இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, December 04, 2009

கருத்தடை சாதனத்தில் விந்தை படைக்கும் கல்லூரி மாணவிகள்!

சமீபத்தில் காஷ்மீரத்தில் துப்பாக்கியால் சுட்டு தீவிரவாதியை விரட்டிய பெண்ணைப்பற்றிய செய்தியை படிக்கும்போது உங்களுக்கு அந்தக்காலத்தில் முறத்தால் காட்டுப்புலியை விரட்டிய வீரப்பெண்களின் வரலாறு நினைவில் வந்திருக்கும். அந்தக்காலத்தில் ஜான்சி ராணி லட்சுமிபாய், தில்லையாடி வள்ளியம்மை போன்ற பெருமைமிகு பெண்கள் எப்படி வீரப்போர் புரிந்து எதிரிகளை விரட்டப் போராடினார்கள் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். இத்தகைய வீரமிக்க, பண்புமிக்க, மாண்புடைய பெண்களால் பெருமையடைந்த இந்த நாட்டில் இப்போது என்ன நடக்கிறது என்று கீழுள்ள கட்டுரையில் படித்துப் பாருங்கள்.

இந்தக் காலத்துப் "படித்த" கல்லூரி பெண்கள் கத்தியின்றி, ரத்தமின்றி, துப்பாக்கி ஏந்தாமல் எப்படியெல்லாம் மிரட்டலாம் என்று ஒரு அரியவகை கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்த கண்டுபிடிப்பிற்கு யாராவது இவர்களுக்கு பரிசு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் இந்தக்காலத்தில் பெண்கள் "எது செய்தாலும்" தட்டிக்கொடுத்து "பெண்ணுரிமை" என்ற பெயரில் பாராட்டி மகிழ பல பேர் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சில குடும்பங்களில் பெண்ணின் குடும்பத்தாரே கூட்டமாக சேர்ந்து தங்களது பெண்ணை மூலதனமாக வைத்து பொய் கேசு போட்டு அப்பாவிகளை சீரழிப்பதை குடும்பத்தோடு சேர்ந்து சந்தோஷமாக ஒரு குடும்பத் தொழிலாகவே செய்து கொண்டிருக்கிறார்கள்.


இனி விகடனில் வந்துள்ள கட்டுரையைப் படித்து மகிழுங்கள்.

நன்றி: http://tamil498a.wordpress.com/


'புற்றுநோய்' என்ற வார்த்தையைச் சொல்லும் போதே வலிக்கும்தான்... ஆனால், கசப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு சிகிச்சையில் இறங்குவதுதானே புத்திசாலித்தனம்! மாறாக, மூடி மறைத்து ஆரோக்கியமாகக் காட்டிக் கொள்ளப் பார்த்தால்... பாதித்த பகுதி மட்டுமின்றி,ஒட்டு மொத்தமாக உயிருக்கே அல்லவா ஆபத்து!

இதை எண்ணித்தான் தயங்கித் தயங்கி,மென்று விழுங்கியபடி, கலங்க வைக்கும் அந்த உண்மையை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர் கோவை மாவட் டத்தின் முக்கியமான அந்தக் கல்லூரியைச் சேர்ந்த நிர்வாகிகள். ''என்னதான் பாதுகாப்பு, கண்காணிப்பு என்று போட்டாலும்... படிக்க வருகிற மாணவிகளின் உள்ளத்தில் ஒழுக்கத்தையும், பொறுப்பு உணர்வையும் வளர்ப்பதில் பெற்றோருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. அதைச் செய்யத் தவறியவர்களின் குழந்தைகள் எப்படி மாறிப் போயிருக்கிறார்கள் என்பதை நாங்கள் நடத்திய திடீர் ரெய்டு, பட்ட வர்த்தனமாக நிரூபித்திருக்கிறது!'' என்றபடி, மிகப் பொறுப்பான அந்த நிர்வாகிகள் நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் உலுக்கிப் போடக் கூடியவை! முதலில் பேசுபவர் ஒரு பேராசிரியை...

