இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, December 22, 2009

நினைத்ததை சாதித்துவிட்ட அரசாங்கம்

கசக்கிறது திருமண பந்தம் : கழற்றி விட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் துடிப்பு
தினமலர் டிசம்பர் 23,2009

கோவை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. திருமண உறவை அடியோடு அறுத் துக்கொள்ள 1,225 தம்பதிகள் வழக்கு தொடுத்து "டைவர்ஸ்' பெற காத்திருக்கின்றனர்.

பொருளாதார வேட்கையும், நாகரீக மோகமும் நகர வாசிகளின் வாழ்க் கையை ஏறத்தாழ இயந்திர மயமாகவே மாற்றி விட்டன. முன்னோர் களால் காலங்காலமாக பேணி பாதுகாக்கப்பட்டு வந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் உறவுக் கூடுகள் உடைந்து நொறுங்கி வருகின்றன. குடும்பத்தை கடந்து, மனித உறவுகளை உறுதிப்படுத்துவதாக தற்போதைய நாகரீக வாசிகளின் வாழ்க்கை முறை இல்லை. சமூகம் சார்ந்த வாழ்க்கை தடம் புரண்டு, பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கை தலைதூக்கி உள்ளது. "அவரவர் குடும்பம், அவரவர் வாழ்க்கை' என, வெறும் வரவு - செலவு கணக்காக மட்டுமே உறவு முறைகள் பார்க்கப்படுகின்றன. விளைவு, தனிக்குடும்ப வாழ்க்கை; அதனால், தலைதூக்கும் பிரச்னைகள். தகராறுகளை தங்களுக்குள் பேசி தீர்த்து கணவன் - மனைவி உறவை தொடர முடியாமல் கோர்ட் படியேறும் அவலம். பெற்றோர், அக்காள், தங்கைகளின் உறவை அறுத்து தனிக்குடித்தன முறைக்கு பலரும் மாறிவிட்டதால், சிறுசிறு தவறுகளை சுட்டிக் காட்டவும், அறிவுரை கூறி நல்வழிப்படுத்தவும் அருகில் பெரியவர்கள் இல்லை.


உடையும் உறவுகள்:
கூட்டுக்குடும்ப முறையில் இருக்கும் சுய கட்டுப்பாடுகள், தனிக்குடித்தனம் நடத்தும் தம்பதியினரிடம் குறைந்து வருவதை, கோர்ட்டுக்கு வரும் வழக்குகள் உறுதிப்படுத்து கின்றன. வேலைக்கு செல்லும் கணவன், மனைவி இடையே ஏற்படும் ஈகோ, தமது துணை தவிர்த்து பிறருடனான கள்ள உறவு, நடத்தையில் சந்தேகம், பாலியல் உறவில் நிலவும் மனக்குறைகள் என, பல விதமான காரணங்களுடன் அதிக வழக்குகள் கோர்ட் டுக்கு வருகின்றன. கணவனோ அல்லது மனைவியோ விவாகரத்து வழக்கை கோர்ட்டில் தாக்கல் செய்கின்றனர். கோவையில் ஒரு குடும்ப நல நீதிமன்றம் உள்ள போதிலும், மேலும் ஒரு நீதிமன்றம் தேவை, என்ற அளவுக்கு வழக்குகளின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


விவாகரத்து தவிர, ஜீவனாம்சம் கேட்பு, குழந்தை பராமரிப்பு குறித்த வழக்குகளும் அதிகம் தாக்கலாகின்றன. கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள மற்ற எல்லா கோர்ட்களையும் விட, குடும்ப நீதிமன்றத்தில் பதிவாகும் வழக்குகளே அதிகம். கடந்த 2008ல் இக்கோர்ட்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை விவாகரத்து கோரி 1,139 வழக்குகள் பதிவாகின. ஆனால், இந்த ஆண்டு, இது வரை 1,225 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது, ஒவ்வொரு மாதமும் 100 பேர் விவாகரத்து கேட்டு கோர்ட் டுக்கு வருகின்றனர். ஆண்களை விட பெண்கள் தான் விவாகரத்து, ஜீவனாம்சம் கேட்டு அதிகளவில் வழக்கு தொடர்கின்றனர்.


