சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, December 01, 2009

அடங்கா போலிஸுக்கு நெத்தியடி கொடுத்த நீதிமன்றம்

செய்தி:

கோர்ட் உத்தரவை மீறி கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை : சென்னை ஐகோர்ட் பரிந்துரை
தினமலர் டிசம்பர் 02,2009

சென்னை : "வரதட்சணை கொடுமை வழக்கில், கோர்ட் உத்தரவை மீறி கைது செய்த சம்பவத்தில், போலீஸ் அதிகாரிகள் மீது போலீஸ் கமிஷனர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மகாகவி பாரதி நகரைச் சேர்ந்தவர் சிவராமன். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக எம்.கே.பி., போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி புகார் கொடுத்தார். இதையடுத்து, முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் சிவராமன் மனு தாக்கல் செய்தார். இம்மனு விசாரணைக்கு வந்த போது, இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது. அப்போது, சிவராமன் மற்றும் அவரது தந்தையை கைது செய்ய வேண்டாம் என, போலீசாருக்கு அறிவுறுத்துமாறு அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன்பின், இந்த முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. தனது தரப்பையும் கேட்கக் கோரி, சிவராமனின் மனைவி தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை, இரண்டு வாரங்களுக்கு ஐகோர்ட் தள்ளி வைத்தது. இதற்கிடையில், இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, போலீஸ் நிலையத்திற்கு சிவராமனும், அவரது தந்தையும் சென்றனர். அவர்களுடன் வக்கீல்கள் ரமேஷ், கருணாகரன் சென்றனர். போலீஸ் நிலையத்தில் இருந்த சிவராமன் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து காவலில் வைத்தனர். அங்கு இருந்த வக்கீல்கள், "கைது செய்யக் கூடாது என, கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது' என தெரிவித்தனர். இதுகுறித்து, போலீஸ் உதவி கமிஷனர் முரளிக்கு, வக்கீல்கள் தந்தி அனுப்பினர். வக்கீல் நோட்டீசும் அனுப்பப்பட்டது. கடந்த 24ம் தேதி கைது சம்பவம் நடந்தது. இதையடுத்து, சிவராமனுக்கு ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நீதிபதி சுதந்திரம் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் என்.மனோகரன் ஆஜரானார்.


நீதிபதி சுதந்திரம் பிறப்பித்த உத்தரவு:
கணவன், மனைவிக்குள் பிரச்னைகள் வரும் போது, வழக்கு பதிவு செய்யுமாறு கோர்ட் நிர்பந்திப்பது இல்லை. கணவனோ, மாமனாரோ முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யும் போது, மனுதாரர்கள் வக்கீலையும், அரசு வக்கீலையும் கேட்பது வழக்கம். சமீபத்தில், திருமணம் நடந்திருந்தால், இருதரப்பிலும் சமாதானமாக போவதற்கு வாய்ப்பு இருப்பதை கருதி, கைது செய்ய வேண்டாம் என, அரசு வக்கீலுக்கு கோர்ட் அறிவுறுத்துவது வழக்கம். அப்போது தான், இருதரப்பிலும் சமாதானமாக பேச்சு வார்த்தை நடத்த ஏதுவாக இருக்கும். கைது செய்ய வேண்டாம் என அரசு வக்கீலும், சம்பந்தப்பட்ட போலீசாருக்கு கோர்ட் உத்தரவை தெரிவிப்பார்.