''பத்து நாளைக்கு முன்னாடி பிரின்ஸிபல் ரூமுக்கு வந்த எங்க காலேஜ் துப்புரவுப் பெண் ஊழியர்கள், 'அம்மா... காலேஜ் டாய்லெட் ரூம் பக்கத்துலயும் ஹாஸ்டல் ரூமுக்கு பின் பக்கத்துலயும் தினமும் பத்து பதினைஞ்சு ஆணுறைகள் கெடக்குதுங்க... அதான் உங்ககிட்ட சொல்லலாம்னு வந்தோம்...'னு சொல்லி, பிரின்ஸிபல்கிட்ட காட்டினாங்க. நானும் ரூம்ல கூட இருந்தேன். அவங்க காட்டினது எல்லாம் யூஸ் பண்ண காண்டம்ஸ்! நாங்க இரண்டு பேரும் அதைப் பார்த்து ஷாக் ஆயிட்டோம்... இன்னும் சொல்லணும்னா வயித்துல நெருப்பை அள்ளிக் கொட்டிய மாதிரி இருந்துச்சு.

காலேஜ் நிர்வாகத்தோடு பேசிட்டு அன்னிக்கு நைட்டே ஹாஸ்டலுக்குள்ள ரெய்டு போக முடிவு செஞ்சோம். முதல்ல லேடீஸ் ஹாஸ்டலுக்குப் போனோம். அங்கே கேரளாவிலிருந்து வந்து தங்கிப் படிக்கும் ஒரு பொண்ணோட சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதுல 15 பாட்டில் விஸ்கி வெச் சிருந்தா. பதறிப்போய் மிரட்டிக் கேட்டோம். அந்த பொண்ணு சாதாரணமா, 'எனக்கு தெனமும் நைட்ல ரெண்டு பெக் விஸ்கி குடிச்சாத்தான் தூக்கம் வருது. அதனாலதான் ஸ்டாக் வெச்சிருக்கேன்'' என்றாள்.

நாங்கள் இது பற்றிக் கடுமை காட்டியதும், அவள் கொஞ்சம்கூட அசராமல்... ''சரக்கை நானாவது ஓப்பனா வெச்சு யூஸ் பண்றேன். இதோ... இவ இருக்காளே... தேங்காய் எண்ணெய் பாட்டில்ல ஊத்தி வெச்சிருக்கா...' என்று சொல்லி தேங்காய் எண்ணெய் டப்பாவை எடுத்துக் கொடுத்தா. திறந்து பார்த்தா... அந்த எண்ணெய் டப்பாவை சுத்தமாக கழுவி, அதுல சரக்கை ஊத்தி வெச்சிருந்தாங்க. இன்னொரு பொண்ணு காலியான சில ஷாம்பூ பாட்டில்களில் வோட்காவை ஊத்தி வெச்சிருக்கா!

இன்னொரு ரூம்ல ஒரு பொண்ணோட பெட்டியை திறந்து பார்த்தா... அதுல ஏகப்பட்ட காண்டம்ஸ் பாக்கெட்! அந்தப் பொண்ணை தனியா கூப்பிட்டு விசாரிச்சோம். அதுக்கு நிறைய பாய் பிரண்ட்ஸ் இருக்காங்களாம். 'அப்பப்போ வெளியேபோகும்போது, ஏதாவது ஏடாகூடமாக நடந்துடும். அவனுங்க யாரும் லூப் எடுத்துட்டே வரது இல்ல. அப்புறம் கஷ்டப்படுறது நாங்கதானே! அதனாலதான் இப்போ எவன்கூட வெளியே போனாலும் பர்ஸ்ல ஒரு பாக்கெட் தூக்கிப் போட்டுக் கிட்டே போயிடுறோம், மேம்! இந்த வயசுல இதெல்லாம் சாதாரணம்தானே...'ன்னு ரொம்பவும் கூலா சொல்லுது. அதே ரூம்ல இருந்த இன் னொரு பொண்ணோட சூட்கேஸ்ல...'' என்று சொல்லி நிறுத்திய பேராசிரியை, உடன் இருந்த மற்றொரு நிர்வாகியை சங்கடத்தோடு ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தொடர்ந்தார்,

''அந்த பொண் ணுக்கு பல பசங்ககூட தொடர்பு இருக்கும் போல. ஒவ்வொருத்தன் கூடவும் போயிட்டு வந்து... அவனுங்க யூஸ் பண்ணிய காண்டத்தை அப்படியே ஒரு முடிச்சுப் போட்டு வெச்சிருக்கா. ஒவ்வொண்ணு மேலேயும் மார்க்கர் பென்ல அந்தப் பையன்களோட பேரை எழுதி, பத்திரப்படுத்தி வெச்சிருக்கா. 'எதுக்கு இதையெல்லாம் இப்படி வெச்சிருக்கே?'ன்னு கேட்டோம். 'நாளைக்கு அதுல எவனையாவது ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கற சூழ்நிலையோ, தேவையோ எனக்கு வந்தா, அப்ப அவன் ஒப்புக்க மாட்டேன்னு சொன்னான்னா..? இதை காட்டி கல்யாணம் பண்ணிக்கச் சொல்லலாம் இல்ல... அதுக்காகத்தான் வெச்சிருக்கேன். அதுவுமில்லாம அவனோடது என்கிட்ட இருக்குன்னு தெரிஞ்சா நான் எது சொன்னாலும் கேட்பானுங்க..'னு கூச்சமில்லாம சொன்னா அந்தப் பொண்ணு!

