சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, December 31, 2009

அப்பாவி போலிஸின் கதை - 3

இதற்கு முன்.........

போலீஸ் என்றாலே பொது மக்களிடம், மிகுந்த வெறுப்பும், அவநம்பிக்கையுமே தோன்றி நிற்கிறதே... இந்த நிலைக்கு காரணம் என்ன?

அப்பாவி போலிஸ் (பகுதி - 1)
அப்பாவி போலிஸ் (பகுதி - 2)

இனி அப்பாவி போலிஸ் பகுதி - 3


அப்பாவி போலிஸ் பாவம். எப்படியெல்லாம் மாட்டிக்கொள்கிறார்கள் பாருங்கள். இவர்களின் வசதிக்காகவே இப்போது புதிய சட்டம் வேறு வரப்போகிறதாம். இனி எல்லா புகார்களையும் முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்து விசாரிக்கவேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. இதைக் கேள்விப்பட்டவுடன் போலிஸ் கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்கள் போலுள்ளது. கஞ்சா கேசில் 1-வது படிக்கும் 5-வயது சிறுவனை சிறையிலடைக்க கிளம்பிவிட்டார்கள்.


இந்தியாவில் சட்டம் போலிஸுக்கு ரொம்ப வசதியாகவே இருக்கிறது. பதினெட்டு வயதிற்கு மேலுள்ளவராக இருந்தால் கற்பழிப்பு அல்லது பாலியல் பலாத்காரக் கேசு, 18-க்கு கீழிருந்தால் கஞ்சா கேசு. திருமணமானவராக இருந்தால் வரதட்சணை கேசு. இந்த கேசுகள் எல்லாம் சாதாரண குடிமக்களுக்கு மட்டுமே.


நல்ல வருமானம் தான். இந்தியப் பொருளாதாரத்தை யாரும் அசைக்க முடியாது.


ஐந்து வயது சிறுவன் கஞ்சா வழக்கில் கைது: அன்னூர் போலீஸ் கூத்து

தினமலர் ஜனவரி 01,2010


கோவை: பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனை, கஞ்சா வழக்கில் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சிறுவன் விடுவிக்கப்பட்டான். கோவை, அன்னூரைச் சேர்ந்தவர் சகாதேவன்; இவரது மனைவி லட்சுமி(40). இவரை கஞ்சா வழக்கில் அன்னூர் போலீசார் சமீபத்தில் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இவரது மகன் சூர்யா(5); அன்னூர் துவக்கப்பள்ளியில் முதல் வகுப்பு படிக்கிறான். நேற்று முன்தினம் மதியம் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அங்கு சென்ற அன்னூர் போலீசார், இச்சிறுவனை கஞ்சா வழக்கில் கைது செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.

அதன் பின், இரவு 11.00 மணிக்கு சிறுவனை, சிறார் கோர்ட் நீதிபதி (பொறுப்பு) சத்தியமூர்த்தியின் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர். சிறுவனை பார்த்த மாஜிஸ்திரேட் அதிர்ச்சி அடைந்து, விசாரித்தார். சிறுவன் கஞ்சா விற்றதாக போலீசார் தெரிவித்தனர். சிறுவனை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க வேண்டும் என்றால் வயது சான்றிதழ் வேண்டும் எனவும், மறுநாள் காலையில் கோர்ட்டுக்கு அழைத்து வருமாறும் மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார்.

இதன்படி நேற்று, சிறுவனை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், வயது சான்றிதழ் தாக்கல் செய்தனர். சூர்யாவுக்கு எட்டு வயது என குறிப்பிடப்பட்டிருந்தது. இரவோடு இரவாக பெற்ற வயது சான்றிதழை பார்த்த மாஜிஸ்திரேட் அதிருப்தி அடைந்தார். சிறுவனின் பள்ளிச் சான்று, வளர்ச்சி குறித்த மருத்துவச் சான்று, கஞ்சா விற்றதற்கான ஆதாரம் ஆகியவற்றையும் தாக்கல் செய்ய மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். சிறுவனின் தந்தையையும் அழைத்து வர உத்தரவிட்டார். சிறுவனை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க முடியாது எனவும் தெரிவித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், சிறுவன் சூர்யாவை தற்காலிகமாக விடுவித்துவிட்டனர்.

இது குறித்து வக்கீல் ஒருவர் கூறுகையில், "கஞ்சா விற்ற வழக்கில் ஐந்து வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். அதற்கான ஆதார ஆவணங்கள் மற்றும் சான்றிதழை சமர்ப்பிக்க தவறியுள்ளனர். சிறுவர்களை கடும் குற்ற வழக்கில் கைது செய்யும் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நெறிமுறைகளை போலீசார் அறியாதது, வியப்பாக உள்ளது' என்றார்.

1 comment:

அண்ணாமலையான் said...

சிரிப்புப் போலீஸ்ல நம்ம ஆளுங்க சிறப்புப் போலீஸ்..ஹா ஹா ஹா...!
உண்மய சொன்னிங்க....

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.