இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, October 11, 2010

மனைவி “குக்கர்” போலவும் வெடிப்பாள்

மனைவி என்பவள் “குக்கர்” அல்ல. என்று ஒரு செய்தி வந்திருக்கிறது. மற்றொரு செய்தி மனைவி என்பவள் குக்கர் போல் சில சமயம் வெடித்து கள்ளக்காதலுக்காக கணவனையே போட்டுத்தள்ளவும் தயங்கமாட்டாள் என்று வந்திருக்கிறது. இந்த இரண்டு செய்திகளில் எந்த செய்தி தற்போதைய காலகட்டத்தில் பெண்களை படம்பிடித்துக் காட்டுகிறது என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

"மனைவி குக்கர் அல்ல; அவளுக்கும் உணர்வு உண்டு'

தினமலர் அக்டோபர் 11,2010

பொங்கலூர் : ""உலகில் வணங்கத்தக்கது மூன்று. அவை, தாவரம், தொழிலாளர்கள், பெண்மை; இவற்றில் உயர்ந்தது பெண்மை. தனக்காக வாழாமல் பிறருக்காக வாழும் பெண்கள், சமுதாயத்தில் இரண்டாமிடத்தில் இருக்க காரணம் சமுதாயம் அல்ல; தத்துவம்,'' என அழகர் ராமானுஜம் பேசினார்.

பொங்கலூர், திருப்பூர் லயன்ஸ் கிளப் மற்றும் பொங்கலூர் மனவளக்கலை மன்றம் சார்பில், மனைவி நல வேட்பு தின விழா, கொடுவாயில் நடந்தது. மனவளக்கலை மன்ற தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். துணை தலைவர் நாச்சிமுத்து, திருப்பூர் டாலர்சிட்டி லயன்ஸ் கிளப் தலைவர் கந்தசாமி முன்னிலை வகித்தனர். லயன்ஸ் அறக்கட்டளை தலைவர் பழனி சிவக்குமார் வரவேற்றார்.

தஞ்சை பேரளம், வேதாத்திரி மகரிஷி அமைதி மற்றும் ஆன்மிக மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவனர் அழகர் ராமானுஜம் பேசியதாவது:ஆன்மிகம் வருங்கால சமுதாயத்தை உருவாக்குகிறது; துயரம், பேரழிவு போன்ற காலங்களில், இணைப்பு பாலமாக செயல்படும் லயன்ஸ் கிளப், நிகழ்கால சமுதாயத்தை உருவாக்குகிறது. கணவன், மனைவி உறவு சமுதாயத்தில் மிகவும் நெருக்கமானது; புனிதமானது. இல்லற வாழ்வில் சில விரிசல்கள் வரலாம்; அன்பை பரிமாறிக் கொள்வது சிறந்த இல்லறம்; ஒருவர் குற்றம் செய்யும்போது, மற்றொருவர் மன்னித்து ஏற்பது தெய்வீகம். மனைவி மட்டும் தன் பக்கமிருந்தால், உலகமே எதிர்த்தாலும் ஒருவனால் ஜெயிக்க முடியும்.திருமண உறவில் இணைந்த குடும்பம், எக்காரணம் கொண்டும் பிரியக்கூடாது. தாயாகவும், தாரமாகவும், தமக்கையாகவும் வருவது பெண்கள். அவர்களை போற்ற வேண்டும். உலகில் வணங்கத் தக்கது மூன்று. அவை, தாவரம், தொழிலாளர்கள், பெண்மை; இவற்றில் உயர்ந்தது பெண்மை. தனக்காக வாழாமல் பிறருக்காக வாழும் பெண்கள், சமுதாயத்தில் இரண்டாமிடத்தில் இருக்க காரணம் சமுதாயம் அல்ல; தத்துவம்.அனைவரும் தாயை வணங்க வேண்டும்; தாரத்தை பாராட்ட வேண்டும். மனைவி என்பவள் குக்கர் அல்ல; அவளுக்கும் உணர்வு உண்டு; மதிப்பு கொடுக்க வேண்டும்; மதிப்பு கொடுக்காதபோது துன்பம் வருகிறது. வாழ்க்கை என்பது விட்டுக் கொடுப்பது; அறிவில் உயர்ந்தவர்கள் விட்டுக்கொடுக்கிறார்கள். பிறர் சுதந்திரத்தை பறிப்பது ஆணவம்; பிறருக்கு சுதந்திரம் கொடுப்பது அன்பு. எவ்வுயிரும் தன்னுயிரே; பரஸ்பர அன்பில் குடும்பம் மலர்கிறது. தாய் இல்லாதபோது மனைவி துணையிருக்கிறாள்; தாரத்தை இழந்தவர் அனாதையாகிறார். எதை கொடுத் தேனும் இல்லறத்தை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு, அழகர் ராமானுஜம் பேசினார்.