இப்படியெல்லாம் போறதுக்கு உங்களுக்கு எங்கே இடமிருக்குன்னு கேட்டா... 'ஹாஸ்டல்ல இருந்து காலையில ஆறு மணிக்கெல்லாம் காலேஜ் கிளம்பி வந்துடுவோம். அந்த நேரத்துல காலேஜ்ல யாரும் இருக்க மாட்டாங்க. கிளாஸ் ரூம்லயேகூட சில சமயங்கள் நடந்திடும். இல்லன்னா வெளியில வீடு எடுத்து தங்கியிருக்கிற பசங்க நிறைய இருக்காங்க. அவனுங்க காலேஜ் வந்த பிறகு அவங்க வீட்டு சாவியை வாங்கிட்டு போயிட்டு வந்துடுவோம்'னு சொன்னாங்க. இதில் பெரும்பாலான மாணவிகள் அதட்டியோ, மிரட்டியோ கேட்டு இதையெல்லாம் சொல்லலை... சர்வ சாதாரணமா, 'என்ன பண்ண முடியுமோ... பண்ணிக்கோங்க' என்கிற குரலில்பேசியதுதான் ரொம்பவே ஷாக்கா இருந்தது. அவங்கசொல்லச் சொல்ல... எங்களுக்கு வேர்த்துக் கொட்ட ஆரம்பிச்சது. என்ன செய்றதுன்னு தெரியலை'' என்று சொன்ன அந்தப் பேராசிரியை,

''அவங்க செய்யற எதுவுமே தப்பில்லைன்னுதீர்க்கமா நம்புறாங்க. கூடவே, 'இதையெல்லாம் ஏன் கேட்கறீங்க..? நல்லா படிச்சு, இந்தக்காலேஜுக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்துட்டிருக்கோம்ல...எங்களால காலேஜுக்கு எந்தப் பிரச்னை யும் இல்லைதானே?'ன்னு லாஜிக் பேசினாங்க.

எல்லோரையும் ஹால்ல அசெம்பள் பண்ணி... 'இதெல்லாம் தப்பு. இனி இப்படி செய்யாதீங்க'ன்னு அட்வைஸ் பண்ணி னோம். அதை எத்தனை பொண்ணுங்க காதுல போட்டுக்கும்னு புரியலை. குறிப்பாக வெளிமாநிலத்திலிருந்து வந்து தங்கியிருக்கிற சில மாணவிகள் மூலமாத்தான் 'இதெல்லாம் தப்பே இல்லை' என்ற மனோபாவம் நம்மூர் மாணவிகளுக்கும் வந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. இதுக்காக கண்டித்து சஸ்பெண்ட் பண்ணினாலோ, டி.சி. கொடுத்தாலோ, விஷயம் வெளியே தெரிஞ்சு காலேஜ் பேரு கெட்டுப் போயிடும்னு அப்படியே எங்க நிர்வாகத்தில் விட்டுட்டாங்க. மனநல மருத்துவர் மூலமாக எல்லோருக்கும் கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க...'' என்றார் பேராசிரியை.

ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து படிக்கும் அதே கல்லூரியின் பாய்ஸ் ஹாஸ்டலில் காண்டம் மாதிரியான சமாசாரம் இல்லையாம். ஆனால், ரூமுக்கு ரூம் ஒரு மினி பாரே வைத்திருந்தது இவர்களின் ரெய்டில் அம்பலமானதாக படபடப் போடு சொன்னார் அந்த நிர்வாகி! கோவைமாவட் டத்தில் மட்டுமின்றி, வேறு சில கல்லூரி நிர்வாகங் களும், 'காதல்... தோல்வி... தற்கொலை' என்று பேரைக் கெடுக்கிற மாதிரி விவகாரங்கள் நடந்துவிடக் கூடாதே என ஹாஸ்டல்களில் திடீர் ரெய்டு அடிப் பது வழக்கம்தான் என்றார் தலைநகர் ஏரியா கல்லூரி நிர்வாகி ஒருவர்.

