இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, December 18, 2009

ஆகா பெண்களில் எத்தனை வகை!

இந்தக் காலத்திலுள்ள பெண்களின் வகைகளை படம்பிடித்துக்காட்டும் டி.வி. தொடர்களைப் பற்றி தினமணியில் வந்த கட்டுரையில் ஒரு பகுதி.
======================================================


தமிழ்த் தொலைக்காட்சி தொடங்கிய புதிதில் வந்த பல தொடர்கள் நெஞ்சை நிறைத்த அருமையுடையவை. இன்று வருபவையோ நஞ்சை விதைப்பவை. பல இல்லங்களில் பிரச்னைகளை உருவாக்குபவையே நெடுந்தொடர்கள் தாம்.

தொடர்களின் மையப் பொருள்கள் பெரும்பாலும் பெண்களே.

பொறாமையின் வடிவமாய்ச் சில பெண்கள்; கொடுமைக்காரிகளாய்ப் பல பெண்கள்.
பழிவாங்கும் அரக்கிகள் உருவில் பல பெண்கள்;
அரிவாளை ஏந்திக் கொலைசெய்யத் துடிக்கும் சிலபெண்கள். ஏற்கெனவே திருமணமானவன் என்று தெரிந்தும் அவனை வளைத்துக்கொள்ள எண்ணும் பெண்கள்;
வஞ்சனை, சூது, நம்பிக்கைத் துரோகம் முதலிய வக்கிர எண்ணங்களின் வடிவமாகவே பெண்கள்

இதில் என்ன வேதனையென்றால் பெண்களே இந்தத் தொடர்களை மெய்மறந்து ரசிப்பதுதான்.

===================================================

டி.வி. தொடர்களில் காட்டப்படுபவை அத்தனையும் உண்மை. சினிமாவிலும், சின்னத்திரையிலும் வரும் கதைகள் அத்தனையும் நாட்டில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட உண்மைக் கதைகள்.

பெண்கள் தான் இதை ரசித்துப் பார்க்கிறார்கள். இதில் ஆச்சரியப்படவோ வருத்தப்படவோ ஒன்றுமில்லை. தங்களுக்குப் பிடித்த காட்சிகளைத்தான் எல்லோரும் ரசித்துப் பார்ப்பார்கள்.
தங்களை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தை திரைப்படத்தில் காட்டும்போதோ அல்லது கதையில் படிக்கும்போதோ எல்லோருமே ஒரு தனி விருப்பத்துடன் ரசித்துப் பார்ப்பார்கள் அல்லது படிப்பார்கள். தங்களை அந்தக் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்வது மனித குணத்தின் இயல்பு. அது போல இக்கால இளைய தலைமுறைப் பெண்களுக்குத் தங்களின் வாழ்க்கை முறையையும் குணங்களையும் பிரதிபலிக்கும் தொலைக்காட்சித் தொடர்களை பிடித்திருப்பதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது.

==========================================================
மேலுள்ள செய்திக்குத் தொடர்புடைய ஒரு கொசுறு செய்தி (வாரமலரில் வந்துள்ளது)
வெள்ளிக்கிழமை, "தடா!'
என் மாமியார் வீட்டில் ஹாலில் தான், "டிவி' இருக்கும். மற்ற நாட்களில், "டிவி' பக்கமே திரும்பாத மாமனார், வெள்ளிக் கிழமை விளக்கு வைக்கும் நேரத்தில், "டிவி'யை ஆன் செய்து, பக்தி சேனல் போட்டு, கர்ம சிரத்தையாக ரசிக்க ஆரம்பித்து விடுவார். மெகா சீரியல்கள் பார்க்காவிட்டால் எனக்குத் தலையே வெடித்துவிடும்; அதிலும், வெள்ளிக் கிழமைகளில் கண்டிப்பாக பார்த்தாக வேண்டும். குட்டி போட்ட பூனை மாதிரி குறுக்கும், நெடுக்கும் உலவித் தவித்த என் தவிப்பைப் புரிந்து கொண்ட என் நாத்தனார், "என்ன, மன்னி... சீரியல் பார்க்கணுமா?' என்றாள். தலையை ஆட்டினேன். "சாரி! உங்க ஆசையை அடக்கிக்கோங்க. இன்னிக்கு பார்க்க முடியாது!' என்றாள். "ஏன்?' என கண்களால் வினவினேன்.

"ஒவ்வொரு தொடரிலும் வெள்ளிக் கிழமை அன்னிக்குத் தான், யாரையாவது சாகடிச்சு, பொணத்தைப் போட்டு அழுது, ஆர்பாட்டம் பண்ணி, அதை சுடுகாட்டுக்குக் கொண்டு போய் எரிக்கவோ, புதைக்கவோ செய்யறது வரைக்கும் விஸ்தாரமா காட்டுறதை ஒரு கொள்கையாவே கடைபிடிக்குறாங்க.

