குடும்ப தகராறில் விபரீதம் குழந்தையை உயிரோடு தீவைத்துக் கொன்ற தாய்
தினமலர் செய்தி டிசம்பர் 14,2009
ஓசூரில், குடும்பத்தகராறில் பெற்ற குழந்தையை தீ வைத்து கொன்ற தாய், தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சாமுவேல் (30). அவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்துவிட்டார். இரண்டாவதாக வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேரந்த கலைவாணி (20) என்பவரை சாமுவேல் காதலித்து இரு ஆண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
ஜோன் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. சாமுவேல் ஆட்டோ ஓட்டி வருகிறார். இதில் சம்பாதிக்கும் பணத்தில் குடும்பம் நடத்த முடியவில்லை. கலைவாணி கணவரை சென்னைக்கு சென்று வேறு வேலை பார்க்கும்படி கூறியுள்ளார். ஆனால் அவர், "எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சொந்த ஊரை விட்டு வேறு எங்கும் சென்று தொழில் செய்ய முடியாது' என கூறி விட்டார்.
கணவன், மனைவிக்கு இடையே கடந்த சில வாரமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. மனமுடைந்த கலைவாணி, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தனது ஒரு வயது குழந்தை மீது கெரஸின் ஊற்றி தீ வைத்துவிட்டு, தானும் கெரஸின் ஊற்றி தீ வைத்து கொண்டார். இருவரும் தீயில் கருகி சம்பவ இடத்தில் பலியாகினர்.
ஓசூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்.ஐ., சசிகுமார் தீயில் கருகி இறந்த தாய், மகனின் சடலங்களை கைபற்றி விசாரிக்கின்றனர். திருமணமாகி இரு ஆண்டு மட்டும் ஆவதால், ஆர்.டி.ஓ., ரத்திவேலு விசாரிக்கிறார்.
=========================
ஒரு அப்பாவிக் குழந்தையை கொல்லும் உரிமையை அந்தப் பெண்ணுக்கு கொடுத்தது யார்?
தான் வாழ இயலவில்லை என்றாலும் தனது குழந்தை எங்காவது பிழைத்து நன்றாக வாழவேண்டும் என்று நினைப்பவள் தான் தாய். அந்த தியாக மனப்பான்மைக்காகத்தான் பெண்கள் இந்த சமுதாயத்தில் பல ஆண்டுகளாக போற்றப்பட்டு பல சிறப்பான சலுகைகள் பெண்களுக்கு மட்டும் சட்டத்தில் கூட தரப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்தக்காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு பெண்மைக்கே உரிய அந்த தாய்மையும் தியாக மனப்பான்மையும் கிடையவே கிடையாது. அதை விட தனக்கு கிடைக்கவில்லையென்றால் யாருக்குமே கிடைக்கக்கூடாது என்ற வஞ்சகமான மனப்பான்மை தான் மேலோங்கி இருக்கிறது. அதன் வெளிப்பாடுகள் தான் இன்றைய காலங்களில் இது போன்ற குழந்தைகளை பெற்ற தாயே கொஞ்சமும் கருணை இல்லாமல் கொல்லும் செய்திகள். பெரும்பாலான வரதட்சணை புகார்களில் தன்னால் குடும்பத்தில் அனுசரித்து வாழ இயலாத இயலாமையை ஏற்க மறுக்கும் மனைவியர் கணவரின் அனைத்து சகோதரிகளையும், தாயாரையும், குழந்தைகளையும் குற்றவாளிகளாக சித்தரித்து பொய் புகார்களை எழுதி அவர்களின் வாழ்க்கையையும் சிதைக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அலைகிறார்கள்.
இப்படித் தாய்மைக்கு கொடுக்கப்பட்ட மரியாதையையும், சலுகைகளையும் இந்தக்காலத்தில் பல பெண்கள் தவறாகப்பயன்படுத்தி சட்டத்தையும் சமுதாயத்தையும் முட்டாள்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இது போன்ற இழிசெயல்கள் வரதட்சணை கேசுகளில் மிக அதிகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணம் இந்த வீடியோ செய்தி - "வரதட்சணை வழக்கில் இரண்டு மாதக் குழந்தையும் குற்றவாளி". செய்தியை எழுத்துவடிவில் காண இரண்டு மாதக் குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதி.
இரண்டுமாதக் குழந்தையை குற்றவாளி பட்டியலில் சேர்த்து அதற்கு நீதிமன்றத்தில் ஜாமினும் வழங்கிய நாடு இந்த உலகத்தில் எங்காவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த சிறுமைக்குறிய செயலை செய்ததும் ஒரு பெண் தான். அதற்கு துணைபோனதும் பெண்களை பாதுகாப்பதாக கூறிக்கொள்ளும் சட்டங்கள்தான்.
இப்படி தாய்மையும், பெண்மையும் இல்லாமல் மாறிவிட்ட பல பெண்களுக்காக இன்னும் எதற்காக அவர்களை பாதுகாப்பதாக சட்டங்கள் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றன என்பது தான் புரியவில்லை. அதன் பின்னனி தான் என்ன?
மேலுள்ள செய்தியில் பார்த்தீர்களா திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள் மனைவி இறந்துவிட்டதால் ஆர். டி.ஓ. சிறப்பு விசாரணை செய்யப்படுகிறது. ஆனால் அதுவே ஒரு கணவர் திருமணமாகி ஒரே வாரத்திற்குள் இறந்தாலும் ஒருவர் கூட அது ஏன் நடந்தது? கொலையா, தற்கொலையா என்று யோசிக்கக் கூட மாட்டார்கள். ஏனென்றால் மனைவி இயற்கையாக இறந்தால் கூட அது எப்போதும் கணவனோ அல்லது அவரது குடும்பத்தாரோ செய்த கொலையாக சந்தேகக்கண்ணோட்டத்துடன் தான் சட்டமும் சமுதாயமும் பார்க்கின்றன. ஆனால் அதுவே கள்ளக்காதலுக்காக மனைவி தனது கணவனை கொன்றிருந்தாலும் கூட அது பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள். இது தான் இன்றைய சட்ட சமுதாய நடைமுறை.
பொம்பளை செத்தா போனது விலைமதிப்பற்ற உயிர் அதுவே ஒரு ஆம்பிளை செத்தால் இந்த சமுதாயத்திற்கு அது "தலையிலிருந்து உதிரும் ஒரு முடிக்குச்" சமம் என்று இதைக்கூட இன்றைய திரைப்படத்தில் காட்டிவிட்டார்கள். அதைப்பார்த்து சிரிக்கும் கூட்டம் தான் அதிகம் சிந்திப்பவர்கள் மிக மிகக் குறைவு.
"தாய்மை" என்பது மனது சம்பந்தப்பட்ட விஷயம், உடல் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. பெண்களின் மனநிலை "தாய்மை" என்ற புனிதத்தன்மையை இழந்துவரும்போது சட்டங்களும் காலத்திற்கேற்ப மாறி ஆண், பெண் இருவரையும் சமமாக நடத்தினால் தான் இனிவரும் காலங்களில் மனித சமுதாயம் மனிதத்தன்மையுடன் இருக்கும். காலச்சக்கரத்திற்கேற்ப மாற்றமடையாத எந்தவொரு செயலும் இயற்கையால் புறக்கணிக்கப்பட்டுவிடும். அது பெண்கள் பாதுகாப்பு சட்டங்களானாலும் சரி. இயற்கையின் நீதிமன்றத்தில் மனித சட்டங்கள் செல்லாது.
திருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா?
-
[image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா?]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான
சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல
அப்பாவி கு...
10 years ago
No comments:
Post a Comment