பெரும்பாலான வழக்குகளில் இருதரப்பினருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு, கணவனும், மனைவியும் கைகோர்த்துக் கொண்டு செல்வதை இந்த கோர்ட் பார்த்துள்ளது. சில வழக்குகளில் தான், வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதன்பின் தகுதி அடிப்படையில் முன்ஜாமீன் மனு மீது கோர்ட் முடிவெடுக்கும். கைது செய்ய வேண்டாம் என கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவை, இதுவரை எந்த போலீஸ் அதிகாரியும் மீறியது இல்லை. ஒருவரை கைது செய்யவோ, கைது செய்யக் கூடாது என்றோ, போலீஸ் அதிகாரியை கோர்ட் வற்புறுத்த முடியாது என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


அந்த உத்தரவு எங்களுக்கும் தெரியும். இருந்தாலும், கைது என்கிற கத்தி தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் போது, சமாதான பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்பதையும், இந்த கோர்ட் கருத்தில் கொள்கிறது. அந்த அடிப்படையில் தான், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கிறது.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, கோர்ட் உத்தரவை தெரிந்து கொண்டே, போலீஸ் அதிகாரி மீறியுள்ளார். இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த பதில் மனுவில்,கோர்ட் உத்தரவை அவர் மறுக்கவில்லை. புகார் கொடுத்த பெண், போலீஸ் அதிகாரியை அச்சுறுத்தியதாகவும், தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதாகவும் எனவே தான் அவரது கணவரை கைது செய்ததாகவும் பதில் மனுவில் போலீஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.


அதேநேரத்தில், ஒரு அதிகாரியை அச்சுறுத்திய அந்த பெண் மீது, எந்த நடவடிக்கையையும் இன்ஸ்பெக்டர் எடுக்கவில்லை. அந்த பெண்ணுக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. எனவே, இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த பதில் மனுவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் அளித்த விளக்கத்தையும் ஏற்க முடியவில்லை. இரண்டு வக்கீல்களுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முன் மனுதாரர் ஆஜராகி உள்ளார். பொதுவாக வக்கீல்கள் மீது, கட்சிக்காரர்களுக்கு நம்பிக்கை உண்டு. கோர்ட் உத்தரவு இருப்பதால் போலீசார் கைது செய்ய மாட்டார்கள் என, வக்கீல்கள் தெரிவித்ததால், அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.


மனுதாரரை போலீசார் கைது செய்ததன் மூலம், வக்கீல் மீதும் நீதித்துறை மீதும் அவர் நம்பிக்கை இழந்திருப்பார். இது துரதிருஷ்டவசமானது; மன்னிக்கமுடியாதது. எனவே, இதுகுறித்து விசாரித்து, சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா ராணி, உதவி கமிஷனர் முரளி மீது தகுந்த நடவடிக்கையை, மாநகர போலீஸ் கமிஷனர் எடுக்க வேண்டும். மனுதாரரை கைது செய்ய உதவி கமிஷனர் வற்புறுத்தியதாக வக்கீல் தெரிவித்துள்ளார். மனுதாரரை கைது செய்து, காவலில் வைத்துள்ளனர். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, போலீஸ் தரப்பில் கோரவில்லை. அவர் தப்பி ஓடவும் வாய்ப்பில்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி சுதந்திரம் உத்தரவிட்டுள்ளார்.

==========================
கருத்து:

இந்த செய்தியிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:

1. நீதிமன்றம் சொல்லும் நீதியையோ அல்லது நேர்மையான சட்டங்களையோ பொய் வரதட்சணை கேசுகளில் போலிஸ் மதிக்கமாட்டார்கள். ஆகவே சட்ட அறிவோ, அடியாள் அல்லது அரசியல் பலம் இல்லாதவர்கள் இது போன்ற பொய் கேசுகளில் மாட்டினால் அவர்களை காப்பாற்ற கடவுளால் கூட இயலாது (உச்ச நீதிமன்றமே இதை ஒரு முறை கூறியிருக்கிறது).

2. ஒரு பொம்பளை வந்து மிரட்டினால் அல்லது ஓநாய் போல் போலிக் கண்ணீர் வடித்தால் போதும் எது வேண்டுமானாலும் செய்ய அனைவரும் தயாராக இருக்கிறார்கள். இது தான் இன்றைய சராசரி இந்தியரின் மனநிலை. அதனால் தான் தவறு செய்யும் பெண்ணுக்கும் தண்டனை தரவேண்டுமென்ற நடுநிலையான எண்ணமும் இல்லை, அதை உணரும் திறன் கூட இல்லாமல் மரத்துப்போய்விட்டது இன்றைய சட்டம்.