"விளக்கு வெக்குற நேரத்துல வீட்டுல ஒப்பாரி சப்தமும், அழுகை சப்தமும், சாவு மேளமும் கேட்டுகிட்டு இருந்தா வீடு விளங்குமா? இல்ல, லட்சுமி தான் வீட்டுக்கு வருவாளா? அதான், வெள்ளிக்கிழமையில வீட்டுல சீரியல்களுக்குத் தடா...' என்று விளக்கினாள்.
===========================================================
அப்படியே இளமங்கைகள் இது போன்ற காட்சிகளைப் பார்ப்பதை
வீட்டிலிருக்கும் அன்னையர்கள் அறிவுரை சொல்லி திருத்த நினைத்தால் அவர்களை கொலை செய்யவும் தயங்காத மனநிலையில் தான் இந்தப் பெண்கள் இருக்கிறார்கள் ('டிவி'பார்க்காதே என திட்டிய மாமியாரை கொலை செய்த மருமகள் கைது). இதிலிருந்து தொலைக்காட்சித் தொடர்களில் வரும் பெண்களும் இன்றைய மருமகள்களும் குணத்திலும், செயலிலும் எப்படி ஒருமித்துப்போயிருக்கிறார்களென்று உங்களுக்குப் புரிகிறதா?

காலம் மாறிவிட்டது பெண்கள் மட்டும் அவர்களின் நற்குணங்களிலிருந்து மாறாமல் இருக்க அவர்கள் என்ன உயிரற்ற பாறைகளா? அவர்களை நற்பண்புகளிலிருந்து மாறக்கூடாது என்று சொல்வது பெண்ணுரிமையைப் பறிக்கும் ஆணாதிக்கத்தனம், மாமியார் கொடுமை என்று "பெண்ணுரிமை என்பது தங்களின் பதிவுரிமை செய்யப்பட்ட சொத்து" எனக்கருதும் பெண்ணுரிமைவாதிகள் சொல்லுவார்கள். யாராவது அதற்குப் பதில் சொல்லமுடியுமா?


போனஸ் செய்தி


நீங்கள் பல நாட்களாக இணைய தளங்களிலும், செய்தித்தாள்களிலும் பொய் வரதட்சணை புகார் செய்யும் மனைவிகளைப் பற்றிய செய்திகளைப் படித்துக்கொண்டிருப்பீர்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் உங்கள் மனைவி நல்லவராக இருக்கலாம். அதனால் உங்களுக்கு 498A மனைவி எப்படி இருப்பார் என்று பல நாட்களாக ஒரு யோசனை இருந்துகொண்டிருக்கும்.

498A பெண்களுக்கெதிராகஆண், பெண், வயது வித்தியாசமின்றி சங்கங்கள் அமைத்துக் காப்பாற்றுங்கள் என்று ஏன் இப்படி பலர் போராடிக் கொண்டிருக்கின்றனர்? இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? என்ற பல கேள்விகள் உங்களின் மனதில் ஓடிக்கொண்டிருக்கலாம்.

பொய் வழக்குப் போடும் 498A மனைவி எப்படி இருப்பாள் என்ற உங்களின் சந்தேகங்களை தீர்க்க ஓர் அரிய வாய்ப்பு. மேலே சொல்லப்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் வரும் கதாபாத்திரப் பெண்கள் அத்தனையும் ஒரு சேர ஒரே உருவில் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். அது தான் பொய் வழக்குப் போடும் மனைவியரின் குணமும் உருவமும்.

இந்த உருவங்களிடம் சிக்கிய அப்பாவி கணவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த ராட்சச ஜந்துக்களுக்குத் துணையாக அவைகளின் படையாக அரசாங்கமும், அரசாங்க சட்டமும், காவல் துறையும், நீதித்துறையும் செயல்பட்டால் ஒரு நேர்மையான சாதாரண மனிதனும் அவனது குடும்பமும் எப்படி அவதிப்படும் என்று உங்களால் உணரமுடிகிறதா?

இன்று இதை செய்தியாக படித்துவிட்டு மறந்து போகும் உங்களுக்கும் நாளை இது போன்ற நச்சுப்பாம்புகளால் ஒரு எதிர்பாராத தாக்குதல் நடக்க 100% வாய்ப்புள்ளது. உங்களையும் உங்களின் வருங்காலத் தலைமுறையையும் இந்த கொடிய ஜந்துக்களிடமிருந்தும் அதற்கு துணை செய்யும் தீயசக்திகளிடமிருந்தும் காப்பாற்றவே பலர் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

அன்று நடந்தது வெள்ளையனுக்கெதிரான சுதந்திரப்போராட்டம். இன்று நடப்பதோ அநீதிகளுக்கும், தீயசக்திகளுக்கும் எதிரான இரண்டாம் விடுதலைப்போராட்டம். அன்று மக்கள் ஒன்று திரண்டு போராடினர். இன்று நீங்களே தான் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

நீங்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்து மற்றவர்களை காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை உங்களையாவது காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால் அப்பாவிகளின் மானத்தையும், உயிரையும் பாதுகாக்க எந்தவித உத்திரவாதமும் இல்லாத சூழ்நிலைதான் இப்போது நிலவிக்கொண்டிருக்கிறது.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.