''இது போன்ற பாலுணர்வு மற்றும் போதை விவகாரங்களில் முன்பெல்லாம் அசிங்கமான புத்தகங்களைப் பார்த்துத்தான் மாணவ - மாணவிகள் தூண்டப்பட்டார்கள். ஆனால், இப்போது அந்த இடத்தை அசுரத்தனமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது கேமரா செல்போன். ஒருத்தரை ஒருத்தர் குளிக்கும்போதும், அசந்து தூங்கும்போதும் விளையாட்டுக்கு எடுத்துக் கொள்கிற செல்போன் விடியோ காட்சிகளை, சக மாணவ மாணவிகளுக்கு 'பாஸ்' பண்ணி தமாஷ் பண்ணுவதில்தான் விபரீதம் துவங்குகிறது. அடுத்தபடியாக முன்னேறக் கூடிய மாணவர்கள், தங்களோடு வெளியில் 'தங்க' வரும் மாணவிகளை படம் எடுத்து, நண்பர்களிடம் அந்த வீரதீரக்காட்சியை ரவுண்டில் விடுகிறார்கள். இதில் பல காட்சிகள், அந்த மாணவிகளின் சம்மதத்தோடே எடுக்கப்பட்டிருப்பதுதான் கொடுமை! இப்படி செல்போன் வீடியோ தொடர்பான பஞ்சாயத்துகள் அடிக்கடி கல்லூரிக்குள் நடந்து கமுக்கமாக அமுக்கப் படுகின்றன!'' என்று கவலையோடு பேசினார்.

சேலத்தை சேர்ந்த பிரபல மனநல மருத்துவரான பாஸ்கர் இன்னும் சில அதிர வைக்கும் சம்பவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். ''ஒரு மாசத்துக்கு முன்னாடி சேலத்துல இருக்குற ஒரு பிரபலமான ஸ்கூல்ல டென்த் படிக்கிற பொண்ணை அவங்க பேரண்ட்ஸ் கூட்டிட்டு வந்தாங்க. அந்தப் பொண்ணு மூணு மாசம் கர்ப்பம்! அவகிட்ட பேசினப்ப, 'நான் தெனமும் பஸ்லதான் ஸ்கூலுக்கு போவேன். அதே பஸ்ல பைக் மெக்கானிக் ஒருத்தர் வருவாரு. எவ்வளவு கூட்டமா இருந்தாலும் அவரு எனக்கு ஸீட் புடிச்சு கொடுத்துடுவாரு. ஒரு நாள் திடீர்னு என்னை லவ் பண்றதா சொன்னாரு. முதல்ல எனக்கு கோபம் வந்துச்சு. ஆனா, அவரு எம்மேலே எவ்ளோ ஆசையா இருக்காருனு தெரிஞ்சதும் நானும் ஓகே சொல்லிட்டேன். அடிக்கடி கிளாஸை கட் அடிச்சிட்டு சினிமாவுக்கும், ஏற்காட்டுக்கும் போவோம்' என்று அந்தப் பெண் திக்கித் திணறிச் சொன்னாள். அவள் குடும்ப நிலவரம் பற்றி மெதுவாக விசாரித்தேன். 'எங்கப்பா, அம்மா ரெண்டு பேருமே வேலைக்குப் போயிடுவாங்க. வீட்டுல நான் ஒரே பொண்ணுதான். படிச்சிட்டியா... பரீட்சை எப்போ... இப்படித்தான் பேசுவாங்க. ஆனா, அவன் நான் சொல்றதையெல்லாம் கேட்பான். ஒரு நாள் ஏற்காடு போனபோது ரூம் போட்டு தங்கினோம்'னு சொல்லிகிட்டே போனா அந்தப் பொண்ணு!

அவ மட்டுமில்ல...

இன்னிக்கு இதே மாதிரி பெற்றோர் இருந்தும் தனிமையாக உணருகிற பல பெண்களும் பையன்களும் இருக்காங்க. வேலைக்குப் போகாத தாய்மார்களில் சிலரும்கூட வீட்டுல இருக்கிற பொண்ணோ, பையனோ சொல்றதை பத்து நிமிஷம் உட்கார்ந்து பொறுமையா கேக்குறதில்லை. குழந்தைங்க மனசுல வெறுமை படியும்போது, படிப்படியாஒரு வித முரட்டுத்தனம் உருவாகுது. அது பெற்றோரைப் பழிவாங்குறதாகவும், தங்கள் வெறுப்புக்கு வடிகால் தேடுறதாகவும் திசைமாறி இப்படி யெல்லாம் போயிடுது!'' என்றார்.

