இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, December 05, 2009

பெண்கள் குழந்தைகள் அல்ல. அவர்களுக்கும் பொறுப்பு உண்டு.

பெண்கள் குழந்தைகள் அல்ல, அவர்களுக்கும் பொறுப்பு உண்டு என்கிறது தென்கொரியா

தினமலர் டிசம்பர் 06,2009

சியோல்:திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் உடலுறவு கொள்வது குற்றமல்ல, என தென் கொரியா கோர்ட் தெரிவித்துள்ளது.தென் கொரியா மேற்கத்திய நாடுகளின் பாணியில் வேகமாக வளர்ந்து வந்தாலும் இன்னும் பாரம்பரிய மரபுகளை கட்டி காக்கிறது.

கள்ளக்காதல், திருமணத்துக்கு முந்தைய உடலுறவு, ஆசைக்காட்டி மோசம் செய்வது போன்ற குற்றங்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், இரண்டு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் உடலுறவு கொண்ட இரண்டு வாலிபர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து, இந்த வாலிபர்கள், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.

பெண்களின் சம்மதத்தோடு உடலுறவு கொண்டதால் இதை குற்றமாக கருதாமல் எங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும், என இந்த வாலிபர்கள் மேல் முறையீட்டு மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், "கள்ள உறவு என்பதை சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, இதற்குரிய தண்டனை தொடரும்.

ஆண்களை வசீகரிக்கும் வகையில் பெண்கள் நடந்து கொள்வதால் ஆண்கள் திருமணத்துக்கு முன்பே செக்ஸ் உறவு கொள்ள நினைக்கின்றனர். ஆண்களுக்கும் கட்டுப்பாடு தேவை. பெண்களும் கற்பு நெறியுடன் நடந்து கொள்ளவேண்டும். பெண்கள் குழந்தைகள் அல்ல. அவர்களுக்கும் பொறுப்பு உண்டு. எனவே, திருமணம் செய்து கொள்வதாக ஆண்கள் ஏமாற்றி உடலுறவு கொள்வதை குற்றமாக கருத முடியாது' என, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இந்த தீர்ப்பின் காரணமாக ஏற்கனவே இதே குற்றத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலையாவர், என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

=========================

பெண்கள் மனநலம் குன்றிய குழந்தைகள் கிடையாது, அவர்களுக்கும் பொறுப்பு உண்டு என்று தென்கொரிய நீதிமன்றம் ஒரு அரிய உண்மையை கண்டுபிடித்திருக்கிறது. இது போன்ற அரிய கண்டுபிடிப்புகள் இந்திய நீதிமன்றங்களில் குப்பையாக குவிந்து கிடக்கும் பொய் வரதட்சணை கேசுகளிலிருந்து எப்போது அகழ்வாராய்ச்சி செய்து தோண்டியெடுக்கப்படும் என்று யாருக்காவது தெரியுமா?

நன்கு படித்த ஒரு பெண்ணும் அவரது குடும்பத்தாரும் கணவருடன் ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உடனே திருமணத்திற்கு முன்பே கணவரும் அவரது குடும்பத்தாரும் வரதட்சணை கேட்டதாகவும் தாங்கள் எந்த வித மறுப்பும் சொல்லாமல் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்தோம் என்று கொஞ்சமும் நாகூசாமல் புகாரில் எழுதித்தருகிறார்கள்.

ஆனால் படித்த,உயர் பதவியிலுள்ள, நன்கு மூளை வளர்ச்சியடைந்த ஒரு பெண்ணும் அவரது குடும்பத்தாரும் வரதட்சணை தருவது ஒரு குற்றம் என்று தெரிந்தே செய்தாலும் இதுவரை எந்த நீதிமன்றமோ அல்லது விசாரணை செய்யும் காவலரோ இந்த கேள்வியை ஏன் எழுப்பவில்லை என்பது இது வரை ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. இதுவரை எத்தனை படித்த பெண்களோ அல்லது அவரது குடும்பத்தாரோ வரதட்சணை கொடுத்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளார்கள்?


கூட்டணி குற்றத்தில் ஒரு முக்கிய குற்றவாளியாக இருந்து குற்றம் நடக்க முதல் காரணமாக இருந்து மேலும் சமுதாயத்தில் இது போல
பல வரதட்சணை குற்றங்கள் தொடர்ந்து நடக்க முன்னோடியாக இருக்கும் பெண்களையும் அவரது குடும்பத்தாரையும் தண்டிக்காத ஒரு சட்டம் எப்படி நேர்மையான சட்டமாக இருக்க முடியும்?


இதுவரை வரதட்சணை கொடுத்த எந்த குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டதில்லை. ஏனென்றால் சட்டம் பெண்களை மூளை வளர்ச்சியில்லா, மனவளர்ச்சியற்ற,வாய்பேச முடியாத ஊமைகள் போல நினைத்து அவர்களை ஏமாற்றி திருமணம் செய்யப்படுவதாக கருதுகிறது.
இந்தியப் பெண்களுக்கு ஏன் இந்த இழிநிலை?




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.