்ற ரேவதி வீடு திரும்பவில்லை. "சேட்டு, ரேவதியை கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம்' என, சந்தேகப்படுவதாக ரேவதியின் தந்தை பாலகிருஷ்ணன், லத்தேரி போலீசில் புகார் செய்தார். சேட்டிடம் விசாரணை செய்ததில், ரேவதியை கழுத்தை நெரித்து கொலை செய்து திம்மாம்பேட்டை பாலாற்றில் புதைத்து விட்டதாக கூறினார். போலீசார் சேட்டை அழைத்துச் சென்று திம்மாம்பேட்டை பாலாற்றில் ரேவதி புதைக்கப்பட்ட இடத்தை தேடினர். ஆனால் இதோ, அதோ என சேட்டு கைகாட்டிய இடங்களை தோண்டிப் பார்த்து, ரேவதி பிணம் கிடைக்காமல் போனதால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று சேட்டிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது, திருமணக் கோலத்தில் ரேவதியும், சக்திவேலும் நண்பர்கள் புடை சூழ லத்தேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.

இரு வீட்டிலும் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கணியம்பாடியில் உள்ள நண்பர்கள் வீட்டில் மறைந்து இருந்ததாகவும், 30ம் தேதி திருமணம் செய்து கொண்டதாகவும் ரேவதியும், சக்திவேலும் போலீசாரிடம் கூறினர். "ஏன் ரேவதியை கொன்று விட்டதாக பொய் சொன்னாய்?' என, சேட்டிடம் கேட்ட போது, போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிக்கவே இப்படி சொன்னதாகவும், பாலாற்றில் தோண்டிப் பார்த்த போது தப்பித்து விடலாம் என நினைத்த போது முடியாமல் போனதாக கூறினார். சேட்டு மீது போலீசாரை ஏமாற்றிய குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

=========

போலிஸ் கொடுமையிலிருந்து தப்பிக்க தான் செய்யாத தவறை செய்ததாகக் கூறிய ஆண்மீது போலிசை ஏமாற்றியதாக வழக்குப்போட்டிருக்கிறார்கள். ஆனால் பல பெண்கள் பொய்யான புகார்களை கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது சுமத்தினாலும் காவல்துறைக்கு அது பொய் என்று தெரிந்தாலும் அந்த வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பி அப்பாவிகளை அலைய விடுகிறார்கள். பொய் வழக்குப்போட்டு அப்பாவிகளை அலைக்கழிக்கும் பெண்களுக்கு எந்தவித தண்டனையும் கிடையாது. காவல்துறையோ, நீதித்துறையோ அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படமாட்டார்கள். என்ன ஒரு விசித்திரமான சட்ட நடைமுறை!

பெண்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு தண்டனை பெறுவது அப்பாவி ஆண்கள்தான்.






No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.