இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, October 27, 2010

பெற்ற தாயை விரட்டியடித்த மகள்


சென்னை: தள்ளாத வயதில் தாயை வீட்டை விட்டு விரட்டிய மகளையும், மருமகனையும் அந்த மூதாட்டியை நன்றாக பார்த்துக் கொள்ளும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகரீக மோகம் பிடித்து பெற்றவர்களை வயதான காலத்தில் வீட்டை விட்டு துரத்தியடிப்பது சென்னையில் அதிகம் நடநது வருகிறது.

சென்னையில் உள்ள உள்ளகரத்தைச் சேர்ந்தவர் சுந்தரி (70). அவர் தனது சொந்த வீட்டில் வசித்து வந்தார். அவரின் கணவர் இறந்தபோது, துக்க செயதி கேட்டு வந்த சுந்தரியின் மகளும், மருமகனும் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டனர்.

நிலத்தாசை கொண்ட அவர்கள் மூதாட்டியை வீட்டை விட்டு வெளியேற்றி ஒரு விடுதியில் சேர்த்தனர். அவர்கள் விடுதிக் கட்டணமும் சரிவர செலுத்தவில்லை. இதனால் மனவேதனை அடைந்த சுந்தரி தன்னை மறுபடியும் தனது சொந்த வீட்டில் குடியமர்த்தும்படி சமூக நலத்துறை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அதன் பிறகு சுந்தரியின் மகள், மருமகன் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீவத்சன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த அவர் சுந்தரியை அவரது சொந்த வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும். அவர் விருப்பத்திற்கு மாறாக அவரை வெளியேற்றக் கூடாது. மேலும், அவருடைய மகளும், மருமகனும் அவரை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

===========

சொத்திற்காக பெற்ற தாயை விரட்டியடிக்கும் மகள்களும், தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவன் மீது பொய் வரதட்சணை வழக்குப்போடும் மனைவியரும், கணவன் குடும்பத்தில் பணத்தைப் பிடுங்குவதற்காக மாமியார் குடும்பத்தார் மீது பொய் வரதட்சணை வழக்குப்போடும் மருமகள்களும் சர்வசாதரணமாக நாட்டில் உலவிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஆதரவு கொடுத்து வளர்த்துவிடுவதுதான் பெண்கள் பாதுகாப்பு சட்டங்களின் தலையாய பணி! பெண்கள் நாட்டின் கண்கள். ஆனால் நாட்டின் கண்களுக்கு தவறான சட்டங்கள் மூலம் பார்வையிழப்பு வந்துகொண்டிருக்கிறது.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.