3. இது போன்ற கண்மூடித்தனமான போக்கால் தான் இன்று பல குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கின்றன. இன்று வீடு சீரழிந்தால் நாளை நாடே சீரழிந்து போகும். அதை பல நிறுவனங்கள் பெண்களுக்கு உரிமை வாங்கித் தருவதாகக் கூறிக்கொண்டு கூசாமல் செய்து வருகிறார்கள். பெண்களுக்கு தேவை உரிமை இல்லை, தெளிவான பகுத்தறியும் அறிவு. தெளிவான அறிவிருந்தால் உரிமையை பிறறிடம் தேடும் முட்டாள் தனமான செயலை யாரும் செய்யமாட்டார்கள். இந்த பகுத்தறிவை கொடுக்க இதுவரை யாரும் முன்வரவில்லை. ஏனென்றால் பெண்ணுக்கு பகுத்தறியும் திறனை கொடுத்துவிட்டால் பெண்களை எப்போதும் முட்டாள்களாகவே வைத்திருந்து அவர்களை பலிகடாக்களாக்கி அவர்களுக்கு உரிமை வாங்கி தருவதாகக் கூறிக்கொண்டு தங்களின் வருமானத்தை பெருக்கிக்கொள்ளும் போலி பெண்ணியவாதிகள் பணம் சம்பாதிக்கமுடியாது.


4. தான் அடைய நினைக்கும் தவறான நோக்கத்தை அடையவேண்டுமென்றால் தனக்கு இரு கண்களும் குருடானாலும் பரவாயில்லை தான் எதிரியாக கருதும் யாராக இருந்தாலும் அவருக்கு ஒரு கண்ணாவது குருடாக்கப்படவேண்டும். இது தான் தாய்மை, மென்மை, பெண்மை என்று போற்றப்படும் சில உருவங்களில் இன்றைய காலகட்டத்தில் இருக்கும்
கொடுமையான வன்மை மற்றும் கசப்பான உண்மை. இன்னும் எத்தனை காலம் இந்த போலிகளை நம்பி பலர் ஏமாறப்போகிறார்களோ?

5.
இன்று நீதிமன்றங்களில் இருக்கும் பெரும்பாலான வரதட்சணை கேசுகள், பெண்கள் போலிசை அச்சுறுத்தியோ அல்லது கையூட்டு கொடுத்தோ தங்களுக்கு அடிபணியவைத்து பொய்புகார்களை எழுதவைத்து நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்டவை. அதற்கு ஒரு சிறு உதாரணம் தான் இந்த செய்தி.

6.
நீதிமன்றத்தின் மீதும், நீதியின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்பதை நீதிமன்றம் உணர ஆரம்பித்திருக்கிறது. நீதிமன்றத்திற்கு இந்த விழிப்புணர்வு எப்போதும் இருக்கவேண்டும், எப்போதாவது இருக்கக்கூடாது.

7. இ
னிவரும் காலங்களில் தவறு செய்வது காவல் துறையாக இருந்தாலும் நீதிமன்றம் கண்டிப்பாக தண்டித்தால் நீதிமன்றங்களில் இன்று குவிந்திருக்கும் கணக்கற்ற பல போலியான கேசுகள் ஒழிக்கப்பட்டு நீதிமன்றங்கள் பொய்கேசுகளை போடும் நாற்றமடிக்கும் குப்பைத் தொட்டிகளாக இல்லாமல் உண்மையாகவே நீதிவழங்கும் மன்றங்களாக புத்தொளியுடன் திகழும். உண்மையாக பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தை அணுகி நீதி பெறவும் வழி பிறக்கும்.