கணவனைக் கொல்ல திட்டம் போட்ட மனைவியும் அதனை செயல்படுத்திய கள்ளக் காதலனும் கைது

அக்டோபர் 11,2010 தினகரன்

சென்னை : கீழக்கரையில் இருந்து சென்னை வந்து லாட்ஜில் தங்கியிருந்த கணவனை, தீர்த்துக்கட்ட முயன்ற மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் முகமது பாசில் (40), வியாபாரி. இவர் அதே ஊரை சேர்ந்த நண்பர் ஆஜார் யாசின் என்பவருக்கு ^4 லட்சம் கடன் கொடுத்திருந்தார். ஆஜார் யாசின் மண்ணடியில் உணவு விடுதி நடத்துகிறார். பல முறை கேட்டும் யாசின் பணத்தை தரவில்லை. உடனே பணத்தை வசூலிக்க, கடந்த வாரம் சென்னை வந்த முகமது பாசில், லாட்ஜில் தங்கினார். கடந்த 4ம் தேதி மண்ணடி தெருவுக்கு சென்ற பாசிலை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. படுகாயமடைந்த அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

வடக்கு கடற்கரை இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப் பதிவு செய்து, ஆஜார் யாசினை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர் பாசிலை வெட்டவில்லை என்பது தெரிந்தது. முகமது பாசிலுக்கு வந்த செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரித்தனர். சம்பவத்தன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் இருந்தும், இரவில் மண்ணடியில் இருந்தும் அழைப்பு வந்துள்ளது. அந்த எண் தாரிக் மொய்தீன் (35) என்பவருக்கு சொந்தமானது என தெரிந்தது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூரில் பதுங்கியிருந்த தாரிக் மொய்தீனை போலீசார் பிடித்தனர். விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

பாசிலின் மனைவி லாபிரா (32). அதே ஊரை சேர்ந்தவர் தாரிக் மொய்தீன். பாசில் அடிக்கடி வெளிநாடு சென்றுவிட்டு, 2, 3 மாதங்கள் தங்கிவிட்டு திரும்பி வருவார். இந்த சமயத்தில் தாரிக் மொய்தீனுக்கும் லாபிராவுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது தெரிந்து இருவரையும் பாசில் கண்டித்துள்ளார். இதனால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்ட லாபிரா முடிவு செய்துள்ளார். பாசில் சென்னை சென்ற விவரத்தை தாரிக் மொய்தீனிடம் லாபிரா போன் செய்து கூறியுள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் உறவினர் வீட்டுக்கு சென்ற தாரிக் மொய்தீன், அங்கிருந்து பாசிலின் நடவடிக்கைகள் பற்றி லாபிராவிடம் கேட்டறிந்துள்ளார்.

