இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, May 31, 2011

கொலையாளியாக்கப்பட்ட 4 வயது இந்தியச் சிறுவன்

இந்தியாவில் அப்பாவிகளைக் காப்பாற்ற வேண்டிய உன்னதமான பணியிலிருப்பவர்கள் தங்கள் கடமை தவறி அப்பாவிகளை எப்படி குற்றவாளியாக சித்தரித்து பொய் வழக்குப்போடுகிறார்கள் என்று இந்த செய்தியின் மூலம் நன்கு அறிந்துகொள்ளலாம்.

நான்கு வயது சிறுவன் கொலை குற்றவாளியா? பீகார் போலீசாரின் விசித்திரம்
ஜூன் 01,2011 தினமலர்

பாட்னா: பீகாரில் கொலை வழக்கு ஒன்றில், நான்கு வயது சிறுவனை, போலீசார் குற்றவாளியாக சேர்த்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த சண்டை ஒன்றில், அச்சுனாந்த் பாண்டே என்பவர் கொல்லப்பட்டார். பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும், பாண்டேவுக்கும் இடையே நடந்த சண்டையின் காரணமாக, இந்த கொலை நடந்தது. இதில், பாண்டேயின் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் சமீபத்தில் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களில், நான்கு வயதே நிரம்பிய, பச்சிளம் சிறுவன் ஒருவனும் இருந்தது, கோர்ட் வளாகத்தில் இருந்தவர்களுக்கு ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட சிறுவனின் வயது எத்தனை என்பதை பூர்த்தி செய்யவில்லை. வாழ்க்கை என்றால் என்ன, மரணம் என்றால் என்ன என்பது தொடர்பான விவரங்களைப் பற்றி, எதுவுமே அறியாத ஒரு சிறுவனை, எப்படி கொலை வழக்கில் சேர்த்தனர் என, அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். சிறுவன் செய்த ஒரே தவறு, கொலை செய்யப்பட்ட பாண்டேயின் பக்கத்து வீட்டில் பிறந்தது தான்.

இதுகுறித்து வக்கீல்கள் சிலர் கூறுகையில், "ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்ய முடியாது. இது தொடர்பாக சட்ட விதிமுறையே உள்ளது. ஆனால், இந்த கொலை வழக்கில், நான்கு வயது சிறுவனை எப்படி சேர்த்தனர் என, தெரியவில்லை' என்றனர்.போஜ்பூர் மாவட்ட எஸ்.பி., ராஜேஸ் திரிபாதி கூறுகையில்,"நான்கு வயது சிறுவன் மீது, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல், என் கவனத்துக்கு வரவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். விசாரணையில், நான்கு வயது சிறுவனின் பெயர், கொலை வழக்கில் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தால், உடனடியாக, அந்த சிறுவனின் பெயர், வழக்கில் இருந்து நீக்கப்படும்' என்றார்.

இதுபோன்ற சுவாரஸ்யமான பல கதைகளை பின்வரும் இணைப்புகளில் படித்து மகிழுங்கள்.


Saturday, May 28, 2011

அமெரிக்க போலிஸ் செய்தால் கொடுமை! இந்தியப் போலிஸ் செய்தால் சேவை!!

அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரி மகளை அமெரிக்க போலிஸ் கைது செய்த விஷயம் சமீபத்தில் செய்தித்தாளில் பரபரப்பான செய்தியாக வந்துகொண்டிருக்கிறது.

நியூயார்க் : "இந்திய துணைத் தூதரக அதிகாரியின் மகள் விவகாரத்தில், வியன்னா ஒப்பந்த ஷரத்துகளை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தவறாக புரிந்து கொண்டுள்ளது. உண்மையில், இந்திய தூதரக அதிகாரிக்கான அதிகாரப் பாதுகாப்பு என்பது, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் செல்லுபடியாகும்' என, நியூயார்க் இந்திய துணைத் தூதரகத் தலைவர் பிரபு தயாள் கூறியுள்ளார்.

