சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, December 12, 2009

மக்கள் சக்தியை உணரத் தொடங்கியுள்ள நீதித்துறை

தாமதமாக நீதி வழங்கினால் மக்கள் புரட்சியில் ஈடுபடுவர்: தலைமை நீதிபதி எச்சரிக்கை

தினமலர் டிசம்பர் 13,2009

பெங்களூரு:
"தாமதமாக நீதி வழங்கினால், மக்கள் புரட்சியில் ஈடுபடத் துவங்கி விடுவர். சட்ட முறைகள் செயலிழந்து விடும்,'' என, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
பெங்களூரில் நேற்று நடந்த மாநாடு ஒன்றில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:இந்திய நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால், இன்றோ, நாளையோ அல்லது நாளை மறுநாளோ நீதி கிடைத்து விடும் என, நம்புகின்றனர். இப்படி எத்தனை நாட்களுக்கு அவர்கள் காத்திருப்பர்? நாம் நீதி வழங்குவதில் காலத்தைக் கடத்த முடியாது.


அப்படி நடந்தால் மக்கள் புரட்சியில் ஈடுபடுவர்; நீதித்துறை ஸ்தம்பித்து விடும்.வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதில் எக்காரணம் கொண்டும் தாமதம் ஏற்படக் கூடாது. தாமதத்துக்கு, கோர்ட்டுகள், நீதிபதிகள் பற்றாக்குறையும் ஒரு காரணம். வக்கீல்களும் தங்கள் பங்குக்கு வழக்குகளை இழுத்தடிக்கின்றனர்.நாட்டில் உள்ள கோர்ட்டுகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. மொத்தம் 16 ஆயிரம் கீழ் கோர்ட்டுகள் தான் இருக்கின்றன. இவற்றில் 2,000 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. 16 ஆயிரமாக உள்ள கீழ் கோர்ட்டுகளின் எண்ணிக்கையை 35 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும். இதைச் செய்யவில்லை எனில், இந்திய நீதித்துறை, முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாது.கோர்ட்டுகளை அதிகரிக்க மாநில அரசுகள் முன்வருவதில்லை. 4,000 கிராம கோர்ட்டுகள் ஆரம்பிப்பதற்கு இதுவரை எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. இந்தியா எல்லாவகையிலும் முன்னேறி இருந்தாலும், வழக்குகளை முடிப்பதில் அதிக காலம் எடுத்துக் கொள்கிறது.


வழக்குகளை விரைவில் முடிப்பதற்கு கோர்ட் தவிர சமரசம் மற்றும் மத்தியஸ்தம் என்ற இரண்டு சுலபமான வழிகள் இருக்கின்றன. சீனாவில் 20 சதவீத வழக்குகள் மட்டுமே கோர்ட் விசாரணைக்கு வருகின்றன. மீதி 80 சதவீத வழக்குகள் சமரசம் மற்றும் மத்தியஸ்தத்திலேயே முடிக்கப்பட்டு விடுகின்றன.அதுபோல நம்நாட்டிலும் சமரசம் மற்றும் மத்தியஸ்த வழிகளில் வழக்குகளை முடிப்பதை ஊக்கவிக்க வேண்டும். இங்கு கோர்ட்டில் வழக்கிடுவது என்பது மலிவான செலவாக இருப்பதால் சமரசம் மற்றும் மத்தியஸ்தத்தை மக்கள் நாடுவதில்லை. இவ்வாறு கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++

ஏற்கனவே பாதி சட்ட நடைமுறைகள் செயலிழந்து தான் இருக்கின்றன. இனி புதிதாக செயலிழக்க என்ன இருக்கிறது? இந்த நாட்டில் அப்பாவிப்பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் கேவலமான பொய் வரதட்சணை கேசுகளுக்காக தீவிரவாதிகளை விட மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள். இதற்கு உதாரணம் இந்த வீடியோ செய்தி - "வரதட்சணை வழக்கில் இரண்டு மாதக் குழந்தையும் குற்றவாளி". செய்தியை எழுத்துவடிவில் காண: இரண்டு மாதக் குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதி.இன்றும் தினம் தினம் இந்த கொடுமை நடந்துகொண்டுதான் இருக்கிறது. எந்தவொரு முறையான, நேர்மையான சட்ட நடைமுறையும் இல்லாமல் இந்த அப்பாவிகளுக்கு இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த கொடிய அநீதியை எந்த வகையில் யார் நியாயப்படுத்த முடியும்?


நீதிவழங்குவதில் ஏற்படும் தாமதங்களுக்கு பல காரணங்கள் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் விட நாட்டிலுள்ள தவறான ஒருதலைபட்சமான பல சட்டங்களை அழித்தாலே நீதிமன்றங்களிலுள்ள முக்கால்வாசி வழக்குகள் ஒழிந்து விடும்.

தாமதமாக நீதி வழங்கினால் மட்டுமல்ல, அப்பாவிகளுக்கு எதிராக பொய்வழக்குகள் போட்டு அநீதி இழைக்கப்பட்டாலும் மக்கள் புரட்சியில் ஈடுபட ஆரம்பித்துவிடுவார்கள்.
No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.