8. இதுபோன்ற சத்தியம் தவறாத நீதிபதிகள் இன்னும் இருப்பதால் தான் நீதிதேவதை இன்னும் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான அறிகுறி தெரிகிறது.
=======================
9. டிசம்பர் 31, 2008 நிலவரப்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் நிலுவையில் உள்ள மொத்த வழக்குகள் = 4,51,496.
Total Pendency of Civil and Criminal Cases at the end of 31-12-08

Madras High Court
= 4,51,496

10.
டிசம்பர் 31, 2008 நிலவரப்படி தமிழ்நாட்டிலுள்ள சார்பு நிலை நீதிமன்றங்களில் (சென்னை உயர்நீதிமன்றத்தை தவிர) நிலுவையில் உள்ள மொத்த வழக்குகள் = 10,16,598

Total Pendency of Civil and Criminal Cases at the end of
31-12-08 in District and Subordinate Courts in Tamilnadu (Except Madras High Court) = 10,16,598


மேலுள்ள செய்தியில் சொல்லப்பட்டது போல காவல் துறை பொறுப்பற்ற முறையில் பொம்பளை வந்து மிரட்டுவதாக கூறிக்கொண்டு ஒழுங்கான, நேர்மையான விசாரணை ஏதும் செய்யாமல் பொய் கேசுகளை குப்பை போல நீதிமன்றங்களில் கொட்டிக்கொண்டிருந்தால் வழக்குகள் இப்படித்தான் தேங்கி நிற்கும். இந்த குப்பை கூட்டத்திற்கு நடுவே எத்தனை அப்பாவிகளுக்கு கிடைக்கவேண்டிய நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டிருக்கிறது என்று உங்களால் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன்.


1 comment:

தமிழ். சரவணன் said...

//நீதிபதி சுதந்திரம் பிறப்பித்த உத்தரவு: கணவன், மனைவிக்குள் பிரச்னைகள் வரும் போது, வழக்கு பதிவு செய்யுமாறு கோர்ட் நிர்பந்திப்பது இல்லை. கணவனோ, மாமனாரோ முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யும் போது, மனுதாரர்கள் வக்கீலையும், அரசு வக்கீலையும் கேட்பது வழக்கம். சமீபத்தில், திருமணம் நடந்திருந்தால், இருதரப்பிலும் சமாதானமாக போவதற்கு வாய்ப்பு இருப்பதை கருதி, கைது செய்ய வேண்டாம் என, அரசு வக்கீலுக்கு கோர்ட் அறிவுறுத்துவது வழக்கம். அப்போது தான், இருதரப்பிலும் சமாதானமாக பேச்சு வார்த்தை நடத்த ஏதுவாக இருக்கும். கைது செய்ய வேண்டாம் என அரசு வக்கீலும், சம்பந்தப்பட்ட போலீசாருக்கு கோர்ட் உத்தரவை தெரிவிப்பார்.//

நானும் இதுமாதிரிதான் முன்ஜாமின் அப்ளை பண்ணினேன், highcourt mediacation center ல் நாங்கள் ஒன்றுமையாக சேர்ந்து வாழ்கின்றோம் என்றும் எனது 498ஏ மனயைியும் எழுதிகொடுத்தார்... இந்த நிகழ்விற்கு பிறகு மறுபடியும் முன்றுமாதம் கழித்து medication centerல் வந்து எங்களை சந்திக்க வேண்டும் என்று சமசரசம் செய்த வழக்கறிஞர்கள் உத்தவிட்டனர்... ஆனால் இந்த கற்புக்கரசி இதை தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் மறைத்து கோர்ட்டு மூலியமாக FIR பதிவு செய்து இதொடு மட்டுமல்லாமல் திருமணத்திற்க வந்த எனது தம்பி நண்பருடைய தாயரை கைது செய்து 5ந்து நாட்கள் புழல் சிறையில் அடைத்தனர் தாம்பரம் மகளீர் காவல் நிலையத்தினர்..

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.