அமெரிக்கா, நியூயார்க் நகரம் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில், துணைத் தூதரக அதிகாரியாக பணிபுரிபவர் தேபாஷிஷ் பிஸ்வாஸ். இவரது மகள் கிருத்திகா பிஸ்வாஸ், 18. தான் படித்த பள்ளியில் ஆசிரியர்கள் பற்றி தரக்குறைவான மின் அஞ்சல்களை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இவ்விவகாரத்தில், கிருத்திகாவின் வக்கீல் ரவி பத்ரா, "அவர் தூதரக அதிகாரியின் மகள் என்பதால் அவருக்கு தூதரக அதிகார பாதுகாப்பு உண்டு. அதையும் மீறி அவர் கைது செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார்' என்று கூறியிருந்தார். இதை தனது பேட்டியில் கிருத்திகாவும் தெரிவித்திருந்தார். மேலும் ரவி பத்ரா, "வியன்னா ஒப்பந்தத்தின் படி, இது போன்ற விவகாரங்களில் கைது செய்யப்பட்டவர் பற்றிய தகவல்களை, அப்பகுதி நிர்வாகம் குறிப்பிட்ட தூதரகத்திற்கு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி தெரிவிக்கப்படவில்லை' என்றார்.

கடந்த வார துவக்கத்தில் இதுகுறித்து பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவு துணை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர்,
"ஒரு தூதரக அதிகாரியின் மகள் என்ற வகையில், அதிகார பாதுகாப்பை அவர் பெற முடியாது' என்று கூறியிருந்தார்.கடந்த 1961ல், ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச நாடுகளின் தூதரக விவகார ஒப்பந்தத்தில், 36வது பிரிவில், "சம்பந்தப்பட்ட தூதரகத்திற்கு இதுபோன்ற விவரங்களை உடனடியாக தாமதமின்றி தெரிவிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 37வது பிரிவில், "தூதரக அதிகாரிகளுக்கான அதிகார பாதுகாப்பு, அவர்களது குடும்பங்களுக்கும் பொருந்தும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இதுகுறித்து பேட்டியளித்த நியூயார்க் இந்திய துணைத் தூதரகத் தலைவர் பிரபு தயாள் கூறுகையில்
, ""வியன்னா ஒப்பந்தத்தில், துணைத் தூதரக உறவுகள்(1963) பற்றிய பகுதியில், 53 (2) பிரிவின்படி, தூதரக அதிகாரியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது தனிப்பட்ட அலுவலர்கள் என இரு தரப்பினரும், அதிகாரிக்கான அனைத்து சலுகைகள் மற்றும் அதிகார பாதுகாப்பைப் பெறுவர்.அதன்படி போலீசார் கிருத்திகா பிஸ்வாசை கைது செய்திருக்கக் கூடாது,'' என்றார்.

செய்யாத தவறுக்கு தன்னை போலீசார் கைது செய்ததற்காக, 675 லட்ச ரூபாய் (1.5 மில்லியன் டாலர்) இழப்பீடு கோரி, கிருத்திகா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், அப்பகுதி பத்திரிகைகளில் இச்சம்பவத்தால் அவர் மிகவும் பிரபலமாகிவிட்டார். பல முறை, "டிவி'க்கள், பத்திரிகைகள், இணையங்களில் அவர் பேட்டியளித்து விட்டார்.

இந்த செய்தியிலிருந்து இரண்டு கேள்விகள் எழுகின்றன.

1. குற்றம் செய்ததாக கருதப்பட்டதால் தூதரக அதிகாரியின் மகளாக இருந்தாலும் அமெரிக்க போலிஸ் கைது செய்திருக்கிறது. ஆனால் நம்ம ஊரிலிருந்து செல்லும் இந்திய மருமகள்கள் அமெரிக்காவில் எந்தவித அரசாங்க பின்னணியும் இல்லாமல் அமெரிக்க விசாவில் வேலை செய்துகொண்டிருக்கும் சாதாரண இந்தியக் கணவன் தன்னை வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்து தனது கர்ப்பத்தை கலைத்து கொடுமை செய்தான், பீரை தலையில் ஊற்றி குளிப்பாட்டினான், சிகரெட்டால் சூடு வைத்தான், ஓடும் காரிலிருந்து தள்ளிவிட்டான், சாப்பாடு போடாமல் வீட்டில் அடைத்து வைத்து கொடுமை செய்தான் என்றெல்லாம் இந்தியாவில் வந்து கட்டுக்கதை விடுகிறார்களே! இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் நடந்திருந்தால் அமெரிக்க போலிஸ் இந் கணவன்களை எப்படி சும்மா விட்டுவிடுகிறார்கள்?