கணவரின் கள்ளத்தொடர்பு, மாமனார் - மாமியார் "டார்ச்சர்', தனிக்குடித்தனம் நடத்த வராதது, போன்ற காரணங்கள் விவாகரத்து கோரும் பெண்கள் தரப்பில் கூறப்படுகின்றன. இதேபோல், மனைவி நடத்தை மீது சந்தேகம், கள்ள உறவு, ஈகோ உள்ளிட்ட காரணங்களை ஆண்கள் முன் வைக்கின்றனர். இளம்தம்பதிகள் பெரும்பாலும், விவாகரத்து தீர்மானத்துடன்தான் கோர்ட் படியேறுகின்றனர். வழக்கு விசாரணை துவங்கும் முன், கணவன் - மனைவிக்கு தனித்தனியே "கவுன்சிலிங்' நடத்தி, "முடிவை மாற்ற' அறிவுரை வழங்கப்படுகிறது. ஆனாலும், முடிவில் மாற்றமின்றி "டைவர்ஸ் ஒன்றே குறி' என்ற ரீதியில் உறுதியாக உள்ளனர். இதனால், வழக்குகள் விசாரணைக்கு எடுத் துக் கொள்ளப்படுகின்றன.


மற்ற துறைகளில் பணியாற்றுவோரை காட்டிலும், தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் பணியாற்றுவோர் அதிகளவில் விவகாரத்து மனு தாக்கல் செய்கின்றனர். சிலர் திருமணமாகி சில மாதங்களிலேயே உறவை முறித்துக் கொள்ளும் தீர்மானத்தில் இறங்கிவிடுகின்றனர். மேற்கண்ட காரணங்களால், ஒவ்வொரு ஆண்டும் கோர்ட்டில் பதிவாகும் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகின்றன. கோவையில் மட்டுமல்லாது, பொள் ளாச்சி, மேட்டுப்பாளையம், உடுமலை, திருப்பூர் பகுதியிலுள்ள சப்-கோர்ட்களிலும் விவாகரத்து வழக்குகள் அதிகளவில் பதிவாகி வருகின்றன. வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போவதால் கோவையில் மேலும் ஒரு குடும்ப நல நீதிமன்றம் அமைக்க வேண் டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக வக்கீல்கள் தெரிவித்தனர்.


கோவையைச் சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன் கூறியதாவது:
நாகரீக உலகில் மாறி வரும் குடும்ப கலாசார போக்கு கவலையளிப்பதாக உள்ளது. தனது துணைக்கு துரோகமிழைத்து வேறு துணையை நாடுவது, பிரச்னை தலை தூக்கும்போது தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போகும் மேம்பட்ட மனப்பாங்கு இல்லாதது, தேவையற்ற "ஈகோ' வை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவையே விவாகரத்து கோரும் வழக்குகள் அதிகரிக்க முக்கிய காரணம். விவகாரத்து பெறுவோர், பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கவலைப் படுவதாக தெரியவில்லை. இதனால், சமூகச் சூழலும் மாறும் அபாயமிருக்கிறது. இவ்வாறு, ராஜேந்திரன் தெரிவித்தார்.


==================================



கூட்டுக்குடும்பங்கள் இல்லாததால் அறிவுரை கூற வயதில் மூத்தவர்கள் வீட்டில் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் பொய் வரதட்சணை கேசுகளில் சிக்கி அலைந்துகொண்டிருக்கிறார்கள். இந்த உண்மை காவல்துறை, நீதித்துறை, அரசாங்கம் ஆகிய அனைவருக்கும் தெரியும்.

இந்தியாவில் இப்படி குடும்பங்கள் அழிந்து சின்னா பின்னமாவதற்கு முக்கிய காரணம் பெண்களின் மாறிவரும் கொடுர மனநிலையும் அதைத் தூபம் போட்டு வளர்க்கும் அரசாங்கமும், தவறான சட்டங்களும், காவல் துறையும், சில வழக்கறிஞர்களும், நீதித்துறையும் தான்.


ஒரு பெண் தவறாக சட்டத்தைப் பயன்படுத்தி தனது கணவரின் குடும்பத்தின் மீது அபாண்டமான பழிகளை போடும் போது அதில் உள்ள உண்மைத் தன்மையை ஆராயாமல் தங்களுக்குக் காசு கிடைக்கிறது என்பதற்காக அப்பாவிகளின் குடும்பத்தைக் கைது செய்வது காவல் துறை. அதற்குப் பொய்யான புகார்கள் எழுதித்தருவதும் சில வழக்கறிஞர்கள் தான்.

ஒரு பெண் காவல்நிலையத்தில் வந்து புகார் கூறினால் அது நம்பத்தக்கதா என்று கூட காவல் துறை கவலைப்படுவதில்லை. அதற்குப் பிறகாவது ஒழுங்கான விசாரணை செய்து சரியான அறிக்கையும் அவர்கள் நீதிமன்றத்திற்கு அனுப்புகிறார்களா என்றால் அதுவும் கிடையாது.

ஒரு பெண் காவல் நிலையத்தில் கணவருக்கெதிராகவும் அவரது குடும்பத்திற்கெதிராகவும் பொய்யான புகார் கொடுத்தபிறகு எந்தக் கணவர் அந்தப் பெண்ணுடன் வாழ நினைப்பார்?

