இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, December 16, 2009

அப்பாவி போலிஸ்

போலிஸ் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு இந்தவார வாரமலரில் அந்துமணி அளித்துள்ள பதில். இது சரிதானா என்று உங்கள் மனசாட்சியை கேளுங்கள்.

வாரமலரில் வந்துள்ள கேள்வி பதில்

* போலீஸ் என்றாலே பொது மக்களிடம், மிகுந்த வெறுப்பும், அவநம்பிக்கையுமே தோன்றி நிற்கிறதே... இந்த நிலைக்கு காரணம் என்ன?

* ஒழுக்கமின்மையும், நேர்மையின்மையும் அத்துறையில் பெருகி விட்டது. "லைசென்ஸ்' பெற்ற ரவுடிகளாக அத்துறையினர் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொள்வதால் ஏற்பட்ட சூழ்நிலை இது!

======================

சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை, நீதிமன்றங்கள் சொல்லும் அறிவுரைகளைப் பின்பற்றுவதில்லை. அப்பாவிகளை அவமரியாதை செய்து துன்புறுத்துவதில் ஒரு அலாதியான பிரியமும் அதிலிருந்து சந்தோஷமும் பெறும் விசித்திரப் பிராணிகள்.

இன்னும் கேவலம் என்னவென்றால் பொய் வரதட்சணை கேசு கொடுக்கும் பெண்கள் காவல் துறையை அரசாங்கத்தால் நடத்தப்படும் கூலிப்படை போல நினைத்து அவர்களைப் பயன்படுத்தி தங்களுக்குப் பிடிக்காதவர்களை துன்புறுத்தப் பயன்படுத்துகிறார்கள்.
அரசாங்கம் பெண்களுக்கு மட்டும் கொடுக்கும் சிறப்பு இலவச சேவையாக இந்தப் பெண்கள் அதை பெருமையுடன் நினைக்கிறார்கள். இதை உணரும் திறன் கூட இல்லாமல் காவல்துறையில் எத்தனை அப்பாவியான இரண்டுங்கெட்டான்கள் இருக்கிறார்களென்று பாருங்களேன்! இப்படி "அப்பாவி இரண்டுங்கெட்டானாக" "வெள்ளை மனதுடன்" இருந்தால் பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?

என்ன கொடுமை சார்! இந்த அப்பாவி போலிஸை நீதிமன்றம் கூட எப்படி நையாண்டி செய்திருக்கிறதென்று இங்கு படித்துப் பாருங்கள்:
அடங்கா போலிஸுக்கு நெத்தியடி கொடுத்த நீதிமன்றம்.

வரதட்சணை வாங்காமலேயே
ஒரே ஒரு முறை ஒரு பொய் வரதட்சணை கேசில் சிக்கிப் பாருங்கள். இந்தக் கேள்விக்கு இதைவிட அதிகமான விஷயங்களை நீங்களே சொல்லுவீர்கள். இந்த இரண்டு வரி கேள்விக்கு பதில் சொல்ல நீங்கள் ஒரு புத்தகமே எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால் முக்கியமான விஷயத்தை மறந்து விடாதீர்கள், தவறு செய்து விட்டோ அல்லது வரதட்சணை வாங்கி திருமணம் செய்து பிறகு வரதட்சணை கேசில் மாட்டி காவல்நிலையத்திற்கு சென்று பார்க்கலாம் என்று தவறாக எண்ணிவிடாதீர்கள்! அப்படி ஒரு தவறை நீங்கள் செய்துவிட்டால் இது போன்ற காவல் நிலையங்களுக்குச் செல்லும் பாக்கியமே உங்கள் வாழ்க்கையில் ஏற்படாது. ஏனென்றால் வரதட்சணை வாங்கியதற்காக உங்களை தண்டிக்க நினைத்தால் காவல் துறையில் உள்ள IPS-களின் கதி என்னவாகும்?


அவர்கள் தான் அதிகமாக வரதட்சணை வாங்குவதாக ஒரு பெண்ணுரிமை பேரொளி தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

==============================================
"Zealous reformers, Deadly Laws"

ToP News.in

Madhu Purnima Kishwar or Madhu Kishwar, as she is popularly known defies
convention in many ways and is always up in arms against system or law which tries to suppress the voice of women or suppressed class.

"Madhu Kishwar in the book says that the biggest violators of these laws are those in high positions in the
government. She says that the biggest violators of the Dowry Prohibition Act 1961 are those in the high positions in the government. Kishwar finds out that the biggest dowry transactions take place among the families of educated elites, especially those in high positions in thegovernment, with the elite administrative services, like IAS, IPS and IRS topping the list."

==============================================
அதனால் வரதட்சணை வாங்கி திருமணம் செய்தால் நீங்கள் பிழைத்துக்கொள்ளலாம். இல்லை நான் வரதட்சணை வாங்காமல்தான் திருமணம் செய்வேன் என்று நேர்மையாக இருக்கப்போவதாக பிடிவாதம் பிடித்தால் காவல் நிலையத்திற்குச் சென்று "அப்பாவி இரண்டுங்கெட்டான் போலிஸைப் பார்த்து" உங்களின் அனுவங்களை ஒரு புத்தகமாக எழுத வேண்டிய நிலைமை தான் ஏற்படும்.

விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொள்வார் !


மகளிர் எப்போதுமே ஸ்பெஷல் அல்லவா? அதனால் மகளிர் காவல் நிலையங்களின் சிறப்புகளை அறிந்து கொள்ள இங்கே சென்று படித்துப் பார்க்கவும்: 498A பொண்ணு




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.