அப்படியென்றால் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் இந்திய மருமகள்கள் இந்தியாவிற்கு வந்து கதை சொல்லி பணம் பறித்துக்கொண்டிருக்கிறார்களா? அல்லது அமெரிக்க போலிஸ் இதுபோன்ற குற்றவாளி இந்தியக் கணவன்களை தட்டிக்கொடுத்து சபாஷ் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்களா?

2. அமெரிக்க போலிஸ் எந்தவித ஆதாரமும் இல்லாமல் தன்னை கைது செய்துவிட்டதால் 675 லட்ச ரூபாய் (1.5 மில்லியன் டாலர்) இழப்பீடு கோரி இந்த பெண் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அப்படியென்றால் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பல அப்பாவிப் பெண்களும், குழந்தைகளும் எந்தவித ஆதாரமும் இல்லாத பொய் வரதட்சணை வழக்குகளில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்களே. இதைப் பற்றி யாருமே கவலைப்படுவதில்லையே!

ஆதாரமில்லாமல் அப்பாவியை அமெரிக்க போலிஸ் கைது செய்தால் அதைக் கொடுமையாக கருதும்போது தினந்தோறும் பல அப்பாவிப் பெண்களை பொய் வரதட்சணை வழக்குகளில் எந்தவித ஆதாரமுமில்லாமல் இந்தியாவில் இந்தியப் போலிஸ் கைது செய்கிறார்களே அதை தேசசேவை என்று கருதவேண்டுமா?

Once a complaint is lodged under Sections 498AIPC whether there are exaggerated allegations or there is no evidence, it comes as an easy tool in the hands of Police and agencies like Crime Against Women Cell to hound them with the threat of arrest making them run here and there … … …Thousands of such complaints and cases are pending and are being lodged day in and day out(Delhi High Court, Savitri Devi Vs. Ramesh Chand, Crl. R 462/2002, Date:19/5/2003).
மேலுள்ள செய்தியை வெளியிட்டுள்ள அதே நாளிதழில்தான் இந்த செய்தியும் வந்திருக்கிறது!

கர்ப்பிணியின் கருவறுத்த காவல்துறை - இந்திய வரதட்சணை வழக்குகளின் உச்சகட்டம்

சிந்தித்துப் பாருங்கள். ஏதாவது பதில் தெரிந்தால் உங்களது கருத்துக்களை எழுதுங்கள்.


Thursday, May 26, 2011

பொய் வரதட்சணை வழக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு டி.வி. நிகழ்ச்சி

இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களைவிட அந்த வரதட்சணைக் கொடுமையை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களைத் தவறான நோக்கத்திற்காகப் பயன்படுத்தும் பெண்கள்தான் மிகவும் அதிகம். இப்படி வரதட்சணை தடுப்புச் சட்டங்களை பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்தும் துர்குண பெண்களால் பாதிக்கப்பட்ட அப்பாவி பெண்கள் அதைவிட மிக மிக அதிகம். இதுவே இந்த உலகத்தில் பெண்களால் பெண்களுக்கு செய்யப்படும் மிகப் பெரிய கொடுமை!

இந்த துரதிர்ஷ்டவசமான நிலையை ஜெயா தொலைக்காட்சியில் கண்ணாடி என்ற நிகழ்ச்சியில் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை அவர்களுக்கு எழுதியனுப்புங்கள்.

பகுதி - 1


kannadi by tammy27

பகுதி - 2


kannadi_0 by tammy27

பகுதி - 3


kannadi_1 by tammy27

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.