இந்தியத்தலைமை நீதிபதி இந்த அவலத்தை பல முறை எடுத்துச்சொல்லியும் அரசாங்கம் அதற்குச் செவி சாய்க்கவில்லை. ஏனென்றால் பொய் வரதட்சணை கேசுகளை கணக்குக் காட்டி பெண்களைக் காப்பாற்றுவதாகச் சொல்லி வெளிநாடுகளில் பிச்சை எடுத்து பல நிறுவனங்கள் தொழில் நடத்திக்கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கும் போது அப்பாவிப் பெண்களை இந்த அழிவிலிருந்து காப்பாற்ற யாருக்குத்தான் மனம் வரும்?

குடும்பங்களை பாதுகாக்க அரசாங்கத்திற்கு தேவை பணம் என்பது மறைந்து குடும்பங்களை அழித்து பணம் தேடும் நிலையில் அரசாங்கம் மாறியிருக்கிறது.

வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் தேவை என்ற நிலை மாறி நீதிமன்றங்களில் இருக்கும் ஊழியர்களுக்கு வருமானம் கிடைப்பதற்காகவே பல வழக்குகள் உருவாக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.

வழக்குகள் வேண்டும் என்பதற்காக ஒருவரை குற்றம் செய்யுமாறு சொல்லமுடியாது அதனால் குடும்பங்களை சிதைத்து வழக்குகளை எளிதாக உருவாக்கமுடியும். பொய் வரதட்சணை கேசுகளை போடச் செய்வதன் மூலம் கிரிமினல் நீதிமன்றத்திற்கு வழக்குகள் கிடைக்கும். ஒரு பெண் பொய் கிரிமினல் வழக்குப் போட்ட பிறகு தானாக அடுத்த கட்டமான விவாகரத்து வழக்கு தொடரும். இதன் மூலம் சிவில் நீதிமன்றங்களுக்கும் வருமானம்.

வழக்கறிஞர்களுக்கு சொல்லவே தேவையில்லை வருமானம் கிடைக்கத் தேவை ஏதாவது ஒரு வழக்கு (Proceedings against actor Vijay). காவல்துறைக்குத் தேவை அப்பாவிகளை கைது செய்ய ஏதாவது ஒரு காரணம். அதன் மூலம் கைது, ஜாமின், விசாரணை என தொடர்ச்சியான வருமானம் இருக்கிறது.

பார்த்தீர்களா நாட்டில் உள்ள உண்மையான குற்றவாளிகளையும், ஊழல் செய்பவர்களையும், தீவிரவாதிகளையும் தேடிப்பிடித்து கடமையாற்றுவதை விட பல குடும்பங்களை சிதைப்பது மிகவும் எளிது. அதன் மூலம் வழக்குகளை உருவாக்கி அரசு இயந்திரத்தை இயக்கி பணப்புழக்கத்தை உருவாக்குவதும் எளிது.

எந்தவகையான கடுமையான உழைப்பும் காவல் துறைக்கோ, நீதித்துறைக்கோ தேவையில்லை. அதனால் தான் இந்தக் குடும்ப அழிப்புத் தொழில் அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் குடும்பபங்களை அழிப்பதே தேசியத் தொழிலாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தத் தொழிலில் உள்ள நுணுக்கங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தால் நேரம் போதாது, எழுதுவதற்கு இந்த இணைய தளமும் போதாது.

இதன் மூலம் அனைவருக்கும் ஒருவகையில் வருமானம் இருக்கிறது. அது குடும்பங்களை அழித்து, குழந்தைகளை அனாதையாக்கி நடுத்தெருவில் நிற்கவைத்துக் கிடைத்தாலும் கவலையில்லை. ஏனென்றால் அழிவது உங்களுடைய குடும்பமும் குழந்தைகளும் தானே.


அரசாங்கத்தின் தவறான சட்டங்கள் பெண்களை தவறான பாதையில் செல்லத் தூண்டுகிறது. அப்படியே பெண்களுக்கு அது தெரியவில்லை என்றாலும் பல போலியான வழக்கறிஞர்கள் அவர்களைத் தூண்டி பொய் வழக்குகளை போடவைக்கிறார்கள். இது போன்ற பொய்வழக்குப் போடும் பெண்களுக்கு இந்திய சட்டத்தில் எந்த வித தண்டனையும் கிடையாது. இதைப் பார்க்கும் பல பெண்கள் தாங்களும் ஏன் இதுபோல செய்யக்கூடாது என்று எண்ணி ஏதோ புரட்சி செய்வதாக நினைத்து பல அற்பக் காரணங்களுக்காக பொய்கேசு போடுவதும், விவாகரத்து வேண்டும் என்றும் இப்போது திரிந்துகொ
ண்டிருக்கிறார்கள்.