சம்பவத்தன்று யாசின் போனில் அழைப்பது போல பேசி, மண்ணடி மூர் தெருவில் உள்ள ஒரு லாட்ஜிக்கு, பாசிலை வரச் சொல்லியுள்ளார் தாரிக் மொய்தீன். அந்த லாட்ஜ் வாசலுக்கு வந்ததும் ‘உன் மனைவியை தலாக் சொல்லிவிடு, நாங்கள் திருமணம் செய்யப் போகிறோம்’ என்று தாரிக் மொய்தீன் கூறியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த தாரிக் மொய்தீன், அரிவாளை எடுத்து பாசிலின் தலை, கழுத்தில் வெட்டியுள்ளார். அந்த சமயத்தில் போலீஸ் ரோந்து வந்ததும், பாசிலை விட்டுவிட்டு தாரிக் மொய்தீன் தப்பியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர். உதவி கமிஷனர் காதர் மொய்தீன் உத்தரவுப்படி தாரிக் மொய்தீனை கைது செய்த போலீசார், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், கீழக்கரைக்கு சென்று லாபிராவையும் கைது செய்தனர்.


சென்னை : கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே தீர்த்துக் கட்டினாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

கல்பாக்கம் அருகேயுள்ள வசுவசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (36). இவருக்கும் செங்கல்பட்டு அருகேயுள்ள சிறுமணி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடி(33) என்பவக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு விமலா (13), வினோதினி (11) என 2 குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்துக்கு பிறகு சிறுமணி கண்டிகை அரசு பள்ளி எதிரேயுள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார் செல்வம். உதயம் கிராமத்தில் உள்ள ஒரு ரைஸ் மில்லில் ஆபரேட்டராக வேலை செய்து வந்தா. அதே பகுதியில் உள்ள ஆடை ஏற்றுமதி நிறுவனத்ல் பூங்கொடி வேலை செய்து வருகிறார். காலையில் வேலைக்கு செல்லும் செல்வம், இரவு நீண்ட நேரத்துக்கு பிறகுதான் வீடு திரும்புவார். இதனால், கணவன்&மனைவி இடையே அடிக்கடி தகராறு நடக்கும் என கூறப்படுகிறது. 3 மாதங்களுக்கு முன் கணவனுடன் கோபித்துக் கொண்டு, குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றார் பூங்கொடி.

இந்நிலையில், நேற்று காலை செல்வம் வீட்டு ரேடியோவில் அதிக ஒலி கேட்டது. வகுப்பு நடத்துவதற்கு இடைஞ்சலாக இருந்ததால், எதிரேயுள்ள பள்ளியில் இருந்து சில ஆசிரியர்கள் செல்வம் வீட்டுக்கு வந்தனர். கதவு அருகே ரத்த வெள்ளத்தில் செல்வம் சடலம் கிடந்தது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.செங்கல்பட்டு கூடுதல் எஸ்.பி. சேவியர் தன்ராஜ், இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் வந்தனர். செல்வத்தின் கழுத்து அறுக்கப்பட்டும், முதுகில் கத்தியால் குத்தியும், மணக்கட்டையால் அடித்து மண்டை சிதைக்கப்பட்டும் இருந்தது தெரிய வந்தது. ரத்தம் உறைந்த கத்தி மற்றும் மணக்கட்டை சடலம் அருகே கிடந்தன.

போலீஸ் மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிவிட்டு நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது: ‘பூங்கொடிக்கும் அதே பகுதியை சேர்ந்த தனசேகரன் என்ற வாலிபருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளதாக தெரிகிறது. செய்வினை உள்ளிட்ட பூஜைகளை தனசேகரன் செய்வார் என்றும் கூறப்படுகிறது. இதை, செல்வம் கண்டித்துள்ளார். இதனால், செல்வத்தை பிரிந்து பூங்கொடி தாய் வீடு சென்றார். அதன்பிறகு, தனசேகரன் மற்றும் தாயுடன் சேர்ந்து செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் பூங்கொடி. சில மாதங்களுக்கு முன், தனசேகரன், பூங்கொடி மற்றும் சிலர் சேர்ந்து செல்வத்தை சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், செல்வத்தின் உடல் நலம் பாதிக்கும் வகையில் யாகம் வளர்த்து பூஜை செய்திருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்’. இந்த தகவல்கள் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். பூங்கொடி, அவரது தாயாரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள தனசேகரனை போலீசார் தேடி வருகின்றனர்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.