இதுபோல பல அப்பாவிக் குழந்தைகளை தாய் தந்தையற்ற வினோத உயிரினங்களாக மாற்றி பிற்காலத்தில் சமூகத்தில் ஒரு தலைசிறந்த குற்றவாளியாக உருவாக்குவதில் IPC 498A போன்ற பெண்களை காப்பாற்றுவதாக நினைத்து "மூதறிஞர்களால்"தவறாக இயற்றப்பட்ட சட்டங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த ஒழுங்குமுறையற்ற சட்டங்களால் பெண்கள் காப்பாற்றப்படுவதை விட பல குடும்பங்கள் அழிக்கப்பட்டு பல தாய்மார்கள் சிறைக்கு அனுப்பப்பட்டதுதான் மிச்சம். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல ஒரு பாவமும் அறியாத சிறு குழந்தைகள் தகப்பன் இல்லாத வினோத பிறவிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இது போல பல கட்டுரைகள் சர்வசாதாரணமாக செய்தித்தாள்களில் தினம் தினம் வருவதை பார்க்கத்தான் போகிறீர்கள்.

==============================================

வக்கிரம், அப்பாவித்தனம், விபத்து என்று பல்வேறு காரணங்களால் பாலியல் ரீதியாக தடம்மாறித் தவிக்கும் ஏராளமான இளம் வயதினருக்கு மனோதத்துவத் தீர்வு அளித்த அனுபவம் கொண்டவர் பிரபல செக்ஸாலஜிஸ்ட் நாராயணரெட்டி...

அவரிடம், கோவை - சேலம் - சென்னை விவகாரங்களை நாம் சொல்லவும், முகத்தில் எந்தவித ஆச்சர்ய ரேகையும் இல்லாமல் நம்மிடம் பேசினார் ரெட்டி...

''ஒவ்வொரு நாளையும் ரசித்து வாழ்ந்து, எதையும் பொறுமையா காத்திருந்து அனுபவிக்கிற காலம் மலையேறிக்கிட்டிருக்கு. அடுத்தவங்க ஒரு விஷயத்தை அனுபவிச்சா... அதுக்குத் தகுதி இருக்கோ இல்லையோ நாமும் அதை உடனே அனுபவிக்கணும் என்று வெறிகொள்கிற வகையில்தான் இருக்கோம் இப்ப! இந்த அவசரமும் வேகமும்தான் தப்பான வழி, சரியான வழி என்ற வேறுபாடுகள் தெரியாமல் கண்ணை மறைக்குது. ரொம்பப் பெரியவங்களே இது போன்ற தப்பான பல முடிவுகளை எடுக்கும்போது, இளம் வயதினரை என்ன சொல்லுவது?
மருத்துவரின் இந்த கூற்றுக்கு மிகச்சரியான ஒரு உதாரணம் இங்கே இருக்கிறது:
`Pub bharo' to beat moral police: Renuka Choudhary - The
Govt, NCW differ over Mangalore pub probe - The Times of India,

'இந்த நிமிஷத்துல ஜாலியா இருந்தா போதும். நாளைக்கு வர பிரச்னைகளை பத்தி நாளைக்கு பார்த்துக்கலாம்' என்கிற மனநிலையிலதான் போயிட்டு இருக்காங்க. குறிப்பா, ஆண் - பெண் ஈர்ப்பு என்பதே ஒரு ஃபேஷனாகவும் கௌரவப் பிரச்னையாகவும் இளைஞர்கள் மத்தியில் மாறிக்கிட்டு வருது. அதுவே எல்லை மீறுவதால் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கலாசாரத்தின் மதிப்பு, சிலருக்குப் புரியாமப் போயிடுது! அப்புறம் யாரை தப்பு சொல்லி என்ன பண்றது சொல்லுங்க..?'' என்று கேட்ட டாக்டர்,

''விந்தணுக்களை பொறுத்த வரைக்கும் மிக பாதுகாப்பாக வைக்காத பட்சத்தில், ரெண்டு நாள் கடந்துவிட்டாலே அது யாருக்குரியது என்று தெரிவிக்கும் தன்மையை இழந்துவிடும். அந்தப் பொண்ணு அறியாமையில அப்படி பண்ணியிருக்கணும். அல்லது, அந்த மாணவரை பிளாக்மெயில் செய்து தனக்கொரு பாதுகாப்பு தேடிக்கிற தவறான புத்திசாலித்தனத்தில் இப்படி எடுத்து வச்சிருக்கணும்!'' என்றார்.

======================



1 comment:

Anonymous said...

siva sambo

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.