இது போன்ற வழக்குகளில் சிக்கும் அப்பாவி குழந்தைகளின் அவலநிலைக்கு காரணமான தவறான சட்டமும் அதை இயற்றி செயல்படுத்துபவர்களும் ஒரு நாள் இந்தப் பாவங்களுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். நீங்கள் இன்று செய்தித்தாள்களில் படிக்கும் ஆந்திர மாநிலக் கலவரம் கூட அந்தப் பாவங்களின் ஒரு வெளிப்பாடாக இருக்கலாம் . இன்னும் எத்தனேயோ? அப்பாவிகளின் சாபம் தவறாமல் சுட்டெரிக்கும். இது வரலாறு கண்ட உண்மை.
==============================

அரசாங்கத்தால் வளர்க்கப்பட்டுவரும் குடும்ப அழிவுமுறை சட்டங்களால் பலகுடும்பங்கள் சிதைந்து கீழுள்ள செய்தியில் சொல்லப்பட்டது போல பல குழந்தைகள் உருவாகிக்கொண்டிருக்கின்றனர். எதிர்காலத்தில் இது போல பல செய்திகளை காணும் பாக்கியம் இந்த சமூகத்திற்கு இருக்கிறது.

3 பெண்களை கொன்ற 'சைக்கோ' வாலிபர் கைது
ThatsTamil புதன்கிழமை, டிசம்பர் 16, 2009


தர்மபுரி: பெற்றோரின் தவறான நடத்தையாலும் சினிமாவின் தாக்கத்தாலும் பாதிக்கப்பட்ட 22 வயது வாலிபர் இதுவரை மூன்று பெண்களை கற்பழித்து, கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூரை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மனைவி குண்டுலட்சுமி. வயது 36. கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்த இவர் கடந்த வாரம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, முள் புதரில் பிணமாகக் கிடந்தார்.


போலீசார் விசாரணை நடத்தியதில் சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியம் உப்பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (22), குண்டுலட்சுமியை தனது கூட்டாளிகளுடன் கற்பழித்து, கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது தெரியவந்தது.


வேலுச்சாமியிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மேலும் பல கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவங்களில் தொடர்பு கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


வத்தலகுண்டைச் சேர்ந்த நர்ஸ் பிரேமா, திண்டுக்கல் ஹோட்டலில் வேலைபார்த்த அழகம்மாள் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதன் பிண்ணனியில் வேலுச்சாமி இருந்துள்ளார்.


வேலுச்சாமியுடன் அவரது கூட்டாளிகளான உப்பாரப்பட்டிசேர்ந்த வெங்கடாசலம் (24), சேட்டு (19) ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இளம் வயதில் பெற்றோர் பிரிந்து சென்றதும், சரியான அன்பு காட்டப்படாததுமே இந்த இளம் வயதில் வேலுச்சாமி கொடூர கொலைகளில் ஈடுபட முக்கிய காரணமாக இருந்திருக்கிறது என்று விசாரணை நடத்திய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் கூறினார்.

இளம் வயதிலேயே கற்பழிப்பு மற்றும் கொடூர கொலைகளில் ஈடுபட்ட வேலுச்சாமி குறித்து விசாரணையில் தெரியவந்தவை:


'வேலுச்சாமியின் சிறுவயதில் இருக்கும் போதே அவனின் தந்தையும் தாயும் பிரிந்துவிட்டனர். தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். தாய் வேறு ஒருவருடனும் சென்றுவிட்டார்.


இதனால் இளம் வயதிலேயே அக்கம் பக்கத்தவர்களால் வேலுச்சாமி ஒதுக்கி வைக்கப்பட்டான். பெற்றோரின் நடவடிக்கையால் சமுதாயத்தில் அவனுக்கு ஏற்பட்ட அவமானம் மனதில் ஆழமாக பதிந்துபோனது.


தவறான நடவடிக்கையில் ஈடுபடும் பெண்கள் மீது வரவேண்டிய கோபம் திசைமாறி ஒட்டுமொத்த பெண்களையும் சிறுவயதில் இருந்தே அவன் வெறுப்புடன் பார்க்கத் தொடங்கினான்.

நாளாக நாளாக அந்த எண்ணம் வலுவாகி ஒரு சைக்கோ போலவே மாறிவிட்டான். `சிவப்பு ரோஜாக்கள்', `மன்மதன்' ஆகிய சினிமா படங்களில் வரும் காட்சிகள் அவனை பாதித்துள்ளது.

வேலுச்சாமி பெண்களுடன் பழகுவது போல நடித்து காட்டுப் பகுதிகளுக்கு அழைத்து சென்று கூட்டாளிகளுடன் சேர்ந்து கற்பழித்து கொலை செய்யத் தொடங்கினான் என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.





No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.